07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 4, 2012

இரண்டாம் சுவை-கைப்பு
             இன்சுவை மட்டுமே சுவையாகாது. எந்த சுவையையும், நல்ல சுவையாக எடுத்துக்கொள்வதே இனிதாகும். கசப்புச்சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றது. அந்த வகையில், கசப்பு மருந்து கொடுக்கும் பதிவர்களின் பதிவுகளிலுள்ள சிறப்புக்களை இன்று பார்ப்போம். 
         அகடவிகடங்கள் என்றிவர் தலைப்பிட்டாலும், தன்னைச்சுற்றி நடக்கும் உலக நடப்புகள் மீதிவர் பார்வையிருக்கும். சமூக அவலங்கள் மீதிவர் சாட்டையிரங்கும். நாட்டைக்காக்க போரிட்ட வரலாறுமிருக்கும். பட்ட அனுபவங்கள் பாதி,சுட்ட அனுபவங்கள் மீதி.கிச்சிளிக்காஸ் காட்டுவார்,  மானிட்டர் மூர்த்தி பேசுவார், அறுநூறு பதிவுகள் தாண்டிவிட்டாலும்,அனைத்தையும் விஞ்சி நிற்கும் ரத்தக்கறை டைரி பேச்சு, என் மனம் கொள்ளை போச்சு.
            ஊரும், பேரும் சொன்னாத்தான் படிப்பீங்களோ என்று வினவும் சேட்டைக்காரன் , ஆறு மாதகால ஓய்விற்குப்பின்னர் மாப்பிள்ளை வந்தார்..! மாப்பிள்ளை வந்தார்..!! என்றிவரும் வந்துட்டார் . இவ்ர் ஆஸ்பத்திரியில்  சேட்டை! பண்ணியது பலருக்கும் தெரியும். எனக்கும் பிடித்தவர். நக்கல், நையாண்டி கலந்து கட்டி கலக்குவார்.

              வைகை எனும் காட்டாற்றில் குளிக்க, வகையாய் அழைத்திருப்பார். மதங்களைக்கடந்த மஜீத்  இங்கே மனங்கவருவார். விமான நிலைய விபரீதங்கள் விரிவாய்ச் சொல்லி எச்சரிப்பார். நகைச்சுவை,நையாண்டி, அரசியல் என அனைத்திலும் காட்டாற்று வெள்ளமாய் பாய்கிறது இந்த வைகை.
                காற்றைக்கொண்டு கவிதை பேசும் இலை கரடிபொம்மை.  இவர் கவிதையில், சமூக அவலங்கள் மீதான கோபம் கொப்பளிக்கும். இப்படிக்கு அம்மா!இதற்கோர் எடுத்துக்காட்டு. பரிசுகளால் ஏற்பட்ட பாதிப்பால் பரிதவிப்பார், ஒரு பண்பட்ட மனிதன்  இங்கே.                      எடக்கு மடக்குன்னு எகத்தாளமாச்சொன்னாலும், எல்லோருக்கும்    பயன்படும் பயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய் பற்றியும் இங்கே பதிவுண்டு. விழிப்புணர்வு மட்டுமின்றி, சில கசப்பு மருந்துகளும் இங்கே தரப்படுவதுஉண்டு. கல்லூரிக்கு போனா கர்ப்பமாக வந்தா... என்று சமுதாயத்தின் மீது ஒரு கண்ணும் உண்டு.
          வினவு தளத்தில் கறுப்புப்பணம் குறித்த தகவல்கள் இருக்கும். ரூபாய் வீழ்ச்சிக்கான காரணமும் இருக்கும்.
                இதுவும் கசப்புத்தான். உதிரும் மாயவலை ஓராயிரம் கருத்துச்சொல்லும். புரியும் முன் கசப்பாயும், புரிந்துவிட்டால், கருத்துக்கள் ஓராயிரம் சொல்லும்.
          சரி, கைப்புச்சுவை கொண்ட கசப்பு அமுதம் பாகற்காய்  காண இங்கு செல்லலாம். புற்று நோயை புறந்தள்ளும் பாகற்காய் இங்கே காணலாம்.
                        நாளை நல்லதொரு சுவையுடன் நாம் சந்திப்போமா!
அன்பு வேண்டுகோள்: "www.unavuulagam.in"   என்ற என் வலைத்தளத்தைப்  பல நண்பர்களால்   பார்க்க இயலவில்லையென    தொடர்ந்து தெரிவித்து வந்ததால், எனது தளம்," www.unavuulagam.blogspot.in"  என்ற வலைப்பூ முகவரியில் தெரியுமாறு மாற்றம் செய்துள்ளேன்.    

46 comments:

 1. ஒவ்வொரு தளமாக போய் பார்க்றேன் ஆபிசர்

  ReplyDelete
 2. வருக. முதல் வருகை. சென்று பார்த்து ரசியுங்கள்.நன்றி

  ReplyDelete
 3. சுவைபட உள்ளது...

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. தாங்கள் குறிப்பிட்ட சில பதிவுகளை ஏற்றகனவே வாசித்திருக்கிறேன்...

  மற்றதையும் பார்க்கிறேன்...

  ReplyDelete
 5. //கவிதை வீதி... // சௌந்தர் // said...
  சுவைபட உள்ளது...

  வாழ்த்துக்கள்..//
  நன்றி சௌந்தர்.

  ReplyDelete
 6. //கவிதை வீதி... // சௌந்தர் // said...
  தாங்கள் குறிப்பிட்ட சில பதிவுகளை ஏற்றகனவே வாசித்திருக்கிறேன்...

  மற்றதையும் பார்க்கிறேன்...//
  சென்று பாருங்கள். சுவை அருந்தி மகிழுங்கள்.

  ReplyDelete
 7. அண்ணே வாழ்த்துக்கள் அனைவருக்கும்...மற்றும் பகிர்ந்த உங்களுக்கும்...அந்த அகட விகடப்பய தொல்ல தாங்கல...காது மேலயே ஒன்னு விடுங்க...எப்ப பாரு ஃபேஸ்புக்குல என்ன தான் பண்றான்னு தெரியல....!

  ReplyDelete
 8. அனைத்தும் நல்ல பதிவர்கள்....! நல்ல பதிவுகள்...!உடலுக்கு ஒவ்வாத சுவை கசப்பு மட்டுமே!

  ReplyDelete
 9. //விக்கியுலகம் said...
  அண்ணே வாழ்த்துக்கள் அனைவருக்கும்...மற்றும் பகிர்ந்த உங்களுக்கும்...அந்த அகட விகடப்பய தொல்ல தாங்கல...காது மேலயே ஒன்னு விடுங்க...எப்ப பாரு ஃபேஸ்புக்குல என்ன தான் பண்றான்னு தெரியல....!//
  ”அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவதில்லை”- அப்படீங்கறீங்க?

  ReplyDelete
 10. //வீடு சுரேஸ்குமார் said...
  அனைத்தும் நல்ல பதிவர்கள்....! நல்ல பதிவுகள்...!உடலுக்கு ஒவ்வாத சுவை கசப்பு மட்டுமே!//
  கசப்பும் தேவைதான் சுரேஷ்.

  ReplyDelete
 11. மன்னிக்கவும் சார்! தவறாக கூறிவிட்டேன் ஒவ்வாமை ஏற்படுத்தாத சுவை கசப்பு மட்டுமே..!என்று வந்திருக்க வேண்டும்!ஹிஹி!

  ReplyDelete
 12. // வீடு சுரேஸ்குமார் said...
  மன்னிக்கவும் சார்! தவறாக கூறிவிட்டேன் ஒவ்வாமை ஏற்படுத்தாத சுவை கசப்பு மட்டுமே..!என்று வந்திருக்க வேண்டும்!ஹிஹி!//
  :))

  ReplyDelete
 13. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. அருமையான பதிவுகளின் தொகுப்பு. சூப்பர்.

  ReplyDelete
 15. இனிக்கும் கசப்புகள்.

  ReplyDelete
 16. நான் எழுதியதிலே என் மனதுக்கு நிறைவான பதிவு மதங்களை கடந்த மஜீத்! அதைக் குறிப்பிட்டு இங்கு அறிமுகம் செய்ததற்கு என் நன்றிகள் ஆபிசர்! தொடரட்டும் உங்களது நல்ல அறிமுகங்கள் :-)

  ReplyDelete
 17. எங்கள் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
  எங்களுக்கு முதல் அறிமுகம்.சிலர் எங்களை தவறாக புரிந்துகொண்டிருக்கலாம்.
  உங்களை போன்ற சான்றோர்கள் அறிமுகம் எங்களை இன்னும் வேகப்படுத்தும்.உங்கள் அறிமுகம் எங்களுக்கு சீதை தீக்குளித்தது போல் இந்த உலகம் எங்களை புரிந்து கொள்ளும்.

  மீண்டும் நன்றி.

  ReplyDelete
 18. நல்ல பதிவுகளின் அறிமுகங்கள் அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. எல்லாருக்கும் என் வாழ்த்துகள்.....ஆபீசருக்கும் நன்றிகள்...!

  ReplyDelete
 20. விக்கியுலகம் said...
  அண்ணே வாழ்த்துக்கள் அனைவருக்கும்...மற்றும் பகிர்ந்த உங்களுக்கும்...அந்த அகட விகடப்பய தொல்ல தாங்கல...காது மேலயே ஒன்னு விடுங்க...எப்ப பாரு ஃபேஸ்புக்குல என்ன தான் பண்றான்னு தெரியல....!//

  அடிங்கொய்யால பக்கத்துல ஆள் இல்லைங்குற தைரியமாடா ராஸ்கல், என்னைக்காவது கையில மாட்டமையா போவே அப்போ வச்சிக்கிறேன்.

  ReplyDelete
 21. பதிவுகளின் தொகுப்பு அருமை..

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. அன்பு நன்றிகள் லிங்கம் சார்! :)
  என்னுடைய வலைப்பூவும் நானும் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்!

  Lali
  http://karadipommai.blogspot.in/

  ReplyDelete
 23. அனைத்தும் அருமையான அறிமுகங்கள்....
  நன்றி ஆபிசர்...

  ReplyDelete
 24. இனிய அறிமுகங்கள் ஆபீசர். வாழ்த்துகள்

  ReplyDelete
 25. //திண்டுக்கல் தனபாலன் said...
  பல அறிமுகங்கள் சார் ! ஒவ்வொரு தளமாக செல்கிறேன் ! வாழ்த்துக்கள் ! நன்றி !//
  நன்றி தனபாலன் சார்.

  ReplyDelete
 26. //Lakshmi said...
  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.//
  நன்றி அம்மா.

  ReplyDelete
 27. //Prabu Krishna said...
  அருமையான பதிவுகளின் தொகுப்பு. சூப்பர்.//
  நன்றி பிரபு.

  ReplyDelete
 28. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நல்ல கசப்புகள் ஆபீசர்......//
  ஹா ஹா ஹா.

  ReplyDelete
 29. //துபாய் ராஜா said...
  இனிக்கும் கசப்புகள்.//
  என்ன ஒரு வேற்றுமையில் ஒற்றுமை!

  ReplyDelete
 30. //வைகை said...
  நான் எழுதியதிலே என் மனதுக்கு நிறைவான பதிவு மதங்களை கடந்த மஜீத்! அதைக் குறிப்பிட்டு இங்கு அறிமுகம் செய்ததற்கு என் நன்றிகள் ஆபிசர்! தொடரட்டும் உங்களது நல்ல அறிமுகங்கள் :-)//
  என் மனமும் கவர்ந்த பதிவு அது. அதனால்தான் அறிமுகம் செய்தேன்.நன்றி வைகை சார்.

  ReplyDelete
 31. //முட்டாப்பையன் said...
  எங்கள் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
  எங்களுக்கு முதல் அறிமுகம்.சிலர் எங்களை தவறாக புரிந்துகொண்டிருக்கலாம்.
  உங்களை போன்ற சான்றோர்கள் அறிமுகம் எங்களை இன்னும் வேகப்படுத்தும்.உங்கள் அறிமுகம் எங்களுக்கு சீதை தீக்குளித்தது போல் இந்த உலகம் எங்களை புரிந்து கொள்ளும்.
  மீண்டும் நன்றி.//
  நல்ல தகவல்கள் எங்கிருந்தாலும் அனைவராலும் நாடப்படும்.

  ReplyDelete
 32. // s suresh said...
  நல்ல பதிவுகளின் அறிமுகங்கள் அருமை! வாழ்த்துக்கள்!//
  நன்றி சுரேஷ் சார்.

  ReplyDelete
 33. //வேடந்தாங்கல் - கருண் said...
  nalla padhivarkal.. super.,//
  நன்றி கருண், தொடர்ந்த நல்லாதரவிற்கு.

  ReplyDelete
 34. //MANO நாஞ்சில் மனோ said...
  எல்லாருக்கும் என் வாழ்த்துகள்.....ஆபீசருக்கும் நன்றிகள்...!//
  நன்றி மனோ.

  ReplyDelete
 35. // MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  அண்ணே வாழ்த்துக்கள் அனைவருக்கும்...மற்றும் பகிர்ந்த உங்களுக்கும்...அந்த அகட விகடப்பய தொல்ல தாங்கல...காது மேலயே ஒன்னு விடுங்க...எப்ப பாரு ஃபேஸ்புக்குல என்ன தான் பண்றான்னு தெரியல....!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  அடிங்கொய்யால பக்கத்துல ஆள் இல்லைங்குற தைரியமாடா ராஸ்கல், என்னைக்காவது கையில மாட்டமையா போவே அப்போ வச்சிக்கிறேன்.//
  ஆடு தானாத்தான் வந்து மாட்டிக்கிச்சு!

  ReplyDelete
 36. // இராஜராஜேஸ்வரி said...
  பதிவுகளின் தொகுப்பு அருமை..

  வாழ்த்துக்கள்!//
  நன்றி சகோ.

  ReplyDelete
 37. //Lali said...
  அன்பு நன்றிகள் லிங்கம் சார்! :)
  என்னுடைய வலைப்பூவும் நானும் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்!//
  நன்றி சகோ.

  ReplyDelete
 38. // NAAI-NAKKS said...
  அனைத்தும் அருமையான அறிமுகங்கள்....
  நன்றி ஆபிசர்...//
  நேற்றை விடவா!!!

  ReplyDelete
 39. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  இனிய அறிமுகங்கள் ஆபீசர். வாழ்த்துகள்//
  நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 40. நல்ல அறிமுகங்கள்...
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  அழகான தொகுப்பு...

  ReplyDelete
 41. anaithum enakku puthiyathu!

  nantri!

  ReplyDelete
 42. மானமுள்ளவன் யாரும் விஜய் ரசிகனா இருக்க மாட்டான்!

  http://www.etakkumatakku.com/2012/07/blog-post.html

  ReplyDelete
 43. கசப்பானவை பெரும்பாலும் விரும்பத்தகாதவையாக இருந்தாலும் நன்மை பயப்பவையாக இருக்கும்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது