07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 16, 2014

சப்பாணிப் பருவம்!!!
" வரவு எட்டணா
செலவு பத்தணா ........"
கவியரசரின் காவியமான வரிகள். வரவுக்கு மிஞ்சிய செலவு தான் நம்மில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் நிதர்சனம். ஆயினும் அந்த செலவையும் தாண்டி நமக்கான வருமானத்தில் இருந்து ஓரணா காசாவது எடுத்து நாளைக்கு வேண்டுமென்று சேர்த்துவைத்தல் அவசியமென்று சிறுவயதில் இருந்து நமது மூளைக்குள் திணிக்கப்பட்ட தாய்வழிச் சொத்து.
" சிறுதுளி பெருவெள்ளம்"
"சிறுதுரும்பும் பல்குத்த உதவும்.."
இப்படியாகச் சில பல பழமொழிகளைச் சொல்லி நம்மில் ஆழமாக சிறுசேமிப்பு எனும் ஆணிவேரை பதித்து விடுகின்றனர்.
மேலும்...
"கையில வாங்கினேன்
பையில போடல
காசு போன இடம் தெரியல ...." எனவும்... பாடல்களால் நம்மில் பணத்தின் குணத்தையும் அவற்றைக் கட்டுபடுத்தும் சாமர்த்தியத்தையும் வளர்த்து வைத்திருக்கின்றனர் முன்னோர்.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் ஒரு பாடலில் " திருப்பதி உண்டியலில் சேர்ந்து போனாயோ திருவண்ணாமலை குகை புகுந்தாயோ.." எனப் பணத்தை தேடி கடைசியில் பணமே பணமே பணமே என்று புலம்புவார்... உற்றுக் கவனித்தால் அங்கே பணமென்பது சிறகு முளைத்த பறவை விட்டால் பறந்துவிடும். சிறகு முளைத்தபின்னும் பறக்கவிடாது கூண்டிலே அடைத்து வைத்திருத்தல் மிகுந்த சாமர்த்தியம் எனப் புரிகிறது.

பொருளாதாரத்தின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்தால் ஒன்று கிடைக்கும் வருமானத்தில் சிறுபகுதியைக் கூட செலவு செய்வதில் விருப்பம் இல்லாதவர்கள் இவர்களைப் பொதுவாக நாம் கஞ்சன் என்று அழைக்கின்றோம். இரண்டாவது குடும்பத்தை சிக்கனமாக நடத்தி சேமித்து வைப்பவராக இருப்பார். மூன்றாமவர் நல்ல செலவாளியாக இருப்பார் இவர்களை நாம்  ஊதாரி என்று பெயரிட்டு அழைக்கின்றோம். இதில் நாம் எந்த பிரிவினர் என்பதை நாமே உணர்ந்து சரியான பாதையில் செல்தல் அவசியம்.
சிறுகச் சிறுகச்
சேர்த்து வைத்த - சிறுசேமிப்பு
குறுகக் குறுக
உன்னை வளர்த்து - நாளை
குறுநில மன்னனாக்கும்!!

கடந்த 2008 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிவைத்தது ஒரு வகையான பொருளாதாரச் சரிவு. பங்கு வர்த்தகங்கள் அடியோடு மாறிப்போயின. சில நாடுகள் அடுத்த அடி எங்கு வைப்பது என்றுகூட தெரியாமல் திக்குமுக்காடிப் போயின. ஆனால் அந்த நிலையிலும் நம் இந்தியத் திருநாடு நிலைத்து நின்றதற்கு காரணம் தெரியுமா?? நம் மக்களின் சேமிப்பு பழக்கமே அது. எந்த நாட்டிலும் இல்லாத வகையில் நம் மக்களால் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்ட பணம் தான் அந்த சரிவில் இருந்து நம் திருநாட்டை காத்தது.

சேர்த்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னகண்ணு
அவங்க ஆற நூறா ஆக்குவாங்க செல்லகண்ணு...

==================================================================


சப்பாணிப் பருவம், இன்றைய வலைச்சர பிள்ளைத்தமிழ்ப் பருவம் சப்பாணிப் பருவம் ஆகும். குழந்தை இரு கைகள் கொட்டி சிரித்து கைகள் நீட்டி அழைத்து கொண்டாடி மகிழ்வதே சப்பாணிப் பருவம் ஆகும். "சப்" என்ற ஓசையுடன் "பாணி"-கைகள் கொட்டி சிரிப்பது சப்பாணிப் பருவம்.  அப்படி ஒரு அழகான பருவத்தில் இருந்துகொண்டு சிறுசேமிப்பு பற்றி பதிவுகள் புனைந்திருக்கும் பதிவர்கள் பற்றிக் காண்போம்.

===============================================================


தகவல்களைத் தேடித்தேடி அலைந்து அவற்றைத் தொகுத்து நம் கண் முன் பதிவுகளாய்த் தரும் தமிழ்க்காரன் இவர். இதோ சிறுசேமிப்புக்கான 100 எளிய வழிகளை நமக்காகத் தருகிறார். இவற்றில் சிலவற்றைக் கடைபிடித்தாலே சிறுசேமிப்பு பெருகும்.

எங்கெங்கு தேடினாயோ
ஏற்றுமானூர் மன்னவனே!
எமக்காக தந்தனையோ
எளிய பல வழிகளையே
சிலவற்றை கைகொண்டாலே
சிறுசேமிப்பு பெருகுமைய்யா!!!


=========================================================


வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை என்று முழங்கிக்கொண்டே நண்பர் சக்திசுமி தனது அடேங்கப்பா வலைத்தளத்தில். சிறுசேமிப்பில் திட்டமிட்டு வெற்றிபெறுதல் அவசியம்  என்கிறார், மிகநீண்ட கட்டுரை. அவசியம் நாம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். படிப்போம் பயன்பெறுவோம்.

சக்கர வியூகம்
உடைக்கத் தெரிந்தவன்
உடைத்தான்!
வெளியே வர இயலவில்லை
போதாத திட்டமிடல்!
மாண்டான் அபிமன்யூ!
திட்டமிடல் அவசியமய்யா
திட்டமிட்டால்
திக்கெட்டும் நம் வசமே!!=====================================================
என் மனதில் எழும் உணர்வலைகளை மடலாக எழுதுகிறேன் என்று விளம்பும் சகோதரி பவியின் தளம். சிறுசேமிப்பும் சிக்கனமும் இரண்டறக் கலத்தல் அவசியம் என்கிறார். சிக்கனம் மூலம் செய்யப்படும் சிறுசேமிப்பு நம்மை மலையேற்றி வாழவைக்கும் என்கிறார்.

ஒட்டிப்பிறந்த இரட்டையென
ஓங்கிச் சொல் பெண்ணே!
ஒன்றும் ஒன்றும் இணைந்துவிட்டால்
ஓராயிரம் யானை பலம்....


==============================================================

நண்பர் ஸ்ரீகிருஷ்ணன் தனது ஜோதிட சுடரொளி தளத்தில் எது மாதிரியும் இல்லாது புது மாதிரியாக சிந்தித்து பதிவியற்றி இருக்கிறார். நம் நாட்டில் சிறுசேமிப்பு அக்கறை ஓரளவுக்கு எல்லோருடைய வீட்டிலும் இருக்கிறது என்றே சொல்லலாம், ஆனால் அதிக சிரத்தையுடன் சிறுசேமிப்பில் ஈடுபடுவோர் சரிவர விசாரிக்காமல் சிலபல தனியார் நிறுவனங்களில் பணத்தை போட்டுவிட்டு ஏமாற்றப்படுகிறார்கள். அகலக்கால் வைத்தாலும் பார்த்து வைக்கவேண்டும் என்கிறார்.

ஆழமாக யோசித்து
அரையடி வைத்தாலும்
அரைக்காசு பிரயோசனம்!
நீளமாக யோசித்து
அகலக்கால் வைக்காதே
இருக்கும் காலும் நொடிபடுமே
இதை நீயும் மறக்காதே!!


===============================================================
அட.. சேமிப்பு என்றதுமே மலைக்காதீங்க. சேமிப்பு சின்ன விஷயம் தான் எனச் சொல்லி பதிவு ஏற்றியிருக்கிறார் தங்கை அனன்யா. இயக்குனர் சங்கர் அந்நியன் திரைப்படத்தில் போட்ட கணக்கு போல ஒரு கணக்கு போடுகிறார். அட... இதுவும் சரிதானோ என்று தோன்றுகிறது.

ஊத்துபட்டி போகப்போறேன்
உண்டியலு வாங்கப்போறேன்!
செலவுகளில் தொங்கிநிற்கும்
உதிரியான காசையெல்லாம்
உண்டியலில் போடப்போறேன் - நானும்
கோடீஸ்வரி ஆகப்போறேன்!!


==============================================================


இந்தச் செய்தியைப் பார்த்ததும் மனசுக்கு இனிமையாக இருக்கிறது. சிறுசேமிப்பு எனும் பழக்கம் பள்ளிப் பருவத்தில் இருந்து தோன்றவேண்டும் என்ற என் எண்ணத்தை அப்படியே பிரதிபலித்துவிட்டது இந்தச்  செய்தி.ஒரு கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தில் உறைந்திருக்கிறார்கள். ஆசிரியர்களின் உதவியுடன். போற்றத்தகுந்த செயல்.

ஆஹா!! ஆசிரியரே
உமது தாழ் பணிகின்றேன்!
உம்மால் தானன்றோ
இச்செயல் சாத்தியமாயிற்று
உம்மைப்போல் வேண்டுமய்யா
உலகெங்கும் ஆசிரியர்கள் ......


==========================================================

சிக்கனம் வீட்டைக் காக்கும், சிறுசேமிப்பு நாட்டைக்காக்கும் எனும் பழமொழி பலமுறை உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. உறுதியாக நெஞ்சினில் உரமேற்போம். சிக்கனத்துடன் சிறுசேமிப்பை உலகெங்கும் விதைத்து வைப்போம்.


மாடக்குள சந்தையில
மஞ்ச கிழங்கு வாங்கப்போனேன்!
மஞ்சளு இல்லேனுட்டான் - என்ன செய்வேன்
மக்கா நாளு வரச்சொன்னான் - போகணுமே!!
வன்கேட்ட முன்பணத்துக்கு
முட்டாப்பய எங்கபோவேன்
கைல காசு வாய்ல தோசை - என்றானே
நானும் கையாளா ஆகாமத்தான் நின்றேனே!!
கையில காசுமில்ல
கால்வயித்துக்கு சோறுமில்ல
கண்ணம்மா என் கிளியே - நில்லம்மா
என்னிலைக்கு வழியை கொஞ்சம் சொல்லம்மா!!
ப்பனாத்தா பேச்சைக்கேட்டு
சிக்கனமா இருந்திருந்தா
சிக்கலொன்னு வந்திருக்குமா - சொல்லய்யா
சிக்கனம் தான் நல்லதின்னு இப்போ சொல்லய்யா!!

சேமிச்ச காசையெல்லாம்
பக்குவமா வைக்காம
ஊதாரியா விதைச்சிபுட்டா - செல்லப்பா
ஊரிங்கு மதிக்காதய்யா கண்ணப்பா!!
ல்லாவே புரிந்ததடி
நாலுமிங்கு தெரிந்ததடி
நாளைமுதல் தொடங்கப்போறேன் - பக்குவமா
சேமிப்பை தொடங்கபோறேன் சிக்கனமா..............
(வெளிநாடு வாழ் இந்தியன் என்கிற வகையில் இங்கே ஒரு செய்தியைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். தங்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளில் பணிபுரியும் ஏனைய நாட்டோர்கள் மத்தியில், தாங்கள் சம்பாதித்த பணத்தை 99% தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பும் முதல் வரிசையில் முதல் ஆளாகா நிற்கிறார்கள் இந்தியர்கள். பெருமைகொள்ளவேண்டிய செய்தி.)
அன்பன்
மகேந்திரன்

30 comments:

 1. Replies
  1. இனிய வணக்கம் நண்பர் கில்லர்ஜீ...
   தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
   நெஞ்சார்ந்த நன்றிகள்.

   Delete
 2. நாளொரு மேனியும் பொழுதோருவன்ணமுமாய் வளர்ந்த குழந்தை சேமிப்பின் மலர்ச்சியில் பிரகாசிக்கிறது..

  பாராட்டுக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. இனிய வணக்கம் சகோதரி இராஜராஜேஸ்வரி...
   தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
   நெஞ்சார்ந்த நன்றிகள்.

   Delete
 3. தங்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளில் பணிபுரியும் ஏனைய நாட்டோர்கள் மத்தியில், தாங்கள் சம்பாதித்த பணத்தை 99% தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பும் முதல் வரிசையில் முதல் ஆளாகா நிற்கிறார்கள் இந்தியர்கள். பெருமைகொள்ளவேண்டிய செய்தி..

  ஆனால் தாய்நாட்டில் சுரண்டிய பணத்தை நாடுகடத்தி - ஸ்விஸ்பாங்கில் போட்டு-இந்தியாவை வளருநாடாகாவே வைத்திருக்கும் பெருமையை என்ன சொல்வது??!!

  ReplyDelete
  Replies
  1. இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் சகோதரி...
   நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே...ஒருபக்கம் மக்கள்
   வரிகளை சரியாகக் கட்டி நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்க உதவ...
   மறுபுறம் இப்படிப்பட்ட புல்லுருவிகள் நாட்டை படுபாதாளத்தில் தள்ளிக்கொண்டு
   இருப்பது உண்மையே...
   ஆயினும் அதையும் தாண்டி நம் மக்களின் குடும்ப உணர்வு..சேமிப்புத் திறன்
   அன்னியச் செலாவணி ஆகியவை நம் நாட்டை ஸ்திரப்படுத்தி வைத்திருக்கிறது
   என்பது மறுக்கமுடியாத உண்மை.
   ஆழமான ஒரு கேள்விக்கணை விடுத்த உங்களுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றிகள்.

   Delete
 4. அருமையான யோசனை..பயனுள்ள பதிவுகளால் நிறைகிறது வலைச்சரம்..வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. இனிய வணக்கம் சகோதரி கீதா..
   தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
   நெஞ்சார்ந்த நன்றிகள்.

   Delete
 5. சிறுசேமிப்பை பற்றி அருமையாக தொகுத்து வழங்கியதற்கு வாழ்த்துக்கள்.
  அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  எல்லா வலைத்தளங்களையும் சென்று பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இனிய வணக்கம் நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்..
   தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
   நெஞ்சார்ந்த நன்றிகள்.

   Delete
 6. வித்தியாசமான பகிர்வு சேமிப்புப்பற்றிய பல புதிய தளங்கள் அறிமுகம் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

  ReplyDelete
  Replies
  1. இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
   தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
   நெஞ்சார்ந்த நன்றிகள்.

   Delete
 7. வணக்கம்
  அண்ணா.

  வித்தியாசமான பகிர்வு... அனைவரும்அறிய வேண்டிய விடயங்கள் பல உள்ளது.... அறிமுகமாகிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. இனிய வணக்கம் தம்பி ரூபன்....
   தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
   நெஞ்சார்ந்த நன்றிகள்.

   Delete
 8. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரர் நேசன்...

   Delete
 9. இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. இனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள் ..
   தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
   நெஞ்சார்ந்த நன்றிகள்.

   Delete
 10. அனைவரும் நான் அறியாத பதிவர்கள்! வாழ்த்துக்கள்! சென்று பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. இனிய வணக்கம் நண்பர் சுரேஷ்..
   தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
   நெஞ்சார்ந்த நன்றிகள்.

   Delete
 11. அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. இனிய வணக்கம் துரை செல்வராஜூ ஐயா...
   தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
   நெஞ்சார்ந்த நன்றிகள்.

   Delete
 12. சேமிப்பை முக்கியத்துவப் படுத்தும் பதிவுகள் .
  புதியவை.
  தொகுப்புக்கு நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. இனிய வணக்கம் நண்பர் நிஜாமுதீன்..
   தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
   நெஞ்சார்ந்த நன்றிகள்.

   Delete
 13. வணக்கம் சகோதரரே!

  சீர்பெருக வாழ்விலே சேமிப்பும் செய்கவெனப்
  பார்மகிழ இட்டீர் பதிவு!


  அருமையான பதிவும் பதிவர்கள் அறிமுகம் இன்று!
  மிகச் சிறப்பு!

  அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. சிறுசேமிப்பு பற்றி பதிவுகள் புனைந்திருக்கும் பதிவர்களை இனம் கண்டு கொண்டோம். மனம் நினைந்து நினைந்து பாரட்டுகிறோம். வாழ்த்துக்கள்.

  வெளிநாடு வாழ் இந்தியன் என்கிற வகையில் இங்கே ஒரு செய்தியைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்
  .தங்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளில் பணிபுரியும் ஏனைய நாட்டோர்கள் மத்தியில், தாங்கள் சம்பாதித்த பணத்தை 99% தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பும் முதல் வரிசையில் முதல் ஆளாகா நிற்கிறார்கள் இந்தியர்கள் இது மிகவும் வரவேற்புக்குரிய ஒன்றுதான்
  ஆனால் இதில் 85 சதவீதம் சுய நலம் சார்ந்ததாகவே எனக்கு படுகிறது. நான் இதை ஒரு அனுபவப்பூர்வமாகவே சொல்கிறேன். வருத்தம் வேண்டாம்(சொத்து சேர்க்கும் ஆசை யாரை விட்டது?)
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
 15. பயனுள்ள தகவல்கள்......

  குழந்தைகள் அனைவருமே அழகு!

  ReplyDelete
 16. மிக்க நல்ல பகிர்வு,வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 17. சிறந்த அறிமுகங்கள்
  தொடருங்கள்

  ReplyDelete
 18. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது