07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 3, 2012

முதற்சுவை-நகைச்சுவை.


                      
அறுசுவைகளில் முதற்சுவை இன்சுவை. இளவயதில் தசையை வளர்க்க, இனிப்புச்சுவை மிக அவசியம். வயது ஏற, ஏற இனிப்பைக் குறைச்சுக்கணும். ஆனால், நகைச்சுவை எனும் இன்சுவை எந்த வயதிலும் ஏற்புடையதே. இன்னும் சொல்லப்போனால், சிரிக்கத்தெரிந்த ஜீவராசி மனித குலம் மட்டுமே. வாய் விட்டுச்சிரித்தால், நோய்விட்டுப்போகும். அதற்கேற்ப, நம்ம பதிவர்கள் நகைச்சுவையாய் சொல்லும் செய்திகள் ,எந்த வயதிலும் திகட்டாதவை.
              இந்த நகைச்சுவைக் கலைஞன் ஸ்டார்ட் மியூசிக் என்று சொன்னால், நக்கல்,நையாண்டி என நவரசமும் அதிலிருக்கும். 
கோடீஸ்வரன் நிகழ்ச்சி, கேள்விகள் வெளியானது...!   என்பார். இவரின் ஆனந்தத்தொல்லை தாங்கலைப்பா! பதிவை மிஞ்சும் பின்னூட்டமிருக்கும். 
                  தேர்ந்த எழுத்தாளர்போல், தெளிவான நடையிருக்கும். சிரிக்கவும், சில நேரம் சிந்திக்கவும் வைக்கும் செல்வா கதைகள். மொக்கையென்றாலும், முடிவில் ஒரு நீதியுமிருக்கும். ஒரு வட்டம் மாவட்டம் சாரி மூவட்டம் ஆகுமா என்பார்.
                        தைரியமா சிரிச்சிட்டு வரலாம் தக்குடு தளம் சென்றால். கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் நக்கல் இரண்டும் கலந்து இனித்தே இருக்கும். 
அகிலா மாமியும் ஐ.டி கம்பெனிகளும்.... அவர் தரப்பு நக்கல்.                                     
          கலாய், கலாய், கலக்கலாய் கலாய். கார்டூன் இருக்கும், கலாய்த்தலும் இருக்கும்.ஆனாலும் குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான். டரியள் டக்ளஸ் அரசியல் நையாண்டி அசத்தலா இருக்குமே.
                 அன்பானவர், அனைத்து உயிர்களையும் நேசிப்பவர். விரசமில்லா நகைச்சுவை வேண்டுவோர், நிஜாம் பக்கம் விரைந்து செல்லலாம். குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எனச்சொல்லி குலுங்க குலுங்கச் சிரிக்க வைக்கிறார்.
                               புத்தகங்களின்  காதலர், புதுப்புது நகைச்சுவை எழுத்தாளர்,கொஞ்சம் லக, லக சாரி கல, கல, மிஞ்சும்  சாரி கொஞ்சம் வள, வள என சுய அறிமுகம் காண கடுகு தாளிப்புஐயோ வேண்டாம் ஆஸ்பத்திரி என்று அலற வைக்கிறார்.
                                   கப்பல் வியாபாரிகள் ஒன்பது பேர் சேர்ந்து கலக்கும் கவுண்டமணி செந்தில், குடை புடிச்சிட்டுப்போற பெரியவரையெல்லாம் கட்டியிழுக்கும். அட உங்க வூட்ல பார்ட்டி!! அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
             வெகுளித்தனமான நகைச்சுவை வேண்டுவோர் விரும்பிச்செல்ல யானைக்குட்டி ஞானேந்திரன். இவர் பக்கம் கிறுக்கலுமிருக்கும்,சில பொறுக்கலும் இருக்கும். கொஞ்சமாவது அறிவு இருக்கா! உனக்கு ! என்று சூடாகக்கேட்டு, சுயம் புலம்புகிறார்.
                  சுட்டா விலங்குதாம்லே என சூடாய்ச்சொல்லும் சிரிப்பு போலீஸின் சுயதம்பட்டம் கொஞ்சம் வில்லங்கமானதுங்கோ! போலீஸே திருடினால்!  சத்தியமா திருடப்பட்ட பதிவு பாருங்க.
                               டவுசர் பாண்டி யிடம்,கவிதையும் இருக்கும், கற்பனை பேட்டியுமிருக்கும். தலைப்பிலும் பல நக்கல் சொல்லிருக்கும். டவுசரு வாங்கின அவார்டு என்று டபாய்க்கிறார்.
                                 நகைச்சுவையும், நக்கலும் நாய்நக்ஸ் பக்கத்தில் இருக்கும். ’தானே புயல்’ வந்து தள்ளாட வைத்தாலும், தனித்துவமாய் நகைச்சுவை நர்த்தனமாடும். பதினாறு பந்தியில் சாப்பிட்ட மனோ பலரையும் கவர்ந்ததில் பழுதில்லை.
                                                 இன்னல் தரும் இனிப்பு நோய்க்கு இவரிங்கே  மருத்துவம் கூறுகிறார். அதையும் கொஞ்சம் பாத்துக்கோங்க.
                    இன்சுவையை இனிதே ர(ரு)சித்தீர்களா? இனி பிரிதொரு சுவையுடன் நாளை சந்திப்போமா?

29 comments:

  1. நான் அறியா பல வலைதளங்களை உங்கள் அறிமுகத்தில் இன்று நான் கண்டு கொண்டேன்.அறிமுகப்படுத்திய உங்களுக்கும் அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கலக்கல் அறிமுகங்கள்...பெத்த பெத்த பதிவர்களும் இருப்பது சந்தோசம்...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. குட் மானிங் ஆபிஷர்...
    (நைட்டா இருந்தாலும் இதான்)


    வலைச்சர பொருப்பா... வாழ்த்துக்கள்...

    நகைச்சுவையில் கலக்குபவர்களை தொகுத்து அசத்தியுள்ளீர்கள்...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. நகைச்சுவை செவ்வாய். அருமையான அறிமுகங்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

    ReplyDelete
  5. ஆபிசர் தேர்வில் எல்லாம் ஒரு சிலர் தவர எல்லாரும் தெரிந்தவர்கள்...அந்த தெரியாதவர்களை தெரிந்து கொண்டேன் சிரித்தேன்!

    ReplyDelete
  6. நன்றி ஆபீசர்....... கலக்கலா ஆரம்பிச்சிருக்கீங்க......!

    ReplyDelete
  7. அடுத்தடுத்து வரப்போகும் பல்சுவைகளுக்காக காத்திருக்கிறோம்......!

    ReplyDelete
  8. நகைச்சுவை பதிவர்களை அறிமுகப்படுத்திய விதமே சிரிப்பை வர வைக்குது நல்லா சொல்லி இருக்கீங்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. எல்லாருமே சூப்பர்..

    ReplyDelete
  10. சிரிப்பு லகுடபாண்டிகளின் அலப்பறை பதிவுகள் அறிமுகம் சூப்பர் ஆபீசர்....!!! எல்லாருக்கும் வாழ்த்துகள்...!

    ReplyDelete
  11. ’தானே புயல்’ வந்து தள்ளாட வைத்தாலும், //

    சினிமா தியேட்டர்னு கல்யாணமண்டபத்தின் அருகில் மல்லாக்க மட்டையானாலும் "தானே புயல் தானே புயல்தான்"

    ReplyDelete
  12. கவிதை வீதி... // சௌந்தர் // said...
    குட் மானிங் ஆபிஷர்...
    (நைட்டா இருந்தாலும் இதான்)//

    எலேய் உனக்கு போலிஸ் வேலை தந்தது தப்பா போச்சுடே...

    ReplyDelete
  13. ஒவ்வொரு பதிவரின் நிறைகுறைகளை ஒரிரு வார்த்தைகளில் நிறுத்திய லாவகம்..... மற்றும் அதை கணிக்கும் திறன் ஆகியவை ஆபீசருக்கு மட்டுமே உரித்தானது.வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  14. அறுசுவை பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் ஆபீசர்...
    கலக்கல் தொகுப்புகள்...

    ReplyDelete
  16. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. நல்ல அறிமுகங்கள்.. தொடர்ந்து அசத்துங்க :)

    ReplyDelete
  18. படிக்கிறோம் ..கலக்குறோம்

    ReplyDelete
  19. முதல் சுவையே நல்ல சுவை ! பல அறிமுகங்கள் ! அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! நன்றி !

    ReplyDelete
  20. அருமையான அறிமுகங்கள் சார்.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. நகைச்சுவை விருந்து மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. நன்றி ஆபிசர்....

    என்னை அறிமுகம் செய்து

    வலைசரத்துக்கு பெருமை சேர்த்துடீன்களா.....????!!!!!!!

    ஹி...ஹி,,,ஹி...

    ReplyDelete
  23. பல தளங்கள் அறிமுகம்! உங்களால் இன்று கிடைத்தது. நன்றி!

    ReplyDelete
  24. நகைச்சுவை அறிமுகங்கள்! அப்பப்பா நேரமே போதவில்லை பார்க்க. மிக்க நன்றி சகோதரா. நாளை என்னவென்று பார்ப்போம். நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  25. வித்தியாசமாக கொண்டு செல்கிறீர்கள் வாழ்த்துக்கள் sir

    ReplyDelete
  26. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  27. இனிப்பு ருசிக்கின்ற வரை இனிமையாக இருக்கும்......விளைவுகள் அனேகமாக இனிப்பாக இருக்காது என்றாலும் இனிப்பை யாரும் வெறுப்பதில்லை. வாழ்த்துக்கள் ஆபீசர்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது