07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 11, 2012

கவிதையின் காதலன்!


ஆம் தோழர்களே! நான் கவிதையின் காதலன் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். 

கவிதை, மொழியின் உச்சபட்சம்; அது ஒரு பேரனுபவம்!

நம் தமிழே நெடிய காலத்திற்குக் கவிதையின் மொழியாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழில் உரைநடை வடிவம் என்பது மிகவும் பிற்காலத்தில்தான் புழக்கத்திற்கு வந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கவிதையில் புரிந்த கவிதை, புரியாத கவிதை என்றெல்லாம் இல்லை. அது வாசிப்பாளரின் அனுபவத்தைப் பொருத்தது. 

இன்று என்னை மிகவும் பாதித்த சில கவிதைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

1.ஆதி
அற்புதமான கவிஞரான இவர் அன்பென்னும் ஜீவநீருக்கு சொந்தக்காரர். இருண்மை மிக்க நவீனக் கவிதைகளைப் புனைவதில் வல்லவரான இவர் மரபுக் கவிதைகளிலும் பாண்டித்தியம் மிக்கவர். ஒரு பெருங்குறை என்னவெனில் பொதுத்தளங்களில் நிறையப் பங்களிப்புகளைச் செய்திருக்கும் இவர் இவரது வலைப்பூவில் அவற்றை இற்றைப்படுத்துவதில்லை. அது இவரது வலைப்பூவைத் தேடி வரும் வண்டுகளுக்குப் பேரிழப்பு. இனி இவரது கவிதைகள் சிலவற்றைக் காண்போம்.

பேனாவையும் பெண்விழியையும் பற்றி, அடர்குழலையும் ஆற்றையும் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பாருங்கள் இவர் எப்படிச் சிலேடையில் புகுந்து விளையாடுகிறார் என்று.

புற இன்பம் விடுத்துப் பேரின்பம் தேடும் சித்தர் பாடலையொத்த இக்கவிதையின் சந்தத்தில் சற்றே மனதைப் பறிகொடுங்கள்!

நதியைக் குறியீடாக்கி எல்லோரையும் அந்நதியில் மூழ்கித் திளைக்கச் செய்கிறார் திடீரென முளைத்து விடும் நதியில்

நெஞ்சைப் பிசையும் இவ்வண்ணத்துப் பூச்சியின் தேடலில் நீங்கள் தொலைந்து போவீர்கள்!

சொல்லப்படாத ஒரு காதலைச் சொல்கிறார் இக்கவிதையில்; கேளுங்கள்!

நெகிழியை அறிந்திருப்பீர்கள்; காணுங்கள் இந்தக் காதல் நெகிழியை

இறந்தவர்களின் அபயக்குரல் உங்களுக்காவது கேட்கிறதா பாருங்கள்!

சிறுவயதில் சில்லு விளையாடியிருப்பீர்கள்; இந்தச் சில்லுகள் உங்களோடு விளையாடும்!

தனிமைக்கும் சுவை உண்டென்கிறார்; சுவைத்துப் பாருங்கள்!

புரியாத கவிதையைப் போல நீயும் இருக்கிறாய் என்கிறார்; உங்களுக்குப் புரிகிறதா பாருங்கள்!

2.கமலேஷ்
சுயம் தேடும் பறவையான இவரின் கவிதைகள் வாசிப்பதற்கு அலாதியானவை. இவரின் கவிதைகளில் பறவைகள் ஒரு படிமமாய்ப் பறந்து கொண்டேயிருக்கும். ஒரு வருத்தம் என்னவென்றால் நீண்ட காலமாய் இவரது வலைப்பூவில் பதிவுகள் எதுவுமில்லை. இனி கவிதைகளுக்கு வருவோம்.

இந்த மஞ்சள் தடவிய மரணப் பத்திரிகையை வாசித்தபின் உங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்!

உங்கள் வேட்டைக்கேற்ற பறவை இதுவென நீங்கள் முடிவு செய்தால் அது தோற்றப்பிழை

இவரின் வலியோடு கலையும் கனவு உங்களுக்கும் வலியேற்படுத்தும்

ஒருபோதும் பிறருக்கான உங்கள் கதவுகளை அடைத்து விடாதீர்கள். கதவாயுதம் கர்த்தரின் நடுநெஞ்சில் இறங்கும் கடைசி ஆணி என்கிறார் இவர்.

இக்கவிதையை உறங்கும் குழந்தையின் சிரிக்கும் உதடுகள் என்கிறார் சித்தார்த்தன் கனவில்

3.ராஜா சந்திரசேகர்
ராஜா சந்திரசேகரின் கவிதைகள் அறியாதவர் யாரும் வலையுலகில் இருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். எளிய சொற்களில் குறைந்த வரிகளில் மொழியின் சகல பரிமாணங்களையும் காட்டும் இவரது கவிதைகள் ஆச்சர்யத்துக்குரியவை. இதோ இவரது கவிதைகள் சில.

மழையை வரைதல் யார்க்கும் எளிதன்று; அதுசரி, மழையை வரைய என்ன வேண்டும்?

தொலைந்த கடவுளைக் கண்டெடுக்கிறார் இவர்

பறவையின் சிறகசைப்பில் இசையைத் தேடுகிறார்

இவரது வனம் அதற்குள் நம்மைத் தொலைந்து போகச் செய்யும்

4.சாய்ராம்
இவரது தளம் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எனப் பரந்து கிடக்கிறது. அவற்றில் சில கவிதைகளைக் காண்போம்.

இவரது கண்ணீரில் மிதந்து செல்லும் ரயிலில் நீங்களும் பயணம் செய்யலாம்.

காகிதத்தை மை தொடும் கணம் இந்தக் கவிதை உருவாகிறது

ஒரு சிலையிலிருந்து எத்தனை பிரதிகள் எடுக்க முடியும்? பாருங்கள்!

சரி தோழர்களே! மீண்டும் புதிய பதிவுகளோடு நாளை உங்களைச் சந்திக்கிறேன்.

நன்றியும் வணக்கமும்!


8 comments:

  1. கவிஞர்களின் அறிமுகத்தோடு சிறப்பான தொடக்கம்...

    ராஜா சந்திரசேகர் அவர்களின் தளம் தவிர மற்ற தளங்கள் எனக்கு புதியவை...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  2. நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அருமையான தளங்கள் நிறைய புதிது எனக்கு நன்றி

    ReplyDelete
  4. நிறைய (எனக்கு) புதிய தளங்கள்.
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  5. அனைத்தும்நான் அறிந்திரா தளங்கள்! சிறப்பான அறிமுகத்திற்கு மிக்க நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
    http://thalirssb.blogspot.in/2012/09/8.html

    ReplyDelete
  6. //ஒரு சிலையிலிருந்து எத்தனை பிரதிகள் எடுக்க முடியும்? பாருங்கள்!//

    ஒரு முகம் சொல்லும்
    ஓராயிரம் கவிதைகள்.
    ஒரு முறை படித்தாலும்
    ஒட்டிப்போய் மனம் வருடும்.

    பார்த்தேன்
    ரசித்தேன்
    பக்கம் வரத்
    துடித்தேன்

    இது கவிதை அல்ல.
    கொம்புத்தேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  8. என் வலைப்பதிவு பற்றிய அறிமுகத்தினை இங்குக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி அப்துல் காதர். ஆதி மற்றும் கமலேஷ் ஆகியோர் பற்றியும் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது