07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 28, 2012

தேடித் திரிந்தவனைத் தேடிப் பிடித்தது பைங்கிளி


தேடித் திரிவோம் வா 
இப்படி ஒரு வலைப்பதிவா என்று நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கிறது 
கல்லூரி மாணவரின் வலைப்பதிவு. 


ஒருவன் நம்மிடம்  என்ன சொல்ல வருகிறான் என்பதைக்
 கேட்கக் கூட நேரமில்லாத இயந்திரத்தனமான உலகில் இங்கு ஒருவர் 
அர்த்தமுள்ள சில மனிதர்களை தேடித் தேடி எழுதுகிறார்.

ராமேஸ்வரம் மீனவர்களின் பாடலை இசைக்கருவிகள் இல்லாமல்  நம் காதுகளுக்கு விருந்துவைக்கிறார் கடற்கரை ரம்மியத்துடன்..   

யாருக்காவது தெரியுமா 
இந்தவலைப் பதிவில்  பார்ப்பதற்கு முன்பே உங்களுக்குத் தெரிந்திருந்தால் மறக்காமல்  பின்னூட்டம் இட்டுச் செல்லவும். 

ஆழ்வார் தாத்தாவின் கல்விப்பணி சோம்பேறிகளை சிந்திக்க வைக்க்கும்.

            ***
காணாமல் போகும் சிட்டுக்குருவிகள் பற்றி நரிக்குறவர் ஒருவர் சொல்கிறார் கேளுங்கள்,பாருங்கள்.


தமிழ் கற்ற பேராசிரியர் ஹிரோசி ய்மாஷிடோ தெரியுமா? 
அணு உலை மின்சாரத்தைப்பற்றி இவர் என்ன சொல்கிறார் 
இந்தப்பதிவினைப்  படிக்கும்போது 
தமிழ் இவருடன் இருக்கிறதா 
நம்முடன் இருக்கிறதா சந்தேகமாக இருக்கிறது.

சென்னையில் ஒரு அரண்மனை இவர் கண்ணில்  மட்டும் பட்டுள்ளது.

 தனுஷ்கோடியைப் பற்றி யாருக்கெல்லாம் தெரியும் தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடுங்கள்.

சென்னைத் தொலைகாட்சி நிலையத்தில் எனக்கு செய்திப்பிரிவைதவிர வேறொன்றும் தெரியாது
பொன்விளையும் பூமி என்று புதிதாய் சொல்கிறார் கேளுங்கள் .

மருத்துவமனை ஒன்றுக்கு யாரேனும் சிகிச்சை அளியுங்கள் என்கிறார் தைரியமாக.

 கடலில் கண்ணீர் கலக்கிறது என்று கண்ணீருடன் கூறுகிறார்.

இப்படித் தாம் தேடித் தேடி சமுதாயச் சிந்தனையுடன் எழுதிக் கொண்டிருக்கும் கல்லூரி மாணவர் ராமேஸ்வரம் ரபி அவர்களது  வலைத்தளத்தினைப்போல வலைப்பதிவுகள் தோன்ற வேண்டும்.
                                      @@@@@@@@@@@@


சிதறிக் கிடக்கும் சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் 


தெரியாமலே போகட்டுமென்று 
தமிழன் வலை சொல்கிறது.


 ஒரு இருபது ரூபாய்க்கு கேரளா வீதியில் நின்ற தமிழன் 
பணத்தை விரித்து படுத்துக்கொள்ளும் சுயநலவாதிகள் படிக்க வேண்டிய  
சாம்பல் தேசத்தின் சாம்பல் துளிகள். 

 பொங்கல் என்றாலே அடுப்பும் பானையும் தான் நம் கண் முன் வரும்.
 அசாக் கேட்கிறார் எரிபொருள் எங்கே என்று ?

நல்லமனதுடன் 6 ,40 ,  000,௦௦௦ ௦௦௦ ௦௦௦ பிள்ளைகளுக்கு உதவ அழைக்கிறார் 
நண்டு @நோரண்டு .

முகம்மது ஆசிக்கின் வெஸ்டன் டாயிலெட் அறிவுரையை அனைவருமே உற்று நோக்கலாம்.
                                       @@@@@@                               

இனி புதிய வலைதளங்களுக்குப் பறக்கலாம் 

எப்படிப்பாட வேண்டுமென்று தமிழிசைக் குரல் கொண்டு 
குழல் ஊதுகிறார்.இந்த முல்லைக்  கடல் அலை முத்தின் சிப்பி போல எண்ணங்களையே தனது பதிவின் வண்ணங்கள் ஆக்குகின்றார்.  

இவர் ஊர் சாலைகளை பல்லாங்குழி என்கிறார் நகைச்சுவையாக இந்த தேன்சிட்டு. 

சிட்டுக் குருவி இவரிடம் சிறைவாசியாய் நியாயம் கேட்பதைத் தண்ணீர்ப் பந்தலுக்குச் சென்று இளைப்பாறிக் கொண்டே படிக்கலாம் .

தமிழ்க் கவிதை தங்கச் சுரங்கத்தில் அன்றாட அறிவியலா ?வியக்கிறது கவிதையே.

நாளையும் ஒரு அருமையான ஈரப்பதிவருடன் உங்களை தமிழ்ப் பைங்கிளி தளங்களுக்கு அழைத்துச் செல்வாள்.
                                                  
நன்றி நண்பர்களே .

22 comments:

 1. ராமேஸ்வரம் ரபி சிறப்பான அறிமுகம்.ஒரு நல்ல சமுதாயதுக்கான தேடல் அவரது பதிவுகள்.

  ReplyDelete
 2. நல்ல இடுகைகளை அறிந்து கொண்டேன்.
  பகிர்வுக்கு நன்றி.
  இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. சாம்பல் தேசம்,தண்ணீர்ப்பந்தல்.தேன்சிட்டு,அசாக் எனக்கு புதிய,தேர்ந்த அறிமுகங்கள்,அறிமுகப்படுத்தியமைக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 4. அன்பின் பைங்கிளி - ராமேஸ்வரம் ரஃபியினைப் பற்றிய அறிமுகம் நன்று. மற்ற அறிமுகப் பதிவுகளும் நன்று - அனைத்து அறிமுகங்களையும் படிக்க வேண்டும். செய்வோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. congratulation sister

  keep rocking

  thanks
  sambath

  t.m 3

  ReplyDelete
 6. தொலைதூரம் சென்று தேனை சேகரிக்கும் தேனீயைப்போல அருமையான வலைப்பதிவுகளையும், கூடவே புதிய அறிமுகங்களையும் கொடுத்து வலைச்சரத்தை அழகாக தொடுத்திருக்கிறீர்கள்..!!

  சரத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து வலைப்பூ ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள்..!!

  நன்றி!

  ReplyDelete
 7. சிறப்பாக தங்கள் பணி தொடர்கிறது வாழ்த்துகள் .

  ReplyDelete
 8. அருமைப் பதிவு வாழ்த்துகள் சகோதரி

  ReplyDelete
 9. பைங்கிளிக்கு வணக்கம் .
  நல்ல தளங்கள் நிறைய தந்து உள்ளீர்கள் .
  என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி .
  உங்கள் ஆசிரியர் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. மட்டற்ற மகிழ்ச்சிகொள்கிறேன் தோழி! எங்கோ கிடந்த சிறைவாசியையும் தேடிப்பிடித்து பெருமைப்படுத்திய தங்களது அன்பு உள்ளத்திற்கு எனது மனம் கனிந்த நன்றிகள் தோழி! தாங்கள் அறிமுகப்படுத்திய மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! மிக்க மகிழ்ச்சி தோழி! தங்களது அன்புக்கு மிக்க நன்றி! தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
 11. நல்ல இடுகைகளை அறிந்து கொண்டேன்.
  பகிர்வுக்கு நன்றி.
  இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. நல்ல அறிமுகம்,நல்ல அறிமுகங்கள் முக்கியமாய் சமுதாய சிந்தனை நிறைந்தவர்களை தேடிப்பிடித்து வலைச்சரத்தில் நிரப்பி,சரமாய் தொடுத்திருப்பது நறுமணம் கமழ்கிறது..வாழ்த்துகள்..
  www.padaipali.com

  ReplyDelete
 13. நல்ல, நல்ல அறிமுகங்கள். சிறப்பான தொகுப்பு.

  ReplyDelete
 14. தேடித் திரிந்தவனைத் தேடிப் பிடித்தது பைங்கிளிக்க்குப் பாராட்டுக்கள்...

  ReplyDelete
 15. மிக வித்தியாசமான பதிவுகளாக உள்ளது முழு அறிமுகமும் சகோதரரே. தங்கள் பணிக்தும் புது அறிமுகவாளர்களுக்கும் வாழ்த்துகள். மிண்டும் சந்திக்கும் வரை.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 16. தேடிப்பிடித்தப் பதிவுகளின் அறிமுகம் அருமை. நிறைய தகவல்களை அறிந்துகொள்ள உதவுகிறது. மிகவும் நன்றி. அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. ராமேஸ்வரம் ரபி பற்றிய பதிவு அருமை..

  ReplyDelete
 18. நல்ல அறிமுகங்கள்.

  ReplyDelete
 19. ஸலாம் சகோ.தென்காசி பைங்கிளி.

  தாங்கள் பகிர்ந்த வலைப்பதிவு பகிர்வுகள் அனைத்துமே அருமை. எனது பதிவையும் இங்கே பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி சகோ.

  அடுத்து..................

  ///இந்தவலைப் பதிவில் பார்ப்பதற்கு முன்பே உங்களுக்குத் தெரிந்திருந்தால் மறக்காமல் பின்னூட்டம் இட்டுச் செல்லவும்.///

  ---நீங்கள் இப்படி கேட்டு இருப்பதால் மட்டுமே இங்கே நான் சொல்கிறேன்...

  இதைப்பற்றி,

  உலகின் ஒரே 'கையெழுத்துப்பிரதி தினசரி'... இன்னும் சென்னையில்..!

  என்று....
  கடந்த 2011, மார்ச் மாதம்....
  நானும் ஒரு பதிவு என் பாணியில் எழுதியுள்ளேன் சகோ.பைங்கிளி..!

  ReplyDelete
 20. எல்லா பதிவுகளையும் பார்க்கனும். பார்த்துடறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. அன்புக்குரிய பைங்கிளி! நேற்று முதல் வலைச்சரத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்றதை மகிழ்வுடன் அறிவேன். நிறைந்த மனத்துடன் பல்வேறு வலைத்தள நண்பர்களின் படைப்புக்களை அறிமுகம் செய்துள்ளீர்கள், பாராட்டுகின்றேன். எனது படைப்பு ஒன்றையும் அறிமுகம் செய்து என்னையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள், மிக்க நன்றி! நான் எழுதியவற்றில் என் மனத்தில் முன் நிற்கும் படைப்புக்களில் இதுவும் ஒன்று, என்றும் மாறாத தழும்பு. உங்கள் மனத்தையும் நெகிழச்செய்ததை அறிவேன். தொடர்க உங்கள் செவ்விய பணி பைங்கிளி! நன்றி!...இக்பால்

  ReplyDelete
 22. எனது பதிவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் படித்துவிட்டுச் சென்ற அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது