07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சௌந்தர். Show all posts
Showing posts with label சௌந்தர். Show all posts

Sunday, July 29, 2012

விடைபெறுகிறேன்...





எப்படியோ ஒரு வாரம்ஓடிடுச்சு இரண்டாம் முறை வலைச்சரம் எழுத வாய்ப்பு கொடுத்த சீனா அய்யாவிற்கு நன்றி. நீண்டநாட்களுக்கு பிறகு இந்த வாரம் தான் அதிக பதிவுகள் படித்தேன், நிறைய எழுதி எழுதி அழித்து கொண்டிருந்தேன்... 

படிக்கும் வாய்ப்பும் எழுதும் வாய்ப்பும் வலைச்சரத்தாலே மீண்டும் வந்தது..  அறிமுக பதிவில் கூறியிருந்தேன் கழுகு பற்றி பின்னொரு பதிவில் பார்ப்போமேன்று இதோ இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.. 

கழுகு தளத்தை நாணும் தேவா அவர்களுக்கும் சேர்ந்து ஆரம்பித்தோம் இப்போது நிறைய குழும தோழர்கள் எங்களுடன் கை கைகோர்த்துள்ளார்கள் அவர்களின் உதவியோடு கழுகு தளத்தை சிறப்பாக கொண்டு செல்கிறோம்...  கழுகு தளத்தை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நிறைவடையபோகிறது ... கழுகு பறக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது...

கழுகின் பதிவுகளை பற்றி இப்போது பார்ப்போம்... 

சமூகத்தை குற்றம் சொல்பவர்களே....நீங்கள் மாறியிருக்கிறீர்களா..?  சமூக நல்நோக்கு என்பது தனிமனித விருப்பம். தனிமனித விழிப்புணர்வு. உணவினை காலமெல்லாம் தட்டில் இட்டு விட்டு அதை உதவி என்று உலகில் உள்ளோர் அறியச் செய்து என்னோடு இருக்கும் சக மனிதனை பிச்சைக்காரனாக்கி வைப்பதுதான் சமூக நல் நோக்கா?



இணைய தமிழ் உறவுகளே.. ஞானாலயாவுக்கு கை கொடுங்கள்....! எத்தனையோ பதிவர் குழுமங்கள் இந்த பதிவுலகில் பரவிக் கிடக்கின்றன, சமூக சேவை செய்யும் அமைப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன, தனித்தனி கட்சிகளைச் சார்ந்த அரசியல் விற்பன்னர்கள் தங்கள் கட்சிகளை வரிந்து கட்டி முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர், வலைத்தளங்களிலும், பேஸ்புக் போன்ற சமூக தொடர்பு தளங்களிலும் நல்லவர்கள் கூடி நாட்டுக்கு நன்மை செய்ய மல்லுகட்டிக் கொண்டிருக்கின்றனர்....,



பேஸ்புக் மற்றும் வலைப்பூக்களில் நடக்கும் அத்துமீறல்கள்...! இந்நேரம் கழுகு போன்ற சமூக விழிப்புணர்வு தளங்கள் யாரேனும் பெண்களால் நடத்தபெற்று இருக்குமெனில் எத்தனை சமூக நல கொம்புகள் சேவை செய்ய வந்திருக்குமென்று நாம் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை. 



சமூகத்தை குற்றம் சொல்பவர்களே....நீங்கள் மாறியிருக்கிறீர்களா..? சினிமாவில் கதாநாயகனாய் நடித்து அதை மக்கள் ஏற்றுக் கொள்ள ஏதேதோ அளவுகோல்கள் காலங்கள் தோறும் இருந்திருக்கின்றன. பெண்களைப் போலவே முகவெட்டும் செக்கச் செவலென்ற தேகமும், முதிர்ந்த சிவப்போடு கூடிய உதடுகளும், மைதா மாவினை பிசைந்து நிரவி விட்டது போல உடல் வாகும், இருந்து விட்டால் போதும்... கூடவே தனது நீணட் கூந்தலை சிக்கலெடுத்துக் கொண்டே கதாநாயகியோடு போதுமான இடைவெளிவிட்டு தனது சொந்தக் குரலில் கர்நாடக சங்கீதத்தில் பிச்சு உதறினால்...


ஆழமான எண்ணங்களும், தீராத வேட்கைகளும் கருத்து வடிவத்தில் இருந்து வெளிப்பட்டு எழுத்தாகிறது, வாய்ப்புக்களின் அடிப்படையில் பேச்சாகவும் அது உருக்கொள்கிறது. சக்தி வடிவமான எழுத்துக்களால் என்ன செய்து விட முடியும் என்ற எண்ணத்தை வரலாறு எப்போதும் தகர்த்தெறிந்து கொண்டே தனது நகர்வினை ஆக்கப்பூர்வமான விளைவுகளாய் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. கழுகு என்னும் போர்வாள்....!



கழுகின் பதிவுகளை வாசித்து கொண்டிருங்கள் எப்போதும்...

ஒரு வாரம் முழுவதும் எனது பதிவிற்கு ஆதரவு கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கருத்துரையிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...   எனது பணியை சிறப்பாக செய்தேனென்று   நம்புகிறேன் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் நான் சின்ன பையன்... ஹி ஹி ஹி   அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி...  


மேலும் வாசிக்க...

Saturday, July 28, 2012

இது ஒரு கலவை...!




நமக்கு என்னதான் தனித்தனியா சாம்பார், ரசம், மோர், வகை வகையா சாப்பிட்டாலும்.. ஒரு கலவையான கதம்பம் சோறு கொடுத்த, நம்ம என்ன வேணாம்னா சொல்லுவோம்.. அப்படியொரு கலவையான பதிவுகளைத்தான்  இப்போது நாம  பார்க்க போறோம். 

நம்மில் பலருக்கு  கணினியில ஸ்க்ரீன் ஷாட் எடுக்க தெரியும். ஆனால் மொபைலில் ஸ்க்ரீன் சாட் எடுக்க தெரியாது.. தெரிஞ்சுக்க நம்ம நண்பர் சொல்லி தர்றார் பாருங்க... நம்ம வலைத்தளத்திற்கு டெம்ப்ளேட் மாத்தணும்ன்னா நமக்கு தெரியாமா இருக்கும். அதையும் இவர் சொல்லி தர்றார்.  அட... இவர் திரட்டி முதலாளிக்கு கோரிக்கையெல்லாம் வைக்குறார். என்ன கோரிக்கையா..?! படிச்சுத்தான் பாருங்களேன்...

வல்லத்தான். இணையத்தில் இருக்கும் அஜீத் ரசிகர்கள் இவர் வலைத்தளம் பக்கம் போகாம இருக்க மாட்டாங்க... ஏன்னா... தல வரலாறு எழுதிட்டு வர்றார்ல... நாம படிக்காம விட்ட பழைய பேட்டியெல்லாம் எடுத்து போடுறார்.. அட 16 பகுதி தாண்டிட்டார்ங்க. இவரோட ஜாங்கிரி பூங்கிரி நீங்க படிச்சது இல்லையே .. படிச்சா அடுத்து அவர் எப்போடா ஜாங்கிரி பூங்கிரி போடுவார்ன்னு காத்துட்டு இருப்பீங்க...  

ஆடி மாசமில்லையா...அதான் இவங்க வீட்டு ஜன்னலுக்கு வெளிய ரொம்ப சத்தம் கேக்குதாம். ரொம்ப பீல் பண்றாங்க... ஆடி மாசம் ஒரு தொடர் பதிவு அதுல கோவிலை இடிச்சா என்னன்னு கேட்டதுக்கு என்னமோ இவங்க கோவிலையே இடிச்சிட்டது மாதிரி இவங்ககிட்ட எல்லாம் சண்டைக்கு போறாங்க... என்னங்க பொண்ணுங்க திங் கூட பண்ண கூடாதான்னு கேக்குறாங்க...  

தீபிகா கவிதைகள். இவங்களுக்கு அம்மா அப்பான்னா ரொம்ப பிடிக்கும் போல... யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்க.. அம்மாவின் அன்பும் அப்பாவின் அன்பையும்  எழுத்துகளில் கொண்டு வந்திருக்காங்க.. அம்மாவின் அன்பையும்  நல்லா விவரிச்சு எழுதியிருக்காங்க... ஒரு எட்டு போய்ப்பாருங்க...  

அட பேஸ்புக்கில் எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்கன்னு எண்ணங்களுக்குள் நான் சொல்றார்... பதிவை படிச்சாதான் தெரியுது. இப்படியெல்லாம் கூட ஏமாத்துவாங்களான்னு...  உண்மையிலே பில்லா படம் நல்லாத்தான் இருக்கு. நான் விஜய் ரசிகன். நானே சொல்றேன் கேளுங்கன்னு சொல்றார்...  ஆமாங்க... உண்மையா படம் நல்லா போகுதுன்னு இப்போ சொல்றாங்க... 

புத்தம் புது புதிவர் ஒருத்தரை இப்போ காட்டுறேன் பாருங்க... கலகலப்பா எழுதுறார் இவர். ஆனா, இவர் பேர பார்த்தாதான் பயமா இருக்கு... விருச்சிகன். பேர் எப்படி இருக்கு...?! நல்லா கொட்டுதா..?!  அமைச்சர் செங்கோட்டையன் மாற்றம் மக்களுக்கு என்ன பயன் எழுதிருக்கார்...  நீங்க சொல்றதெல்லாம் சரிதான் விருச்சிகன். ஆனா, அவர் எங்க கைய வைச்சு எப்படி மாட்டினாரோ..?! 

பதிவையெல்லாம் படிச்சீங்களா..?! அறிமுகம் செய்ற பதிவர்கள் எல்லாம் புதியவர்களா இருக்கணும்ன்னு முடிவுபண்ணிருந்தேன். அதை பாதியளவாவது செய்திருக்கேன்னு நம்புறேன். இனி நாளை ஒரு நாள் தான் இருக்கிறது. நாளை வர்றேன்... காத்திருங்கள்.



மேலும் வாசிக்க...

Friday, July 27, 2012

மங்கையர் பற்றிதானே...?!






கவிதை எழுதியாச்சு... அடுத்து என்ன எழுதுவோம்..?! அந்த கவிதைக்கு முக்கிய காரணமா இருக்குற மங்கையர் பற்றிதானே...?!  இதோ சில மங்கையர்களின் எழுத்துக்களை இப்போது பார்ப்போம்.

ராதாஸ் கிச்சன் .. இவங்க சமைக்கும் பொழுது லொட லொடன்னு பேசிட்டே இருப்பாங்க போல. இவங்க தாத்தா வெள்ளைக்காரன்கிட்டயே ஓசில காபி வாங்கி குடிச்சி இருக்காராம்... வெள்ளகாரன் ஏன் காப்பிய ஓசியா கொடுத்தான்னு பதிவுல சொல்லி இருக்காங்க பாருங்க... ஆமா அது என்னங்க குக்கர் அல்வா..??? அப்போ கடாயில வைச்சா அது கடாய் அல்வாவா..??  



உஷா ஸ்ரீ குமாரின் பார்வைகள். இவங்க ப்ளாக் போனா ஒரே மங்களகரமா இருக்கு. ஓவியம், சாமி பாட்டுன்னு கலக்குறாங்க... விருந்து கொடுக்குறதும் விருந்துக்கு போறதும் மறக்க முடியாத நிகழ்ச்சியா இருக்கும். அப்படிதான் இவங்க கொடுக்கும் விருந்துகளையும் நம்மோடு பகிர்ந்துக்குறாங்க.. இது தான் இந்திய உணவுன்னு சொல்லி ஏமாத்தி இருக்கீங்களே..?! நம்ம இந்தியாவை பத்தி என்ன நினைப்பாங்க..??  


மகிஸ் ஸ்பேஸ்.. இவங்க பதிவை எல்லாம் படிக்கும் பொழுது இவங்களுக்கு போட்டோ எடுப்பதில் ஆர்வம் இருக்கும் போல... இவங்க போற எல்லா இடத்தையும் போட்டோ எடுத்து பதிவுல ஏத்திடுறாங்க... ஆனா இவங்களுக்கு பூ தான் ரொம்ப பிடிக்குமாம். பூவே உன்னை நேசித்தேன்னு  சொல்றாங்க.. ரஸகுல்லா எப்படி செய்யணும்ன்னு சொல்றாங்க... ரஸகுல்லாவை போட்டோ எடுத்து வேற போட்டு இருக்காங்க... நமக்கு இப்பவே ரஸகுல்லா சாப்பிடனும்ன்னு தோணுது இல்லைங்களா..??  


என் சமையல் பக்கம் : இவங்களுக்கு முதல்ல நம்ம வாழ்த்தை சொல்லிடுவோம். எதுக்குன்னு கேக்குறீங்களா..?! ப்ளாக் எழுத தொடங்கி ஒரு வருடம் நிறைவு பண்ணிட்டாங்க... உருளைகிழங்கு மசாலா  எப்படி இருக்குன்னு நமக்கே தெரியும். அதிலும் முட்டை போட்ட உருளைகிழங்கு மசாலா எப்படி இருக்கும்...உடனே வீட்டம்மாவை செய்ய சொல்ல போறீங்களா..?! போகும் போது முட்டையும் வாங்கிட்டு போங்க...  

காகித பூக்கள். பெயருக்கு ஏற்றாற்போல் இவர் செய்யும் காகிதவேலைப்பாடுகள் நன்றாக இருக்கிறது. தன் மகளுக்காக காகிதத்திலே பொம்மை செய்திருப்பது அழகாக இருக்கிறது. நிறைய கற்றுகொள்ளலாம் இவரிடம். ரசம் புளிப்பா சூப்பரா இருக்கும். அதுவும் நெல்லிக்காய்ல ரசம் வைச்சா சொல்லவா வேணும்....


சித்ரா சுந்தர் : பூண்டு ஊறுகாய் நம்ம எல்லோருக்கும் பிடிக்கும். ஸ்கூல் படிக்கும் பொழுது சாப்பாட்டுக்கு பூண்டு ஊறுகாய் வாங்கி சாப்பிட்டது ஞாபகம் வருது. பாவக்காய் சிப்ஸ் சாப்ட்டு இருக்கீங்களா..?! என்ன.. வாய் ஒரு மாதிரியா போகுது. ஓ.. கசக்குமா..?? அட... ஆமாங்க... நான் கூட ஆனந்தபவன்ல பாவக்காய் சிப்ஸ் வாங்கி சாப்ட்டு பார்த்தேன். அப்போ கூட கசக்குது. ஆனாலும் பாவக்காய்ன்னா விரும்பி சாப்பிட நிறைய பேர் இருக்காங்க... மருந்துன்னா கசக்கத்தானே செய்யும்..??

நல்லா சாப்பாடு எல்லாம் சாப்ட்டு தெம்பா இருங்க நான் நாளைக்கு வரேன் ரஸகுல்லா ரெடி ஆகிருச்சு நான் சாப்பிட போறேன் ...டாட்டா பை... 

ஆடி வெள்ளி, வரலட்சுமி நோம்புன்னு   பெண்களெல்லாம் இன்னைக்கு பிஸியா இருப்பாங்க ம்ம்ம்ம் நம்ம பதிவை  படிங்க சரி சரி கோவிலுக்கு போயிட்டு வந்து எல்லோரும் படிங்க.. உங்க விதி படிச்சுத்தான் ஆகணும்...


மேலும் வாசிக்க...

Thursday, July 26, 2012

கவிதைகள் பிறக்கின்றன...






கவிதையென்று  எப்படி பெயர் வைத்தார்களோ.. அழகாய் மென்மையாய் இருப்பதாலோ என்னவோ.. சில வரிகளிலே கோபம், துன்பம், இன்பம், என எல்லாவறையும் சொல்லி விடுகிறது கவிதை.

சிலருக்கு கவிதை எழுத தெரியாது. ஆனால் கவிதையை தேடி தேடி படிப்பார்கள்.. அப்படியொரு காதல் இருக்கும் கவிதையின் மீது.. 


நானும் கவிதை எழுதுகிறேன் என்று ஏதோ கிறுக்கி வைப்பேன்.. அதெல்லாம் ஒன்றும் கவிதை கிடையாதென்று எனக்கு தெரியும். இருந்தாலும் அவ்வப்போது ஏதாவது கிறுக்கி வைப்பது வாடிக்கை. கவிதையை படிப்பதும் வாடிக்கை தான். படித்து அடடா என வியந்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  

கிராமத்துக் கருவாச்சியாக இருந்து கொண்டு இவரின் வரிகள் எல்லாம் பாருங்களேன்... யாராக இருந்தாலும் அக்கா தம்பி என்று உறவு முறை வைத்தே அழைப்பார் இவர்..  அதுவும் அம்மாவை பற்றி இவர் எழுதிய கவிதை... 


கார்த்திக்கின் கிறுக்கல்கள்.. வெகு நாட்களாய் இவர் பதிவுகள் எழுதி வருகிறார்..  இவரின் தனிமை பற்றிய கவிதையை படிக்கும் பொழுது ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது.. நான் மீண்டும் மீண்டும் படித்து கொண்டிருக்கிறேன். நீங்களும் ஒரு முறை வாசித்து பாருங்களேன்....


கவிதை.. கவிதைக்கு கவிதையை விட ஒரு சிறந்த தலைப்பு வைக்க முடியுமா என யோசித்து கவிதையென தலைப்பு வைத்து விட்டார் போல..  அம்மா,மனைவி,மகள் நாம் வாழ்கையில் இவர்கள் ஒவ்வொருவர் வரும் பொழுதும் நமக்கான அன்பும்,பாசமும் அதிகரிக்கும். அப்படியொரு தந்தை மகளின் பாச வரிகள் இங்கே காட்சிகளாய் ஓடுகிறது...



தூரிகைச் சிதறல் இவரின் எழுத்துகளை பார்த்தால் அதில் தமிழை தவிர வேறு மொழியை பார்க்க முடியாது.. அப்படியொரு எழுத்து அவரிடம் இருக்கிறது...  கவி குழந்தை ஆமாம்... கவிதையே  குழந்தையாக பிறந்திருக்கிறது இவரின் வரிகளில்.. 


தமிழ் தொட்டில்.. இவரின் தொட்டிலில் அனைத்து வகையான வரிகளும் கிடைக்கின்றன..கவிதை மட்டுமில்லாமல் சினிமாயென  அனைத்தையும் ஒரு கை பார்க்கிறார்.. உன்னுடைய இருத்தலின்றி காதல் வரி கவிதைகள் வந்துகொண்டே இருக்கிறது. 


காதல்:  யார் மீது என்கிறீர்களா..? அட... அது இவரை தான் கேட்க வேண்டும். எழுதுவது இரண்டு வரியோ, மூன்று வரியோ... அதில் அனைத்திலும் காதல் வழிந்தோடுகிறது. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார் என்று நம்மை கேள்வி கேட்க வைக்கிறது இவரின் கவிதை. என்னவென்று சொல்ல இவரின் கவிதைகளை... ம்ம்ம்..


மறவாதே கண்மணியே.. ம்ம்ம்... யாரை சொல்கிறாரோ.. அவருக்கென்று ஒரு கண்மணி இருக்கிறார்கள். அவரைதான் கேட்க வேண்டும். முகப்புத்தகத்தில் இவரின் கவிதைகள் பார்க்கலாம்.. கவிதைகளுக்கு ஏற்றாற்போல் புகைப்படங்கள் தேர்வு செய்வார்... இவர் தேர்வு செய்யும் புகைப்படமும் கவிதை சொல்லும். 


அனாதை காதலன் : இன்னும் யாரும் ஜோடி கிடைக்கவில்லையா என கேட்டுப்பாருங்கள். அது ரகசியம் என்பார்..இவரின் வலைத்தளம் சென்றால்அத்தனையும் காதலாய் நிரம்பி வழிகிறது..


கவிதைகள் அனைத்தும் கவித்துவமாய் இருந்ததா..? நாளை வேறு ஒரு வகையுடன் வருகிறேன்.. கவிதையை படித்து கவிதை படைத்து கொண்டிருங்கள்.


மேலும் வாசிக்க...

Wednesday, July 25, 2012

வரவேற்போம் புதியவர்களை...





புதிய பதிவர்கள் நாள் தோறும் வந்து கொண்டிருக்கிறார்கள்  அதில் நம் கண்ணில் படுபவர்கள் சிலர் மட்டுமே. நேற்று  புதிய பதிவர்களோடு  வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றேன். அனைத்து தளங்களையும் பார்க்க ஒரு நாள் போதவில்லை.. சில வலைத்தளங்களை மட்டும் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...


மாய மித்ரான்னு ஒரு வலைத்தளம். உள்ள போய் பார்த்தா ஒரு புலம்பு புலம்பிட்டு இருந்தாங்க... வண்டிய வேகமா ஓட்டாதீங்க... ஐஸ்வர்யா குண்டா ஆகிட்டாங்க... அட.. அப்போ கூட அவங்க அழகு தான். மத்தவங்க யாரும் புலம்பாதீங்க... இவங்க புலம்புறாங்க. அத கொஞ்சம் கேளுங்க...

 
சிந்தனை சிறகுகள்.. இந்த பேர பார்த்ததும் உள்ளே போய் அப்படி என்ன சிந்தனை சொல்றாங்கன்னு பார்த்தா.. ஒருத்தர் பல்பு வாங்கியிருக்கார், ஒரு மனுஷன் எப்படியெல்லாம் பல்பு வாங்குறாங்க பாருங்க... இந்த விஷயத்தை வெளிய சொல்லாதேன்னு சொன்னா பதிவு போட்டு ஊருக்கே சொல்லிட்டாங்க... அது என்ன பல்பு உள்ளே போய் பாருங்க.. விழுந்து விழுந்து சிரிப்பீங்க...

திடங்கொண்டு போராடு அட... பேரே நல்லா இருக்குல்ல... அவரின் நிறைய பதிவுகள் மிகவும்  சுவாரசியமா இருக்கு. சென்னை பற்றிய பதிவு நல்லா தெளிவா எழுதியிருக்கார்.. சென்னைல வந்து பொருட்கள் வாங்கணும்ன்னு நினைப்பவர்கள்  இந்த பதிவை படித்தால்  எந்த பொருள் எங்கெங்கு  கிடைக்கும்ன்னு நீங்க தெரிஞ்சுக்கலாம். 


மனதில் உறுதி வேண்டும். இவர் கலவையான ஒரு பதிவர். அரசியல், கதை, தொழில்நுட்பம், சினிமா, நகைச்சுவை என அனைத்தும் எழுதி வருகிறார். ஆனால், இவருக்கும் நம்ம பதிவை யாரும் வாசிக்கலைன்னு வருத்தம் இருந்திருக்கு.  ஆனால் இந்த பதிவுக்கு பிறகு அப்படியொரு எண்ணமில்லை சொல்றாங்க. இதை நான் எதிர் பார்க்கவில்லை.....!!!!

 இவரின் சிதறல்கள் நன்றாக இருக்கும். நீங்களும் படிச்சு பாருங்க...



கலிகாலம். இவங்க மொபைல் போன் பற்றி ஒரு பதிவு போட்டு இருக்காங்க... அத படிச்சாவது நமக்கு மொபைல் மோகம் குறையுமான்னு தெரியல... இவங்க பதிவு அனைத்திலும் ஒரு சமூக அக்கறை தெரியுது. இவங்க ர‌யிலில் ப‌ய‌ண‌ம் செய்வ‌து எப்ப‌டின்னு பதிவுகள் எழுதிட்டு வர்றாங்க... அந்த பதிவையெல்லாம் நாம் கட்டாயம் படிச்சு பார்க்கணும். அப்போதுதான் எப்படி பயணம் செய்யணும்ன்னு நமக்கு தெரியும். 



தமிழ் காதல். இவருக்கு தமிழின் மீது அதிக காதல் இருப்பது இவரின் பதிவை படித்தாலே தெரியும். புதிய சொற்களையெல்லாம் கற்க நினைப்பவர். இவரின் கவிதைகள் மிகவும் அருமையாக இருக்கும். படித்து கொண்டே இருக்கலாம்.கலாச்சாரம்.....எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்ற தலைப்பில் தன் மனவலிகளை எழுதி இருப்பார். வெளிநாட்டில் இருப்பவர்கள் நிச்சயம் படிக்கத்தான் வேண்டும். 


சரி.. சரி... நீங்க இந்த பதிவை எல்லாம் படிச்சிட்டு இருங்க... நான் நாளைக்கு வர்றேன். என்ன நாளைக்கு என்ன பதிவுன்னு சொல்லிட்டு போகணுமா.... அட... அது எனக்கே தெரியாது. நாளைக்கு வந்து பாருங்க...



பதிவை படித்து அனைத்து தளத்திற்கு சென்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என கருத்துகள் தெரிவிக்கும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றிகள் பல..  




மேலும் வாசிக்க...

Tuesday, July 24, 2012

வாங்க வாங்க வந்து எழுதுங்க...




என்னடா நேத்து காணாமல் போன பதிவர் சொன்னனே..?! எங்கடா என்னை காணோம்ன்னு தேடுறீங்களா... நான் இன்னும் காணாம போகலைங்க. ஆனா நம்ம பதிவுலகத்துல நிறைய பேர் காணாம போய்ட்டாங்க... 

பதிவுலகத்துல வந்த புதுசுல அடிக்கடி பதிவு போடுவாங்க... நடந்தா பதிவு. தும்பினா பதிவுன்னு போட்ட ஆளுங்களையெல்லாம்   இப்போ எங்கன்னு வலை வீசி தேட வேண்டியதா இருக்கு... 

அப்படி எங்கதான் போனாங்கன்னு பாக்குறீங்களா..?! எங்கயும் போகல... பேஸ்புக், கூகிள் பிளஸ்ன்னு சுத்தி சுத்தி கும்மி அடிக்குறாங்க... பதிவுன்னா ஒரு பக்கம் புல்லா எழுதி எவனாவது வரமாட்டானா..?! அவன போட்டு வெட்டலாம்ன்னு காத்துட்டு இருப்பாங்க... ஆனா இப்போ அப்படியெல்லாம் இல்ல... பேஸ்புக் கூகிள்பிளஸ்-ல நாலு வரி போட்டா போதும். தன்னாலே அருவாவோட கிளம்பி போயிடுறாங்க... அப்படியே ஆபிஸ் வேலை முடிஞ்சு வீட்டுக்கும் போயிடுறாங்க....     

அட இப்போ நான் சொல்ல போறவங்க எல்லாம் இப்படி பண்ணுறவங்க இல்ல... நான் பொதுவா சொல்றேன்.. நீங்க பாட்டுக்கு சீரியஸா அருவா எடுத்திட்டு வந்துராதீங்க... இது கழுகு இல்ல... வலைச்சரம்.

இவர்தான் பிரியமுடன் ரமேஷ்... இவர் எழுதுற விமர்சனம் எல்லாம் நல்லா இருக்கும். வந்த புதுசுல எல்லோருக்கும் போய் கமெண்ட் போடுவார். ஆனா இப்போ வேலை வேலைன்னு சுத்திட்டு ப்ளாக் உலகம் ஒன்னு இருந்துச்சுன்றதையே அவரு மறந்துட்டார்.... அப்போப்போ  சிறுகதையெல்லாம்  எழுதுவார்....   

அதுலயும் அக்கா பத்தி ஒரு சிறுகதை எழுதி இருக்கார் பாருங்க... நீங்க உங்க அக்காவை மிஸ் பண்ணா இந்த கதையை படிச்சு பாருங்க. 


தொப்பி தொப்பி-ன்னு சொன்னா எல்லோருக்கும் தெரியும். ஏன்னா அவர் அம்புட்டு கோவக்காரரு. கோவைக்காரு இல்லைங்க... இவர் ஒரு பதிவு போட்டா அதுக்கு பக்கம் பக்கமா பின்னூட்டத்தில் பதில் சொல்வார் பாருங்க... அதுவே ஐஞ்சு ஆறு பதிவு தேறும். கொஞ்சம் சர்ச்சையான பதிவர்ல இவரும் ஒருத்தர். ஆனா, இப்போ எல்லாம் எப்பயாச்சும்  தான் பதிவு போடுறார்...  

நிறைய விசயம் தெரிஞ்ச ஆளு பதிவுலகத்தை கும்மி அடிச்சு சீர் அழிக்க கூடாது. ஏதாவது செய்யணும்ன்னு இவருக்கு எண்ணம் இருந்துச்சு... ஆனா நம்ம எங்க நல்லது சொன்னா கேக்கப் போறோம்..?! ஆனா, இவர் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் மட்டும் சொல்ல சொன்னார். அதை நீங்களே என்னன்னு போய் பாருங்க... 


காதல் மன்னன், கவி மன்னன், காதல் கவிதை எழுதுற நம்ம பாலாஜி சரவணன் யாரும் மறந்து இருக்க மாட்டாங்க... ரொம்ப நல்ல பையன். எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான்... பாருங்க.. ரொம்ப தெரிஞ்ச பையன் அதுக்காக அவன நான் வாடா போடா சொல்ற அளவுக்கு இருக்கோம்னா அப்போ பாருங்க அவன் எவ்வளவு நல்லவனா இருப்பான்னு...  ஹி..ஹி ...ஹி... சாரி மச்சி... உனக்கு ரொம்ப மரியாதை கொடுத்துட்டேன்.

ஆமா நான் எவ்வளவு நாளா கேக்குறேன் யார் அந்த ப்ரியமானவள் இப்போயாவது சொல்லு.... 
ஆமாங்க... நம்ம சரவணன் ப்ரியமானவளுக்கு கவிதை எழுதினாரு. அந்த பொண்ண வந்து பின்னூட்டம் இட சொன்னார். ஆனா, அந்த பொண்ணு வந்துச்சா..?! பின்னூட்டம் போட்டுச்சான்னு சொல்லாமயே போனா எப்படிங்க... நீங்களே கேளுங்க...


 என்கிட்ட பேசுற எல்லோரும் கேக்குற கேள்வி. என்ன இப்போவெல்லாம் உங்க பசங்க பதிவே எழுதுறது இல்லன்னுதான்... அட யார்டா அது எங்க பசங்கன்னு கேக்குறீங்களா... டெரர் கும்மிதாங்க... என்ன யாரும் போஸ்ட் எழுதுறது இல்ல... ஒரு கும்மி இல்ல... ஒரு சண்டை இல்லன்னு கேப்பாங்க... அடப்பாவிங்களா.... சண்டை போட சொல்றீங்களே... உங்களுக்கே இது நியாயமான்னு கேப்பேன். 

இல்லையா பின்ன... டெரர் கும்மின்னாலே டெரர் தான்னு சொல்றாங்க.... இன்னுமாடா இந்த உலகம் நான் டெரர் குரூப்ன்னு நம்புதுன்னு என் மைன்ட் வாய்ஸ் வேற ஓடும்.. சரிங்க... விசயத்துக்கு வரேன். டெரர் கும்மில ஒரு போட்டி நடத்துனாங்க இல்லையா... அதுக்கு முக்கிய காரணம் இவர் தாங்க...இவர் சினிமா புதிர் எல்லாம் போடுவார். அத கண்டுபுடிக்குறேன்னு சொல்லி ஒரு நாள் எல்லாம் செலவு பண்ணா... மறு நாள் இவர் வந்து விடை போட்டுடுவார். அதுக்கு ஏங்க நம்ம விடை சொல்லணும்..?! அதான் அவரே சொல்லிடுறாரே...?!  

இப்போவெல்லாம் புதிர் போடுறதே இல்ல... இந்த பதிவுலகமே உங்க புதிர் போட்டிக்காக காத்து இருக்குங்க. 
யாருப்பா அங்க... அப்படியெல்லாம் இல்லன்னு சொல்றது..?! இப்படி பொய் சொன்னாதான் அவர் பதிவு எழுதுவார். 

வாங்கன்னா வாங்க... வந்து உங்க புதிர் போட்டிய ஆரம்பியுங்க..

அட யாருப்பா அது..?! அருண் போட்டியே ஆரம்பிக்கல... அதுக்குள்ள நோட் பென்சில் எடுக்குறது...?? அட நம்ம இம்சை அரசன் பாபு-வா..?! ஆமா இப்போவெல்லாம் பல்பு வாங்குறதே இல்லையா..?? 

நம்ம  பல்பு வாங்கினா என்ன பண்ணுவோம். வாங்குன பல்பை அப்படியே ஓடைச்சு மண்ணை போட்டு மூடிடுவோம். ஆனா... இவர் ஆபிஸ் வந்து ப்ளாக்கர் ஓபன் பண்ணி ஐ.. ஐ... ஐ.... நான் பல்பு வாங்கிட்டேன்னு சொல்லி பதிவு போடுவார். ஆனா இப்போ போடுறதே இல்லை...

ஆனா...இவருக்கு லவ் பிடிக்காதாம். ஆனா.. ஒரு காதல் கதை எழுதி இருக்கார். ஜைன்தவி..ஐ ..லவ் ..யூ சொல்றார். சைந்தவி இல்லீங்க... அப்படி சொன்னா வெளியூர்காரன் அருவா எடுத்திட்டு வருவார்...  இவர் யாருக்கு ஐ ..லவ் ..யூ  சொல்றார்ன்னு போய்ப்பாருங்க... இவர் பதிவு எல்லாம் ரொம்ப நகைச்சுவையா இருக்கும். அடிக்கடி அரசியலும் பேசுவார்... இப்போ பதிவு எழுத மாட்டேங்குறார். என்ன பிரச்னைன்னு தெரியல... முதல்ல எல்லாம் ஒரு பல்பு தான் வாங்கினார். ஆனா... இப்போ இன்னொரு பல்பு கொடுக்க ஆள் வந்து இருக்கு....  அப்போ நிறைய பல்பு வரும்ன்னு எதிர்பாக்குறீங்க... கண்டிப்பா வரும். வெயிட் பண்ணுங்க... அண்ணன் நான் சொன்னா கண்டிப்பா கேப்பாரு...


"பதிவுலக பின்னூட்ட புயல்" நம்ம சித்ரா எங்க போனாங்கன்னு தெரியுமா...? இந்தியாவுக்கு போயிட்டு வந்ததுல அவங்களுக்கு என்னமோ ஆகிப்போச்சு. அதான் பதிவே எழுதுறது இல்ல...  ஆனானப்பட்ட சித்ராவே பதிவு எழுதுறது இல்ல... நாங்க என்னத்த எழுத போறோம்ன்னு நிறைய பேர் சொல்றாங்க... அதுக்காகவாவது நீங்க எழுதணும். அப்படின்னு நான் சொல்லல... மக்கள் சொல்றாங்க...

இவங்களை யாரோ வெள்ளாவி வச்சு  வெளு வெளுன்னு வெளுத்து இருக்காங்க... பதிவு எழுதுவியா எழுதுவியான்னு... அதான் எழுத மாட்றாங்க.. நீங்க பதிவு போடலைனாலும் பரவாயில்லை. வந்து கமெண்ட் போடுங்க... மக்கள் எல்லாம் ஆசைப்படுறாங்க...  (மக்களுக்கு நல்லதாவே ஆசைப்பட தெரியாது போல... இது என் மைன்ட் வாய்ஸ்) 

சும்மா இவங்களை எல்லாரைப் பத்தியும் காமெடியா சொன்னாலும் இவங்க எல்லோருடைய பதிவுகளும் படிக்க சுவாரசியமா இருக்கும். இவங்களைப் போல பல பேர் தங்கள் சூழ்நிலையால பதிவு எழுத முடியாம இருக்காங்க... அப்போப்போ பதிவு எழுதுங்க... எனக்கு பிடிச்சவங்களை பத்தி நான் சொல்லிட்டேன். உங்களுக்கு பிடிச்ச பதிவர்கள் எல்லாம் பதிவு எழுதாம இருப்பாங்க... அவங்ககிட்டல்லாம் நீங்க சொல்லுங்க பதிவு எழுத சொல்லி... 

காணாம போன பதிவர்களை பத்தி சொல்றேன்னு சொல்லி நானே காணாம போய்டுவேன் போல.... சரிங்க... நான் இன்னைக்கு காணாம போறேன். நாளைக்கு புத்தம் புதிய பதிவர்களோட வரேன்....



அறிமுக பதிவுல வந்து வாழ்த்து சொல்லிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி...


மேலும் வாசிக்க...

Monday, July 23, 2012

நானே இது நானே...





நான்தானுங்க சௌந்தர் என்னை யாருக்கும் தெரியாது... அப்பறம் ஏன் இங்க வந்தேன் கேக்குறீங்களா..?? 

சீனா அய்யா தான் வலைச்சரம் எழுதுப்பான்னு சொன்னார். 

அய்யா... நான்தான் ஏற்கனவே எழுதிட்டேன்னு சொல்லி எஸ்கேப் ஆகலாம்ன்னு பார்த்தா அவர் விடுற மாதிரி இல்ல... இன்னொரு முறை எழுதுப்பான்னு சொன்னார். சரிங்க அய்யா எழுதுறேன்னு சொல்லிட்டேன்.

எழுதுறேன்னு சொன்னேனே தவிர சத்தியமா என்ன எழுதுறதுன்னே தெரியலை. என்னை பத்தி எழுதணும்ன்னு சொன்னா என்ன பத்தி எழுதுறது ஒன்னுமே  இல்லீங்க... 

தெரியாத்தனமா ரசிகன்னு ஒரு ப்ளாக் ஓபன் பண்ணி எழுதிட்டே இருந்தேன்.. இப்போ எழுதுறதே இல்லை ஆடிக்கு ஒண்னு அமாவாசைக்கு ஒண்ணுன்னு கூட பதிவு போடுறது இல்ல... 

ஏன் எழுதுறது இல்லைன்னு கேக்குறீங்களா..?? நீங்க கேக்கலேன்னாலும் சொல்லத்தான் போறேன்...ஏன் எழுதுறது இல்லைனா கழுகு தளத்திலே நேரம் சரியா இருக்குங்க... அது என்ன கழுகு-ன்னு கேக்குறீங்களா அதை பற்றி இன்னொரு பதிவுல சொல்றேன். 

இந்த பதிவுல என்னைய பத்தி சொல்றேனுங்க...  நிறைய பதிவுகள் இல்லைங்க.. ஏதோ கொஞ்சமா தான் எழுதுறேன்.... இப்பல்லாம் யாரும் அதிகம் பதிவு எழுதுறதும் இல்லை. எல்லாம் பேஸ்புக்ல நாலு வரி போட்டு அங்க விவாதம் பண்ணிட்டு போயிடுறாங்க.    

நான் இப்போ வலைச்சரம் எழுத ஒப்புகொண்டதுக்கு காரணமே நிறைய பதிவுகள் படிக்கலாம். நிறைய பதிவுகள் எழுதலாம்ன்னுதான்....  வலைச்சரம் காரணம் வைச்சாவது படிக்கலாமே... 




சமையல் கேஸ் பதிவு செய்ற முறை யெல்லாம்  இப்போ மாறி போயிருச்சு அதை பத்தி நான் தான் முதலில் தெளிவா விளக்கம் கொடுத்து இருந்தேன் யாருக்காவது கேஸ் புக் பண்ணனும்னா என் பதிவை பார்த்து தெரிஞ்சுக்கோங்க.....


அப்போப்போ கதை கவிதைன்னு எழுதுவேன். நல்லா இருக்குமான்னு கேக்காதீங்க... நான் எப்படி நல்லா இருக்கும்ன்னு பொய் சொல்றது..?! ஏன்னா எனக்கு பொய் சொல்ல தெரியாதுங்க......  நித்தியா அட அது  யாரு நித்தியா வா பதிவை படிச்சு பாருங்க...



நானும் கவிதை எல்லாம் எழுதுவேங்க... அதான் ஏற்கனவே சொல்லிட்டேன்ல... ஆனா நான் எழுதின கவிதையிலே எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை இது தாங்க... போற போக்குல இதையும் பாருங்க... சரிந்து கிடந்தேன்...     


அப்பறம் நேசம் போட்டிக்காக ஒரு கதை எழுதினேன்...  டேய் நீ எல்லாம் ஏன் டா கதை எழுதுறேன்னு சொல்லி தலையிலே கொட்டி அனுப்பிட்டாங்க. இரண்டு சூவிங்கம் கொடுங்க... அட உங்களை கேக்கல.. அதான் கதையோட பேரு... 


இந்த பதிவையெல்லாம் படிச்சிட்டு இருங்க... நாளைக்கு காணாமல் போன பதிவர்களை தேடி கண்டுபிடிச்சிட்டு வரேன்..... 



மேலும் வாசிக்க...

Sunday, April 10, 2011

இனிமேல் நாங்க தான்...!!!




நேத்து ஒரு கூட்டத்தோடு வரேன் சொன்னேன்ல இதோ வந்திருக்கேன் பாதி பேர் தான் வந்து இருக்காங்க மீதி பேர் ஏதோ தேர்தல் வேலையா வெளிய போய் இருக்காங்க...இந்த கூட்டம் வேறு யாரும் இல்லைங்க எனக்கு ரொம்ப தெரிந்த கூட்டம்....இருங்க இவங்கள பத்தி சொல்றேன்.

எதுவும் நடக்கலாம் சொல்றாங்க...உங்களுக்கு இல்லைங்க...யாரை சொல்றார் தெரியல...!!! இவர் வலைச்சரம் ஆசிரியராக இருந்தவர். நல்லா கதை எழுதுவார் நிறைய தொழில்நுட்பப விஷயம் இவருக்கு தெரியும்....போட்டோஷாப் பற்றி இவர் அதிகம் எழுதுவார்...நிறைய பேருக்கு உதவி செய்வார் அவர் தான் எஸ்கே


உண்மை சுடும் சொல்றார் ...அது என்னமோ உண்மை தான்...இவரின் அரசியல் கட்டுரைகள் எல்லாம் புள்ளி விவரத்தோடு இருக்கும்ங்க...சிறைச்சாலை தன் நண்பரின் அனுபவத்தை சொல்லி இருக்கார் பாருங்க...சகபதிவரை நையாண்டி செய்தது இருக்கிறார்....கேட்டால் இவருக்கு நையாண்டி செய்யவும் தெரியுமாம்


இவர் தாங்க முறை மாமன்...யாருக்கு முறை மாமன் கேக்குறீங்களா...அதை தான் சொல்ல மாட்டுறார்...இவனும் செல்வாவும் சேர்ந்து ஒரு பதிவு போட்டனுங்க பாருங்க இவங்ககளுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும் ...ஏன்னா அது அப்படி ஒரு பதிவு...இந்த பதிவுக்கு கூட்டு முயற்சி வேற...



இவங்க தான் மல்லிகை அகிலா. பெயர் காரணம் தொடர் பதிவு இவங்க தான் ஆரம்பித்து வைச்சாங்க. பதிவுலகில் இன்னும் இந்த தொடர் ஓடிட்டு இருக்கு...நான் எங்க கவிதை இவங்க என்னை அடிக்க வராங்க மக்களே என்னனு கேளுங்க... சில எச்சரிக்கை உங்கள் கவனத்திற்கு சொல்றாங்க... நிறைய தெரியாத தகவலை சொல்றாங்க..




உங்க வீட்டுக்கு ஏதாவது பல்பு வாங்கணும்னா இவர் கிட்ட போங்க மொத்த விலைக்கு சீப்பா வாங்கலாம் அந்த அளவுக்கு பல்பு வாங்குவார் தேவையில்லாமல் குழந்தை கிட்ட பேசி மாட்டிக்குறார்...இவர் ஒரு ஆராய்ச்சி செய்திட்டு இருக்கார்..அதுக்கு பதில் இன்னும் கிடைக்கலையாம் காக்கவை பார்த்தால் எது ஆண் காக்கா, எது பெண் காக்கா தெரியனுமாம். பார்த்தவுடன் உங்களுக்கு சொல்ல தெரியுமா..???



இவர் ஒரு சுற்றுலா விரும்பிங்க முதல் ஒழுங்கா சுற்றுலா பத்தி தாங்க எழுதிட்டு இருந்தார் திடீர் என்ன ஆச்சோ,அது ஒரு காதல் காலம் சொல்ல ஆரம்பிச்சார் இன்னும் அந்த காதல் பற்றி சொல்றார்...இவர் காதல் கதையை படிக்க நல்லா இருக்கும் இந்த கதையில் பாதி இவர் கதை தாங்க....நீங்களும் படிச்சு பாருங்க



இவர் தாங்க நரி பாஸ்வேர்ட் மறந்து தொலைச்சிட்டார்..சரி ஏதோ தில்லுமுல்லு பண்ணி வேற ப்ளாக் தொடங்கினார்...ஏன்னு கேட்டா இவர் தான் உலகின் அழகிய ஆண்மகன் சொல்றார், இது இவருக்கே ஓவரா தெரியலையா...என்ன கொடுமை சரவணன்...!!!




அல்ட்டிமேட் பிரபலம்

நான் இப்போ சொல்ல போற பிரபலம் யாருனா இவங்க தான் வாரியார்..ஆமாங்க இவங்க சொல்லுற சேதி நல்ல நல்லாதானுங்க இருக்கும் அட நெசமா தானுங்க..திடீர் விவாசயம் பத்தி எழுதுவாக.. இவங்க எழுத்து எல்லாம் ஒரு தினுசா இருக்குமுங்க...ஒரு புத்தகத்தை புரட்டி கூட பார்த்திருக்க மாட்டார் ஆனால் அதை வைத்து ஒரு பதிவு எழுதுவார்...மகளே.. என் செல்வ மகளே..! என ஒரு பதிவு எழுதி இருக்கிறார் பாருங்கள்..ஒரு பெண்ணின் தகப்பனுக்கு வரும் பயம்...இப்போதே இவருக்கு வந்து விட்டது போல...!!! தன் பெண்ணிற்காகவே, தன் மனைவிக்கு நிறைய சலுகைகளை கொடுத்துவிட்டார்.....இவர் எழுத்தைப் பற்றி பேசி கொண்டே போகலாம் அப்படி ஒரு எழுத்து அது. இவர் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடலாம்...என்பது என் கருத்து. இவரின் எழுத்தை படிக்க வேண்டும் என்றால்..அமைதியான சூழ்நிலையில் படித்தால் மிகவும் நன்றாக இருக்கும், நமது வேலை பளுவின் காரணமாக வேக வேக படித்தால் ஒன்றும் புரியாது இது என் அனுபவம்.


என்ன நாளைக்கும் நான் வரணுமா அது முடியாதுங்க...இன்றோடு நான் கிளம்புறேங்க எனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்தேன், என நினைக்கிறன்...வலைச்சரத்தில் எழுதவாய்ப்பு கொடுத்த சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொண்டு விடை பெறுகிறேன்....நன்றி வணக்கம்.





மேலும் வாசிக்க...

Saturday, April 9, 2011

சிரிக்க வைக்கும் சிங்கார பகிர்வுகள்..










நேற்றைய பதிவில் நெஞ்சத்தை தொடும் நிதர்சனம் சொல்லி உங்க மனசை எல்லாம் கவலையா ஆகிட்டேன் அதான் இன்னைக்கு நகைச்சுவையா சொல்லாம் வந்துட்டேன் நிறைய தேடிப்படித்து ஒரே சிரிப்பு மழை தான் போங்க...உங்களுக்கும் சொல்றேன் வாங்க...!!!


 
மின்மினி தேசத்திலிருந்து மீனாட்சி சுந்தரம் வந்து இருக்காங்க இவங்க எழுதுற தில்லுதுர பதிவு எல்லாம் செம காமெடியா இருக்கும் தில்லுதுர பதிவுகளை படிச்சிட்டே இருக்கலாம் சலிப்பே வராது...டேனியும் தில்லுதுரயும் பதிவை படிச்சு பாருங்க..உங்களுக்கே புரியும்...!!!

 

இவர் நாஞ்சில் மனோ....ரொம்ப புரட்சிகரமா பேசுவார் பார்த்தா எல்லோரையும் கிண்டல் செய்துட்டு இருக்கார். தமாஷுன்னு சொல்லி எல்லா பதிவரையும் (என்னையும்)  கிண்டல் பண்றார்...இவர் பதிவு படிக்கும் நல்லா சிரிப்பு வரும்....எப்படி தான் இதையெல்லாம் யோசிக்கிறாரோ...மலையாளி சேட்டன் ஒரு பதிவு போட்டு இருக்கார் பாருங்க...



நான் உங்க வீட்டு பிள்ளை சொல்றார்...பாட்டு ரசிகன் அநியாயத்துக்கு காமடிப்பண்றாங்கப்பா...சொல்லி கார்டூன் எல்லாம் போட்டு இருந்தார் பாருங்க super collections. எங்களையெல்லாம் மொக்கை போட்டுகொண்டு இருந்த செல்வாவிற்கு எதிர் மொக்கை போட்டவர்...இவர் செல்வாவை நாறடித்த மொக்கராசு 




“தசாவதாரம்” படம் பார்க்க கோவையிலிருந்து தில்லி போயிருக்காங்க. கமல் வருவார் வருவார் பார்த்து இருக்காங்க..ஆனா அவர் கடைசி வரை வரவே இல்லை ஏன் “தசாவதாரம்” படத்தில் கமல் வரல அதை நீங்க அங்கபோய் படிச்சு பாருங்க அப்போ தெரியும்...!!!! 

வாங்க பழகலாம் அழைச்சிட்டு போறார்..எங்க கூப்பிட்டு போறார் பார்த்தா கணவன் வாங்கலையோ..கணவன்!!!.. சொல்றார்.   ஆனா பெண்களுக்கு எந்த கணவரையும் பிடிக்கலையாம் ..பெண்களுக்கு ரொம்ப ஆசை சொல்லுறார்.


இன்றைய பிரபலம் 

"அட்ரா சக்க அட்ரா சக்க" ஆமாங்க அவரே தான் சி.பி.செந்தில்குமார் ரொம்ப வேகமாக வளர்ந்த பதிவர்....விமர்சனம், சினிமா செய்திகள், அரசியல் செய்திகள், ஜோக்ஸ் எதுவாக இருந்தாலும் அதை சுட சுட தருவார் இவர்..ஏதாவது திரைப்படம் வந்து ஐந்து மணி நேரத்தில் விமர்சனம் எழுதிவிடுவார். தலைப்புக்கள் வைப்பதிலும் இவர் சிறந்தவர்..இவரின் ஜோக்ஸ் ஆரம்பத்தில் இருந்தே பத்திரிக்கைகளில் வருகிறது...எனக்கு இவரின் ஜோக்ஸ் தான் மிகவும் பிடிக்கும்.


என்னங்க ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல அப்படியே இருங்க இதோ ஒரு கூட்டத்தோடு வரேன்...அட அடிக்க ஆள் கூப்பிட்டு வரலைங்க.. பயப்படாதீங்க இருங்க வரேன்.




மேலும் வாசிக்க...

Friday, April 8, 2011

நெஞ்சத்தை தொடும் நிதர்சனம்..!!!






கவிதையெல்லாம் படிச்சு உங்களுக்கும் கவிதை எழுதனும்னு தோனுமே...எழுதிப்  பாருங்க.கண்டிப்பா வரும். சரிங்க இன்னைக்கு என்ன பதிவு பாக்கபோறோம்னு  தெரியுமா.? நெஞ்சைத் தொடும் நிதர்சனம்.! ஆமாங்க பதிவைப் படிச்சவுடன் நம்ம மனசு எல்லாம் ஒரு மாதரி ஆகிடும்...அந்த மாதரி இருக்குங்க..

இவங்க என்னோடு ரசிக்க வாருங்கள் அப்படின்னு அன்போடு அழைச்சிட்டு போய் அழகிய கவிதைகள் சொல்வாங்க. இவங்க பயன்படுத்தும் வார்த்தைகள் புதியதாக இருக்கும். அடிக்கடி கவிதை எழுதும்பொழுதுகண்ணீருடன் எழுதுவாங்க போல. இவர் எழுதும் காதல் கவிதையே சிறந்தது அப்பாவின்பிரிவை  பற்றி ஒரு கவிதை எழுதி இருக்காங்க இதை படிக்கும் பொழுது உங்களுக்கும் உங்க அப்பா நினைவு வரும் 


இவங்க தான் கற்றலும் கேட்டலும்..ராஜி இவங்க பதிவை படிக்கும் போதே தெரிகிறது இவங்களுக்கு கடவுள் பக்திஅதிகம் இருக்கும்ன்னு..அலமேலுவின் அட்டகாசங்கள் எழுதிட்டு வராங்க. அந்த ஜோக்ஸ் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கும்...உயிர் காத்த உறவும் நட்பு  ஒரு பதிவைப் படித்தேன். இன்னும் என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அவருக்கு அடிபட்டதைச் சொல்லி இருக்கிறார். நல்ல வேளை அவருக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை. உறவும் நடப்பும் கை கொடுத்திருக்கிறது .  

இவங்க தாங்க மதுரைக்காரி. என்ன பயமா இருக்கா.பயப்படாதீங்க. ஒன்னும் செய்ய மாட்டாங்க. இவங்க எழுதுற பதிவு எல்லாம் நகைச்சுவை கலந்தும் எழுதுவாங்க. அடிக்கடி ஊருக்கு போகும் போது இளையராஜா பாட்டுக்  கேட்டுட்டே போவாங்களாம் ...இதுக்கு பேரு பக்தியான்னு  ஒரு பதிவு எழுதி இருக்காங்க அதில் சொல்லி இருக்கும் விஷயம் எல்லாம் மனதை அப்படியே பாதித்ததுங்க. அவங்க தாத்தாவைப் பற்றி எழுத்தி இருந்தாங்க. அதைப் படிச்சவுடன் எனக்கு எங்க தாத்தா நினைவு தான் வந்தது.. நீங்களும் படிச்சுப் பாருங்க..


குறை ஒன்றுமில்லை சொல்றாங்க லக்ஷ்மி அம்மா அவங்களுடைய நினைவுகளை மலரும் நினைவுகளாக  எழுதிட்டு வராங்க. சிறுவயதிலே திருமணம் செய்துகொடுத்ததைப்   பற்றி எழுதி வராங்க. பிறந்த வீட்டில் இருக்கும் வரை தான் சந்தோஷம் எல்லாம்னு இவங்க எழுத்து சொல்லாமல் சொல்கிறது..!!! 


ஜெ ஜெ வின் மலரும் மனம். இவரின் வருங்கால பதியை பற்றி கவிதை கதை எழுதி வருகிறார். வருங்கால மாமியாரிடம் பேசணுமாம். அதற்காக மாமியார் வீட்டிற்கு போன் செய்து இல்லாத பெயரை சொல்லி பேசிவிட்டு நம் குடும்பம் துள்ளி குதிக்குறாங்க. கான்பரன்ஸ் போட்டுப்  பேசி அதைப் பதிவு செய்து வச்சிருக்காங்களாம்.


தம்பி கூர்மதியன். ஐ ஆம் சீரியஸ்னு சொல்றார் அப்படி என்ன தான் சீரியஸா சொல்றார்னு பார்த்தா அவருக்கு ஒரே ஒரு மகளிர் தான் தெரியுமாம். அவங்க அம்மாவை பற்றி சந்தோசமான விசயங்களை சொல்றார் நீங்களும் பாருங்க அவருக்கு தெரிந்த மகளிருக்கு வாழ்த்து சொல்றார்.!!! நீங்களும் வாழ்த்து சொல்லுங்களேன்..


இன்றைய பிரபலம் 

இவங்களைத் தெரியாத ஆளே இருக்க மாட்டாங்க. இவங்களை நான் தான் பிரபலம் சொல்லனுமா என்ன நீங்க எல்லாருமே சொல்வீங்க...பின்னூட்ட புயல் சித்ரா...சாரிங்க கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா,எந்த விஷயம் சொன்னாலும் அதில் நகைச்சுவையோடு சொல்றது தான் இவங்க பாணி. வெளிநாட்டிற்கு போகும் போது சத்தியம் வாங்கலையா அப்பாவிடம் அப்பாவியா கேட்டு இருக்காங்க...!!! அதுக்கு அவங்க அப்பா எப்படி பதில் சொல்லி இருக்கார் பாருங்க...அப்பாவிடம் அரட்டை   அடித்ததை ரொம்ப சுவாரசியமா சொல்றாங்க, கலகலப்பா சொல்றாங்க. இவங்க எழுதிய பதிவில் இரண்டு பதிவுகளை மட்டும் நான் எப்போதும் மறக்க மாட்டேன்.

சரிங்க நான் கிளம்புறேங்க உங்களை தான் என்னங்க யாரும் பாக்க மாட்டுறீங்க...எல்லாம் ஒரே கவலையா இருக்காங்க போல.....



மேலும் வாசிக்க...

Thursday, April 7, 2011

கவிதைச்சாரல்...!!!




எல்லோருக்கும் வணக்கமுங்க நேத்து யோரோ கூப்பிடுறாங்கனு போனேன்ல அது வேறயாரும் இல்லைங்க. கவி அரசன் அரசிகள் எல்லாம் எங்களைப் பத்தி சொல்ல மாட்டியானு ஒரே திட்டு....கொஞ்சம் விட்டா அடிச்சி இருப்பாங்க...எதுக்குங்க அவங்களை பத்தியும் சொல்லிடுறேன்.....  

இவரின் மனச் சிதறல்களில் இருந்து கவிதையாக வரும்..தீடிரென காதல் பெருமழை வரும்...இவரின் கவிதை அதிகம் பேரை கவர்ந்திருக்கிறது..இவரின் கவிதைகளில் எனக்கு பிடித்ததே எளிமையான நடை தான்..குடும்பத்தின் மீது அதிகம் பாசம் கொண்டவன் இவன்...காதல் கவிதைகள் நிறைய இருந்தாலும், அம்மா பற்றிய கவிதை என்னை வெகுவாக கவர்ந்தது..



ரேவா கவிதைகள் என் சிந்தனைச் சிதறல்கள் உனக்காக தோழனேனு....சொல்றாங்க ஆனால் தோழனுக்கு மட்டும் கவிதை எழுதுவதில்லை....காதல் கவிதை மட்டும் எழுதுபவர் இல்லை இவர் பல விஷயங்களைப் பற்றியும் எழுதுகிறார்...வாழ்க்கை வழக்கு என்ற கவிதையே இதற்கு உதாரணம்....வாழ்க்கை வழக்கு...


தமிழ்காதலனின் இதயச்சாரல் வழியாக....கவிதைச்சாரல் தூவி வருகிறார்...காதல் கவிதைகளை அழகாகவும் சிறப்பாகவும் எழுதி வருகிறார்...சமூககவிதை எழுதுவதிலும் சிறந்தவர் இவர்..."பொய் பேசும் மெய்.."...வரிகளுக்கு வரி ரசித்து கொண்டு இருக்கிறேன் நான்... 


இவரின் வலைப்பதிவின் பெயரே வித்தியாசமானது..கவிதை வீதி...இவர் இருக்கும் வீதி முழுவதும் கவிதையா இருக்கும் போல அதனால் தான் இந்த பெயர் வைத்திருக்கிறார்...இவரின் கவிதைகள் மிகவும் எளிமையானதாக இருக்கும்...உடனே புரிந்து விடும்... கைபேசியில்ஒருகவிதைபூமலர்ந்து இருக்கிறதாம்...அதை நீங்களும் தான் பாருங்களேன்... 


சுவர் தேடும் சித்திரங்கள் மூலம் தன் கவிதைகளை சித்திரமாக்கி வருகிறார் சித்தாரா மகேஷ்.... யாரோயோ மறக்க முடியாமல் கவிதை எழுதி இருக்கிறார்...மறக்க முடியவில்லை...

கனவில் தொலைத்த பக்கங்களால் ..கவிதை எழுதுகிறார் இவர்..கனவில் கவிதை எழுதுகிறாரோ தயங்கிக்கொண்டே முதல் கவிதையை எழுதி இருக்கிறார். காதலி காக்கவைத்ததால்...முத்தமெல்லாம் கேட்கிறார் இவர்... புத்தம் புதிய பதிவர் தொடர்ந்து எழுதுங்கள்.. 


இன்றைய பிரபலம் 

இவங்க ரொம்ப பிரபலம்...ஆமாங்க ரொம்ப அன்பா கவிதையெல்லாம் சொல்வாங்க அதனால் தான் இவங்க பெயர் அன்புடன் ஆனந்தி..எப்படியெல்லாம் கவிதை எழுதுறாங்க...ரொம்ப சாதாரணமா எழுதிட்டு போயிட்டே இருப்பாங்க..நமக்குள் நாம்...!! ஒரு கவிதை எழுதி இருக்காங்க பாருங்க ஓர் நொடிப் பார்வையில் ஊமையாக்கிட்டேன்னுசொல்றாங்க...கவிதையெல்லாம் விடுங்க இவங்க உருளைகிழங்கு போட்டு புளி குழம்பு வைப்பாங்களாம் அதை பத்தி ஒரு பதிவில் சொல்லி இருக்காங்க...அதுக்கு சுட்டி தரமாட்டேன் நீங்களே கண்டு பிடிங்க...!!!! 


என்னங்க கவிதையெல்லாம் படிச்சிட்டு போக மனசு வரலையா....மறுபடி இன்னொரு தடவை கவிதையை படிங்க...நான் அடுத்த பதிவோடு வருகிறேன்...


( கடைசியா நான் எழுதின கவிதை ஒன்னு)

ஒன்னு.

கவிதை ஒன்னு சொல்கிறேன் என்றேன் 
நீ ஒன்னும் சொல்லவேண்டாம் , 
இரண்டும் சொல்லவேண்டாம் 
ஆளை விடு என்றனர்!
யாருக்கும் பிடிக்காதபோது 
நான் ஏன் கவிதை ஒன்னு சொல்ல வேண்டும் ? 


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது