07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 27, 2011

சமுதாய சிற்பிகள் நம்முடன் - பெருமைகொள் வலையுலகே

இந்தச் சமுதாயம் என்பது நம்மால் ஆனது. ஆனால் நாம் அதற்கு என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும். சுயநலம் மட்டும் உள்ள சமுதாயம் என்றும் உயராது. நல்லவேளை நாம் அப்படி ஒரு சமுதாயத்தில் இல்லை. இந்த வலைச் சமுதாயத்தில் நான் பார்த்த, பழகும் ,மதிக்கும், வணங்கும் நல்ல உள்ளங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். 


இவர்கள் வலைப்பதிவர்கள் என்று நிறைய பேருக்கு தெரியும், இவர்கள் செய்யும் சமூகம் சார்ந்த செயல்களை அறிமுகம் செய்வதே இந்தப் பதிவு 

முதலில் என் அன்பு அக்கா மனதோடு மட்டும் கௌசல்யா. இவர் மற்றும் இவரது கணவர் அஞ்சாநெஞ்சன் ஜோதிராஜ் இருவரும் நடத்தும் EAST TRUST மூலம் சத்தமே இல்லாமல் இவர்கள் செய்யும் சேவைகள் ஆயிரம். அக்காவின் பகிர்ந்து பழகுவோம்...! என்ற ஒரு பதிவே இதற்கு சாட்சி. இந்தப் பதிவில் இவர்கள் அமைப்பு செய்த ஒரு உதவி 

அடுத்து நான் அப்பா என்று பாசமுடன் அழைக்கும், உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்கள். பதிவுலகில் பலரும் அறிந்தவர்.திருநெல்வேலியில் உணவுப்பாதுகாப்பு துறையில், உணவு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிகிறார். அதே பணியை வலைப்பூவில் செய்வதுதான் சிறப்பு. கலப்படம் பற்றி செய்திகளை சொல்வதிலும் சரி, உடல்நலம் பற்றிய செய்திகளை  சொல்வதிலும் சரி விழிப்புணர்வுதான்.


அடுத்து அன்பு அண்ணன் "வாரியர்" தேவா. பெயருக்கேற்ற கம்பீரம் செயலிலும். கல் சும்மா கிடக்கும் வரை கல்தான். சிற்பியின் கை பட்டால் தான் அது பலரும் வணங்கும் சில சிலை.   அத்தகைய சிற்பி இவர். கழுகு தளம் மூலம் சமூகம் சார்ந்த விசயங்களை பேசுகிறார்(கள்), அத்தோடு அதனை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கும் இவரது முயற்சி பாராட்டத்தக்கது.

இதே கழுகில் கொக்கரக்கோ சௌம்யன், சேலம் தேவா, நிகழ்காலத்தில் சிவா, ஆனந்தி, மகேஸ், நக்கீரன், வலைச்சரம் சீனா ஐயா, ரசிகன் சௌந்தர், கல்பனா ராஜேந்திரன், மஹா, சைதை அஜீஸ், ஜீவன் பென்னி, மற்றும் என்னையும் சேர்த்து பல தன்னார்வ உறுப்பினர்கள் உள்ளனர். கழுகைப் பற்றி அறிய இங்கே படிக்கவும் 


அடுத்து நண்பன் 4 ரோடு சூர்யபிரகாஷ் இப்போது நெட் பேங்கிங் சந்தேகங்கள், மற்றும் ஆதார் என உதவிகரமான கட்டுரைகளை எழுதுபவரின் சமுதாயம் சார்ந்த எண்ணங்கள் கூடவே இருப்பவன் என்ற முறையில் நான் நன்கறிந்தவன்.


பல வலைப்பூக்களில் எழுதி இப்போது மௌனத்தின் பின் என்ற வலைப்பூவில் எழுதும் தம்பி கூர்மதியன் கட்டுரைகளை வெறும் கணினியின் முன் இருந்து மட்டும் எழுதாமல் சாமான்ய மக்கள் நம் இந்தியச் சுதந்திரம் பற்றி அறிந்தது என்ன என்று நேரடி விசிட் செய்து எழுதியது. சமூக மாற்றத்தின் மீது அக்கறை கொண்டவர்.


பூவுலகின் நண்பர்கள் பகிரும் கட்டுரைகள் அனைத்தும் அருமை. எந்த ஒரு விஷயத்தையும் வெறும் பரபரப்புக்கு எழுதாமல் எழுதுவதை நன்றாக ஆராய்ந்து எழுதுகிறார்கள். பூமியின் மீது நாம் எவ்வளவு அலட்சியமாய் இருக்கிறோம் என்பது தெரிகிறது இவர்கள் மூலம். அணு மின்சாரம் - ஊருக்கு உபதேசம்! என்ற கட்டுரை அதை ஆதரிப்பவர்கள் கன்னத்தில் அறைகிறது. மற்ற தளங்களில் உள்ள விழிப்புணர்வு கட்டுரைகளையும் பகிர்கிறார்கள்.


கசியும் மௌனம் வழியே பேசும் ஈரோடு கதிர் தான் சமூக சேவையில் உள்ளதோடு மட்டும் இன்றி அதை செய்பவர்களையும் அடையாளம் காட்டுவது இவரின் சிறப்பு. அதில் கோடியில் இருவர் படிக்கும் போது நாம் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம் உறைக்கிறது. கல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் பின்பற்றினால் எப்படி இருக்கும் என்று மனம் ஏங்குகிறது.


மண், மரம், மழை, மனிதன். என்று அனைத்தையும் அலசும் வலைப்பூவில் படிக்க வேண்டியது நிறைய  தமிழக கடற்கரை கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். என்ற பதிவு நாம் பயன்படுத்தாத வளத்தை சொல்கிறது. மூங்கில் தினம் என்று ஒன்று கொண்டாடப்படுவதே இவர்கள் பதிவு மூலம் தான் அறிந்தேன்.
அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில் உதவிக்கு என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்துக் கொள்ளும் ஐயா ரத்னவேல் நடராஜன் அவர்கள் வலைப்பூவில் பகிரப்படும் பல கட்டுரைகள் பயனுள்ளது. ஆஸ்த்மா நோயைப் பற்றிய பதிவுஆண்களுக்கும் மார்பக புற்று நோய்! போன்றவை எல்லோரும் படிக்க வேண்டியது.


இது மட்டும் இன்றி,முல்லைப் பெரியாறு அணை குறித்த உண்மையை நமக்குச் சொல்லும் காணொளியை பகிர்ந்த அன்பர் செய்த பணி மிகப்பெரியது.  அழியாச் சுடர்கள் மூலம் கிடைப்பதற்கு அரிய சிறுகதைகள் கிடைக்கிறது.  எம்.ஏ.சுசீலா அவர்களின் வலைப்பூ இலக்கியம், பெண்ணியம் என எல்லாவற்றையும் பேசுகிறது. பதிவு எழுதாமல் எல்லா பதிவுகளையும் படிக்கும் திருச்சி சந்திரகாந்த் பாலா அவர்களின் சமூக அக்கறை மிகப் பெரியது, பயிர் அமைப்பின் மூலம் பின்தங்கிய மக்களை முன்னேற்ற முயற்சி எடுக்கும் செந்தில்குமார், "கனவுக்கு செயல் கொடுப்போம்" என்ற அமைப்பின் சபரி சங்கர்,  என பலர் உள்ளனர்.


எனக்கு தெரிந்தவர்களை மட்டுமே நான் இங்கே பகிர்ந்து உள்ளேன். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் இங்கே எல்லோரையும் அறிய ஆசையும் உள்ளது. நாம் வாழ்வது மட்டும் வாழ்க்கை அல்ல, நம்மை சுற்றி உள்ளவர்களையும் வாழ வைப்பதே வாழ்க்கை என்பதை புரிய வைத்த இவர்கள்  மத்தியில் நானும் இருக்கிறேன் என்று பெருமை கொள்கிறேன் நான்.

வெறும் பிச்சை போடுவதோ, சமுதாய தவறுகளை பற்றி வெற்று அரட்டை அடிப்பது மட்டும் மாற்றத்துக்கு வழி வகுக்காது. மனதில் இருக்கும் எண்ணம், செயலில் வர வேண்டும். முந்திய இரவு மது அருந்தியதையோ, ஒரு திரைப்படம் பார்த்ததையோ நண்பர்களுடன் பேசும் நாம், ஏன் நாம் செய்த சமூக அக்கறை சார்ந்த விஷயங்களை நண்பர்கள் உடன் பேசக்கூடாது? மாறுவோம், அத்தோடு சமுதாயத்தையும் மாற்றுவோம்.


பெருமை மிக்க அறிமுகங்கள் உடன் வலைச்சர தொகுத்தலில் இருந்து விடை பெறுகிறேன். எல்லோருக்கும் நன்றி.

"நடந்தால் நாடெல்லாம் உறவு, 
படுத்தால் பாயும் பகை"

தொகுத்தது,
பலே பிரபு (எ) பிரபு கிருஷ்ணா 

18 comments:

 1. இந்த வாரம் முழுதும் வலைச்சரத்தில் நிறைய வலைப்பூக்களை கதம்ப மாலைகளாக தொடுத்த தம்பி பிரவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. இன்றும் பல சமுதாய விழிப்புணர்வு இடுகைகள் எழுதி வரும் பதிவர்களையும், வலைப்பூக்களையும் அறிமுகம் செய்துள்ளார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  நம்ம தளத்தில்:
  "வொய் திஸ் கொலவெறி" - Why This Kolaveri Di

  ReplyDelete
 3. பலே பலே... அனைத்து அறிமுகங்களுக்கும் நன்றிகள் பல

  ReplyDelete
 4. ஒருவாரமாக பல பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகளுடன் வாழ்த்துக்கள் சகோ.!

  ReplyDelete
 5. இன்றும் நல்ல அறிமுகங்கள்.
  பாராட்டுக்கள் அனைவருக்கும். vgk

  ReplyDelete
 6. என்னை அறிமுக படுத்திய அன்பிற்கு நன்றிகள் பிரபு.

  சமூகத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறை நான் நன்கு அறிவேன்...அதன் ஒரு வெளிபாடு தான் விழிப்புணர்வு பதிவுகளை எழுதியவர்களை அறிமுகபடுத்தும் இந்த பதிவு.

  இங்கே நீங்கள் குறிப்பிட்ட பிற தளங்களை நான் வாசித்திருக்கிறேன்...அனைத்துமே சிறப்பானவை.

  உங்களுக்கு கொடுக்கப்பட்ட வலைசரம் ஆசிரியர் பொறுப்பை மிக அருமையாக செய்து அழகாக நிறைவு செய்தமைக்கு என் பாராட்டுகள் + வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. You have done a very good job! Congrats again!

  ReplyDelete
 8. @ தமிழ்வாசி பிரகாஷ்

  நன்றி அண்ணா.

  ReplyDelete
 9. @ suryajeeva

  நன்றி சகோ.

  ReplyDelete
 10. @ Abdul Basith

  நன்றி சகோ.

  ReplyDelete
 11. @ வை.கோபாலகிருஷ்ணன்

  நன்றி ஐயா.

  ReplyDelete
 12. @ Kousalya

  நன்றி அக்கா.

  ReplyDelete
 13. @ middleclassmadhavi

  நன்றி அக்கா.

  ReplyDelete
 14. திரு.பிரபு கிருஷ்ணா

  பதிவில் மண்,மரம், மழை,மனிதனை குறிப்பிட்டு பெருமை சேர்த்ததிற்கும் நான் அறியாத மிக நல்ல வலைப்பூக்களை அறிய வைத்தமைக்கும் மிக்க நன்றி.

  "சமுதாய சிற்பிகள் நம்முடன் - பெருமைகொள் வலையுலகே" மூலம் சிறப்பான சமுதாய சேவையை செய்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. அன்பின் பிரபு, இந்த வாரத்தில் வலைச்சர ஆசிரியர் பணியினை இனிதே நிறைவு செய்த பாணி அனைவர் உள்ளத்திலும் நிறைந்திருக்கும். எடுத்த பணியினை இனிதே செய்து முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. அறிமுகம் செய்த அன்பிற்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 17. மிக்க நன்றி பிரபு!

  ReplyDelete
 18. மிக்க நன்றி.
  மனப்பூர்வ வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது