07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 23, 2012

நானே இது நானே...

நான்தானுங்க சௌந்தர் என்னை யாருக்கும் தெரியாது... அப்பறம் ஏன் இங்க வந்தேன் கேக்குறீங்களா..?? 

சீனா அய்யா தான் வலைச்சரம் எழுதுப்பான்னு சொன்னார். 

அய்யா... நான்தான் ஏற்கனவே எழுதிட்டேன்னு சொல்லி எஸ்கேப் ஆகலாம்ன்னு பார்த்தா அவர் விடுற மாதிரி இல்ல... இன்னொரு முறை எழுதுப்பான்னு சொன்னார். சரிங்க அய்யா எழுதுறேன்னு சொல்லிட்டேன்.

எழுதுறேன்னு சொன்னேனே தவிர சத்தியமா என்ன எழுதுறதுன்னே தெரியலை. என்னை பத்தி எழுதணும்ன்னு சொன்னா என்ன பத்தி எழுதுறது ஒன்னுமே  இல்லீங்க... 

தெரியாத்தனமா ரசிகன்னு ஒரு ப்ளாக் ஓபன் பண்ணி எழுதிட்டே இருந்தேன்.. இப்போ எழுதுறதே இல்லை ஆடிக்கு ஒண்னு அமாவாசைக்கு ஒண்ணுன்னு கூட பதிவு போடுறது இல்ல... 

ஏன் எழுதுறது இல்லைன்னு கேக்குறீங்களா..?? நீங்க கேக்கலேன்னாலும் சொல்லத்தான் போறேன்...ஏன் எழுதுறது இல்லைனா கழுகு தளத்திலே நேரம் சரியா இருக்குங்க... அது என்ன கழுகு-ன்னு கேக்குறீங்களா அதை பற்றி இன்னொரு பதிவுல சொல்றேன். 

இந்த பதிவுல என்னைய பத்தி சொல்றேனுங்க...  நிறைய பதிவுகள் இல்லைங்க.. ஏதோ கொஞ்சமா தான் எழுதுறேன்.... இப்பல்லாம் யாரும் அதிகம் பதிவு எழுதுறதும் இல்லை. எல்லாம் பேஸ்புக்ல நாலு வரி போட்டு அங்க விவாதம் பண்ணிட்டு போயிடுறாங்க.    

நான் இப்போ வலைச்சரம் எழுத ஒப்புகொண்டதுக்கு காரணமே நிறைய பதிவுகள் படிக்கலாம். நிறைய பதிவுகள் எழுதலாம்ன்னுதான்....  வலைச்சரம் காரணம் வைச்சாவது படிக்கலாமே... 
சமையல் கேஸ் பதிவு செய்ற முறை யெல்லாம்  இப்போ மாறி போயிருச்சு அதை பத்தி நான் தான் முதலில் தெளிவா விளக்கம் கொடுத்து இருந்தேன் யாருக்காவது கேஸ் புக் பண்ணனும்னா என் பதிவை பார்த்து தெரிஞ்சுக்கோங்க.....


அப்போப்போ கதை கவிதைன்னு எழுதுவேன். நல்லா இருக்குமான்னு கேக்காதீங்க... நான் எப்படி நல்லா இருக்கும்ன்னு பொய் சொல்றது..?! ஏன்னா எனக்கு பொய் சொல்ல தெரியாதுங்க......  நித்தியா அட அது  யாரு நித்தியா வா பதிவை படிச்சு பாருங்க...நானும் கவிதை எல்லாம் எழுதுவேங்க... அதான் ஏற்கனவே சொல்லிட்டேன்ல... ஆனா நான் எழுதின கவிதையிலே எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை இது தாங்க... போற போக்குல இதையும் பாருங்க... சரிந்து கிடந்தேன்...     


அப்பறம் நேசம் போட்டிக்காக ஒரு கதை எழுதினேன்...  டேய் நீ எல்லாம் ஏன் டா கதை எழுதுறேன்னு சொல்லி தலையிலே கொட்டி அனுப்பிட்டாங்க. இரண்டு சூவிங்கம் கொடுங்க... அட உங்களை கேக்கல.. அதான் கதையோட பேரு... 


இந்த பதிவையெல்லாம் படிச்சிட்டு இருங்க... நாளைக்கு காணாமல் போன பதிவர்களை தேடி கண்டுபிடிச்சிட்டு வரேன்..... 26 comments:

 1. அமர்க்களமான ஆரம்பம்
  அதிகம் எதிர்பார்கவைத்துப்போகிறது
  சிறந்த வாரமாக இவ்வாரம் அமைய
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஆரம்ப அறிமுகமே அமர்க்களமா இருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. ரசிக்கும் படியான எழுத்துநடை...!!!
  வாழ்த்துக்கள் சௌந்தர் !!
  அசத்திடு !! :))

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் சைளந்தர்....

  ReplyDelete
 5. அசத்திடு சௌந்தர் !!
  வாழ்த்துகள் :) :)

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 7. யாருப்பா தம்பி.... நீங்க வலை உலகத்துக்குப் புதுசா?

  நல்லா வருவீங்க தம்பி......ஆரம்பத்துலயே பயங்கரமா எழுதுறீங்க...!

  # மீண்டுமொரு வலைச்சர வாசத்துக்கு எனது அன்பும் வாழ்த்துக்களும்....நிறைய அறிமுகங்களை வாசிக்க காத்திருக்கிறேன்...#

  ReplyDelete
 8. வலைச்சரமா...

  வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
 9. சௌ:)....ஆரம்பமே தோரணையா இருக்கு...:-)) என் தம்பிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த சீனா ஐயாக்கு நன்றிகள்....சௌ...நிறைய வாசி..வாசி..;-)

  ReplyDelete
 10. ஆஹா...வாங்க சௌந்தர்....
  வாழ்த்துகள்....

  கலக்குங்க....

  ReplyDelete
 11. ஆனா தம்பி நீங்க எழுதின கவிதையிலே எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை:-)) இது தாங்க... போற போக்குல இதையும் பாருங்க... :-)))
  http://rasikan-soundarapandian.blogspot.in/2011/11/blog-post.html

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் சார். உங்கள் கதையினைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 13. விழுந்து கிடக்கிறேன் வாசித்தேன் கருத்திட முஎயவில்லை. இனிய ஆசிரியர் வாரம் அமையட்டும்.நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 14. அசத்துங்கள்...வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. தொடக்கமே மனத்தைக் கவர்கிறது தொடர வாழ்த்துக்கள் ஐயா .

  ReplyDelete
 16. வலைச்சர பதிவரானதிற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. நீ கலக்கு தம்பி......ஏற்கனவே ரசிகனுக்கு நிறைய ரசிகர்கள். வலைச்சரத்துக்கு ஆசிரியரானதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. தொடருங்க காணாமல் போனவர்களை அழைத்துவாங்க படிக்க ! வாழ்த்துக்கள் பணிக்கு!

  ReplyDelete
 19. வாழ்த்துகள் சௌந்தர்.... கலக்குங்க!

  ReplyDelete
 20. அனைவரும் அமர்க்களமான ஆரம்பம் என்று கூறினார்கள், நான் ஒரு மாற்றத்திற்கு அட்டகாசமான ஆரம்பம் என்று கூறலாம் என்று நினைக்கிறான்...

  நல்லது நண்பரே, கலக்குங்கள்...

  ReplyDelete
 21. வாங்க வாங்க..

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் சௌந்தர் ..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது