07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 24, 2012

வாங்க வாங்க வந்து எழுதுங்க...
என்னடா நேத்து காணாமல் போன பதிவர் சொன்னனே..?! எங்கடா என்னை காணோம்ன்னு தேடுறீங்களா... நான் இன்னும் காணாம போகலைங்க. ஆனா நம்ம பதிவுலகத்துல நிறைய பேர் காணாம போய்ட்டாங்க... 

பதிவுலகத்துல வந்த புதுசுல அடிக்கடி பதிவு போடுவாங்க... நடந்தா பதிவு. தும்பினா பதிவுன்னு போட்ட ஆளுங்களையெல்லாம்   இப்போ எங்கன்னு வலை வீசி தேட வேண்டியதா இருக்கு... 

அப்படி எங்கதான் போனாங்கன்னு பாக்குறீங்களா..?! எங்கயும் போகல... பேஸ்புக், கூகிள் பிளஸ்ன்னு சுத்தி சுத்தி கும்மி அடிக்குறாங்க... பதிவுன்னா ஒரு பக்கம் புல்லா எழுதி எவனாவது வரமாட்டானா..?! அவன போட்டு வெட்டலாம்ன்னு காத்துட்டு இருப்பாங்க... ஆனா இப்போ அப்படியெல்லாம் இல்ல... பேஸ்புக் கூகிள்பிளஸ்-ல நாலு வரி போட்டா போதும். தன்னாலே அருவாவோட கிளம்பி போயிடுறாங்க... அப்படியே ஆபிஸ் வேலை முடிஞ்சு வீட்டுக்கும் போயிடுறாங்க....     

அட இப்போ நான் சொல்ல போறவங்க எல்லாம் இப்படி பண்ணுறவங்க இல்ல... நான் பொதுவா சொல்றேன்.. நீங்க பாட்டுக்கு சீரியஸா அருவா எடுத்திட்டு வந்துராதீங்க... இது கழுகு இல்ல... வலைச்சரம்.

இவர்தான் பிரியமுடன் ரமேஷ்... இவர் எழுதுற விமர்சனம் எல்லாம் நல்லா இருக்கும். வந்த புதுசுல எல்லோருக்கும் போய் கமெண்ட் போடுவார். ஆனா இப்போ வேலை வேலைன்னு சுத்திட்டு ப்ளாக் உலகம் ஒன்னு இருந்துச்சுன்றதையே அவரு மறந்துட்டார்.... அப்போப்போ  சிறுகதையெல்லாம்  எழுதுவார்....   

அதுலயும் அக்கா பத்தி ஒரு சிறுகதை எழுதி இருக்கார் பாருங்க... நீங்க உங்க அக்காவை மிஸ் பண்ணா இந்த கதையை படிச்சு பாருங்க. 


தொப்பி தொப்பி-ன்னு சொன்னா எல்லோருக்கும் தெரியும். ஏன்னா அவர் அம்புட்டு கோவக்காரரு. கோவைக்காரு இல்லைங்க... இவர் ஒரு பதிவு போட்டா அதுக்கு பக்கம் பக்கமா பின்னூட்டத்தில் பதில் சொல்வார் பாருங்க... அதுவே ஐஞ்சு ஆறு பதிவு தேறும். கொஞ்சம் சர்ச்சையான பதிவர்ல இவரும் ஒருத்தர். ஆனா, இப்போ எல்லாம் எப்பயாச்சும்  தான் பதிவு போடுறார்...  

நிறைய விசயம் தெரிஞ்ச ஆளு பதிவுலகத்தை கும்மி அடிச்சு சீர் அழிக்க கூடாது. ஏதாவது செய்யணும்ன்னு இவருக்கு எண்ணம் இருந்துச்சு... ஆனா நம்ம எங்க நல்லது சொன்னா கேக்கப் போறோம்..?! ஆனா, இவர் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் மட்டும் சொல்ல சொன்னார். அதை நீங்களே என்னன்னு போய் பாருங்க... 


காதல் மன்னன், கவி மன்னன், காதல் கவிதை எழுதுற நம்ம பாலாஜி சரவணன் யாரும் மறந்து இருக்க மாட்டாங்க... ரொம்ப நல்ல பையன். எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான்... பாருங்க.. ரொம்ப தெரிஞ்ச பையன் அதுக்காக அவன நான் வாடா போடா சொல்ற அளவுக்கு இருக்கோம்னா அப்போ பாருங்க அவன் எவ்வளவு நல்லவனா இருப்பான்னு...  ஹி..ஹி ...ஹி... சாரி மச்சி... உனக்கு ரொம்ப மரியாதை கொடுத்துட்டேன்.

ஆமா நான் எவ்வளவு நாளா கேக்குறேன் யார் அந்த ப்ரியமானவள் இப்போயாவது சொல்லு.... 
ஆமாங்க... நம்ம சரவணன் ப்ரியமானவளுக்கு கவிதை எழுதினாரு. அந்த பொண்ண வந்து பின்னூட்டம் இட சொன்னார். ஆனா, அந்த பொண்ணு வந்துச்சா..?! பின்னூட்டம் போட்டுச்சான்னு சொல்லாமயே போனா எப்படிங்க... நீங்களே கேளுங்க...


 என்கிட்ட பேசுற எல்லோரும் கேக்குற கேள்வி. என்ன இப்போவெல்லாம் உங்க பசங்க பதிவே எழுதுறது இல்லன்னுதான்... அட யார்டா அது எங்க பசங்கன்னு கேக்குறீங்களா... டெரர் கும்மிதாங்க... என்ன யாரும் போஸ்ட் எழுதுறது இல்ல... ஒரு கும்மி இல்ல... ஒரு சண்டை இல்லன்னு கேப்பாங்க... அடப்பாவிங்களா.... சண்டை போட சொல்றீங்களே... உங்களுக்கே இது நியாயமான்னு கேப்பேன். 

இல்லையா பின்ன... டெரர் கும்மின்னாலே டெரர் தான்னு சொல்றாங்க.... இன்னுமாடா இந்த உலகம் நான் டெரர் குரூப்ன்னு நம்புதுன்னு என் மைன்ட் வாய்ஸ் வேற ஓடும்.. சரிங்க... விசயத்துக்கு வரேன். டெரர் கும்மில ஒரு போட்டி நடத்துனாங்க இல்லையா... அதுக்கு முக்கிய காரணம் இவர் தாங்க...இவர் சினிமா புதிர் எல்லாம் போடுவார். அத கண்டுபுடிக்குறேன்னு சொல்லி ஒரு நாள் எல்லாம் செலவு பண்ணா... மறு நாள் இவர் வந்து விடை போட்டுடுவார். அதுக்கு ஏங்க நம்ம விடை சொல்லணும்..?! அதான் அவரே சொல்லிடுறாரே...?!  

இப்போவெல்லாம் புதிர் போடுறதே இல்ல... இந்த பதிவுலகமே உங்க புதிர் போட்டிக்காக காத்து இருக்குங்க. 
யாருப்பா அங்க... அப்படியெல்லாம் இல்லன்னு சொல்றது..?! இப்படி பொய் சொன்னாதான் அவர் பதிவு எழுதுவார். 

வாங்கன்னா வாங்க... வந்து உங்க புதிர் போட்டிய ஆரம்பியுங்க..

அட யாருப்பா அது..?! அருண் போட்டியே ஆரம்பிக்கல... அதுக்குள்ள நோட் பென்சில் எடுக்குறது...?? அட நம்ம இம்சை அரசன் பாபு-வா..?! ஆமா இப்போவெல்லாம் பல்பு வாங்குறதே இல்லையா..?? 

நம்ம  பல்பு வாங்கினா என்ன பண்ணுவோம். வாங்குன பல்பை அப்படியே ஓடைச்சு மண்ணை போட்டு மூடிடுவோம். ஆனா... இவர் ஆபிஸ் வந்து ப்ளாக்கர் ஓபன் பண்ணி ஐ.. ஐ... ஐ.... நான் பல்பு வாங்கிட்டேன்னு சொல்லி பதிவு போடுவார். ஆனா இப்போ போடுறதே இல்லை...

ஆனா...இவருக்கு லவ் பிடிக்காதாம். ஆனா.. ஒரு காதல் கதை எழுதி இருக்கார். ஜைன்தவி..ஐ ..லவ் ..யூ சொல்றார். சைந்தவி இல்லீங்க... அப்படி சொன்னா வெளியூர்காரன் அருவா எடுத்திட்டு வருவார்...  இவர் யாருக்கு ஐ ..லவ் ..யூ  சொல்றார்ன்னு போய்ப்பாருங்க... இவர் பதிவு எல்லாம் ரொம்ப நகைச்சுவையா இருக்கும். அடிக்கடி அரசியலும் பேசுவார்... இப்போ பதிவு எழுத மாட்டேங்குறார். என்ன பிரச்னைன்னு தெரியல... முதல்ல எல்லாம் ஒரு பல்பு தான் வாங்கினார். ஆனா... இப்போ இன்னொரு பல்பு கொடுக்க ஆள் வந்து இருக்கு....  அப்போ நிறைய பல்பு வரும்ன்னு எதிர்பாக்குறீங்க... கண்டிப்பா வரும். வெயிட் பண்ணுங்க... அண்ணன் நான் சொன்னா கண்டிப்பா கேப்பாரு...


"பதிவுலக பின்னூட்ட புயல்" நம்ம சித்ரா எங்க போனாங்கன்னு தெரியுமா...? இந்தியாவுக்கு போயிட்டு வந்ததுல அவங்களுக்கு என்னமோ ஆகிப்போச்சு. அதான் பதிவே எழுதுறது இல்ல...  ஆனானப்பட்ட சித்ராவே பதிவு எழுதுறது இல்ல... நாங்க என்னத்த எழுத போறோம்ன்னு நிறைய பேர் சொல்றாங்க... அதுக்காகவாவது நீங்க எழுதணும். அப்படின்னு நான் சொல்லல... மக்கள் சொல்றாங்க...

இவங்களை யாரோ வெள்ளாவி வச்சு  வெளு வெளுன்னு வெளுத்து இருக்காங்க... பதிவு எழுதுவியா எழுதுவியான்னு... அதான் எழுத மாட்றாங்க.. நீங்க பதிவு போடலைனாலும் பரவாயில்லை. வந்து கமெண்ட் போடுங்க... மக்கள் எல்லாம் ஆசைப்படுறாங்க...  (மக்களுக்கு நல்லதாவே ஆசைப்பட தெரியாது போல... இது என் மைன்ட் வாய்ஸ்) 

சும்மா இவங்களை எல்லாரைப் பத்தியும் காமெடியா சொன்னாலும் இவங்க எல்லோருடைய பதிவுகளும் படிக்க சுவாரசியமா இருக்கும். இவங்களைப் போல பல பேர் தங்கள் சூழ்நிலையால பதிவு எழுத முடியாம இருக்காங்க... அப்போப்போ பதிவு எழுதுங்க... எனக்கு பிடிச்சவங்களை பத்தி நான் சொல்லிட்டேன். உங்களுக்கு பிடிச்ச பதிவர்கள் எல்லாம் பதிவு எழுதாம இருப்பாங்க... அவங்ககிட்டல்லாம் நீங்க சொல்லுங்க பதிவு எழுத சொல்லி... 

காணாம போன பதிவர்களை பத்தி சொல்றேன்னு சொல்லி நானே காணாம போய்டுவேன் போல.... சரிங்க... நான் இன்னைக்கு காணாம போறேன். நாளைக்கு புத்தம் புதிய பதிவர்களோட வரேன்....அறிமுக பதிவுல வந்து வாழ்த்து சொல்லிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி...


18 comments:

 1. அறி முகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. ஹா...ஹா..ஹா... நகைச்சுவையுடன் அறிமுகங்கள் நன்றாக இருந்தது.

  ReplyDelete
 3. தொலைந்து போனவர்களை அடையாளம் காட்டிய விதம் அருமை

  ReplyDelete
 4. ரெண்டு நாளா வலைப்பக்க்ம் வர முடியாமப் போச்சு. அதனால நீங்க வந்ததை கவனிக்கலை. என்னோட நல்வாழ்த்துக்கள் சௌந்தர். இன்னிக்கு நீஙக செர்ல்லியிருக்கற எல்லாருமே மிஸ் பண்ணிட்டமேன்னு மத்தவங்களை தோண வைக்கிற அற்புத எழுத்தாளர்கள்தான். மீண்டும் வரட்டும். என் நல்வாழ்த்துக்கள் அவர்கள் அனைவருக்கும்.

  ReplyDelete
 5. குறிப்பிட்ட அனைத்து நண்பர்கள் தளத்திற்கு சென்று படித்து வந்தேன்...
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
  நன்றி... (த.ம. 2)

  ReplyDelete
 6. ஏம்பா செளந்தரு நீ இங்தான் சுத்திட்டிருக்கியா....ரைட்டு கண்டினியூ

  ReplyDelete
 7. வா வா சங்கம், பயமறியா பாவையர் சங்கம் அப்படி பல சங்கம் வெச்சு தமிழ் வளர்த்துக்கிட்டு இருந்தாங்க. ஆனா இப்ப நிறைய்ய்ய்ய்ய்ய பேர காணோம். எனக்கு அதுல ரொம்ப வருத்தம்.

  4 வருஷத்துக்கு முன்னாடி கோலோச்சிகிட்டு இருந்த நட்புக்கள் எல்லாம் திரும்ப எழுதமாட்டாங்களான்னு இருக்கு எனக்கு.

  நீங்க சொல்றமாதிரி ஃபேஸ்புக், ட்விட்டர், ப்ளஸுன்னு ஒதுங்கிட்டாங்க.
  இவங்களைப்பத்தியும் பதிவு போட்டதற்கு நன்றிங்க.

  ReplyDelete
 8. தேடிப் போட்ட அறிமுகவாளர்களிற்கும், சௌந்தருக்கும் நல்வாழ்த்து. தொடருங்கள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 9. //காதல் மன்னன், கவி மன்னன், காதல் கவிதை எழுதுற நம்ம பாலாஜி சரவணன் யாரும் மறந்து இருக்க மாட்டாங்க... ரொம்ப நல்ல பையன். எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான்... பாருங்க.. ரொம்ப தெரிஞ்ச பையன் அதுக்காக அவன நான் வாடா போடா சொல்ற அளவுக்கு இருக்கோம்னா அப்போ பாருங்க அவன் எவ்வளவு நல்லவனா இருப்பான்னு... ஹி..ஹி ...ஹி... சாரி மச்சி... உனக்கு ரொம்ப மரியாதை கொடுத்துட்டேன்.

  ஆமா நான் எவ்வளவு நாளா கேக்குறேன் யார் அந்த ப்ரியமானவள் இப்போயாவது சொல்லு....
  ஆமாங்க... நம்ம சரவணன் ப்ரியமானவளுக்கு கவிதை எழுதினாரு. அந்த பொண்ண வந்து பின்னூட்டம் இட சொன்னார். ஆனா, அந்த பொண்ணு வந்துச்சா..?! பின்னூட்டம் போட்டுச்சான்னு சொல்லாமயே போனா எப்படிங்க... நீங்களே கேளுங்க...//

  நானும் பாலாஜி சரவணா எழுதும் காதல் கவிதைகளின் தீவிர விசிறி...:-) ஏன் இப்போ பதிவு எழுதலைன்னு தெரில...சௌ..ஒருவேளை அந்த மறுமொழி கேட்ட பொண்ணு கூட :-) எஸ்கேப் ஆகிட்டாரோ? :-)) கவிதை கிங் பால்ஸ் எங்கிருந்தாலும் வந்து கவிதை எழுதவும்...:-)

  ReplyDelete
 10. மீண்டும் பலர் வந்து பதிவு எழத வேண்டும் அப்போதுதான் வாசிக்கும் பார்வையாளர்களும் குதுகலிப்பார்கள் பாலாஜி சரணவனன் கவிதை எனக்கும் பிடிக்கும்!

  ReplyDelete
 11. நானும் பதிவுகளின் எண்ணிக்கையை குறைச்சுகிட்டேன்.. என்ன பண்றது? முகநூல் மோகம் ஒருபுறமிருந்தாலும் சக பதிவர்களின் ஊக்கங்கள் இல்லாமையும் இன்னொரு காரணம்.. வலையுலகம் மறுபடியும் சுறுசுறுப்பாகணும்.

  ReplyDelete
 12. அட்டகாசமான பதிவர்களை மீண்டும் அறிமுகப்படுத்தி பதிவெழுத தூண்டிய விதம் அருமை!

  ReplyDelete
 13. சரளமான காமெடி எழுத்து :)

  ReplyDelete
 14. மனித முன்னேற்றம் வேண்டும் .....
  நல்ல பதிவு உங்கள் பணி மேலோங்கிட வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. MISSING PEOPLE கேட்டகரில கூட நம்மள மறந்திருப்பாங்கன்னு நினைச்சேன். அந்த லிஸ்ட்டுல முதல் ஆளே நானா! ரொம்ப நன்றி நண்பா. நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கும் நன்றி. சீக்கிரமா வந்திடரேன். வர்....ட்...டா! :-)

  ReplyDelete
 16. இந்த வாரம் , சௌந்தர் தான் கலக்கல் ஆசிரிய பொறுப்பா? அதானே பார்த்தேன்.... திடீர்னு மக்கள் நம்ம வெள்ளாவியில் வந்து குதிக்கிறாங்களேனு....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... சௌந்தர்க்கு ஒரு ஜே..... !!!
  வாழ்த்துக்கள் !!
  நேரம் வொர்க் அவுட் ஆனதும் பதிவுலகில் ஆஜர் போட வாறேனுங்கோ......!!!

  ReplyDelete
 17. நான் என் வலைத்தள உறவுகளை அதிகமாய் மிஸ் பண்ணிவிட்டேன் இந்தப் பிரிவு மனதை வாட்டுதே!...
  இன்றைய பகிர்வில் இதைச் சொல்லாமல் செல்ல முடியவில்லை இருந்தும் இந்தத் தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
  ஐயா ...........

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது