07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 17, 2012

அட்டகாசம் செய்யவரும் அசத்தல்கள்







பதிவுலக தோழ தோழியர்களே நலமா?

இது வரை எல்லாரும் என்னை அறிமுகப்படுத்தியது போக இன்று நான் இங்கு பயனுள்ள சில வலைப்பூக்களை அறிமுகப்படுத்த வந்துள்ளேன்.

முதலில் முன்று மாதம் முன் சீனா ஐய்யாவிடம் இருந்து வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்கும் படி மெயில் வந்தது  சரின்னு சொல்லிட்டேன், ஆனால் இடையில் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு இப்ப தான் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்று கொள்ள முடிந்தது.சீனா ஐய்யாவுக்கு எனது நன்றிகள்.



 சமையலில் 25 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.

மற்றும் பிரபல வலைதளங்கள் அறுசுவை.காம் மில் சமையல் குறிப்புகளும்,
தமிழ்குடும்பம்.காம் மில் டிப்ஸ்கள், சமையல் குறிப்புகள்,குழந்தை வளர்ப்பு பதிவுகளை
கடந்த ஐந்து  வருடங்களாக கொடுத்து வருகிறேன்,



சில குறிப்புகள் சமையலறை.காம் மிலும் வல்லமை.காமிலும் கொடுத்துள்ளேன்.

கீழக்கரை அஞ்சல் மாத இதழ், 2005 யில் துபாயில் வெளியான தென்றல் மாத
இதழில்,  2010 விகடன் திபாவளி மலரிலும் என் சமையல் குறிப்புகள் வெளி
வந்துள்ளன.


மேலும் சிகரம் துபாய் இலங்கை மாத இதழிலும் என் குறிப்புகள்
வெளிவந்துகொண்டு இருக்கிறது

லேடீஸ் ஸ்பெஷல் 2011 லில் சமையல் குறிப்பும் , கேன்சருக்கான விழிப்புணர்வு பதிவும் வெளி வந்துள்ளன.

இண்டி ப்ளாக்கர் மாஸ்டர் செஃப் சமையல் போட்டியில்,  சமையல் அட்டகாசம் வலைப்பூவிற்கு முதல் பரிசும், குக்புக்ஜலீலா ஆங்கிலவலை பூவுக்கு இரண்டாம் பரிசும் கிடைத்துள்ளது.
பதிவுல தோழ தோழியர்கள் மூலம் பல அவார்டு களை வாங்கினாலும் பெரிய பெரிய செஃப் களால் தேர்ந்தெடுத்தது இந்த பரிசு கிடைத்த்து அளவிலா மகிழ்சி.


2011 நேசம் மற்றும் உடான்ஸ் நடத்திய புற்று நோய் விழிப்புணர்வு கட்டுரைகளில் நான் பெண்களுக்காக எழுதியபுற்றை வெல்வோம் வருமுன் காப்போம் என்ற கட்டுரைக்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.

அதீததில் 2011 லில்ஆண்களுக்கு ஹீமோகுளோபின் டிப்ஸும்  இடம் பெற்றுள்ளன
நான் கொடுக்கும் ஓவ்வோரு டிப்ஸ்களும்  சொந்த அனுபவமும், நேரில் ண்ட
அனுபங்களும்.என் சமையல் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி உண்ணும் வண்ணம் இருக்கும்.


அதே போல் குழந்தை வளர்ப்பும் எல்லாம் என் அனுபங்கள் ற்றும் நேரில் ண்டவை.

நாம் இம்மண்ணில் பிறந்து விட்டோம்.அப்படியே அன்றாட வேலைகளை முடித்து
கொண்டு திறமைகள் நம்முடன் புதைந்து போகாமல் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு
வகையில் உதவனும் என்ற எண்ணத்தில் எனக்கு தெரிந்த திவுகளை
ங்கிக்கொண்டிருக்கிறேன்.

என்னுடைய பழைய வலைப்பூக்கள்.

முத்தான துஆக்கள்
ஜலீலாவின் பயனுள்ள டிப்ஸ்கள்
குழந்தை வளர்பும் உணவு முறைகளும்
எல்லாத்துலேயும் தனித்தனியாக பதிவு போட முடியாத்தால் 
http://allinalljaleela.blogspot.com/   ”ஆலினால்ஜலீலா” லிருந்து  http://samaiyalattakaasam.blogspot.com ”சமையல் அட்டகாசங்கள் “இப்படி மாறி இருக்கிறேன்.

மற்றும் என் வலைப்பூக்கள் முத்தான  துஆக்கள்  

சென்னையில் உள்ள சென்னை ப்ளாசா கடை http://www.chennaiplazaik.com/ இதிலும் போட்டுள்ளேன்.
தனியார் கம்பேனியில் பணி புரிந்தும் வருகிறேன்.
குக்புக்ஜலீலா என்ற ஆங்கில வலையும் எழுதி வருகிறேன்

சென்னையில் சென்னை ப்ளாசான்னு கடை ஆரம்பித்து இருக்கோம் அதற்காக சென்னை
ப்ளாசா என்ற் வலையும் ஆரம்பித்து இருக்கிறேன்.தேவைபடுபவர்கள் இதிலும் இணைந்து கொள்ளலாம் . சென்னையில் உள்ள உங்கள் சொந்தங்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

 என் வலையில் சமையல் 


சைவ பிரியர்களுக்கு 



பேச்சுலர்களுக்கு ஈசி மீன் குழம்பு
டிபன்  - மசால் தோசை

அசைவ பிரியர்களுக்கு 







வலைஉலக தோழ தோழியர்களின் வீட்டு செல்லங்கள்


2008 ம் வருடம் கடைசியில் தான் வலைப்பூ துவங்கினேன். 
இந்த வலை உலகம் மூலம் பல பதிவுலக சொந்தங்கள் கிடைத்தது எனக்கு
மிக்க மகிழ்சியே.


சுயபுராணம் முடிந்தது, இனி வரும் நாட்களில் மற்ற அசத்தல்களை பார்க்காலாம்.


இப்படிக்கு

ஜலீலாகமால்


31 comments:

  1. வாழ்த்துக்கள் ஜலீலா

    ReplyDelete
  2. சுய அறிமுகம் தலைப்பைப்போலவே அசத்துங்கள்.இனி ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தில் உங்கள் அசத்தல்களை காண ஆவலுடன் இருக்கின்றோம்.//வலைஉலக தோழ தோழியர்களின் வீட்டு செல்லங்கள்// என்று கொலாஜ் செய்த போட்டோக்கள் போட்டு இருப்பது அருமை.தொடருங்கள் ஜலி.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.ஜலீலா.தொடர்ந்து அசத்துங்க.மிக ஆவலாக காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்...ஜலீலாஅக்கா.. .தொடர்ந்து அசத்துங்க

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அசத்த என் பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  6. அசத்திட்டீங்க அக்கா...

    குக்புக் தளம் இப்பதான் பாக்குறேன்...

    அன்றி அக்கா...

    ஒரு வாரம் நல்லா கலக்குங்க.. ஆல் தி பெஸ்ட்டு... :-) :-) :-)

    ReplyDelete
  7. வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள் சகோ.! அறிமுகம் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்.சகோ ஜலீலா.தொடர்ந்து அசத்துங்க.மிக ஆவலாக காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் அக்கா!! தொடர்ந்து அசத்துங்க...

    ReplyDelete
  10. முதலில் ஆசியர் பதவியைப் பொறுப்பேற்றமைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ஜலீலாக்கா.

    இந்த ஒரு வாரத்தையும் இனிதே நடாத்தி, நல்லபடி முடிக்கவும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. ஜலீ முதலில் என் அன்பான வாழ்த்துக்கள். நல்ல ஒரு பொறுப்புள்ள பதவி. சமையலில் அசத்துகிற நிங்கள் கண்டிப்பாக இதிலும் ஒரு அசத்து அசத்திடிங்க.
    உங்களை இங்கு பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தொடருட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  12. சமையல் மட்டுமல்ல, வலைச்சரத்தில் ஆரம்பமும் அட்டகாசமாகத்தான் இருக்கு.

    அதிலயும் பாருங்கோ ஜல் அக்கா... இங்குள்ள பின்னூட்டங்களில் எங்கட அறுசுவைக் குரூப்தானே அதிகம் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கு....

    நீங்க தொடர்ந்து கலக்குங்கோ.. நாங்களும் பின்னூட்டத்தில் கலக்கிடுவோம்... ஓல் தெ பெஸ்ட்...

    ReplyDelete
  13. போனவாரம் ஆசிரியராக இருந்தவர், எங்கட “பாட்ஷா” வோ? எனக்கது தெரியாமல் போச்சே, அவருக்கும் வாழ்த்துக்கள்...... ஆரும் சொல்லவுமில்லை.. சரி அது போகட்டும்.. நடந்தவை யாவும் நடந்தவைதானே:).

    ReplyDelete
  14. பணி சிறக்க வாழ்த்துக்கள் அக்கா..

    ReplyDelete
  15. அட்டகாசங்கள் தொடர வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  16. அருமையான சுய அறிமுகம்.

    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    வெற்றிகரமாகத் தொடரட்டும் தங்களின் வலைச்சர ஆசிரியர் பணியும் புதிய அறிமுகங்களும்.

    ReplyDelete
  17. ஆஹா !!! ஆரம்பமே அசத்தல் ...கொலாஜில் போட்டிருக்கும் சின்ன செல்லங்கள் அருமை .அனைவர் மீதும் நீங்க கொண்டிருக்கும் அன்பிற்கு இது ஒரு சான்று
    தொடர்ந்தும் அசத்துங்கள் வாழ்த்துக்கள்
    நாங்களும் தொடர்கிறோம்

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் ஜலீலா. தொடரட்டும் இனிய பணி.

    ReplyDelete
  19. வாருங்கள் ஜலீலா! அன்பு வரவேற்புகள்!

    ReplyDelete
  20. வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள்.

    வாழ்த்துக்கள்.


    அட்டகாசம் செய்யவந்திருக்கும் அசத்தல் ராணியே
    அடிச்சி தூள்கிளப்புங்க.

    அடுக்கடுக்காய் வந்து விழட்டும்
    அட்டகாசத்தின் வழியே
    அழகிய வலைபூக்களின் அணிவகுப்புகள்.


    ReplyDelete
  22. அஸ் ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா....,

    அனுபவமும், திறமைகளும் இருப்பவர்களுக்கு பரிசுகளும், பதவிகளும், புகழும் தேடி வருவதில் ஐயமே இல்லையே... உங்களுடைய அடாத உழைப்பும், விடாத முயற்சிகளும் பதிவுலகத்திற்கே தெரிந்ததுதானே.... வலைச்சர ஆசிரியர் பொறுப்பு பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன்... நிறைய வேலை பார்க்க வேண்டும் என. இன்ஷா அல்லாஹ் தங்களின் பணிச்சுமைகளுக்கிடையில் இதனையும் சேர்த்து கலக்கி விடுவீர்கள் என்றே எண்ணுகிறேன்.... என் வாழ்த்தும் ஸலாமும்.... :))

    ஆமா, எங்க வீட்டு வாண்டுகளை ஃபோட்டோவில இணைக்கலை???? அவ்வ்வ்வ் ...... :((

    நல்லபடியா இந்த வாரத்தை கொண்டு போவீங்க இன்ஷா அல்லாஹ் தினம் வர முயற்சிக்கிறேன் :))

    வஸ் ஸலாம்.

    ReplyDelete
  23. ஆரம்பமே அசத்தல் அக்கா.... தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள் ;)... அப்பா... இத்தனை வலைப்பூக்களாஆஆஆஆஆஆ...... அத்தனை விருதுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. வருக வருக ஜலீலா... நல்வருகை...

    இந்த வாரம் முழுக்க பிடித்த வலைப்பதிவர்கள், நல்ல வலைப்பதிவர்கள் அனைவரையும் அறிமுகம் செய்ய முயலுங்கள்....

    தொடரட்டும் உங்கள் அசத்தல் பணி...

    நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் ஜலீலா எவ்வளவு திறமைகள் உங்களிடம்! வாழ்த்துக்கள்.வலைச்சர ஆசிரிய பணியை மிக திறமையாக செய்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் டா. அனைத்தும் படித்தேன். எப்படித் தொகுத்தாய் என பிரமிப்பு ஏற்படுகிறது.:)

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் டா. அனைத்தும் படித்தேன். எப்படித் தொகுத்தாய் என பிரமிப்பு ஏற்படுகிறது.:)

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் டா. அனைத்தும் படித்தேன். எப்படித் தொகுத்தாய் என பிரமிப்பு ஏற்படுகிறது.:)

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் டா. அனைத்தும் படித்தேன். எப்படித் தொகுத்தாய் என பிரமிப்பு ஏற்படுகிறது.:)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது