07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 20, 2011

சென்று வருக ராம்வி - பொறுப்பேற்க வருக பிரபு

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற சகோ ராம்வி அவர்கள் தான் ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகளில் அறிமுகப் படுத்திய இடுகைகளோ ஏறத்தாழ 77. பெற்ற மறுமொழிகளோ 240. இவரை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் பெங்களூரில் வசிக்கும் இளைஞர் கிருஷ்ண பிரபு. இவர் திருச்சி மாவட்டம் முசிறி அருகில் தும்பலம் என்ற ஊரினைச் சொந்த ஊராகக் கொண்டவர். பொறியியல் பட்டதாரியான இவர் தற்போது வீடியோ எடிட்டராகப் பணி புரிகிறார். இவரின் விருப்பம் நாவல்கள், சிறுகதை, கவிதை, குறும்படம். இவரின் இலட்சியமும் கனவும் திரைத்துறை. வாழ வைக்கும் சமூகத்துக்கு வாழும் வரை உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார். இவருக்குப் பிடித்த பொன்மொழி " நடந்தால் நாடெல்லாம் உறவு - படுத்தால் பாயும் பகை " என்பதே !

கிருஷ்ணப் பிரபுவினை வருக வருக ! ஆசிரியப் பொறுப்பேற்க வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ராம்வி

நல்வாழ்த்துகள் கிருஷ்ண பிரபு

நட்புடன் சீனா


8 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. கிருஷ்ணப் பிரபு, ஆவலுடன் காத்திருக்கிறேன்.. உங்கள் பதிவுகளை காண

  ReplyDelete
 3. வாழ்த்துகள் - ராம்வி மற்றும் கிருஷ்ண பிரபு....

  ReplyDelete
 4. ஹாய் பிரபு... தொழில்நுட்பங்களை அலசிய நீங்கள் வலைச்சரத்துக்காக பல்சுவைகளையும் அலச வாழ்த்துக்கள்.


  நம்ம தளத்தில்:
  மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்

  ReplyDelete
 5. வாழ்த்துகள் - ராம்வி வாழ்த்துகள் - பிரபு.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் கிருஷ்ணப் பிரபு.

  ReplyDelete
 7. நல்ல பணி ராம்வி.

  ஆஹா கிருஷ்ண பிரபு ..மிக நல்ல வாசிப்பாளி ஆயிற்றே ! நல்ல புத்தகங்களும், அவற்றை அறிமுக படுத்தும் ப்ளாகுகளும் அறிமுகம் செய்வார் என நம்புகிறேன். வாழ்த்துகள் !

  ReplyDelete
 8. மிகச்சிறப்பாகப் பணியாற்றி விடைபெறும் திருமதி ரமாரவி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  புதிய பொறுப்பேற்கும் திரு பலே பிரபு அவர்களுக்கு வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது