07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 7, 2011

கவிதைச்சாரல்...!!!
எல்லோருக்கும் வணக்கமுங்க நேத்து யோரோ கூப்பிடுறாங்கனு போனேன்ல அது வேறயாரும் இல்லைங்க. கவி அரசன் அரசிகள் எல்லாம் எங்களைப் பத்தி சொல்ல மாட்டியானு ஒரே திட்டு....கொஞ்சம் விட்டா அடிச்சி இருப்பாங்க...எதுக்குங்க அவங்களை பத்தியும் சொல்லிடுறேன்.....  

இவரின் மனச் சிதறல்களில் இருந்து கவிதையாக வரும்..தீடிரென காதல் பெருமழை வரும்...இவரின் கவிதை அதிகம் பேரை கவர்ந்திருக்கிறது..இவரின் கவிதைகளில் எனக்கு பிடித்ததே எளிமையான நடை தான்..குடும்பத்தின் மீது அதிகம் பாசம் கொண்டவன் இவன்...காதல் கவிதைகள் நிறைய இருந்தாலும், அம்மா பற்றிய கவிதை என்னை வெகுவாக கவர்ந்தது..ரேவா கவிதைகள் என் சிந்தனைச் சிதறல்கள் உனக்காக தோழனேனு....சொல்றாங்க ஆனால் தோழனுக்கு மட்டும் கவிதை எழுதுவதில்லை....காதல் கவிதை மட்டும் எழுதுபவர் இல்லை இவர் பல விஷயங்களைப் பற்றியும் எழுதுகிறார்...வாழ்க்கை வழக்கு என்ற கவிதையே இதற்கு உதாரணம்....வாழ்க்கை வழக்கு...


தமிழ்காதலனின் இதயச்சாரல் வழியாக....கவிதைச்சாரல் தூவி வருகிறார்...காதல் கவிதைகளை அழகாகவும் சிறப்பாகவும் எழுதி வருகிறார்...சமூககவிதை எழுதுவதிலும் சிறந்தவர் இவர்..."பொய் பேசும் மெய்.."...வரிகளுக்கு வரி ரசித்து கொண்டு இருக்கிறேன் நான்... 


இவரின் வலைப்பதிவின் பெயரே வித்தியாசமானது..கவிதை வீதி...இவர் இருக்கும் வீதி முழுவதும் கவிதையா இருக்கும் போல அதனால் தான் இந்த பெயர் வைத்திருக்கிறார்...இவரின் கவிதைகள் மிகவும் எளிமையானதாக இருக்கும்...உடனே புரிந்து விடும்... கைபேசியில்ஒருகவிதைபூமலர்ந்து இருக்கிறதாம்...அதை நீங்களும் தான் பாருங்களேன்... 


சுவர் தேடும் சித்திரங்கள் மூலம் தன் கவிதைகளை சித்திரமாக்கி வருகிறார் சித்தாரா மகேஷ்.... யாரோயோ மறக்க முடியாமல் கவிதை எழுதி இருக்கிறார்...மறக்க முடியவில்லை...

கனவில் தொலைத்த பக்கங்களால் ..கவிதை எழுதுகிறார் இவர்..கனவில் கவிதை எழுதுகிறாரோ தயங்கிக்கொண்டே முதல் கவிதையை எழுதி இருக்கிறார். காதலி காக்கவைத்ததால்...முத்தமெல்லாம் கேட்கிறார் இவர்... புத்தம் புதிய பதிவர் தொடர்ந்து எழுதுங்கள்.. 


இன்றைய பிரபலம் 

இவங்க ரொம்ப பிரபலம்...ஆமாங்க ரொம்ப அன்பா கவிதையெல்லாம் சொல்வாங்க அதனால் தான் இவங்க பெயர் அன்புடன் ஆனந்தி..எப்படியெல்லாம் கவிதை எழுதுறாங்க...ரொம்ப சாதாரணமா எழுதிட்டு போயிட்டே இருப்பாங்க..நமக்குள் நாம்...!! ஒரு கவிதை எழுதி இருக்காங்க பாருங்க ஓர் நொடிப் பார்வையில் ஊமையாக்கிட்டேன்னுசொல்றாங்க...கவிதையெல்லாம் விடுங்க இவங்க உருளைகிழங்கு போட்டு புளி குழம்பு வைப்பாங்களாம் அதை பத்தி ஒரு பதிவில் சொல்லி இருக்காங்க...அதுக்கு சுட்டி தரமாட்டேன் நீங்களே கண்டு பிடிங்க...!!!! 


என்னங்க கவிதையெல்லாம் படிச்சிட்டு போக மனசு வரலையா....மறுபடி இன்னொரு தடவை கவிதையை படிங்க...நான் அடுத்த பதிவோடு வருகிறேன்...


( கடைசியா நான் எழுதின கவிதை ஒன்னு)

ஒன்னு.

கவிதை ஒன்னு சொல்கிறேன் என்றேன் 
நீ ஒன்னும் சொல்லவேண்டாம் , 
இரண்டும் சொல்லவேண்டாம் 
ஆளை விடு என்றனர்!
யாருக்கும் பிடிக்காதபோது 
நான் ஏன் கவிதை ஒன்னு சொல்ல வேண்டும் ? 


22 comments:

 1. இன்றை அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. கவிதை வீதி இன்றை அறிமுகத்தில் இணைத்ததற்கு என் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. /////
  நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம்./////

  விவரம் அறிய..

  http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post.html

  ReplyDelete
 4. கவிதைகளின் அறிமுகப் பதிவு கலக்கல் சௌந்தர். நீ நகைச்சுவையுடன் கூறியிருப்பது இன்னும் சிறப்பு..!!

  ReplyDelete
 5. //இவங்க உருளைகிழங்கு போட்டு புளி குழம்பு வைப்பாங்களாம் அதை பத்தி ஒரு பதிவில் சொல்லி இருக்காங்க...அதுக்கு சுட்டி தரமாட்டேன் நீங்களே கண்டு பிடிங்க...!!!! // என்ன மக்கா காலையிலயே... இப்படி புதிர் போட்டு தேட விடுற...!! ஹி...ஹி...

  ReplyDelete
 6. பாட்டு ரசிகன் said...
  இன்றை அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

  கவிதை வீதி இன்றை அறிமுகத்தில் இணைத்ததற்கு என் வாழ்த்துக்கள்..////

  மிக்க நன்றி பாட்டு ரசிகன்....

  ReplyDelete
 7. பிரவின்குமார் said...
  கவிதைகளின் அறிமுகப் பதிவு கலக்கல் சௌந்தர். நீ நகைச்சுவையுடன் கூறியிருப்பது இன்னும் சிறப்பு..!!///

  வருகைக்கும் உன் கருத்திற்கும் நன்றி பிரவின்..

  ReplyDelete
 8. பிரவின்குமார் said...
  //இவங்க உருளைகிழங்கு போட்டு புளி குழம்பு வைப்பாங்களாம் அதை பத்தி ஒரு பதிவில் சொல்லி இருக்காங்க...அதுக்கு சுட்டி தரமாட்டேன் நீங்களே கண்டு பிடிங்க...!!!! // என்ன மக்கா காலையிலயே... இப்படி புதிர் போட்டு தேட விடுற...!! ஹி...ஹி...////

  அப்படி ஒரு பதிவு இருக்கு முடிஞ்சா கண்டுபுடி....

  ReplyDelete
 9. ஹ ஹ ஹா.. சூப்பர் டா

  நல்ல அறிமுகங்கள் ... இதுல பாலாவோட அம்மா கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  ReplyDelete
 10. எல்லாக் கவிதையும் வாசித்துவிட்டேன்,நல்ல அறிமுகங்கள்..

  ReplyDelete
 11. கல்பனா said...
  ஹ ஹ ஹா.. சூப்பர் டா

  நல்ல அறிமுகங்கள் ... இதுல பாலாவோட அம்மா கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும்////

  ரொம்ப நன்றி உன் கருத்திற்கும் வருகைக்கும்.....

  ReplyDelete
 12. asiya omar said...
  எல்லாக் கவிதையும் வாசித்துவிட்டேன்,நல்ல அறிமுகங்கள்..///

  ரொம்ப நன்றி அக்கா :)

  ReplyDelete
 13. அறிமுகங்கள் அருமை ..................... !!!

  ReplyDelete
 14. அருமையான கவிதைகள், அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.


  எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு

  ReplyDelete
 15. எழுதின விதம் ரொம்ப நல்லா இருக்கு .ஆனா இப்ப அதிகப்படியான வேலை இருப்பதால் நான் அப்புறமா போய் எல்லா ப்லோக்கும் பார்க்கிறேன் :-)

  ReplyDelete
 16. Best wishes to everyone. :-)

  ReplyDelete
 17. அன்பு சௌந்தர் வணக்கம். மீண்டும் என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உங்களுக்கு பிடித்த கவிதையை சொன்னதற்கு என் மனமார்ந்த நன்றிங்க.

  வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களை இனம் கண்டு சரியான அங்கீகாரமும், ஆதரவும் அளிப்பது ஒரு ஆரோக்கியமான சமூகம் வளர உதவும்.

  தொடரட்டும் இந்த சீரியப் பணி.

  வலைச்சரத்திற்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 18. கவிதையா?

  எல்லா கவிதைகளும் நல்லா தான் இருக்கு, உன் கவிதை என்ன கடைசில....

  அட அதுக்கு பேரு கவிதையா?

  ReplyDelete
 19. நன்றி சகோ என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படித்தியமைக்கு....:-)

  ReplyDelete
 20. மிக்க நன்றி சௌந்தர், என்னை அறிமுகப்படுத்தியதற்கு.. :)

  ReplyDelete
 21. சௌந்தர்... ஏன் ஏன் இப்பிடி......??
  என் கவிதை அறிமுகப் படுத்தியதற்கு ரொம்ப தேங்க்ஸ்..
  உங்களுக்கே இது நல்லா இருக்கா?? நா பிரபலமா...? அப்போ, பிரபலத்தை என்ன சொல்லுவீங்க?? அவ்வ்வ்வ்...
  இருங்க அப்புறம் பேசிக்கிறேன்..

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. உங்களுக்கு தான் சௌந்தர்..
  அப்புறம் அந்த புளிக்குழம்பு மேட்டர்.. கிர்ர்ர்ரர்ர்ர்ர் (இப்படி தான் பப்ளிக்-ல பேரை டேமேஜ் பண்ணனும்..நல்லா இருங்க ) :D

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது