07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 4, 2011

என் திங்கள்...
வலைச்சரம் எனக்கு அறிமுகம் ஆனதே தேவா அவர்களால் தான். அவர் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்த பொழுது அறிமுகம் ஆனது அன்று முதல் இன்று வரை வலைச்சரத்தை பின்தொடர்ந்து வருகிறேன். என்னை வலைச்சர ஆசிரியராக்கி அழகுபார்க்கும் சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நான் மே மாதம் தான் வலைபக்கம் தொடங்கினேன்..விளையாட்டாய் தொடங்கினேன்...முழுதாய் ஒரு வருடம் கூட ஆகவில்லை. சாதித்தது ஒன்றுமில்லை தமிழ்மணம் விருது...இப்பொழுது வலைச்சர ஆசிரியர் பொறுப்பு...இதை விட நிறைய நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள்....

நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு விவசாயிகளின் நிலை விவசாயிகள் பற்றி எழுதி இருந்தேன். இந்த பதிவை போல் என்னால் மீண்டும் எழுத முடியுமா..? என்பது சந்தேகம் தான் ...இந்த பதிவிற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது ...முதன் முதலில் யூத்ஃபுல் விகடனில் குட் ப்ளாக் என தேர்ந்தெடுத்தார்கள்.  


நமது அரசாங்கம் எப்போதும் பெட்ரோல் விலையை உயர்த்தி கொண்டே வருகிறது..அப்படி ஒரு விலை உயர்வு நேரத்தில் எழுதியது தான் இந்த பதிவு. கோவமான வார்த்தைகள் நிறைய எழுதியிருந்தாலும் உண்மையான வார்த்தைகள்..முன்பு பெட்ரோல் விலை உயர்வு என்றால் முன் அறிவிப்பு இருக்கும் இப்பொழுது அதுவும் கிடையாது. இவங்களுக்கு எல்லாம் சும்மா... 


அவ்வப்போது விழிப்புணர்வு பதிவுகளும் எழுதுவது உண்டு அப்படி எழுதியது தான் இந்த மது நாட்டுக்கு லாபம் வீட்டுக்கு நஷ்டம்  பதிவை எழுதினேன் இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து நிறைய விழிப்புணர்வு பதிவுகள் எழுத தொடங்கினேன்....


சாதாரணமாக தான் பதிவு எழுதி கொண்டு இருந்தேன் கதை எழுதும் அளவுக்கு வருவேன் என நினைத்து பார்க்க வில்லை....நான் முதன் முதலில் எழுதிய கதை தான் தட்டான் பூச்சி ... அவ்வப்போது கதைகள் எழுதி வருகிறேன் இன்னும் கதைகள் நிறைய எழுத ஆசை.... 


கதை எழுதியாச்சி அடுத்து என்ன கவிதை தான் அதுவும் அரைகுறை தான்...சும்மா ஏதோ எழுதுவேன் அந்த அளவுக்கு நன்றாக இருக்காது. உன் கரம் பற்றி.. 

இவ்வளவு தாங்க என்னுடைய அறிமுகம்....இதுவே ரொம்ப ஓவரா சொல்லிட்டேன் ....நாளைக்கு என் நண்பர்கள் பற்றிய அறிமுகத்தை பார்ப்போம்....

நாளைக்கு சந்திக்கிறேன்...
93 comments:

 1. வாழ்த்துக்கள் சௌந்தர் :-))

  ReplyDelete
 2. வாழ்த்துகள் மச்சி....:))

  ReplyDelete
 3. இன்னும் நிறைய பதிவுகள் எழுதி, வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்...! :-)

  ReplyDelete
 4. நன்றி ஆனந்தி வருகைக்கும் வாழ்த்திற்கும்....!!!

  ReplyDelete
 5. அப்புறம் ஒரு டவுட்டு...

  இந்த கவிதை கவிதைன்னு சொன்னிங்களே...சும்மா விளையாட்டுக்குத் தானே சொன்னிங்க..!

  ReplyDelete
 6. @@karthikkumar

  தேங்க்ஸ் மச்சி

  ReplyDelete
 7. Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
  அப்புறம் ஒரு டவுட்டு...

  இந்த கவிதை கவிதைன்னு சொன்னிங்களே...சும்மா விளையாட்டுக்குத் தானே சொன்னிங்க..!////

  அது சும்மா கவிதை சொல்வோம்..ஆனா கவிதை இல்லை....நான் கவிதை சொன்னா உங்கள மாதரி கவி அரசிகள் வந்து அடிப்பாங்க

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள், சௌந்தர்! நிச்சயம் ஜமாய்ச்சிருவீங்க....

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் சௌந்தர் ;)

  ReplyDelete
 10. Chitra said...
  வாழ்த்துக்கள், சௌந்தர்! நிச்சயம் ஜமாய்ச்சிருவீங்க....///

  ரொம்ப ரொம்ப நன்றி chitra.... :)

  ReplyDelete
 11. ஜெய்லானி said...
  வாழ்த்துக்கள் சௌந்தர் ;)///

  நன்றி தல....!!!

  ReplyDelete
 12. சி.பி.செந்தில்குமார் said...
  பின்னி பெடல் எடுங்க....////

  ரொம்ப நன்றி சி.பி.இப்போவே ஒரு சைக்கிள வாங்கிட்டு வரேன் இருங்க

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் தம்பி...

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் செளந்தர்!

  ReplyDelete
 15. கே.ஆர்.பி.செந்தில் said...
  வாழ்த்துக்கள் தம்பி...///

  மிக்க நன்றி அண்ணா

  ReplyDelete
 16. Sriakila said...
  வாழ்த்துக்கள் செளந்தர்!////

  வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி Sriakila...!!!

  ReplyDelete
 17. வாழ்த்துகள் சௌந்தர் ...(டெம்ப்ளட் கமெண்ட்ஸ் ...:)....)

  ReplyDelete
 18. சௌந்தர்......வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. வாழ்த்துகள் சௌந்தர் ...(டெம்ப்ளட் கமெண்ட்ஸ்.... காப்பி ...:)....)

  ReplyDelete
 20. ட்ராபிக் ஜாம்ல மாட்டி வர்றதுக்குள்ள லேட் ஆயிடுச்சு தம்பி...

  பட்..........

  வாழ்க்கையின் எல்லா உயரங்களையும் நீ தொட்டுச் செல்ல வேண்டும் என்ற கனவுகள் எனக்குக் இருக்கிறது... ! தமிழ் மணம் விருது, தமிழ் மணம் ஸ்டார், இப்போ வலைச்சர ஆசிரியர்....

  சந்தோசம் நெஞ்சு நனைக்கிறது.. உன் வெற்றிகளின் வழி நெடுகிலும் உன் கூடவே வருவேன் பார்வையாளனாக...

  அற்புதமான துவக்கம்.....அப்புறம் என்ன நம்ம பாஷையில அடிச்சி தூள் கிளப்பு...!

  வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. இம்சைஅரசன் பாபு..
  ரொம்ப நன்றிங்கோ

  தமிழ் உதயம்

  மிக்க நன்றி சார்

  TERROR-PANDIYAN(VAS)


  ரொம்ப ரொம்ப நன்றிங்கோ

  ReplyDelete
 22. @@dheva

  ரொம்ப நன்றி அண்ணா...நீங்க இருக்கும் போது என்ன கவலை...எங்க வேணா போகலாம்....அடிச்சி தூள் கிளப்பலாம்...

  ReplyDelete
 23. //ரொம்ப ரொம்ப நன்றிங்கோ //

  நன்றி சொன்ன சௌந்தர் அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்கோ !!!

  ReplyDelete
 24. குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி ., வாழ்த்துக்கள் சௌந்தர்

  ReplyDelete
 25. அமைதி அப்பா said...
  வாழ்த்துக்கள்!///

  வருகைக்கு வாழ்த்திற்கும் நன்றி சார்

  ReplyDelete
 26. TERROR-PANDIYAN(VAS) said...
  //ரொம்ப ரொம்ப நன்றிங்கோ //

  நன்றி சொன்ன சௌந்தர் அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்கோ !!!///

  அட டா இது நல்லா இருக்கே நன்றி...நன்றி சொன்ன டெரர் வாழ்க...!!!

  ReplyDelete
 27. ஷர்புதீன் said...
  குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி ., வாழ்த்துக்கள் சௌந்தர்///

  மிக்க நன்றி

  ReplyDelete
 28. வாழ்த்துகள் சௌந்தர்

  ReplyDelete
 29. கலக்குங்க.....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. இப்பொழுது எல்லாம் இம்சைஅரசன் பாபு அவர்கள் ஏன் அடிக்கடி காணமல் போகிறார். விசாரித்து வலைச்சர வாரத்தில் எழுதுவாரா சௌந்தர். பொருத்து இருந்து பார்ப்போம்... :)

  ReplyDelete
 31. சிரிப்பு போலீஸ் ரமேஷ் நடிகை சினேகவுடன் கள்ள காதல் (ஆமாம். அவங்களுக்கே தெரியாம காதலிக்கிறார்). கண்டு வந்து சொல்வார சௌந்தர். காத்து இருக்கிறோம் அந்த காவிய காதலை உங்கள் கணிரச எழுத்துகளில் பருக... :)

  ReplyDelete
 32. ஸ்பெக்டரம் ஊழலில் பன்னிகுட்டி ராமசாமி பங்கு என்ன? அந்த காசு கொண்டு அவர் வாங்கிய திருவோடு எங்கே. அதிர்ச்சி ரிப்போர்ட் காத்து இருங்கள்...

  ReplyDelete
 33. T.V.ராதாகிருஷ்ணன்
  மிக்க நன்றி சார்

  ரஹீம் கஸாலி
  நன்றி

  தமிழ்வாசி - Prakash

  நன்றி..நன்றி

  ReplyDelete
 34. //அது சும்மா கவிதை சொல்வோம்..ஆனா கவிதை இல்லை....நான் கவிதை சொன்னா உங்கள மாதரி கவி அரசிகள் வந்து அடிப்பாங்க
  //

  உன் மேல யாராச்சும் கையை வச்சா எங்கிட்ட சொல்லு ..
  நான் பார்த்துக்கிறேன் .. ( உன்னை அடிக்கனும்னு ஒரு ஆசை , என்னால தான் முடில ,, ஹி ஹி . யாராச்சும் அடிக்கிறதாவது பர்திகிறேன் )

  ReplyDelete
 35. TERROR-PANDIYAN(VAS) said...
  இப்பொழுது எல்லாம் இம்சைஅரசன் பாபு அவர்கள் ஏன் அடிக்கடி காணமல் போகிறார். விசாரித்து வலைச்சர வாரத்தில் எழுதுவாரா சௌந்தர். பொருத்து இருந்து பார்ப்போம்... :)///

  நான் கிசு கிசு எல்லாம் எழுதுவதில்லையே...இருந்தாலும் இங்கயே சொல்கிறேன் அவர் ஏதோ பாதை மாறி போவதாக தகவல்....

  ReplyDelete
 36. தேணிசை தென்றல் தேவாவும்.. Warrion தேவா அவர்களும் ஒன்றா? சி.பி.ஐ துருவல். ஒரு திடுக்கிடும் ரிப்போர்ட்...

  ReplyDelete
 37. நான் மே மாதம் தான் வலைபக்கம் தொடங்கினேன்..விளையாட்டாய் தொடங்கினேன்...//

  என்ன விளையாட்டு? கபடி, கோலி?

  ReplyDelete
 38. ERROR-PANDIYAN(VAS) said...
  சிரிப்பு போலீஸ் ரமேஷ் நடிகை சினேகவுடன் கள்ள காதல் (ஆமாம். அவங்களுக்கே தெரியாம காதலிக்கிறார்). கண்டு வந்து சொல்வார சௌந்தர். காத்து இருக்கிறோம் அந்த காவிய காதலை உங்கள் கணிரச எழுத்துகளில் பருக... :)////

  பாருடா இந்த விஷயம் டெரர் தெரிந்து இருக்கு ....காவிய காதலா...????அவ்வளவு பழைய காதலா..??

  ReplyDelete
 39. TERROR-PANDIYAN(VAS) said...

  தேணிசை தென்றல் தேவாவும்.. Warrion தேவா அவர்களும் ஒன்றா? சி.பி.ஐ துருவல். ஒரு திடுக்கிடும் ரிப்போர்ட்...//

  நேத்து அடிச்ச மப்பு தெளியலையா?

  ReplyDelete
 40. TERROR-PANDIYAN(VAS) said...
  தேணிசை தென்றல் தேவாவும்.. Warrion தேவா அவர்களும் ஒன்றா? சி.பி.ஐ துருவல். ஒரு திடுக்கிடும் ரிப்போர்ட்...///

  சி.பி.செந்தில் மாதரி பரபரப்பு தலைப்பு எல்லாம் வைக்குறார்....!!!!

  ReplyDelete
 41. TERROR-PANDIYAN(VAS) said...
  ஸ்பெக்டரம் ஊழலில் பன்னிகுட்டி ராமசாமி பங்கு என்ன? அந்த காசு கொண்டு அவர் வாங்கிய திருவோடு எங்கே. அதிர்ச்சி ரிப்போர்ட் காத்து இருங்கள்...////

  ஸ்பெக்டரம் பற்றி அவர் பதிவு எழுதினார் அவ்வளவு தான் அவர் பங்கு...

  ReplyDelete
 42. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  நான் மே மாதம் தான் வலைபக்கம் தொடங்கினேன்..விளையாட்டாய் தொடங்கினேன்...//

  என்ன விளையாட்டு? கபடி, கோலி?///

  இல்ல இல்ல 7கல்லு ....

  ReplyDelete
 43. கோமாளி செல்வா பாக்படையின் உளவாளி. விஜயகாந்த் பகிரங்க குற்றசாட்டு. அமெரிக்கா உதவியுடன் மொக்கை போட்டு மக்களை கொல்ல சதி... :)

  ReplyDelete
 44. கோமாளி செல்வா said...
  //அது சும்மா கவிதை சொல்வோம்..ஆனா கவிதை இல்லை....நான் கவிதை சொன்னா உங்கள மாதரி கவி அரசிகள் வந்து அடிப்பாங்க
  //

  உன் மேல யாராச்சும் கையை வச்சா எங்கிட்ட சொல்லு ..
  நான் பார்த்துக்கிறேன் .. ( உன்னை அடிக்கனும்னு ஒரு ஆசை , என்னால தான் முடில ,, ஹி ஹி . யாராச்சும் அடிக்கிறதாவது பர்திகிறேன் )///


  நீ தாண்டா உயிர் நண்பன்...!!!

  ReplyDelete
 45. டெர்ரர் பாண்டியன் னுக்கு ..தா .பாண்டியனுக்கும் என்ன டீலிங் சொல்லுவாரா ..வார இறுதியில் சௌந்தர் எழுதுவாரா ....

  ReplyDelete
 46. இந்த தேர்தலுக்கும் என் பட்டாபட்டியை துவைக்க மாட்டேன். இலக்கிய எழுத்தாளர் பட்டா அவர்கள் சூளுரை.. :)

  ReplyDelete
 47. //அந்த காசு கொண்டு அவர் வாங்கிய திருவோடு எங்கே. அதிர்ச்சி ரிப்போர்ட் காத்து இருங்கள்...
  //

  இதில் சௌந்தரின் பங்கு என்ன என்பதையும் அறியக் காத்திருங்கள் .. ஹி ஹி

  ReplyDelete
 48. இம்சைஅரசன் பாபு.. said...
  டெர்ரர் பாண்டியன் னுக்கு ..தா .பாண்டியனுக்கும் என்ன டீலிங் சொல்லுவாரா ..வார இறுதியில் சௌந்தர் எழுதுவாரா ....///

  ரெண்டு பேருக்கும் ஒரே வயது...

  ReplyDelete
 49. //TERROR-PANDIYAN(VAS) said...
  இப்பொழுது எல்லாம் இம்சைஅரசன் பாபு அவர்கள் ஏன் அடிக்கடி காணமல் போகிறார். விசாரித்து வலைச்சர வாரத்தில் எழுதுவாரா சௌந்தர். பொருத்து இருந்து பார்ப்போம்... :)///

  நான் கிசு கிசு எல்லாம் எழுதுவதில்லையே...இருந்தாலும் இங்கயே சொல்கிறேன் அவர் ஏதோ பாதை மாறி போவதாக தகவல்...//

  அவன் ஒரு விளகென்னை ...நீ ஒரு மொள்ளமாறி ரெண்டு பேரும் சேர்ந்து என்னடா செய்யுறீங்க ..?குடும்பத்துல கும்மி அடிக்கிறதே இவனுக்க வேலையா போச்சு ....

  ReplyDelete
 50. //விஜயகாந்த் பகிரங்க குற்றசாட்டு. அமெரிக்கா உதவியுடன் மொக்கை போட்டு மக்களை கொல்ல சதி... :)//

  விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவர் போலீஸ் தான் முக்கிய காரணம் என்பதை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன் ..

  ReplyDelete
 51. @பாபு

  //அவன் ஒரு விளகென்னை ...நீ ஒரு மொள்ளமாறி ரெண்டு பேரும் சேர்ந்து என்னடா செய்யுறீங்க ..?குடும்பத்துல கும்மி அடிக்கிறதே இவனுக்க வேலையா போச்சு .... //

  பொது இடத்தில் அநாகரிகமாக பேச வேண்டாம். எனக்கு பிடிக்காது ப்ளீஸ்... :)

  ReplyDelete
 52. இந்த தேர்தலுக்கும் எனக்கு ஒரு ஓட்டு தானா? வெகுண்டு எழுகிறார் வெடிகுண்டு எழுத்தாளர் சூரியனி வலைவாசல் அருண்... :)

  ReplyDelete
 53. //தேணிசை தென்றல் தேவாவும்.. Warrion தேவா அவர்களும் ஒன்றா? //

  அது எப்படி ஒன்றாகும் அவரு இசை எல்லாம் காபி அடிப்பாரு ..
  அப்ப தேவ எல்லாம் அடுத்தவங்க பதிவ காபி அடிக்கிறாரு ன்னு சொல்ல வர அப்படி தானே டெர்ரர் ..என்ன ஒரு வில்லத்தனம் .அவரு மனசு எப்படி கஷ்டப்படும்

  ReplyDelete
 54. TERROR-PANDIYAN(VAS) said...
  @பாபு

  //அவன் ஒரு விளகென்னை ...நீ ஒரு மொள்ளமாறி ரெண்டு பேரும் சேர்ந்து என்னடா செய்யுறீங்க ..?குடும்பத்துல கும்மி அடிக்கிறதே இவனுக்க வேலையா போச்சு .... //

  பொது இடத்தில் அநாகரிகமாக பேச வேண்டாம். எனக்கு பிடிக்காது ப்ளீஸ்... :)////

  பாருடா ....ம்ம்ம்ம் .....

  ReplyDelete
 55. //பொது இடத்தில் அநாகரிகமாக பேச வேண்டாம். எனக்கு பிடிக்காது ப்ளீஸ்... :)//

  காலில் விழுந்து கெஞ்சினாலும் உன்னை விட போவது இல்லை

  ReplyDelete
 56. //இந்த தேர்தலுக்கும் எனக்கு ஒரு ஓட்டு தானா? வெகுண்டு எழுகிறார் வெடிகுண்டு எழுத்தாளர் சூரியனி வலைவாசல் அருண்... :)//

  கள்ள ஒட்டு போடுரவனுக்கு கவலைய பாருங்க மக்களே

  ReplyDelete
 57. அயல்நாட்டு அதிபர்களே என்னிடம் ஆலோசனை கேட்கும்பொழுது. அடுத்த தெரு மங்குனி அமைச்சர் என்னை கேக்காமல் டி.வியில் உலக கேப்பை பார்த்தது ஏன்? கோகுலத்தில் சூரியன் வெங்கட் கோபம்.

  ReplyDelete
 58. இடையழகி இலியான இயற்பியல் படித்தவரா? ப்ரியமுடன் வசந்த் ப்ரியத்துடன் ஆராய்ச்சி.... :)

  ReplyDelete
 59. TERROR-PANDIYAN(VAS) said...
  இடையழகி இலியான இயற்பியல் படித்தவரா? ப்ரியமுடன் வசந்த் ப்ரியத்துடன் ஆராய்ச்சி.... :)///

  எத்தனை பேர் கொண்ட குழு ஆராய்ட்சி செய்கிறது

  ReplyDelete
 60. முறையாக கேட்டும் எனக்கு பெண் கொடுக்காதது ஏன்? முறைமாமன் கார்த்திக் கதறல்...

  நீ பெண்களை முறைத்து முறைத்து பார்ப்பதால்.... பெ.சொ.வி & மாதவன் ஒரே சமயத்தில் பதில்... :)

  ReplyDelete
 61. TERROR-PANDIYAN(VAS) said...
  முறையாக கேட்டும் எனக்கு பெண் கொடுக்காதது ஏன்? முறைமாமன் கார்த்திக் கதறல்...

  நீ பெண்களை முறைத்து முறைத்து பார்ப்பதால்.... பெ.சொ.வி & மாதவன் ஒரே சமயத்தில் பதில்... :)///


  இது முறைமாமன் கார்த்திக் கேட்பது போல இல்லையே நீங்க கேட்ப்பது போல இருக்கு

  ReplyDelete
 62. விருது எனக்கு எருது. ஜோதியே உலகின் நீதி. வெறும்பயன் வெஞ்சீற்றம்.

  ReplyDelete
 63. //இடையழகி இலியான இயற்பியல் படித்தவரா? ப்ரியமுடன் வசந்த் ப்ரியத்துடன் ஆராய்ச்சி.... :)//

  இஞ்சி தின்னதால் இஞ்சி இடுபழகி ஆனதாக ஆராய்ச்சி முடிவு ..சொல்கிறது ...

  ReplyDelete
 64. // வெறும்பயன் வெஞ்சீற்றம்.//
  எதுகை மோனை ல எழுதுறாரு பா ...வெஞ்சீற்றம் னா என்னன்னு யாரவது கேளுங்கப்பா ..?(வெம்மை நோய் தாக்கியதால் வெஞ்சீற்றம் ன்னு சொல்லுவான் )

  ReplyDelete
 65. அருமை அருமை சௌந்தர் வாழ்த்துகள்....

  ReplyDelete
 66. வருங்காள எம்.எல்.ஏ நாகராஜ சோழனா? இதை கண்டித்து நான் நாக்கை பிடிங்கி கொண்டு தான் சாவேன். நரி நாட்டிய போராட்டம்... :)

  ReplyDelete
 67. //வருங்காள எம்.எல்.ஏ நாகராஜ சோழனா//

  வருங்காள -வருங்கால
  டெர்ரர் நாக்குல தமிழ் சரஸ்வதி குஷன் நாற்காலி போட்டு இருக்கா போல

  ReplyDelete
 68. செல்லம் வாழ்த்துகள் டா

  ReplyDelete
 69. அருமை வாழ்த்துக்கள் சௌந்தர்

  ReplyDelete
 70. அன்பின் சௌந்தர் - அருமையான சுய அறிமுகத்துடன் துவக்கம். சுட்டிகளைச் சென்று பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் சௌந்தர். நட்புடன் சீனா

  ReplyDelete
 71. @ டெரர் மாம்ஸ் ச்சே கும்மி மிஸ் பண்ணிட்டனே....:((

  ReplyDelete
 72. இம்சைஅரசன் பாபு.. said...
  //இடையழகி இலியான இயற்பியல் படித்தவரா? ப்ரியமுடன் வசந்த் ப்ரியத்துடன் ஆராய்ச்சி.... :)//

  இஞ்சி தின்னதால் இஞ்சி இடுபழகி ஆனதாக ஆராய்ச்சி முடிவு ..சொல்கிறது .////

  இது செம .....:))

  ReplyDelete
 73. அன்பின் சௌந்தர் - சுட்டிகளைச் சுட்டி - இடுகைகளுக்குச் சென்று - படித்து - இரசித்து - மறுமொழிகளும் இட்டு விட்டேன். நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா

  ReplyDelete
 74. அன்பின் சௌந்தர் - சுட்டிகளைச் சுட்டி - இடுகைகளுக்குச் சென்று - படித்து - இரசித்து - மறுமொழிகளும் இட்டு விட்டேன். நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா

  ReplyDelete
 75. கல்பனா said...
  செல்லம் வாழ்த்துகள் டா///

  thanks கல்பனா...!!!!

  ReplyDelete
 76. MANO நாஞ்சில் மனோ said...
  அருமை அருமை சௌந்தர் வாழ்த்துகள்....///

  ரொம்ப நன்றி அண்ணா..!!!

  ReplyDelete
 77. சசிகுமார் said...
  அருமை வாழ்த்துக்கள் சௌந்தர்////


  நன்றி... சசிகுமார்

  ReplyDelete
 78. @@@cheena (சீனா)

  வலைச்சரத்தில் எழுத வாய்ப்பு கொடுத்தற்கு முதல் நன்றி. என் தளம் வந்து படித்து கருத்து கூறியதற்கு மிக்க நன்றி அய்யா..

  ReplyDelete
 79. ஆரம்பமே அமர்க்களம் என் அருமை தம்பி...

  ReplyDelete
 80. யாரு உன் கவிதை நல்லா இருக்காதா...ரொம்ப தன்னடக்கம் பா...பட்டாம்பூச்சி..ரோஜா பூ வச்சு நீ வடிக்கும் வரிகள் அட டா...:)))))

  ReplyDelete
 81. வாழ்த்துக்கள்...கலக்குங்க... :))

  ReplyDelete
 82. ஆனந்தி.. said...
  ஆரம்பமே அமர்க்களம் என் அருமை தம்பி...///

  ரொம்ப ரொம்ப நன்றி அக்கா


  யாரு உன் கவிதை நல்லா இருக்காதா...ரொம்ப தன்னடக்கம் பா...பட்டாம்பூச்சி..ரோஜா பூ வச்சு நீ வடிக்கும் வரிகள் அட டா...:)))))///

  ஹா ஹா ஹா உண்மையா சொல்லணும்....அப்பறம் கவிதை போட்டா வந்து அடிக்க கூடாது

  ReplyDelete
 83. வைகை said...
  வாழ்த்துக்கள்...கலக்குங்க... :))////

  நன்றி வைகை....

  ReplyDelete
 84. சிறப்பான ஆரம்பம் தம்பி சௌந்தர்..
  கலக்கு ராசா. கலக்கு.. .

  ReplyDelete
 85. வாழ்த்துக்கள் சௌந்தர்!!

  ReplyDelete
 86. மிக அடக்கமான அறிமுகம்,பதிவுகளை திரும்பவும் வாசிக்க வேண்டும்..வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 87. வாழ்த்துகள் சௌந்தர் ...(டெம்ப்ளட் கமெண்ட்ஸ்.... காப்பிக்கு காப்பி ...:)....)

  ReplyDelete
 88. /////////TERROR-PANDIYAN(VAS) said...
  அயல்நாட்டு அதிபர்களே என்னிடம் ஆலோசனை கேட்கும்பொழுது. அடுத்த தெரு மங்குனி அமைச்சர் என்னை கேக்காமல் டி.வியில் உலக கேப்பை பார்த்தது ஏன்? கோகுலத்தில் சூரியன் வெங்கட் கோபம்.//////////

  கேப்பைலாமா டீவில காட்றாங்க? ஒருவேள கேப்பைக் கழி செய்யறத காட்றாங்களா?

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது