07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 29, 2014

நகைச்சுவை எனும் அரசன்

பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்துஎடுத்துப் போகிறதே பார்! ..
‍ - கவி காளமேகம்
(தில்லைக் கூத்தரசர் திருவிழாவைப் பார்த்து இகழ்வதுபோல் புகழ்ந்து பாடியது)

சிவன் கோவில் மடப்பள்ளியில் பணி.  மடப்பள்ளியில் தினம் நெய்தோசையும், பொங்கலுமாக உண்டு, ஒருநாள் வாய் திறந்து உறங்கிக் கொண்டிருக்கையில், தேவி வந்து காளமேகத்தின் நாவில் எழுதி, நீ பெரிய புலவனாவாய் என்றராம்.  இவ்வாறு வாரியார் அவர்கள், கவி காளமேகம் பற்றி நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் தனது ஒரு உரையில்!


நகைச்சுவை அரசன், '23ம் புலிகேசில வர்ற ராஜா?' மாதிரியா என்று கேட்டீர்கள் என்றால், இருக்கலாம்.  தவறில்லை. ஆனால், நாடே சிரிப்பா சிரிச்சுப் போயிடும் :)

'வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்' என்பது நாம் நன்கு அறிந்த பழமொழி.  சிரிப்பதற்கு, தற்போதைய அவசர யுகத்தில் இடம் இருக்கிறதா ?  நகைச்சுவை என்பது எந்த நிலையில் இருக்கிறது?  முதலில் நமக்கு எங்கே நேரம்?  காலையில் எழுந்ததில் இருந்து ஓடு ஓடு ஓடு என்றிருக்க உட்கார்ந்து யோசிக்க, சிரிக்க எல்லாம் எங்கே நேரம்?  இப்படினு நாம நிறைய பேர் இருக்க, நகைச்சுவையாளர்கள் இல்லாமலில்லை இன்றும்.  ஒரு குழுவிலோ, திருமண நிகழ்விலோ, திருவிழாவிலோ கூடினால், ஒவ்வொரு குழுமத்திற்கு ஒன்றிரண்டு நகைச்சுவையாளர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

நம்மில் வெகு சிலருக்கு நகைச்சுவை இயல்பாகவே வரும்.  சிலருக்கு, பயிற்சியின் மூலம் கைவரப் பெறும்.  பலருக்கு, சுட்டுப் போட்டாலும் வராது.  நானெல்லாம் கடைசி ரகம்.  பள்ளி காலங்களில் 'வெண்மதி' கண்ணன், கல்லூரி காலங்களில் 'டொம்பா' கண்ணன், வேலையிடத்தில் 'பான்ட்' ரமேஷ், 'கலக்கல்' ஜெய் என்று வெகு சிலர்.  இன்றும் நகைச்சுவை எனும் போது இவர்களை நினைக்காமல் நான் இருந்ததில்லை.

துளசி தளம்: நகைச்சுவை சிலருக்கு சரளமா வரும் என்றேனல்லவா. அதில் முக்கியமாக நம் நினைவிற்கு வருபவர், மூத்த பதிவர் (வயசுல அல்ல, எழுத்துல! அப்புறம் அங்குசத்தத் தூக்கிட்டு அடிக்கவந்துறப் போறாங்க‌!) துளசி டீச்சர்.  அன்றைக்கு எப்படி துள்ளலா நகைச்சுவையோடு எழுதினாரோ இன்றும் அப்படியே.  இவர் பற்றி அறிமுகம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  அவருடைய நகைச்சுவை உணர்விர்க்காக மீண்டும் இங்கே!  ஒரு பதிவு என்றெல்லாம் சொல்லி இவரை நிறுத்த முடியாது. அதனால் அவர்கள‌து தளத்திற்கே சுட்டி.

The Think Tank: ஃப்லோல அடுத்து நம்ம டுப்புக்கு அவர்கள்.  இவரையும் அறியாதார் யாரும் இருக்க முடியாது.  என்னே இவரது நகையுணர்வு எழுத்து நடை!

இட்லி வடை: அடுத்து வருவது இட்லிவடை.  பதிவுகளில் கொஞ்சம் நகைச்சுவை, ஆனால் ப்ரொஃபைல் பார்த்தால், படித்தால் சிரித்துக்கொண்டே இருக்கலாம்

தானைத் தலைவி அவர்கள்.  புரட்சித் தலைவி இல்ல போல :)  அருமையாக வீட்டு உறவுகளுக்குள் நடக்கும் நையாண்டிகளை அழகாக எழுத்தில் கொண்டுவருகிறார்.

மீனாவுடன் மிக்சர்: ‍ ரிச்மண்டில் இருந்து மீனா சங்கரன்.  தொலைந்த சென்னையாக இருக்கட்டும், பக்கத்து வீட்டு மாமி ஆகட்டும், அரை நிஜாரில் ஓடும் ஆங்கிலேயர்களாக இருக்கட்டும், வெள்ளிக்கிழமை ஏன்டா வருகிறது என்று புலம்புவதாகட்டும், இவருக்கு வரும் இயல்பான நகைச்சுவை அபாரம்!  இவர் எழுதி நாளாச்சு, இந்தப் பதிவின் மூலமா அவர் எழுத்தைத் தொடர அழைக்கிறேன்.

பாத்ரூம் பாடகரும் எனது காலையும் - வெங்கட் நாகராஜ் அவர்களின் பதிவு.  சேவலுக்கு பதில் இவரது ஆல்ட்டர்னட் அலார்ம் என்னவென்று பாருங்கள்.

இந்தப் பதிவிற்காக நகைச்சுவைப் பதிவுகளைத் தேடு தேடு என்று தேடியதில், மிகச் சிலவே கிடைக்கின்றன.  பலர் நகைச்சுவை என்று எழுதினாலும், புத்தகத்தில் இருந்தோ, முகநூலில் இருந்தோ, வாட்ஸாப்பில் இருந்தோ எடுத்து ஜோக்ஸ் ஆகப் பதிந்திருக்கிறார்கள்.  அவற்றைத் தவிர்த்து, கிடைத்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன் இன்று.  நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்!15 comments:

 1. சிறப்பான நகைசுவைத் தளங்களின் அணிவகுப்பு..பாராட்டுக்கள்.1

  ReplyDelete
 2. மருந்து இன்றி இருக்க...
  நகைச்சுவைத்தளம் பகிர்வு
  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  நன்றி
  வாழ்க வளர்க
  உமையாள் காயத்ரி.

  ReplyDelete
 3. அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த காலத்தில் நகைச்சுவை எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. சென்ற மாதம் என் கல்லூரி தோழன் அருமை நண்பன் "கோயில் பிள்ளையை" நீ கண்டிப்பாக பதிவுலகத்திற்கு வரவேண்டும் என்று சொல்லி அழைத்து வந்தேன். இது வரை ஒரு 10 பதிவு இட்டுள்ளார். அதில் ஒரு பதிவான " ஹாஸ்டலில் ஒரு ஹமானுஷ்யம்" என்ற நகைசுவ்வை பதிவை மீண்டும் மீண்டும் படித்து ரசித்து சிரித்தேன். நீங்களும் படித்து பாருங்களேன்.

  http://koilpillaiyin.blogspot.com/2014/10/blog-post_24.html

  ReplyDelete
 4. நகைச்சுவைத் தளங்களின் தொகுப்பு அருமை...
  மனமார்ந்த பாராட்டுக்கள்!..

  ReplyDelete
 5. போய் பார்க்கிறேன் , படிக்கிறேன்...

  ReplyDelete
 6. நன்றி இராஜராஜேஸ்வரி, உமையாள் காயத்ரி, விசுAWESOME, துரை செல்வராஜூ, சமுத்ரா

  விசுAWESOME,
  எனது நையாண்டி நண்பர்களின் நிலையும் அதுவே. அவங்கள ஒரு கட்டுக்குள் நிறுத்த முடியாது, அதனால் எப்பக் கூப்பிட்டாலும், எழுத்தா ... ஐயே என்று எவருடனாவது அரட்டைக் கச்சேரிக்கு சென்றுவிடுவார்க்ள். உங்கள் நண்பர் ஒருவராவது எழுதவந்தது குறித்து மெத்த மகிழ்ச்சி. சுட்டியை பார்க்கிறேன், படிக்கிறேன், ரசிக்கிறேன்.

  சமுத்ரா
  படித்தேன், ரசித்தேன் என்று சொல்லுவதற்கு காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 7. சிறப்பான தள அறிமுகங்கள்! சில தளங்களுக்குச் சென்றதில்லை! சென்று படிக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. புதிய அறிமுகங்கள் இனித்தொடர்கின்றேன் . பணி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. என்னையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சதங்கா....

  ReplyDelete
 11. சில நகைச்சுவைப் பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 12. நன்றி ‘தளிர்’ சுரேஷ், தனிமரம், வெங்கட் நாகராஜ், முஹம்மது நிஜாமுத்தீன்!!!

  ReplyDelete
 13. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. சிறந்த அறிமுகங்கள்
  தொடருங்கள்

  ReplyDelete
 15. நன்றி குமார், Yarlpavanan Kasirajalingam!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது