07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 25, 2012

தீராத எழுத்துக்கள்

அழியாத கோலங்கள்:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்படும் இந்த வலைப்பதிவில் இதுவரை 'தீராக் காதல்' என்னும் நாவலின் அத்தியாயங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதுவரை வெளிவராதது இந்த நாவல்.

ஒரு த்ரில்லர் கதையை நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்லும் மீசை முனுசாமியின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்துவிடுகிறேன். உண்மையில் மீசை முனுசாமி என்பது புனைப்பெயர். அவர் ஒரு பத்திரிக்கையாளர் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பிற தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்ததில்லை.

விறுவிறுப்பாக ஒரு எழுத்தை கொண்டு செல்வது சாதாரணம். இதை எழுத்தில் தனக்கு இருக்கும் பயிற்சியின் மூலம் எழுத்தாளன் செய்துவிடலாம். ஆனால் கதைகளுக்குள் இருக்கும் தகவல்கள், அனுபவங்கள் போன்றவை அந்த எழுத்தை உயிர்ப்புடையதாக மாற்றுகின்றன. அதை மீசை முனுசாமி சாதாரணமாக செய்கிறார். 

இதுவரை இருபத்தைந்துக்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.  இந்த நாவலைத் தவிர வேறு எதுவும் இல்லாததால் தனியான சுட்டி தேவையில்லை என நினைக்கிறேன். 



நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என ரவுண்டு கட்டி அடிக்கும் அபிலாஷின் நாவல். சமகால இளம் எழுத்தாளர்களில் இவரிடம் இருக்கும் தீவிரத்தன்மை பிரமிப்பூட்டக் கூடியது. அந்த அளவுக்கு தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் எழுதி வருகிறார். 

கிரிக்கெட் குறித்தான விரிவான கட்டுரைகள் தமிழில் அபூர்வம். அந்தக் குறையை அபிலாஷ் நிவர்த்தி செய்கிறார். கிரிக்கெட்டின் நுட்பங்கள், அதில் இருக்கும் அரசியல் என சகலத்தையும் அலசும் கட்டுரைகளை இந்த தளத்தில் வாசிக்கலாம். உதாரணமாக சச்சினும் திராவிடும் - ஒரே படகில் மேதையும் நடைமுறைவாதியும் என்ற கட்டுரை. இது ஒரு சாம்பிள்தான். ஹைக்கூ மொழிபெயர்ப்பும் நிறைய செய்திருக்கிறார் அபிலாஷ்.

இலக்கிய விமர்சனமும் இவரது எழுத்துக்களில் கிடைக்கிறது. பாலியலும் தமிழ்ப்புனைவும் கட்டுரை எனக்கு மிக விருப்பமானது.

அபிலாஷின் ஜப்பானிய ஹைக்கூ மொழிபெயர்ப்பு, கிரிக்கெட் குறித்தான கட்டுரைகள், கால்கள் (நாவல்) ஆகியன நூல்களாக வெளிவந்திருக்கின்றன.


சந்தோஷ் முதன்மையாக ஓவியர். உயிர்மை, காலச்சுவடு போன்ற பதிப்பகங்களில் வெளியான பல புத்தகங்களின் அட்டைப்படங்கள் இவரது கைவண்ணத்தில் வெளியானவை. இப்பொழுது பதிப்பகத்துறையை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு விளம்பர உலகில் படம் காட்டிக் கொண்டிருக்கிறார். இவர் ஓவியம் மட்டும்தான் வரைவார் என நினைத்துக் கொண்டிருந்தால் இவரது வலைப்பதிவு பெரும் அதிர்ச்சி. இன்ப அதிர்ச்சிதான்.

அசால்ட்டான மொழியில் தன் அனுபவங்களை எழுதிவிடுவதில் சந்தோஷ் கில்லாடி. நுட்பமாக கவனித்தால் இந்த எழுத்துக்களுக்குள் சிறுகதைக்குரிய தன்மை ஒளிந்திருக்கும். நகைச்சுவையும் பிரமாதப்படுத்தும். அவ்வப்போது சிக்ஸர் அடித்துவிட்டு காணாமல் போய்விடுகிறார். நின்று அடித்தால் செஞ்சுரியே அடிப்பார். அப்படியொரு தில்லாலங்கடி இந்த சந்தோஷ்.

[சில நல்ல வலைப்பதிவுகளை நான் கவனிக்காமல் விட்டிருக்கலாம். இணைப்பை பின்னூட்டம் வழியாகவோ மின்னஞ்சல் வழியாகவோ (vaamanikandan@gmail.com) அனுப்பி வைத்தால் தன்யனாவேன் :).]

நன்றி.
                             

7 comments:

  1. அழியாத கோலங்கள்,மின்னற்பொழுதே தூரம்,ஊலலல்லா அனைவரும் எனக்கு புதியவர்கள்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஆசியா சொன்னது போல் நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் எனக்கு புதியவர்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்றி அசியா ஒமர், கோமதி அரசு.

    ReplyDelete
  4. மூன்று தளங்களும் புதியவை...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  5. முன்றுமே புதிய அறிமுகங்கள்

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. மிக நன்றி சென்று பார்க்கலாம் நல்வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது