07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 7, 2012

ஆட்டோகிராப் சேரன் துணை

நாட்டியமாடும் அந்த கால்கள்
சட்டென்று என்னை தாக்கும் அவள் விழிகள்
ஒரு வேலை வேறு யாரயாவது பார்கிறாளோ ?
சில நேர புலனாய்வுக்கு பிறகு கன்பார்ம் செய்தேன்
என்னை தான் பார்க்கிறாள் !! (நம்ளையும் ஒரு பிகர் பாக்குதுபா)
தந்தையை அருகில் வைத்துக்கொண்டே !
ரயில் தாமதமாக சோர்ந்து போனவளாய் கண்களால் அவள் வருத்தத்தை தெரிவிக்க, நானும் அமர்ந்து கொண்டே அவளை கண்களால் தேற்றினேன்,
 அவளும் நோக்க, சூர்யாவும் நோக்க அவளின் தந்தை முறைக்க ,
சட்டென்று விலகியவளாய், நான் எங்கே என்று தேட என் அருகில் அமர்ந்திருக்கிறாள் !!
ஒரு காதிலிருந்து மறு காது வரை நான் இளிக்க! மீண்டும் அவள் தந்தை முறைக்க! அப்பொழுது அவளின் மூச்சு காற்று படும் தூரத்தில் நான் இருக்கிறேன், திடீரென்று என்னை நேருக்கு நேர் பார்க்கிறாள் !!
அவள் கண்கள் என்னை ஊடுருவ ஊடுருவ சிலையாகிப்போன நான் அவள் எழுந்து சென்ற பிறகு தான் உணர்ந்தேன் என் கழுத்து ஐந்து பேர் சேர்ந்து அடித்தார் போல் வலிக்கிறதென்று !! (ஆமா ஏன் எழுந்து போனா ? காலைல குளிச்சிட்டு தானே வந்தேன் ? )

அன்று ரயில்வே ஸ்டேஷனில் தொலைத்த அவளை இன்று வரை தேடிகொண்டிருக்கிறேன் !!
பள்ளியில் புஷ்பா என்னை விரட்டிய போதும், கல்லூரியில் ஜானுவை நான் விரட்டியபோதும், இடையில் ஸ்டெபி, ரேகா, ப்ரியா, என லிஸ்ட் போனாலும் இவள் என்னை ஏதோ செய்து விட்டாள். ச்ச மறுபடியும் அவள பாக்கணும் டா சூர்யா.

ஏனென்றால் இவையெல்லாம் என் முதுமையின் தனிமைக்காக நான் சேர்த்துக்கொண்டிருக்கும் பொக்கிஷங்கள். அப்பொழுது எனக்குள் நானே சொல்லிகொள்வேன் அன்னைக்கு அவள் கிட்ட பேசி இருக்கலாம் டா ..

இப்பலாம் வெறும் லவ் பாட்டா கேக்க புடிக்குது,
புல் அடிச்சும் போதையில்லை, புல்லட் பீர் அடிச்சும் கிக்கில்லை,
கல்லு குடிச்சும் தூக்கமில்லை, கண்ண மூடுனா கனவுல நீதானே !!

அப்படியே லவ் மூட்லையே ப்ளாக் படிக்க போனா எனக்கு ஒரே ஆச்சர்யம் !

உள்நெஞ்சின் உரசல்

சிறகடிக்கிறேன்


நீ என்






அதை மட்டும் திருப்பிக்கொடு..

காலங்கள் மீது பயணிக்கும் காதல்

நிச்சயம் இதுவொரு பிரிவுக்கவிதை

உன்னுருவில் வாழ்ந்திருப்பேன் !


யம்மாடியோவ் எத்துனை எத்துனை காதல் ! இன்னும் படித்து கொண்டே இருக்கிறேன் ! இவர்களெல்லாம் காதலை காதலிப்பவர்கள்!!!
 ஒன்று மட்டும் நிச்சயம் நாம் மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் நாள் தொலைவில் இல்லை !!

இறுதியாக உறுதியாக

"I am still an Eligible Bachelor" விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ,,,


இன்றைய அவார்ட் :

இந்த பகுதியில் எனக்கு  பதிவுலகில் கிடைத்த சொந்தங்கள், நட்புக்கள்,பிடித்தவர்கள் இன்னும் பல .


தேவா அண்ணா ,,, இவர் நவீன உலகின் போர் வீரர் ! இவர் எனக்கும் ஒரு படி மேல, இவரின் சுவாசமே காதலாகி விட்டது !!!




19 comments:

  1. பல தளங்கள் புதியவை...

    அனைத்து தளங்களும் ரசிக்கும் படி சிறப்பாக இருந்தன...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இங்கு என் தளமும் இடம்பெற்றமைக்கு நன்றி.
    அந்தப் பதிவில் இடம்பெற்றிருக்கும் கவிதை “படித்ததில் பாதித்தது“ என்ற தலைப்பில் எழுதியிருப்பேன்.
    பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  3. தகவல் கொடுத்த நண்பர் (திண்டுக்கல்) தனபாலனுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நீரு.

    "லவ் பாட்டா கேட்க புடிக்குது"
    லவ்வர் நெஞ்சின் உரசல் கேட்குது...
    இது மனசு ..
    இங்கே வலிக்குது . அங்கே வலிக்குது.
    இத்யம் என்னவோ சிறகடிக்குது.

    //அன்று ரயில்வே ஸ்டேஷனில் தொலைத்த அவளை இன்று வரை தேடிகொண்டிருக்கிறேன் !!
    மறுபடியும் அவள பாக்கணும் டா சூர்யா.//

    இப்ப இந்த ஸ்டேஜுக்கு வந்துட்டீகளோ !! பயமா கீதே சூரிய ப்ரகாசு ஸாரே !!

    வாடிப்போய் அவளை நாடிப்போய்
    ஆடிப்போய் பாடிப்போய்
    தேடிப்போய்க்கொண்டிருப்பது
    நீங்கதானோ சூர்ய பிரகாசு ஸாரே !!
    ஓடிப்போய் இங்க  க்ளிக் பண்ணிப்பாருங்க...

    அது இல்லேன்னா இத கட் பண்ணி பேஸ்ட் பண்ணுங்க...
    http://youtu.be/yKfwk8Atd1k

    அப்பன்னாச்சும் கிடைக்கறாகளா பாருங்க...
    ஆல் த பெஸ்ட்.

    //"I am still an Eligible Bachelor" விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ,,,//

    இன் வாட் ? ஆர்ட்ஸா சயின்ஸா எஞ்சினீரிங்கா இல்ல மெடிசினா ?
    இந்தியாவா அமெரிக்காவா ?


    சுப்பு தாத்தா.






    ReplyDelete
  5. http://www.youtube.com/watch?v=yKfwk8Atd1k&list=LLw4TCj3_an8TqdGY6TNaixA&feature=mh_lolz

    Is this One?
    subbu thatha.

    ReplyDelete
  6. @திண்டுக்கல் தனபாலன்,இந்திரா,
    நன்றி :)

    @ சுப்பு தத்தா ,

    திரிஷா இல்லைனா திவ்யா :),,

    இந்தியா தான், இன்ஜினியரிங் தான் :) :)

    ReplyDelete
  7. சூர்யா பிரகாஷ் நன்றி...என்னோட காதல் கவிதையை வைத்து என்னை அடையாளப்படுத்தியதற்கு...
    திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி இந்த பதிவை கைக்காட்டியதற்கு...

    ReplyDelete
  8. //
    ஆமா ஏன் எழுந்து போனா ? காலைல குளிச்சிட்டு தானே வந்தேன்?
    //

    உங்க ஞாபகத்துல வருவது நேத்து குளிச்சதா இருக்கும் ஹி ஹி ஹி!!!

    BTW, keep rocking brother! :)

    ReplyDelete
  9. சிறப்பான அறிமுகங்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    காசியும் ராமேஸ்வரமும்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_7.html
    உலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_4275.html

    ReplyDelete
  10. என் கவிதையை இங்கு பதிவு செய்து என் தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் பல!
    என்னை இங்கு வழிகாட்டிய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி! இங்கு அருமையான கவிதைகள் படித்தேன்.

    ReplyDelete
  11. காதல் பதிவுகளை படிக்கும் மூடில் இப்போது இல்லை! ;) ஆனாலும் நல்ல தொகுப்பு, வாழ்த்துக்கள்! :)

    வலைச்சரத்தில் நான் 1000-வது Follower! :) வலைச்சரக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  12. @Bladepedia

    இப்ப நான் Unfollow செய்து மீண்டும் follow செய்துள்ளேன். So, நான் தான் 1000-வது Follower! :)

    ReplyDelete
  13. ஆஹா... தம்பிக்கு ஏதோ ஆயிடுச்சு போல... முதுமை வரை காதலிச்சுட்டே இருப்பீங்க போல...

    அறிமுகங்களுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  14. @ Karthik Somalinga

    @ Abdul Basith


    நான் மட்டும் சும்மா இருப்பேன்னு நினைச்சீங்களா? விடமாட்டேன்! :) :)

    ReplyDelete
  15. பதிவர்களை உற்சாகப்படுத்தி பதிவர்களின் நெஞ்சில் உற்சாக விதையை விதைக்கும் வலைச்சரத்தின் சீரிய பணி தொடரட்டும்!

    வலைச்சர குழுவிற்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  16. @Abdul:
    இது தகிடு தத்த வேலை, ஒத்துக்கொள்ள முடியாது! :) அப்படியே பார்த்தாலும் நான்தான் முதலாவது ஆயிரம் - நீங்க இரண்டாயிரம்! :D

    ReplyDelete
  17. @History Master:
    நீங்க மூணாவது ஆயிரம்! ;)

    ReplyDelete
  18. இப்போதான் தம்பி பார்த்தேன்..

    அவார் எல்லாம் கொடுத்து அசத்தி இருக்க... மிக்க நன்றி....!

    ReplyDelete
  19. அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

    தொடரட்டும் உங்கள் பயணம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது