07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 26, 2014

ஒரு வானவில் போல...

நேற்றைய பகிர்வான ‘உன் சமையல் அறையில்’ என்ற பகிர்வுக்கு தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி
--------------------
ன்றைய பகிர்வாக நாம் பார்க்க இருப்பது உலக வலைப்பூ நண்பர்கள் அனைவரும் அறிந்த முகங்கள் பற்றித்தான் என்பதை தலைப்பே சொல்லும் . இந்த அறிந்த முகங்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இருப்பினும் நான் விரும்பி வாசிக்கும் சிறப்பான பகிர்வர்களுக்காக ஒரு பகிர்வு போட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இப்பகிர்வு. இதில் எல்லோரையும் குறிப்பிடமுடியாது என்பது தெரியும். அதனால் சிலரைப் பற்ரி இங்கு பார்ப்போம். அதற்கு முன்னர் கொஞ்சம் பேசிக்கலாம்.

நம்ம நாட்டைப் பொறுத்தவரை நாலு பேருக்கு நல்லது செய்யிறவனை நாலு ஊருக்குத்தான் தெரியும். நடிகனையும் அரசியல்வாதியையும் நாய்க்கும் தெரியும் என்று எனது நண்பன் சொல்லுவான். ஆம்... அது உண்மைதான் என்ற போதிலும் தமிழ் எண்ணும் உயிர் இன்று முகம் பார்த்து அறியாவிட்டாலும் உலகமெங்கும் நட்பைக் கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட பிரபல முகம் கிடைக்க காரணமாய் இருந்தது... இருப்பது ஒன்றே ஒன்றுதான்... அதுதான் வலைப்பூ.

கல்லூரியில் படிக்கும் போதும் தேவகோட்டையில் கணிப்பொறி மையம் நடத்திய போதும் அம்மாவை சைக்கிள் கூட்டிக் கொண்டு கடைக்குப் போகும் போது எதிர்படுபவர்களில் பலர் கையைக் காண்பித்துச் செல்வார்கள். அதையெல்லாம் கவனித்துக் கொண்டே வரும் அம்மா, வீட்டிற்கு வந்ததும் தம்பி சம்பாரிச்சி சொத்துச் சேர்த்து வச்சிருக்கோ இல்லையோ ஆனா ஆளுகளை நல்லாப் பழகி வச்சிருக்குன்னு சொல்லுவாங்க. உண்மைதான் இன்றும் தேவகோட்டையில் எனக்கு ஒரு உதவி என்றால் உறவுகளைவிட நட்புக்களே முன் நிற்பார்கள். இப்பவும் காசு பணம் இருக்கோ இல்லையோ வலைப்பூ மூலமாக உலகளாவிய உறவுகளாய்... ஐயா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, தோழன், தோழி என எத்தனை எத்தனையோ அன்பு உள்ளங்களை இறைவன் எனக்களித்து இருக்கிறான். அப்படி எனக்குக் கிடைத்த உறவுகளில் சிலரைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். இது முழுக்க முழுக்க எனது உறவு வட்டம்தான். இன்றைய பதிவில் புதியவர்கள் இல்லை... ஆனால் பல புதியவர்கள் அறிய வேண்டியவர்கள் இருக்கிறார்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக்கொள், இதுவும் கடந்து போகும் என்று சொல்லி தனது பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கும் உலகளாவிய சூப்பர் ஸ்டார் அண்ணன் திண்டுக்கல் தனபாலன், செல்லமாக DD, நிறைய விஷயங்களை நிறைவாய்ப் பகிர்வார். இப்போ வலைப்பதிவர் மாநாட்டு வேலைகளில் ரொம்ப பிஸி என்பதால் வலைப்பக்கம் வருவதில்லை. இவரின் எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள் என்ற பகிர்வில்...
“இந்தப் பாடல்களை சில பேர் கேட்டு இருப்பீர்கள்... சில நண்பர்கள் கேட்கவில்லை, பிளேயர் தெரியவில்லை. லோட் ஆக நேரம் ஆகிறது. பாடலின் திரைப்படம் தெரியவில்லை. அதனால் பணத்தைப் பற்றி எழுதிய மாயா... மாயா... எல்லாம் சாயா... சாயா... பதிவைப் போல் வரிகளாக எழுதுங்கள் என்று சொன்னதால் இதோ உங்களுக்காக...”


ந்த உலகம் உங்களைப் புரிந்து கொள்ளவில்லையென்றால்... நான் ஆச்சர்யப்படமாட்டேன், இந்த உலகத்தை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டால்... ஆச்சர்யம் மட்டுமல்ல... வருத்தமும் அடையேன் என்ற எஸ்.எஸ்.வாசனின் வரிகளை தலைப்பில் மேற்கோள்காட்டி தேவியர் இல்லம் என்னும் வலைத்தளத்தை நடத்திவரும் எங்கள் மண்ணின் மைந்தரும் திருப்பூர் மாநகரில் வசிப்பவருமான எனதன்பு அண்ணன் ஜோதிஜி அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் விவரித்து மேற்கோள்கள் வைத்து நீண்ட பதிவாகத்தான் கொடுப்பார். தற்போது கூட ஒரு தொழிற்சாலையின் குறிப்புக்கள் என்ற தலைப்பில் பனியன் கம்பெனிக்குள் நடக்கும் அறியாத தகவல்களை அறியத் தருகிறார். அதில் ஒரு பகுதியான கொள்ளையடிப்பது தனிக்கலை என்ற பகிர்வில்....
“இங்கு எல்லோருக்கும் சுய பாதுகாப்பு என்பது மற்ற அனைத்தையும் விட முக்கியமாக உள்ளது. எத்தனை தத்துவங்கள் சொன்னாலும் அவரவர் பொருளாதாரம் சார்ந்த விசயங்களில் நிறைவு இல்லை என்றால் மனதளவில் சோர்ந்து விடுகின்றார்கள். தேவையான கவலைகள், தேவையற்ற கவலைகள் என்று இனம் பிரிக்கத் தெரியாமல் மொத்தமாகக் கவலைகளைக் குத்தகை எடுத்துக் கொண்டு வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு விடுகின்றார்கள்.”


சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே!!! என்று தனது வலைப்பூவான சும்மாவின் தலைப்பின் கீழ் சொல்லி வைத்திருக்கும் எங்க காரைக்குடிகாரரான பாசமிகு தேனம்மை லெஷ்மணன் அக்கா அவர்கள் பிரபல எழுத்தாளர், புத்தக் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர், இதையெல்லாம் விட வாஞ்சையாய் அன்பு செலுத்தும் பாசக்காரர். நிறைய எழுதுவார்... நிறைவாய் எழுதுவார். இவரின் சாட்டர்டே ஜாலி கார்னரில் பல பிரபலங்களிடம் கேள்விக்கான பதிலைப் பெற்று பதிவிடுவார். அதற்கு நல்ல வரவேற்பு. அதில் என்னையும் பிரபலம்ன்னு நினைச்சு போட்டுட்டாங்க. (ஐ... எப்படியோ நம்ம பதிவு ஒண்ணு அக்கா தளத்தில் இருக்குன்னு சொல்லியாச்சு) இவரின் ஸ்வரமும் அபஸ்வரமும் என்ற பகிர்வில்...
“மிகச்சிறப்பான தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் எழுதப்பட்ட ஒரு விஷயம்/ கவிதை/கட்டுரை/ கதை/ பகிர்வு தனக்கான வாசகர்களைக் காலம் கடந்தேனும் எங்கோ ஒரு புள்ளியில் சந்தித்தே விடுகிறது. அப்போது அந்த விஷயத்தின் கனமும் மனமும் ஒன்றியிருக்க கருந்துளையும் பெருவெடிப்பும் மரணமும் பிறப்பும் துன்பமும் இன்பமும் ஒருசேர உணரமுடிகிறது.. விழிப்பற்ற நிலையா விழிப்பாவெனப் பகுபடாத ஒரு நிலையில் புத்தகம் சரணம் கச்சாமி.”


வன் ஜெயிக்கப் பிறந்தவன்  என்று சொல்லி WARRIOR என்னும் தளத்தில் எழுதும் எனது அண்ணன் தேவா சுப்பையா அவர்கள் எழுதிப் பழகுபவன் என்று சொல்லிக் கொள்வார். ஆனால் எப்படி எழுத வேண்டும் என்பது இவரின் தளத்தை வாசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். எடுக்கும் தலைப்பில் இப்படியும் எழுத முடியும் என்று வாசித்தால் மட்டுமே தெரிந்து கொள்ளலாம். இலக்கியமாய் விரித்தும் நடையில் அதே உணர்வுகளோடு நம்மையும் பயணிக்க வைக்கும் ஒரு சிலரின் இவரும் ஒருவர். செம்மண் பூமியில் (நம்ம பக்கந்தேன்) இருந்து வந்த பூங்காற்று இவர். இவரது பூங்காற்று புதிரானது...! பகிர்வில்....
“எப்போதுமே சுவையான நினைவுகளோடுதான் படு சுமாரான எல்லாவற்றையும் நாம் கடந்து வரவேண்டி இருக்கிறது. இருளான ராத்திரியின் கற்பனையோடு நான் நகரத்து வெளிச்சமான இராத்திரிக்குள் நடந்து கொண்டிருந்தேன். இருப்பதற்குள் இல்லாததை தேடி எடுத்து இருக்கிறது என்றே நினைத்துக் கொள்வது போலத்தான். புத்திக்குள் மூன்றாம் பிறை ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்திருப்பேன் ஒருவேளை நான் சீனு என்னும் பாத்திரமாக இருந்திருந்தால்....”

  
நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது என்று சொல்லி தனது பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கும் அன்பிற்குரிய அண்ணன் கே.ஆர்.பி. செந்தில் அவர்கள் மிகச் சிறப்பான எழுத்தாளர். இப்போ முகநூலில் எழுதுகிறார். அவ்வப்போது வலைக்கும் தீனி போடுகிறார். இவர் எழுதும் கவிதைகள் சிறப்பானவையாக இருக்கும். இவரின் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போ!... என்ற பகிர்வில்...
“கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் போற்றி பாதுகாத்து வைத்திருந்த உன்னதமான தருணங்கள் இனி வாழ்வில் எப்போதும் வராது என்பதே வாழ்வின் நீட்சியை நினைத்து பெருங்கவலை கொள்ள வைக்கிறது. சம்பிராதாயங்களை எதிர்கொள்ள முடியாத கோழைகள் செத்துவிடலாம். காதல் போயின் சாதலே பெரிது. நாம் சந்தித்தோம், பேசினோம், காதலித்தோம், கலந்தோம் என்பதே வாழ்வின் உச்சமாக முடிந்துவிட்டது. அது அவசரமாக ஒரு பகல் நேர கனவைப்போல் எல்லாம் கலைந்துவிட்டது.”


ன்மீகப் பகிர்வென்றால் எனக்குப் பிடித்த இருவரில் முதலாமவர் அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும் என்று சொல்லி தஞ்சையம்பதி என்னும் வலைத்தளத்தில் எழுதும் மரியாதைக்குரிய ஐயா துரை.செல்வராஜூ அவர்கள், எந்த ஒரு பகிர்வென்றாலும் நாம் அறியாத விஷயங்களை நிறைவாய்ச் சொல்வதுடன் அழகிய படங்களையும் இணைத்து... இத்தனை பொறுமையாக ஒரு பதிவை எழுதும் இவரைப் போன்றோரைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுவேன். அழகழகான படங்களுடன் அற்புதப்படைப்புக்கள் ஐயாவுடையது. அதில் துளசி தளம் என்னும் பகிர்வில்
“பவித்ரமான துளசியின் தளிரில் பிரம்மனும் மத்தியில் மஹாவிஷ்ணுவும் வேரில் சிவபெருமானும் நிலைத்திருக்கின்றனர். அதனால் - மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் துளசியை  ஏனைய முப்பத்து முக்கோடி தேவர்களும் பன்னிரு சூரியரும் பதினோரு ருத்ரரும் அஷ்ட வசுக்களும் அஸ்வினி தேவர் இருவரும் சூழ்ந்து துதித்திருப்பதாக ஐதீகம். “


ன்மீகப் பகிர்வில் எனக்குப் பிடித்த மற்றொருவர் அன்பிற்குரிய அம்மா திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் வாசிப்பது என்பது சுவாசிப்பது!! வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்!! என்ற வரிகளுடன் மணிராஜ் என்னும் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். செல்வராஜூ ஐயா போலவே தலவரலாறு, இறைவனின் சிறப்பு, பாடல்கள் என எல்லாம் விவரமாக எழுதி அழகழகாய் படங்கள் இணைத்தும் அற்புதமான பகிர்வாய்த்தான் தருவார். பெரும்பாலான நாட்களில் இருவரும் ஒரே ஆலயத்தைப் பற்றியோ... இறைவனைப் பற்றியோ... எழுதியிருப்பார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். இவரின் வெற்றி நலம் அருளும் மஹா கந்த சஷ்டி என்ற புதிய பகிர்வில்...
“முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவனன்.”


செங்கோவி என்னும் தளத்தில் பல்சுவையாய் கலக்கிய நண்பன் செங்கோவி (புனைப்பெயர்) அவர்கள், இன்றைய தேதியில் ஒரு படத்தை உறிச்சு... உறிச்சு... சிறப்பான விமர்சனம் எழுதி வலையுலகில் சினிமா விமர்சனத்தில் முக்கியபுள்ளியாக வலம் வருகிறார். திரைக்கதை இப்படித்தான் எழுத வேண்டும் என்பதை தொடராக எழுதி வருகிறார். அருமையான தொடர். இவரின் திரைக்கதை சூத்திரங்கள் என்னும் பகிர்வில்...
“தமிழில் Suspense என்பதை ஆவலுடன் கூடிய தவிப்பு என்று மொழிபெயர்க்கலாம். Surprise என்பது ஆச்சரியம் அல்லது அதிர்ச்சியைக் குறிக்கும். ஹிட்ச்காக் கொடுத்த பேட்டியில் இதை அழகாக விளக்கி இருப்பார். அவர் சொன்ன விளக்கம் பாம் தியரிஎன்ற பெயரில் அழைக்கப்படுகிறது.”


கோதரர் பரிதி முத்துராசன் அவர்கள் தனது பெயரில் வைத்திருக்கும் வலைத்தளத்தில் சினிமாவும் சினிமா செய்திகளும் என்று சொல்லியிருப்பதால் சினிமா விமர்சனம், கருத்துக்கணிப்பு என சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து பகிர்வுகளும் அருமையாகப் பகிர்வார். இவரின் மெட்ராஸ் - சினிமா விமர்சனம் என்ற பகிர்வில்...
“படத்தில் நிறையக் கதாபாத்திரங்கள் உயிரோட்டமாக உலாவருகின்றன. அதில் மனதில் நிற்பவர்கள் காளியின் நண்பனாக வரும் அன்பு, அன்புவின் மனைவி மேரி, கண்ணனின் ஆதரவாளர்களாக வரும் விஜி, மாரி, கண்ணன், காளியின் அம்மா, பைத்தியமாக வந்து கலகலப்பூட்டும் பரட்டைத்தல ஜானி...”


சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... என்று சொல்லும் நான் மாடக் கூடலில் பிறந்த சகோதரர் பகவான்ஜி அவர்கள் தனது ஜோக்காளி என்னும் வலைத்தளத்தில் நகைச்சுவைகளை அள்ளிக் கொடுக்கிறார். ரசிக்க ரசிக்க பதிவுகளைக் கொடுப்பதில் வல்லவர். இன்றைய தேதியில் தமிழ் மணத்தில் முதலாமிடத்தில் இருக்கும் எழுத்தாளர். இவரின் புருஷனுக்கு ரொம்ப ஆசைதான் என்ற நகைச்சுவையில்...
போலீஸ்  சார்ஜ்ன்னா  இவருக்கு  தெரியாது போலிருக்கு  !''போலீஸ்காரன் என்கிட்டே எதுக்கு செல்லில் சார்ஜ் இல்லேன்னு சொல்றீங்க ?''
''நீங்க சார்ஜ் பண்ணுவீங்க என்று எல்லோரும் சொன்னாங்களே”


கரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் பிரபல முகமான ஈரோடு கதிர் அண்ணன் அவர்கள், நிஜமாய் வாழ கனவைத் தின்னு என்ற பதத்துடன் கசியும் மௌனம் என்னும் வலைப்பூவில் எண்ணங்களை வண்ணங்களாக்கித் தருகிறார். இவரின் படைப்புக்கள் எல்லாம் வாழ்வியல் பேசும். இவரைப் போலவே இவரின் கீச்சுக்களும் மிகப் பிரபலம். இவரின் ஆடிய ஆட்டமென்ன என்ற பகிர்வில்...
“முன்பெல்லாம் வகுப்பில் குறும்பு செய்யும் பசங்களைப் பேர் எழுதிக்கொடுப்பதுபோல், அடங்கவில்லை, மிக மிக அடங்கவில்லை என அவர்களின் பெயர்களை எழுதிக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றியது. யாரிடம் கொடுப்பது, மத்திய இரயில்வே அமைச்சர் சதானந்தாவிடமா கொடுக்க முடியும்.கொடுக்க வேண்டுமெனத் தோன்றியது. சிலநாட்களுக்கு முன்பு அவர் வாசித்த ரயில்வே பட்ஜெட் நினைவுக்கு வந்தது.”


ன்னும் நிறைய... நிறையச் சொல்ல ஆசை பதிவின் நீளம் கருதி சில பிரபலங்களின் தள முகவரி மட்டும் இணைக்கிறேன். இது வலைச்சர விதிகளுக்கு மாறானது என்றாலும் நிறைய அறிமுகங்களைக் கொடுத்ததால் சீனா ஐயா அடியேனை மன்னிப்பார் என்ற நம்பிக்கையில் இதோ சிலரின் பக்க இணைப்புக்கள்.


திரு. பால கணேஷ்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்! 

திரு. முனைவர் இரா.குணசீலன்

மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை 

திரு. கில்லர்ஜி

பூவைப் பறிக்கக் கோடாரி எதற்கு? 

திரு. கோவை ஆவி
திரு. வெங்கட் நாகராஜ்
சந்தித்ததும் சிந்தித்ததும்


திரு. டி.என்.முரளிதரன்

மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா? 

திரு. சிபி. செந்தில்குமார்
திரு. பிரபாகரன்
காற்றில் கனிகள் விழுந்திடும் வரையில் காத்திருக்காதே... கல்லடி கிடைக்கும் 

திரு. சென்னை பித்தன்

எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் 

திரு. அ. பாண்டியன்
என் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில் 

கவிஞர். கி.பாரதிதாசன்

தமிழ் இலக்கண இலக்கிய மின்வலை 

திரு. சரவணன்
கல்விக்கான சிறப்பு வலை


திருமதி. மனோ சாமிநாதன்

கலைகளும் சிந்தனையுமாய் சிதறுகின்ற முத்துக்கள் இங்கே!! 

திருமதி. அனிதாராஜ்
மனதில் உதிர்க்கும் எண்ணங்களை கிறுக்கல்களாய் இங்கே படைக்கிறேன் 

திருமதி. ராமலெஷ்மி ராஜன்
எண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாக கோர்த்தபடி


இங்கு என் நட்புவட்டத்தில் இருக்கும்  அனைத்து எழுத்தாளர்களையும் சொல்லத்தான் ஆசை. அதற்கான கால நேரம் வரும்போது கண்டிப்பாக மற்றவர்களைப் பற்றியும் பகிரலாம்.

இன்றைய பகிர்வு ரொம்ப நீளமாகிவிட்டது. படித்த உங்களுக்கு மூச்சு வாங்கியிருக்கும்.  அதனால அப்படியே இந்தப் பாட்டைப் பாருங்க... கொஞ்சம் உற்சாகம் வரும்.

ஒரு வானவில் போல


மதுரையில் இன்று நடக்கும் வலைப்பதிவர் மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துவோம்.

நன்றி. 

-'பரிவை' சே.குமார்.

33 comments:

 1. சிறந்த அறிமுகங்கள்

  பதிவர் சந்திப்பில் கலந்து சிறப்பிக்க உள்ள தங்களுக்கும் எனது வாழ்த்துகள்.

  தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
  http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சார்...
   தங்கள் வாழ்த்திற்கு நன்றி.

   Delete
 2. வணக்கம்
  அண்ணா.

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ரூபன்...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 3. பெரும்பாலான நாட்களில் இருவரும் ஒரே ஆலயத்தைப் பற்றியோ... இறைவனைப் பற்றியோ... எழுதியிருப்பார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். இவரின் வெற்றி நலம் அருளும் மஹா கந்த சஷ்டி என்ற புதிய பகிர்வில்...
  “முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவனன்.”//

  அந்த அந்த நாளுக்குரிய தலங்களாதலால் ஒற்றுமை காட்சிப்பட்டிருக்கும்..

  சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தியதற்கு இனிய நன்றிகள்..!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 4. //ஆன்மீகப் பகிர்வில் எனக்குப் பிடித்த மற்றொருவர் அன்பிற்குரிய அம்மா திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் வாசிப்பது என்பது சுவாசிப்பது!! வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்!! என்ற வரிகளுடன் மணிராஜ் என்னும் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். //

  மிகவும் அருமையான மிகவும் முக்கியமான அற்புதமானஅறிமுகம்.
  பாராட்டுகள் + வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா....
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 5. எனக்கு மிகவும் பிடித்தமான பாட்டு ஒரு வானவில் போல என் வாழ்விலே வந்தாய். பதிவும் அறிமுகங்களுக்கும் நன்றி. தெரிந்த முகங்களோடு புதிய அறிமுகம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 6. வீட்டிற்கு வந்ததும் தம்பி சம்பாரிச்சி சொத்துச் சேர்த்து வச்சிருக்கோ இல்லையோ ஆனா ஆளுகளை நல்லாப் பழகி வச்சிருக்குன்னு சொல்லுவாங்க. //

  உண்மை , நாலு நல்ல மனுஷ நட்பு வேண்டும்.


  அனைத்து நட்புகளுக்கும் வாழ்த்துக்கள்.
  மிக அருமையாக எல்லோரையும் பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அம்மா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 7. சிறப்பான முறையில் இந்தவார வலைச்சரத்தை தொகுத்து தந்தமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 8. அஹா இவ்ளோ பாராட்டா நன்றி குமார். :) நன்றி வலைச்சரம் & சீனா சார்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா...
   உண்மையைத்தானே சொல்லியிருக்கேன்...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 9. பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்.

  மேலும் சகோ குமார் குறிப்பிட்டு இருக்கும் அனைத்துவலைப் பதிவர்க்கும் வாழ்த்துகள். :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அக்கா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 10. என்னைப் பற்றியும் இங்கே நினைவு கூர்ந்தமைக்கு நன்றி குமார்...

  வாரம் முழுவதும் மிகச் சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 11. தங்களுக்கு நன்றி.........

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 12. குமார் ஜி .சிறப்பான முறையில் பதிவர் சந்திப்பு முடிந்து ,இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன் ,தாங்களும் நேரலையில் பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன் !
  ஜோக்காளியை அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி !
  த ம 1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஜி...
   அலுவலக வேலை... 11 மணி நேரம்...
   விழா குறித்த பகிர்வுகளுக்காக காத்திருக்கிறேன்...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 13. நன்றி... நன்றி... நன்றி...

  சற்று முன் தான் திண்டுக்கல்லுக்கு வந்தேன்...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. வணக்கம் அண்ணா...
  வெற்றிகரமாக வலைப்பதிவர் மாநாட்டை முடித்துத் திரும்பியிருக்கிறீர்கள்...
  வாழ்த்துக்கள்.
  இனி தங்கள் வரவை எங்கள் வலைகளில் எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்...

  ReplyDelete
 15. அன்பின் குமார்..
  தங்கள் அன்பினுக்கு ந்ன்றி..

  மகளின் வளைகாப்பு இன்று. நேற்று இரவு சிவகாசிக்குச் சென்று - இன்று காலையில் விசேஷத்தினை சிறப்பாகச் செய்து விட்டு சற்று முன் தான் தஞ்சைக்குத் திரும்பினோம்.

  வலைச்சரத்தில் அறிமுகம் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

  ReplyDelete
 16. வணக்கம் ஐயா...
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  வளைகாப்பு நிகழ்வுகளில் சந்தோஷத்தித்து தஞ்சை வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. மிக்க நன்றி குமார்! அறிமுகமாயிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்...
   வாங்க அக்கா
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 18. அறிமுகத்துக்கு நன்றி குமார்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்...
   வாங்க சகோதரா
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது