07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 10, 2011

நன்றி சௌந்தர் - வருக ! வருக ! தமிழ்வாசி - பிரகாஷ்

அன்பின் சக பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் சௌந்தர், தான் ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி, பெருமையுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் சென்ற வாரத்தில் ஏழு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ 270 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். பல் வேறு தலைப்புகளில், கிடடத்தட்ட் நாற்பதுக்கும் மேலான பதிவர்களையும், அறுபது இடுகைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

சௌந்தரின் கடும் உழைப்பிற்கும், சிறப்பான இடுகைகளுக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி விடை அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் எங்கள் மதுரையைச் சேர்ந்த இளம் பதிவர் பிரகாஷ் குமார். இவர் கொடைக்கானல் அருகே உள்ள மங்களம் கொம்பு என்ற சிறிய ஊரில் பிறந்து தன் இளமைப் பிராயத்தைக் கழித்தவர். பள்ளீப் படிப்பு சின்னாளப் பட்டியிலும், பட்டயப் படிப்பு திண்டுக்கல்லிலும் முடித்தவர். கோவை மற்றும் சென்னையில் பணியாற்றி விட்டு, தற்பொழுது மதுரை மாநகரில், பெருமை வாய்ந்த பழம்பெரும் நிறுவனம் ஒன்றில் பணீ புரிந்து வருகிறார். ஓராண்டு காலமாக் தமிழ் வாசி என்னும் பதிவினில் எழுதி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்டோர் பின் தொடர இது வரை 164 இடுகைகள் இட்டுள்ளார். அதிக வாக்குகள் பெறுவதும், வாசகர் பரிந்துரையில் இடம் பெறுவதும் இவரது வாடிக்கை. தமிழ் மணத்தின் முண்ணனி வலைப்பதிவுகளீல் பன்னிரண்டாம் இடத்தினைப் பிடித்திருக்கிறார்.

தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் ஆசிரியப் பொறுப்பேற்கின்ற நண்பர் பிரகாஷ் குமாரினை - வருக ! வருக! பதிவர்களின் அறிமுகங்களை அள்ளித் தருக ! தருக ! என வரவேற்று நல்வாழ்த்துகளைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் சௌந்தர்
நல்வாழ்த்துகள் தமிழ்வாசி - பிரகாஷ்

நட்புடன் சீனா

3 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. சிங்கம் களமிறங்கிடுச்சு டோய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  3. என்னதிது - மக்கள் எல்லாம் எங்கே போனாங்க - ஏன் ரெண்டே மறுமொழி ?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது