07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 3, 2012

பதிவுலகில் அறுசுவை அரசிகள்... "நீங்கள் வலிமையானவராக இருப்பின், வலிமை குறைந்த ஆண் அல்லது பெண்ணிற்கு 
பணி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் உதவி புரிய வேண்டும்." 

சரோஜினி நாயுடு அம்மையார்

ரூபா அடுப்பில் வைத்திருந்த பாலை இறக்கி வைத்து விட்டு நடு ஹால்க்கு வந்தாள், வேலையெல்லாம் முடிந்தாகிவிட்டது சரி டிவியைப் போடலாம் என்று ஆன் செய்தாள்,நாடகம் ஓடிக்கொண்டு இருந்தது, மாற்றினாள் சேனலை, நானூறு தடவை போட்ட படத்தை, மறுபடியும் போட்டிருந்தார்கள், கடுப்பாக வேறு சேனல் மாற்றினாள்,யாரோ குடும்ப சண்டையை தீர்த்துக் கொண்டு இருந்தார்கள்,அடச்சே! டிவியை ஆப் செய்து விட்டு லேப்டேப்பை எடுத்து ஆன் செய்தாள், இந்த வாரம் புதிதாக திருமணம் செய்த தன் தங்கை ரீனாவையும் அவள் கணவனையும் விருந்துக்கு அழைத்திருந்தாள்,எதாவது சிறப்பாக செய்து அசத்த வேண்டும்..நெட்ல தேடுவோம் என்று சர்ச் செய்ததில்...

மின்மினிப்பூச்சிகள் தளத்தில்   தவலைஅடை/தவலை தோசை செய்வதை விளக்கியிருந்தார்கள்

பார்த்துக் கொண்டு இருக்கும் போதே யாரோ வரும் ஓசை கேட்டது பக்கத்து வீட்டு அனிதா! என்ன ரூபா லேப்டேப்ல என்ன பார்த்துட்டு இருக்கிறே என்றாள்...

ஒன்றும் இல்லை சமையல் குறிப்பு பார்த்திட்டு இருக்கிறேன்.

அப்படியா நான் ஒரு தளம் சொல்கிறேன் பெட்டகம் என்று,
சமையல் டிப்ஸ்....டிப்ஸ்...என்று பல அருமையான டிப்ஸ் கொடுத்திருகிறார்கள்,

பிளாக் முகவரி சொல்லு என்று அட்ரஸ் பாரில் டைப் செய்தாள் ரூபா...பிளாக் ஓப்பன் ஆனது அட நிறைய விசயம் இருக்கே... என்றாள்...

சரி என்ன விசயம் சமையல் குறிப்பு தேடிட்டு இருக்கிற...

என் தங்கை திருமணம் முடிந்த பிறகு, எங்கள் வீட்டுக்கு, மாப்பிள்ளையும், அவளும் விருந்துக்கு வருகிறாள். அவர்களை அசத்த வேண்டும் அதான் நல்ல டிப்ஸ் தேடிகிட்டு இருக்கிறேன்.

சோபாவில் ரூபா அருகில் அமர்ந்தாள் அனிதா, ஆமா ஒரு டிராயிங் பண்ணிட்டு இருந்தியே முடிச்சிட்டியா...?

நீ..கவனிக்லையா அங்க பார்.. சுவற்றில் இருந்த கண்ணாடியில் வரைந்து பிரேம் போட்டு மாட்டியிருந்த படத்தை காட்டினாள்..

ரியலி சூப்பர்டி ரூபா...நல்லா இருக்கு உன் திறமையே திறமை

அத இந்த பிளாக் ஓனர்க்கு சொல்லு என்று என் இனிய இல்லம்
பிளாக்கை ஓப்பன் செய்து காட்டினாள்...

பாயில் க்ளாஸ் பெயிண்டிங் செய்யறத போட்டிருக்காங்க அருமை...ரூபா இந்த
பிளாக் பார்த்துதான் செய்தியா வெரிகுட் நானும் முயற்சி செய்றன்

அது மட்டும் இல்லை இங்க பார் KFC சிக்கன் செய்வதையும் போட்டிருக்காங்க பார் ஆமா ரூபா நம்ம குழந்தைகளுக்கு செய்து தரலாம்

ம்ம்...அதுவும் நல்ல ஜடியாதான் ஆமா நீ கருவேப்பிலை சட்னி
செய்தது நல்லாயில்லை என்று வெளிய கொட்டி விட்டாங்களாமே உங்க மாமியார், இங்க வந்து ஒரே புகார் உன் மேல...

அதையேண்டி கேட்கர' எங்க மாமியார் மருந்துக்கு வேப்பிலை
பறிச்சிட்டு வந்து சமையறையில வெச்சது எனக்கு தெரியலை,
அவசரத்தில கருவேப்பிலைன்னு நெனைச்சு உள்ள போட்டு மிக்ஸில அரைச்சிட்டேன்..,எங்க மாமியார்தான் முதல்ல சாப்பிட்டார், பாவம்! அவர் மூஞ்சிய பார்கனுமே..சரியான திட்டு எனக்கு அன்னைக்கு...

சரி..சரி..விடு அரசியல்ல இதெல்லாம் சகஜம்...

எங்க மாமியார் உங்ககிட்ட தான் சொன்னாங்களா இல்ல ஊர் பூரா சொன்னாங்களான்னு தெரியலை,மாமியார்கள் வாயே பேசமுடியாம செய்வது எப்படின்னு யாராவது பதிவு போட்டா பாரவாயில்லை

லொடலொடன்னு நாயம் பேசுறா தவிர ஒன்னும் தெரிவதில்லை, எம் பையன் எவ்வளவு அமைதி அவனுக்கு இப்படி ஒருத்தின்னு ஒரே கம்ளைண்ட்,

எங்க மாமியாவுக்கு சாதாரணமானவள் பிளாக்குல உள்ள ஜோக்தான் சொல்லனும்

அப்படி என்னடி ஜோக் அது?

கணவன் மனைவி ஜோக்ஸ்ல படிச்சு பாரு....

ஓப்பன் செய்த ரூபா...அடிப்பாவி! உம் புருசனையே கிண்டல் பண்றியா!

நீ வேறடி, இந்த ஜோக்க அதுகிட்ட சொன்னா புரியாது அதுலியே போட்டிருக்காங்க...

உனக்கு குசும்புதான் சரி இன்னைக்கு நைட் என்ன டிபன்...

இல்லை ரூபா என் வீட்டுக்காரர் புரோட்டா வாங்கி வருவார்...

புரோட்டாவா இதைப்படி ஆஹா என்ன ருசி பிளாக்குல
மைதா எச்சரிக்கை! புரோட்டாவின் கதை!!

யம்மாடி இத்தனை விசயம் இருக்கா இனி புரோட்டா வேண்டாம் சாமி! சிம்பிளா பருப்பு சாதம் பண்ணிற வேண்டியதுதான்..

பருப்பு சாதம் செய்ய வேண்டாம் இரவு நேரத்தில ஜீரணம் ஆகாது சப்பாத்தி பண்ணிரு

சப்பாத்தி செய்யலாம் குருமாதான் நமக்கு சரிவருவதில்லை ரூபா

கவலைப்படாதே சமைத்து அசத்தலாம் தளத்தில மஷ்ரூம் குருமா கிரேவி பார் செய்து உங்க வீட்டு ஆளுகளை அசத்து அனிதா,

ரூபா நீ கைவசம் நிறைய பிளாக் படிப்பபோல ஒவ்வொன்னாச் சொல்லு நான் குறிச்சிக்கிறேன்

சரி கேட்டுக்க புதிய வசந்தம் வலைதளத்தில உணவை குறைத்து உடலை அழகாக்க..டிப்ஸ்

அப்புறம் எல்லாப்புகழும் இறைவனுக்கே நட்பு சமையல் இதன் மூலம் நிறைய சமையல் தளத்த அறிமுகப்படுத்துறாங்க

மரவள்ளி கிழங்கு மினி போண்டா செய்யனுமா இது அப்சராவின் இல்லம்

சசிகாவின் காரட் அல்வா

சுசிரியின் தயாரிப்பில் ஆமவடை

மகி'ஸ் கிச்சன் மைசூர் போண்டா

யப்பாடி இத்தனை விசயம் இருக்கா ரூபா நீ பிளாக் படிச்சிதான் அசத்திரியா

இல்லை அனிதா படிப்பதால மட்டும் யாருக்கும் சமையல் வராது, ஆத்மார்த்தமா தியாணம் மாதிரி மனதை வைத்துக்கிட்டுதான்,சுத்தமான மனசு தூய்மையான நிலையில அவசரப்படாம நிதானமா செய்தால்,நீயும் அறுசுவை அரசியாகலாம்...பிறகு சமையலோட அன்பையும் கலந்து பறிமாறினா... அதைவிட சிறப்பு ஏது? நம் வாழ்வே காற்று குமிழிமாதிரிதான் எப்ப வேனுனாலும் உடையும் இதைபடி புரியும்

முத்துசிதறல் காற்றுக் குமிழ்கள் 

படிக்கவே மனசு கஸ்டமா இருக்கு ரூபா

அதனால இனிமே நீ அன்பா நடந்துக்க...உங்க மாமியாரே உன்னை பாராட்டுவாங்க அனிதா.

ஓகே ரூபா...இனி நான் தெளிவா இருக்கிறேன்,அன்பா இருக்கிறேன் போதுமா..

சரி இத்தனை குறிப்ப கேட்டியே இன்னிக்கு என்ன சமையல் செய்யப்போறே

என் வீட்டுகாரரை கேட்கனும்!

ஏன்டி நீ..சமைக்கிறதுக்கு வீட்டுகாரரை எதுக்கு கேட்கனும்..?

நான் சமைக்கிறதுக்கா...நான் எந்த காலத்தில சமைச்சேன்..
இதெல்லாம் அவருக்குத்தான்...

அடிப்பாவி...!உன்னை உங்க மாமியார் திட்டுவதுல தப்பே இல்லைடி....
                                                                         *********
தமிழ்மணத்தில் வாக்களிக்க விரும்புவர்கள் இந்த லோகோவை கிளிக் செய்யவும்

22 comments:

 1. நிறைய புதிய ப்ளாக்ஸ் பற்றி தெரிந்துகொண்டேன். நல்ல ஆரம்பம். கலக்குங்க.

  ReplyDelete
 2. நிறைய பதிவர்களை தங்களது தொகுப்பின் வழியே அறிந்துக்கொண்டேன்..என் நன்றிகள்.

  ReplyDelete
 3. அறிமுகப்படுத்திய விதம் வெரி இண்ட்ரெஸ்டிங்க். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. தலைப்பும் அறிமுகப்படுத்திய விதமும் அருமை.என்னையும் இணைத்ததற்கு மகிழ்ச்சிகலந்த நன்றி!வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. நல்ல சுவையா, மணக்கும்
  பதிவு!
  வீட்டுக்கு தேவைதான்!

  என் வலையின் புதிய முகவரி;-
  http://www.pulavarkural.info/2012/02/blog-post.html#comment-form

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 6. அருமையான இந்த தலைப்பின் கீழ் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.பகிர்வுகள் அனைத்தும் சூப்பர்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. உரைநடைவழியாக அறிமுகங்கள் அசத்தல். வாழ்த்துகள்... உங்களுக்கும் உங்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கும்.

  ReplyDelete
 8. அனைவருக்கும் வாழ்த்துகள். சீக்கிரம் பதிவர் சமையல் போட்டி வைங்கப்பா!!

  ReplyDelete
 9. அடடே.... இதென்ன வித்யாசமான முறையில் அறிமுகம்.... நல்லா இருக்குங்க... கூடவே நன்றிகளும்...

  ReplyDelete
 10. நன்றி வீடு....உங்க கற்பனை dedication அதை அழகான கட்டுரையா செதுயிருப்பது நல்லா ரசிச்சேன்.

  சத்தியமா சமையல் சம்பந்தபட்ட பதிவு அறிமுகங்களில் என் வலைச்சுட்டி இடம்பெறும் என்று நினைத்ததேயில்லை :))

  ரொம்ப நன்றிங்க.... ஆசிரியர் வாரம் சிறப்பா தொடருங்க.

  ReplyDelete
 11. அன்புள்ள சகோதரர் சுரேஷ்குமார்!!

  இன்று என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு என் அன்பார்ந்த நன்றிகள்!!

  ReplyDelete
 12. நல்ல பதிவுகள் பலதை அறிமுகம் செய்து இருக்கின்றீர்கள் பாராட்டுக்கள் பாஸ்

  ReplyDelete
 13. //அனைவருக்கும் வாழ்த்துகள். சீக்கிரம் பதிவர் சமையல் போட்டி வைங்கப்பா!!//

  நல்ல யோசனையா இருக்கே... ஸ்பான்சர் ரெடியா?

  ReplyDelete
 14. இவ்வளவு சமையல் பற்றிய பதிவு இருக்கா!! சூப்பர்.

  ReplyDelete
 15. அனைவரையும் அறிமுகபடுத்திய விதம் அருமை..என்னையும் அறிமுகபடுத்தியதற்க்கு மிக்க நன்றி சகோதரரே!!

  ReplyDelete
 16. வித்தியாசமான முறையில் சமையல் பதிவு அறிமுகங்கள். அசத்தல் சுரேஷ்...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. பலரைத் தெரிந்து கொண்டேன் நன்றி அறிமுகத்திற்கு.

  ReplyDelete
 18. ஒவ்வொரு பதிவும் அருமை. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துகள். தொகுத்தளித்த விதம் அருமை.

  ReplyDelete
 19. என்னையும் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி . மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 20. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. அழகிய, சட்டென்று கிடைக்கும், பக்கங்களுடன், நல்ல பதிவு.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது