மங்கையர் பற்றிதானே...?!
➦➠ by:
சௌந்தர்
கவிதை எழுதியாச்சு... அடுத்து என்ன எழுதுவோம்..?! அந்த கவிதைக்கு முக்கிய காரணமா இருக்குற மங்கையர் பற்றிதானே...?! இதோ சில மங்கையர்களின் எழுத்துக்களை இப்போது பார்ப்போம்.
ராதாஸ் கிச்சன் .. இவங்க சமைக்கும் பொழுது லொட லொடன்னு பேசிட்டே இருப்பாங்க போல. இவங்க தாத்தா வெள்ளைக்காரன்கிட்டயே ஓசில காபி வாங்கி குடிச்சி இருக்காராம்... வெள்ளகாரன் ஏன் காப்பிய ஓசியா கொடுத்தான்னு பதிவுல சொல்லி இருக்காங்க பாருங்க... ஆமா அது என்னங்க குக்கர் அல்வா..??? அப்போ கடாயில வைச்சா அது கடாய் அல்வாவா..??
உஷா ஸ்ரீ குமாரின் பார்வைகள். இவங்க ப்ளாக் போனா ஒரே மங்களகரமா இருக்கு. ஓவியம், சாமி பாட்டுன்னு கலக்குறாங்க... விருந்து கொடுக்குறதும் விருந்துக்கு போறதும் மறக்க முடியாத நிகழ்ச்சியா இருக்கும். அப்படிதான் இவங்க கொடுக்கும் விருந்துகளையும் நம்மோடு பகிர்ந்துக்குறாங்க.. இது தான் இந்திய உணவுன்னு சொல்லி ஏமாத்தி இருக்கீங்களே..?! நம்ம இந்தியாவை பத்தி என்ன நினைப்பாங்க..??
மகிஸ் ஸ்பேஸ்.. இவங்க பதிவை எல்லாம் படிக்கும் பொழுது இவங்களுக்கு போட்டோ எடுப்பதில் ஆர்வம் இருக்கும் போல... இவங்க போற எல்லா இடத்தையும் போட்டோ எடுத்து பதிவுல ஏத்திடுறாங்க... ஆனா இவங்களுக்கு பூ தான் ரொம்ப பிடிக்குமாம். பூவே உன்னை நேசித்தேன்னு சொல்றாங்க.. ரஸகு ல்லா எப்படி செய்யணும்ன்னு சொல்றாங்க... ரஸகுல்லாவை போட்டோ எடுத்து வேற போட்டு இருக்காங்க... நமக்கு இப்பவே ரஸகுல்லா சாப்பிடனும்ன்னு தோணுது இல்லைங்களா..??
என் சமையல் பக்கம் : இவங்களுக்கு முதல்ல நம்ம வாழ்த்தை சொல்லிடுவோம். எதுக்குன்னு கேக்குறீங்களா..?! ப்ளாக் எழுத தொடங்கி ஒரு வருடம் நிறைவு பண்ணிட்டாங்க... உருளைகிழங்கு மசாலா எப்படி இருக்குன்னு நமக்கே தெரியும். அதிலும் முட்டை போட்ட உருளைகிழங்கு மசாலா எப்படி இருக்கும்...உடனே வீட்டம்மாவை செய்ய சொல்ல போறீங்களா..?! போகும் போது முட்டையும் வாங்கிட்டு போங்க...
காகித பூக்கள். பெயருக்கு ஏற்றாற்போல் இவர் செய்யும் காகிதவேலைப்பாடுகள் நன்றாக இருக்கிறது. தன் மகளுக்காக காகிதத்திலே பொம்மை செய்திருப் பது அழகாக இருக்கிறது. நிறைய கற்றுகொள்ளலாம் இவரிடம். ரசம் புளிப்பா சூப்பரா இருக்கும். அதுவும் நெல்லிக்காய்ல ரசம் வைச்சா சொல்லவா வேணும்....
சித்ரா சுந்தர் : பூண்டு ஊறுகாய் நம்ம எல்லோருக்கும் பிடிக்கும். ஸ்கூல் படிக்கும் பொழுது சாப்பாட்டுக்கு பூண்டு ஊறுகாய் வாங்கி சாப்பிட்டது ஞாபகம் வருது. பாவக்காய் சிப்ஸ் சாப்ட்டு இருக்கீங்களா..?! என்ன.. வாய் ஒரு மாதிரியா போகுது. ஓ.. கசக்குமா..?? அட... ஆமாங்க... நான் கூட ஆனந்தபவன்ல பாவக்காய் சிப்ஸ் வாங்கி சாப்ட்டு பார்த்தேன். அப்போ கூட கசக்குது. ஆனாலும் பாவக்காய்ன்னா விரும்பி சாப்பிட நிறைய பேர் இருக்காங்க... மருந்துன்னா கசக்கத்தானே செய்யும்..??
நல்லா சாப்பாடு எல்லாம் சாப்ட்டு தெம்பா இருங்க நான் நாளைக்கு வரேன் ரஸகுல்லா ரெடி ஆகிருச்சு நான் சாப்பிட போறேன் ...டாட்டா பை...
ஆடி வெள்ளி, வரலட்சுமி நோம்புன்னு பெண்களெல்லாம் இன்னைக்கு பிஸியா இருப்பாங்க ம்ம்ம்ம் நம்ம பதிவை படிங்க சரி சரி கோவிலுக்கு போயிட்டு வந்து எல்லோரும் படிங்க.. உங்க விதி படிச்சுத்தான் ஆகணும்...
|
|
அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவலைச்சரத்தின் இன்றைய அறிமுகங்கள் அனைவர்க்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
ReplyDelete//மதிஸ் ஸ்பேஸ்...// அது மகிஸ் ஸ்பேஸ் என்றிருந்திருக்க வேண்டும். மாற்றிவிட இயலுமா!
கலக்கல் பகிர்வுகள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
:-)
@இமா சகோ சுட்டி காட்டியமைக்கு நன்றி மாற்றிவிட்டேன்... :)
ReplyDeleteவலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள் !
ReplyDeletethanks for sharing new blogs
ReplyDeleteஅனைத்து தளங்களும் புதியவை...
ReplyDeleteபாராட்டுக்கள் சௌந்தர் சார் !
அனைத்து அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி... (த.ம. 2)
அனைத்தும் புதியவையாக உள்ளன, தலைப்பை விருதுண்டல் என்று வைத்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
ReplyDeleteஎல்லா பதிவுகளும் சாப்பாடு விஷயமாகவே உள்ளது
அனைவரும் புதியவர்கள்...
உணவு அறிமுகங்கள் அருமை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் சகல சௌபாக்கியம் தரும் வரலஷ்மி விரதம்!
http:thalirssb.blogspot.in
மிக்க நன்றிங்க .இதுவரைக்கும் எல்லாரும் என் கைவினை பக்கத்தைதான் அறிமுகம் செய்திருக்காங்க .முதன்முதலாய் எனது சமையல் குறிப்பும் அறிமுகம் உங்களால்தான் .
ReplyDeleteஹைஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ அஞ்சு அக்காஆஆஆஆஆ ,கிரி அக்கா மகி அக்கா லாம் சமையல் குறிப்பு போட்டு பெரிய ஆளா ஆகி இருக்காங்களே ...
ReplyDeleteவாழ்த்துக்கள் அஞ்சு அக்கா !..
வாழ்த்துக்கள் கிரி அக்கா !...
வாழ்த்துக்கள் மகி அக்கா! ....
அறிமுகம் படுத்திய அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்
வலைச்சரத்தில் என்னுடைய வலைப்பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைச்சரத்தில் என்னுடைய வலைப்பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteSpecial thanks to Imma! :)
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!... ஆசிரியர் தங்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகட்டும்.
ReplyDeleteivvalavu puthiyavarkk
ReplyDeleteசகோதரர் சௌந்தர் அவர்களுக்கு என் நன்றிகள். :-)
ReplyDeleteவலைசரத்தில் என் வலை பதிவை அறிமுகப்படுத்திய சகோ சௌந்தர் அவர்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும்..:)
ReplyDeleteவலைச்சரத்தில் என் தளத்தை அறிமுகப்படுத்திய சகோ சௌந்தர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கும் மிகவும் நன்றி
ReplyDeletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
More Entertainment
www.ChiCha.in