07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 8, 2012

ஆறாம் சுவை-புளிப்பு


         
         உடலின் ஒவ்வொரு இயக்கத்திற்கும், ஒவ்வொரு சுவையும் ஒரு பங்களிக்கிறது. அறுசுவைகளில் இறுதிச்சுவை புளிப்புச்சுவை. இது உடலிற்குத் தேவையான கொழுப்பினை வழங்குகிறது. ஆக, இந்தச்சுவையும் இன்றிமையாததுதான்.
          எத்தனை விதமான உணவுகள் அருந்தினாலும், கூட்டாஞ்சோறு என்றால் அது தனி ருசிதான்!  அந்த வரிசையில், பல பதிவுகளை நாம் பார்ப்போமா!             
        வந்தாரை வாழவைக்கும் அன்னையாய் சென்னையை சிந்திக்கும் இவர் பதிவில் ஸ்பெஷல் மீல்ஸ் ஃபுல் கட்டு கட்டலாம். சினிமா விமர்சனம் என்றால் வெடி உங்கள் சீட்டுக்கு அடியில் வைத்திருப்பார். ஜாக்கிரதை! சில அனுபவங்களும் இருக்கும்.
                                   நானா யோசிச்சேன்னு சொல்லும் இந்தப் பதிவர், நல்லா யோசிச்சு ஸ்டில்ஸ் போடுவார்.தான் சேர்ந்த துறையில் என்ன வேலையில் சேரலாம்? என்று வழிகாட்டும் நெறியும் இருக்கும்.   பணம் வந்தால் தூக்கம் போய்விடுமோ! என்ற கேள்விக்கும் விடையுமிருக்கும். 
             நான் பேச நினைப்பதெல்லாம் என்பவரின் நிர்வாண தேசத்தில் சிறுகதையுமிருக்கும், எதிர்வீட்டுப்பெண்ணும் நானும் என்று பல்பு வாங்கிய நினைவுகளுமிருக்கும், பகவத் கீதையின் பத்தொன்பதாவது அத்தியாயம் கூட அங்கிருக்கும். 
                 நன்றே செய்வோம், அதை இன்றே செய்வோம் என்ற தாரக மந்திரத்துடன் களம் இறங்கியுள்ள இந்த சிங்கம் மண்பானைத் தண்ணீரில் தாய்மை இருக்குது என்பார். நாசமாப்போன நாட்டு நடப்புகள் பேசுவார். சில ஆச்சரியங்களும் இருக்கும், நினைவைச்சுடும் கவிதைகளும் இருக்கும். 
                         ஆதலினால் காதல் செய்வீர் என்று நினைவில் நின்றவை சொல்லுவார். பாம்பு கடித்தாலும் மருந்தடித்தாலும் சாகத்தான் வேண்டுமா??? என்ற கேள்வியில் சமூகப்பார்வையிருக்கும். சாமீ எனக்கொரு  உண்மை தெரிஞ்சாகணும் !!!!!!!!!!!!! என்று சாமக்கோடங்கி அடிப்பார். சற்றே ஓய்விருந்தால், ஊர் சுற்றலாம் வாங்க என்றழைப்பார். 
                                   சினிமா விமர்சனமா, சிறுகதையா வானம் தாண்டிய சிறகுகள் விரிந்தால் சிறப்பா இருக்கும் இங்கே. இசையின் ரசிப்பும் இங்கே இருக்கும். இங்கிலீசு சினிமாவும் இருக்கும்.
                                         காணி நிலம் கதை சொல்லி கலங்க வைத்தவர் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர். மின்சாரத் தட்டுப்பாட்டை தடுப்பது எப்படி? என்று நல்ல பல யோசனைகளும் சொல்லுவார்.
                                         சிரிக்கவும் எப்போதாவது சிந்திக்கவும் என்றழைத்து,
                         கவிதைப்பூக்களின் நந்தவனம் இந்த தளம்.இவையெல்லாம் அம்மாவுக்காக என்பார்.  இந்தப் படங்களை மட்டும் ஏன் இவ்வளவு பேர் பார்க்கிறாங்க என்று நம்மிடம் வினவுவார்.                      
                               தீதும் நன்றும் பிறர் தர வாராதென்ற  நம்பிக்கை ஊட்டும் பதிவர் ரமணி. வட்டத்தை நேராக்குவோம் என்பார். யாதுமாகி நிற்கும் காலத்தை வேண்டுதலும் இருக்கும். இருண்மை இயம்புதலும் இருக்கும்.
                கமர்சியல் பக்கங்களில் கலக்கி வரும் தெளிந்த வானம் இவர். பிள்ளைகள் நன்றாய் வளர வீடா, ஹாஸ்டலா என்ற கேள்விக்குப் பதில் இங்கே காணலாம். 
                  இவரின் ராஜசபையில் குடும்ப விழாக்கள் இருக்கும், குதூகலங்களும் இருக்கும்.  காதல் மழையில் தேவதைக்கனவு இருக்கும்.                    சிட்டுக்குருவி பல புதிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், அறிந்தும் கொள்கிறதாம்.இவரின் பதிவர்களிடம் ஒரு சவால் கலகலப்பு ரகம்.
     நிலா அது வானத்து மேலே வரும்போது ,கவிதையுமிருக்கும்,சமூகத்தின் மீது வலையும் இருக்கும். பொழுது விடியட்டும் என்று இவர் சொல்லும் கதையில் மண்மனம் வீசும், நெல்லைத்தமிழ் பேசும். சாலை விபத்துக்களின் சங்கடங்கள் இங்கே சோகம் கொள்ளச்செய்யும்.
கண்ணாமூச்சி ரே ரே: 
           நெல்லைத்தமிழில், எல்லைகளின்றி எல்லோர் பதிவிலும் சென்று, ஊக்கமும்,ஆக்கமும் அளித்துவந்த இவர் சில காலமாய் கொஞ்சம் வெட்டிப்பேச்சு  பேச வரவில்லை. காத்திருக்கிறோம் கனிவான பேச்சு கேட்க.
         ’இதுவும் சூப்பரு’ என்று இவர் தன் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ள பலரும் இவரைப்போன்றே ஒரு வருடம் கடந்தும் புதிய பதிவிடாதவர்கள். அவர்தான்,   ஹைக்கூ அதிர்வுகள். உயர்கல்வி முடித்து, உற்சாகமாய்த் திரும்பி வர வாழ்த்துக்கள்.
             இம்சிக்காத அரசன் இவர். ஊடகங்கள் மீதான இவர் கோபம் நியாயம்தான். ஆனால், ஆறு மாத காலம் எம்மையெல்லாம் அலைபாய விடுவது மட்டும் நியாயமோ! குடும்பச்சூழல் குறித்தறிவோம்.விரைந்து வாரீர்.
                                  தமிழை நேசிப்பவர்கள், வாசிப்பதற்குக் காத்திருக்கிறோம். தமிழ்வாசி.  ஐநூறு பதிவெழுதியமையால் ஓய்வா, எம்போல்  நண்பர்கள் நட்பின் மீதெழுந்த ஐயங்களே கொடுத்ததிந்த ஓய்வா? சற்றே ஓய்வெடுத்து, சடுதியில் திரும்பி வருக.
                             வலைச்சரம் வந்து அறுசுவையும் அருந்திய உள்ளங்களுக்கும், வர நேரமில்லாததால் வாழ்த்திய நெஞ்சங்களுக்கும்  நன்றி.   விடை பெறுகிறேன் நண்பர்களே. அருமையான இந்த வாய்ப்பை எனக்கு வழங்கி, புதிய உலகத்திற்குள் என்னை அடியெடுத்து வைக்கச்செய்த வலைச்சர ஆசிரியர் குழுமத்திற்கும் நன்றி.

20 comments:

  1. நெல்லைத்தமிழில், எல்லைகளின்றி எல்லோர் பதிவிலும் சென்று, ஊக்கமும்,ஆக்கமும் அளித்துவந்த இவர் சில காலமாய் கொஞ்சம் வெட்டிப்பேச்சு பேச வரவில்லை. காத்திருக்கிறோம் கனிவான பேச்சு கேட்க.


    ......... will try for sure!!!! Thank you very much.

    ReplyDelete
  2. சிறப்பாய் தங்கள் பணியை நிறைவு செய்தீர்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சார் ! நன்றி !

    ReplyDelete
  4. அறிமுகத்துக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  5. அண்ணே அழகா கோத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்...

    அது யாருன்னே அது மண்பாண்டம் பத்தி சூப்பரு ஒத்துக்கறேன்...எது கவிதையா...யம்ம்மாடி இப்பிடி கூட கலாய்பீங்களா!....பாவம்னே பய புள்ள!

    ReplyDelete
  6. அறிமுகங்கள் நல்லா செய்திருக்கீங்க. எல்லாருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அறிமுக மழையே பொழிஞ்சிட்டீங்க ஆபீசர்.......... அருமையான வலைச்சர வாரத்தை வழங்கியதற்கு நன்றிகள்!

    ReplyDelete
  8. எல்லாம் முடிந்தது சார் .............. கூடிய விரைவில் பழைய பாபுவை பதிவுலகம் காணும் என்று உறுதி கூறுகிறேன்

    ReplyDelete
  9. அறுசுவைகளும் அருமையாக இருந்தது......அதில் ஒரு சுவையில் துளியில் நானும் இருந்தது சுவை புளிப்பாக இருந்தாலும் இதயம் இனித்தது......வாழ்த்துக்கள் ஆபீசர்.

    ReplyDelete
  10. மண்பானை தண்ணீரையும், என் கோபங்களையும், எனது ஆச்சர்யங்களையும், என் மனதில் நெருப்பாய் எறிந்து கொண்டிருக்கும் என் ஏக்கத்தையும் மறுபடியும் வெளியுலகுக்கு கொண்டு காண்பித்தமைக்கு நன்றி ஆபீசர்...!

    மற்றும் அறிமுகப்படுத்த பட்டவர்கள் எல்லாருமே நன்கு நமக்கு பரிச்சயம் ஆனவர்களே, எல்லாருக்கும் என் வாழ்த்துகள்....!

    ReplyDelete
  11. விக்கியுலகம் said...
    அண்ணே அழகா கோத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்...

    அது யாருன்னே அது மண்பாண்டம் பத்தி சூப்பரு ஒத்துக்கறேன்...எது கவிதையா...யம்ம்மாடி இப்பிடி கூட கலாய்பீங்களா!....பாவம்னே பய புள்ள!//

    டேய் கொஞ்சம் நீ அடங்கு, போ போயி தண்ணி குடி...[[ ஒன் கப் ஆப் டீ அண்ட் புட் சம் ஹோட் வாட்டர் ஹி ஹி]]

    ReplyDelete
  12. வணக்கம் சார்! நல்ல பதிவுகளை அலசி ஆராய்ந்து அறிமுகப் படுத்தி இந்த வாரத்தை சிறப்பாக செய்திருந்தீர்கள் இந்த சிறியவனையும் அறிமுகப் படுத்தியதுக்கு நன்றிகள்

    ReplyDelete
  13. நிறைய பூக்களை நிறைவாய் வலையில் சரமாய் கோர்த்த உணவுலகம் ஐயாவிற்கு நன்றிகள்!

    ReplyDelete
  14. தங்கள் வலைச்சர ஆசிரியர் பணியை
    அறுசுவையோடு அதிக பதிவர்களையும் அதிக பதிவையும்
    அறிமுகப் படுத்தி மிக நேர்த்தியாக நிறைவு
    செய்தமைக்கும் என்னையும் சிறந்த பதிவர்களுடன்
    சேர்த்து அறிமுகம் செய்தமைக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. கூட்டாஞ்சோறு என்றால் அது தனி ருசி தான்!

    சிறப்பான பகிவுகள்.. பாராட்டுக்கள் !

    ReplyDelete
  16. //Ramani said...
    தங்கள் வலைச்சர ஆசிரியர் பணியை
    அறுசுவையோடு அதிக பதிவர்களையும் அதிக பதிவையும்
    அறிமுகப் படுத்தி மிக நேர்த்தியாக நிறைவு
    செய்தமைக்கும் என்னையும் சிறந்த பதிவர்களுடன்
    சேர்த்து அறிமுகம் செய்தமைக்கும் மனமார்ந்த நன்றி//

    சவுண்டா ஒரு ரிப்ப்ப்ப்பீட்ட்ட்டேய்ய்ய்... :))

    ReplyDelete
  17. எனது தளத்தினையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி ஆபீசர், இந்தவாரம் நல்லதொரு வலைச்சரவாரமாக இருந்தது, உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது