07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 17, 2012

சிரிக்காட்டி சுட்டுடுவாங்கசிரிப்பது எல்லோருக்கும் வரும், ஆனால் சிரிக்க வைக்க எல்லோராலும் முடியாது. பதிவுலகில் பலர் காமெடி ஆக எழுத முயற்சித்தாலும், [என்னையும் சேர்த்து] பலரது பதிவை படித்து முடித்த  பின்பும் சிரிப்பு வராது. 

அந்த பதிவுக்கு வந்துள்ள பின்னூட்டங்களை பார்த்த பின்தான் நமக்கு அது காமெடி பதிவு என்பதே புரியும். அப்படி இல்லாமல் படிக்கும் போதே வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் சிலரைப் பற்றி இன்று பார்ப்போம். BLADEPEDIA


சிஸ்டம் அட்மின் பற்றி இவர் எழுதிய சிஸ்அட்மின் - 1 - சொல்லத் தவிர்த்த கதை!சிஸ்அட்மின் - 2 - டெஸ்க்டாப் டெர்ரரிஸம்!சிஸ்அட்மின் - 3 - மே மாசம் ஷூ வாசம்! என்ற மூன்று பதிவுகளையும் ஆபிஸில் படித்து சிரிக்கும் போது சிஸ்டம் அட்மின் வந்துவிட 'ஙே' என்று முழித்தேன். 

சிரிப்பு மட்டுமின்றி மிக முக்கிய புதிய தகவல்களுடன்: IRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வித்தை! - Ver 2.0 என்ற பதிவு சிரிக்க மட்டுமல்ல, சீரியஸ் ஆனதும் கூட. பதிவுல விளம்பர இடைவேளை எல்லாம் விட்ட முதல் ஆள் இவர் தான்.


ஏழாவது அறிவு-The 7 th Sense


பெங்களூர் வந்து ஒரு வருஷம் ஆச்சு என்று இவர் எழுதிய பெங்களூர் இடிகள்! பதிவு தமிழகத்தில் இருந்து பெங்களூர் வந்த அனைவருக்கும் பொருந்தும், [எனக்கும் விழுந்தன அனைத்து இடிகளும்], அத்தோடு இதாங்க தமிழ் சினிமா! - 1இதாங்க தமிழ் சினிமா! பாகம்-2 அட ஆமாம்ல என்று எண்ண வைக்கின்றன.மின்மலர்
இவரது வலைப்பூவில் நீங்கள் முதலில் படிக்க வேண்டிய பதிவு சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது இன்று முழுக்க நீங்கள் சிரிக்கலாம். Computerized அரசியல் வாதிகள் என்ற பதிவை படித்து ஆட்டோ எதுவும் வீட்டுக்கு வந்துச்சா எனத் தெரியவில்லை. நல்லதம்பியின் வென்னீர் வைத்தியம் பதிவு ஆறி இருந்தாலும் சிரிப்பாதான் தான் இருக்கு. செல்வேந்திரன்


எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்களின் வலைப்பூ, டான் என்பவர்... பதிவை படித்தால் டான்னு சிரிப்பு வரும் அதற்கு நான் கேரண்டி, இன்கிரிமென்ட் பெற இனிய வழிகள்! என்ற பதிவை படித்துவிட்டு முயற்சித்து விடாதீர்கள். மனக்காளான் பதிவில் உள்ள அனைத்தும் அருமையான ட்வீட்கள். 


பெயரைப் போலவே சேட்டையானவர் போனமுறை வலைச்சரத்தில் இவரை காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் சொல்லி இருந்தேன். நீண்ட இடைவெளிக்கு பின் எழுதிய ஆடிய ஆட்டமென்ன…? பதிவு அசத்தல் ஆட்டம்,  விஜய் டி.வி.க்கு என்னால் ஒரு கோடி லாபம்!  என்று இவர் எழுதிய மூன்று பதிவுகளும் சூப்பரோ சூப்பர். இன்னும் நிறைய பேர் இருந்தாலும் நான் ரசித்த ஐவரை பற்றி மட்டும் சொல்லி உள்ளேன். 

14 comments:

 1. என்ன இருந்தாலும் தொழில் நுட்ப பதிவர் தொழில் நுட்ப பதிவர் தான் :)

  ReplyDelete
 2. சுவைகளில் சிறந்தது நகைச்சுவை. எழுத்தால் மற்றவரை சிரிக்க வைப்பது ரொம்பவே கஷ்டமான விஷயம். அத்தகைய ஜாம்பவான்களை இங்க சந்திச்சதுல மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் அனைவருக்கும.

  ReplyDelete
 3. அருமையாக வெளியிடப்பட்ட நகையின் தோற்றம் ..............சிலிர்க்க வைத்தது

  ReplyDelete
 4. கட்டம் கட்டி, படம் போட்டு அருமையாக அறிமுகம் செய்ததிற்கு மிக்க நன்றி நண்பரே! :)

  //என்ன இருந்தாலும் தொழில் நுட்ப பதிவர் தொழில் நுட்ப பதிவர் தான் :)
  //
  அதே! ;)

  ReplyDelete
 5. நகைச்சுவை அறிமுகங்கள்... அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்... மூன்று நண்பர்களின் தளம் புதியது... சென்று பார்க்கிறேன்..

  பகிர்வுக்கு நன்றி...
  தொடருங்கள்...
  வாழ்த்துக்கள்...(த.ம. 4)

  ReplyDelete
 6. ஆகா! கணனிப் புலி என்று செயலிலேயே காட்டியாயிற்றா! அழகு!...அழகு!....போய் வாசிப்பேன் மிக நன்றியும் வாழ்த்தும். அறிமுகவாளர்களிற்கும் நல்வாழ்த்து. வெளுத்து வாங்குங்கள்! (யாழ்ப்பாணப் பேச்சு வழக்குத் தமிழ்- பிரமாதமாகப் பண்ணுங்கள்! என்ற கருத்தில். தவறாக விளங்கி கோபிச்சிட வேண்டாம்!)
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 7. சிஸ் அட்மின் என்பவர்கள் படும் பாட்டை தன் சொந்த அனுபவத்தையும் சேர்த்து கொடுத்திருப்பது படு நகைச்சுவையாக இருந்தது.

  பெங்களூரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ரசிக்கும்படி ஏற்றிய "பெண்"களூர் இடிகள்,
  தமிழ் சினிமாவின் பார்முலாவை சொல்லும் "இதாங்க தமிழ்சினிமா"

  துப்பாக்கி இல்லாத தோட்டாவை வைத்து வெடிகுண்டை செயலிழக்க செய்ததுபோல், புகைப்படங்களை வைத்தே படைக்கப்பட்ட ஒரு காமெடி பதிவான "சிங்கத்த எவண்டா chairல கட்டினது"

  பேக்கப் என்று சொன்னதும் டான்னு வீட்டுக்குப்போன "டான் என்பவர்..
  அதிகமான இன்கிரிமெண்ட் பெற்றுவிட்ட "இன்கிரிமெண்ட்"

  பகுதி இரண்டு எங்கே என்று தேடவைத்த " விஜய் டி.வி.க்கு என்னால் ஒரு கோடி லாபம்!".. போன்ற அனைத்து பதிவுகளும் நமக்குள் இருக்கும் நகைச்சுவை உணர்வை அதிகப்படுத்தியது உண்மை. படித்து ரசித்து சிரித்தேன். அறிமுகங்களுக்கு நன்றி! தொடர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. நான் முன்பே மூன்று தடவையும், சமீபத்தில் ஒரு தடவையும் சிரித்திவிட்டேன். மீதம் உள்ள ஒரு சிரிப்பை சீக்கிரம் சிரித்துவிடுகிறேன்.

  :D

  ReplyDelete
 9. நல்லாவே சிரிக்க வைக்கிரீங்க. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. எதையெதையோ எழுதிக் கொண்டிருந்த என்னை, பிரபல பதிவர்கள் பலர் வலைச்சரத்தில் அறிமுகம் செய்வித்து, அவர்களிலும் உங்களிலும் ஒருவனாக ஏற்றுக் கொண்டனர். இங்கு அறிமுகப்படுத்தப்படுவது என்பது மிகப்பெரிய அங்கீகாரம்! அந்த அங்கீகாரத்தை எனக்கு வழங்கிய பலருடன் நீங்களும் இணைந்து எனது எழுத்துக்கு ஒரு மரியாதையையும், எனக்கு சற்று பொறுப்புணர்ச்சியையும் அதிகமாக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு எனது பணிவன்புடன் கூடிய வணக்கங்கள்! நன்றிகள்!!

  ReplyDelete
 11. எனக்கு முதல்வர் தவிர அனைவரும் புதியவர்களே நன்றி

  ReplyDelete
 12. yaarume theriyaathu-
  sonnathukku nantri!

  ReplyDelete
 13. வடிவமைப்பு வித்தியாசமாக உள்ளது.
  அருமுகங்க்ளும் அருமை.செட்டைக்கரன் சமீபத்தில்தான் படித்தேன். அப்போதே follow செய்ய ஆரம்பித்து விட்டேன்/

  ReplyDelete
 14. நிறைய்ய நண்பர்கள் இந்த இணைப்பின் வழியாக வந்து வாசித்துச் சென்றுள்ளனர். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
  நட்புடன்,
  செல்வேந்திரன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது