07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 7, 2012

ஐந்தாம் சுவை-துவர்ப்பு.
                     அறுசுவைகளில் அடுத்த சுவை துவர்ப்பு சுவை.  துவர்ப்புச்சுவை,  நம் உடலில் இரத்தத்தைப் பெருக்குகின்றது. ஒவ்வொரு நிகழ்வையும், நாம் ஒவ்வொருவரும் பார்க்கும் பார்வை வேறு. அதை பலரும் சுவைத்திட, நாம் பதிவாய் படைக்கும் விதமும் வேறு. இன்றைய சுவையில், ஒவ்வொரு நிகழ்வையும் வித்யாசமாய்ப்பார்க்கின்ற பதிவர்களைச் சந்திப்போம். 

                 ஒவ்வொரு நிகழ்வையும் மற்றவர் பார்க்கும் பார்வைக்கும் இவர் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது . சமீபத்தில் சென்னையில் நடந்த விபத்தை பற்றிய இவரது பதிவு படித்து பாருங்கள்.இவர் எழுதும் கவிதைகதைகட்டுரை போன்றவை காதல்சமூகம்அரசியல்ஆன்மிகம்மீடியாசினிமா என்று ஒரு இடம் பாக்கி இல்லாமல் எல்லாவற்றையும் எடுத்துரைக்கும்.ஆகையால் படித்து ரசியுங்கள். தில் இருந்தா தன்னம்பிக்கை வளரும். ஆம் இவ(ன்)ர் ஜெயிக்கப் பிறந்தவர்.
                         மாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில் ரசிக்கவும் வைக்குது. எழுத்து நடையில் உள்ளூர் முதல் உலக விவகாரங்களை வரை எழுதி கொண்டே இருக்கிறார்.குப்பைக்கு இங்கே குட்பை சொல்லுகிறார்.என்ன கொடுமை சார் என்றிவர் இங்கே புலம்பவும் செய்கிறார். சமூக நோக்கில் சில விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதி இருக்கிறார். 
         மொத்தக் கவிதைகளில் முத்தக்கவிதைகள் ஸ்பெஷலிஸ்ட் இவர். செல்வா ஸ்பீக்கிங்கைக் கேட்கச் சென்றால், பேச்சைவிட முத்தங்களே முந்தி நிற்கும். சினிமா விமர்சனங்கள் எழுதினாலும் கூடவே சமூகத்தில் தன் கண்ணில் பட்டதை சுட்டி காட்டத் தவறுவதே இல்லை. அதை ஒட்டிய  சூடான வெளிபடையான பதிவுகள் பல இங்கே பார்க்கலாம். 

                          இவர் பெயர் ஆனந்த், வலைப்பூவும் ஆனந்தம். எப்படி எல்லாம் வாழ்க்கையை ஆனந்தமா வச்சுகிறது என்பதை பற்றிய ஞானிகள் சொன்ன கதைகள்தத்துவங்கள்கருத்துக்களை தொகுத்து கொடுத்திருக்கிறார். படிக்க ஆனந்தமா இருக்கும்.

        இரட்டைச்சுழி இருந்தாலே, பிள்ளைகளைப் பெரிதும் சேட்டைக்காரர்கள் என்போம். இது மூன்றாம் சுழிநெடுங்கதை, இலக்கியம், இசை, விபரீதக்கதைகள் என கலக்கல் பதிவுகள் காணலாம்.
          அறிவியல் என்றால் நிறைய பேருக்கு ஆர்வம் இருந்தாலும் அவ்வளவா தெரியாது ஆனா அறிவியல்புரம் போனால் எளிய தமிழில் அருமையாக செயற்கைகோள்விண்வெளிகிரகம் பத்தி எல்லாம் சொல்லி தருகிறார். கடலுக்கடியில் உலோக உருண்டைகள்  இருக்கும், மக்கள் தொகை குறித்த மனிதனின் கவலையுமிருக்கும். 

               கிறுக்கல் என்று தலைப்பிட்டு இது வரை 122 கவிதைகள் எழுதி இருக்கிறார். வழியில் தென்படும் மனிதர்களின் வலிகளையும்தன் மனதை பாதித்தவற்றையும் கவிதைகளில் கொண்டுவது விடுகிறார்.அடுப்பூதும் பெண்ணும் இருப்பார், அம்மாவும் இருப்பார். 
          கலியுகம் சென்றால் கனத்த கவிதைகள் படிக்கலாம்.  பிறவித்தேடல் இருக்கும். நாற்திசை தேடும் குருவியாய் இவர். ஆயினும், பதிவரின் பசி இன்னும் தீரவில்லை. 
                                    பசுமையின்  அவசியம் உணர்த்த பாங்கான படையல் பசுமை விடியல்பசுமைப்போராளிகளின் தேடல் இருக்கும். பயணிக்க வேண்டிய தூரங்கள் இன்னும் அதிகம்.  இன்னுமோர் சுவையுடன்,இனிதாய் நாளை இறுதிப்பகுதியில் சந்திப்போமா!

20 comments:

 1. பதிவாய் படைக்கும் விதமும் சுவையுடன்,இனிதாய் பாங்கான படையல் .....

  ReplyDelete
 2. ஆஹா... நல்ல அறிமுகங்கள்.. குறிப்பா அறிவியல்புரம் மிக நல்ல அறிமுகம்...!

  ReplyDelete
 3. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 4. அருமையான சுவையான......கடினமான உழைப்பை கொண்ட பதிவு வாழ்த்துக்கள் ஆபீசர்.

  ReplyDelete
 5. நல்ல அறிமுகங்கள் அதிகாரி

  ReplyDelete
 6. ஆஹா... நல்ல அறிமுகங்கள்.. குறிப்பா அறிவியல்புரம் மிக நல்ல அறிமுகம்...!

  ReplyDelete
 7. நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. பன்னியாரின் கருத்தை வழிமொழிகிறேன்....

  ReplyDelete
 9. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள், நேரம் இருக்கையில் தளம் சென்று பார்க்கிறேன்!

  ReplyDelete
 10. அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.....!

  ReplyDelete
 11. புதுப்புது அறிமுகங்கள்! புதிய படைப்பாளிகள்! தொகுத்து தந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 12. விடுமுறையில் இருந்ததால் கடந்த நாட்களில் வாசிக்க முடியவில்லை. தங்களிற்கும் இன்றைய அறிமுகவாளர்களிற்கு நல்வாழ்த்து. பதிவுகளைச் சென்று வாசிப்பேன். நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 13. சிறப்பான வாரம் அண்ணா....சுவையாய் அறிமுகம் செய்வது இன்னமும் ரசனையைக் கூட்டி இருக்கிறது.

  தங்களின் அன்பான அறிமுகத்துக்கும் நன்றிகள்....!

  ReplyDelete
 14. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! மற்ற அறிமுகங்களும் நல்ல தேர்வு.

  ReplyDelete
 15. அன்பின் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு,

  எனது தமிழ்வாசல் வலை பக்கத்தினையும், என்னையும் வலைசரத்தின் ஊடாக சுட்டி காட்டியமைக்கு நன்றி :)

  ReplyDelete
 16. வலைச்சர அறிமுகம் ‍ எதிர்பாராத ஒன்று, நன்றி..........வாழ்க வளமுடன்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது