07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 28, 2012

இது ஒரு கலவை...!
நமக்கு என்னதான் தனித்தனியா சாம்பார், ரசம், மோர், வகை வகையா சாப்பிட்டாலும்.. ஒரு கலவையான கதம்பம் சோறு கொடுத்த, நம்ம என்ன வேணாம்னா சொல்லுவோம்.. அப்படியொரு கலவையான பதிவுகளைத்தான்  இப்போது நாம  பார்க்க போறோம். 

நம்மில் பலருக்கு  கணினியில ஸ்க்ரீன் ஷாட் எடுக்க தெரியும். ஆனால் மொபைலில் ஸ்க்ரீன் சாட் எடுக்க தெரியாது.. தெரிஞ்சுக்க நம்ம நண்பர் சொல்லி தர்றார் பாருங்க... நம்ம வலைத்தளத்திற்கு டெம்ப்ளேட் மாத்தணும்ன்னா நமக்கு தெரியாமா இருக்கும். அதையும் இவர் சொல்லி தர்றார்.  அட... இவர் திரட்டி முதலாளிக்கு கோரிக்கையெல்லாம் வைக்குறார். என்ன கோரிக்கையா..?! படிச்சுத்தான் பாருங்களேன்...

வல்லத்தான். இணையத்தில் இருக்கும் அஜீத் ரசிகர்கள் இவர் வலைத்தளம் பக்கம் போகாம இருக்க மாட்டாங்க... ஏன்னா... தல வரலாறு எழுதிட்டு வர்றார்ல... நாம படிக்காம விட்ட பழைய பேட்டியெல்லாம் எடுத்து போடுறார்.. அட 16 பகுதி தாண்டிட்டார்ங்க. இவரோட ஜாங்கிரி பூங்கிரி நீங்க படிச்சது இல்லையே .. படிச்சா அடுத்து அவர் எப்போடா ஜாங்கிரி பூங்கிரி போடுவார்ன்னு காத்துட்டு இருப்பீங்க...  

ஆடி மாசமில்லையா...அதான் இவங்க வீட்டு ஜன்னலுக்கு வெளிய ரொம்ப சத்தம் கேக்குதாம். ரொம்ப பீல் பண்றாங்க... ஆடி மாசம் ஒரு தொடர் பதிவு அதுல கோவிலை இடிச்சா என்னன்னு கேட்டதுக்கு என்னமோ இவங்க கோவிலையே இடிச்சிட்டது மாதிரி இவங்ககிட்ட எல்லாம் சண்டைக்கு போறாங்க... என்னங்க பொண்ணுங்க திங் கூட பண்ண கூடாதான்னு கேக்குறாங்க...  

தீபிகா கவிதைகள். இவங்களுக்கு அம்மா அப்பான்னா ரொம்ப பிடிக்கும் போல... யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்க.. அம்மாவின் அன்பும் அப்பாவின் அன்பையும்  எழுத்துகளில் கொண்டு வந்திருக்காங்க.. அம்மாவின் அன்பையும்  நல்லா விவரிச்சு எழுதியிருக்காங்க... ஒரு எட்டு போய்ப்பாருங்க...  

அட பேஸ்புக்கில் எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்கன்னு எண்ணங்களுக்குள் நான் சொல்றார்... பதிவை படிச்சாதான் தெரியுது. இப்படியெல்லாம் கூட ஏமாத்துவாங்களான்னு...  உண்மையிலே பில்லா படம் நல்லாத்தான் இருக்கு. நான் விஜய் ரசிகன். நானே சொல்றேன் கேளுங்கன்னு சொல்றார்...  ஆமாங்க... உண்மையா படம் நல்லா போகுதுன்னு இப்போ சொல்றாங்க... 

புத்தம் புது புதிவர் ஒருத்தரை இப்போ காட்டுறேன் பாருங்க... கலகலப்பா எழுதுறார் இவர். ஆனா, இவர் பேர பார்த்தாதான் பயமா இருக்கு... விருச்சிகன். பேர் எப்படி இருக்கு...?! நல்லா கொட்டுதா..?!  அமைச்சர் செங்கோட்டையன் மாற்றம் மக்களுக்கு என்ன பயன் எழுதிருக்கார்...  நீங்க சொல்றதெல்லாம் சரிதான் விருச்சிகன். ஆனா, அவர் எங்க கைய வைச்சு எப்படி மாட்டினாரோ..?! 

பதிவையெல்லாம் படிச்சீங்களா..?! அறிமுகம் செய்ற பதிவர்கள் எல்லாம் புதியவர்களா இருக்கணும்ன்னு முடிவுபண்ணிருந்தேன். அதை பாதியளவாவது செய்திருக்கேன்னு நம்புறேன். இனி நாளை ஒரு நாள் தான் இருக்கிறது. நாளை வர்றேன்... காத்திருங்கள்.15 comments:

 1. தங்கள் அறிமுகத்தில் இருவர் ஏற்கனவே எனக்கு நண்பர்கள்... மற்றவர்களையும் அறிந்து கொள்கிறேன்...

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் அறிமுகங்களுக்கு!

  ReplyDelete
 3. ரொம்ப நன்றி நண்பா என்னோட தளத்தை முதலில் பரிந்துரை செய்தார்க்கு

  ReplyDelete
 4. வலைச்சரம் மூலம் பெரும்பாலான தமிழர்களுக்கு.. வல்லத்தானை அறிமுகம் செய்த உங்களுக்கும்....வல்லத்தானுக்கு தகவல் தந்த நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 5. ஆறில் இருவர் புதியவர்.
  அறிமுகங்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள்.
  நன்றி சௌந்தர் சார் !
  (த.ம. 3)

  ReplyDelete
 6. தங்கள் வெளிச்சப்படுத்தலுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 7. அறிமுகங்களுக்கு!வாழ்த்துக்கள்.............

  ReplyDelete
 8. மிக்க நன்றி என் என்னங்களுக்குள் நான் வலைப்பதிவை இங்கே அறிமுகம் செய்து வைத்ததற்கு

  ReplyDelete
 9. நல்ல அறிமுகங்கள்.... அறிமுகங்ககளுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. ஆஹா... உங்களோட அறிமுகத்துல நானும் இருப்பேன்னு நினைச்சுக் கூடப் பாக்கலை ஸார். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குது. உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.

  ReplyDelete
 11. அறி முகங்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 12. சிறப்பான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில் பூனையும் எலியும் பாப்பாமலர்! http;//thalirssb.blogspot.in

  ReplyDelete
 13. அறிமுகத்திற்கு மிக்க நன்றி. தெரிவித்த திண்டுக்கல் தனபாலன் சார் அவர்களுக்கும் நன்றி. தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம் வலை தளம் மூலமாக.

  விருசிகம் பெயர் காரணம் - என்னுடைய ராசி விருச்சிகம். எனக்கு ஜோசியத்தில் நம்பிக்கை உண்டு. கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி ஒரு புனைப்பெயர். அதுகூட, நீங்கள் பேசும் அளவுக்கு ஆகிவிட்டது குறித்து மகிழ்ச்சி.

  ReplyDelete
 14. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  More Entertainment

  www.ChiCha.in

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது