07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 17, 2014

முத்தப் பருவம்!!!

"என்னப்பா தங்கராசு இன்னைக்கு ஆள் எடுத்தாகளா... ஆலமரப் பக்கம் போனேன் யாரையும் பார்க்க முடியல. எல்லோரும் சோலிக்கு போயட்டாகளோ ...."
"அட போய்யா முத்துராசு ... காலம்பர ஆறு மணிக்கே போய் காத்துக்கிடந்தேன்... கண்காணி வந்து இன்னைக்கு சோலி குறைவுதான் னு சொல்லிபுட்டு நிறைய பேத்த கழிச்சிபுட்டார் ..."
தினக்கூலிக்கு வேலைசெய்ய இங்கே ஆட்கள் இல்லையென்று வடமாநிலங்களில் இருந்து பணியாளர்களை இறக்குமதி செய்கிறார்கள்.ஆனால் இங்குள்ள நிலைமையோ, தினமும் வேலை கிடைக்காது அடுத்த வேலையை நாடி ஓட வேண்டிய நிலை. கழிவு என்ற ஒரே வார்த்தையில் நம்மை புறந்தள்ளிவிட்டு குறைந்த சம்பளத்தில் வேறு மாநிலத்தோரை பணியில் அமர்த்திக்கொள்கின்றனர்.
 

இதை முதலாளி வர்க்க ஆதிக்கம் என்பதா? இல்லை செய்யும் தொழிலில் சிக்கனத்தை கடைபிடிக்கிறார்கள் என  எடுத்துக்கொள்வதா? சிக்கலான விஷயம்  தான், ஆனால் ஒன்றுமட்டும் உறுதி தினக்கூலி வேலைக்கு அழைந்து கண்டுபிடித்து பணிக்குச் செல்வதற்குள் பொழுதடைந்து விடுகிறது.
இதுபோன்ற தருணங்கள் தான் நம்மை சிறுதொழில் வணிகம் பற்றி சிந்திக்க வைக்கிறது. எனக்கே எனக்கான வேலை. நானே முதலாளி நானே தொழிலாளி.
"ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான்  ஒரு தொழிலாளி ...."
என்ற பாடலுக்கேற்ப... கடவுளை முதலாளியாக ஏற்று பணத்தைப் போட்டு பணம் எடுக்கும் தொழில்.
 
நாலுகாசு போட்டாலும்
சொந்தக்காச போட்டு
சிறுசா செஞ்சாலும்
சொந்தத்தொழில செய்யணும் ....
இப்படி தாரக மந்திரத்தோடு செயல்படும் தோழமைகளுக்கான பதிவு இது.
எந்தச் செயல் செய்தாலும்
காந்தப் புலம் போல
சொந்த நம்பிக்கை வேணுமய்யா
சிந்தையில் இதை நிறுத்திக்கோய்யா.....
 
========================================================
 
 

முத்தப் பருவம்: இன்றைய வலைச்சர பிள்ளைத்தமிழ்ப் பருவம் முத்தப் பருவம் ஆகும். கைகொட்டி சிரித்து மகிழ்ந்த குழந்தை எண்வகை மெய்ப்பாடுகளையும் செய்து நம்மை வியப்பில் ஆழ்த்தும் போது அந்தக் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அதனிடம் முத்தம் வாங்கிக்கொள்வதே முத்தப் பருவமாம். இத்தகைய அழகான பருவத்தில் சிறுதொழில் பற்றி எழுதியிருக்கும் பதிவர்கள் சிலரைக் காண்போம்.
 
==========================================================
 
 

சிறுதொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள், எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம்.அதற்கான பயிற்சியை யார் தருவார்கள் என அதீத தகவல்கள் தருகிறார் நண்பர் கோவிந்த் ராஜ்.
இதுதான் பாதை என
இயைபாய்க் காண்பித்தாய்!
இனிமேலும் நின்றிலேன் - நானும்
இன்றே தொடங்கிடுவேன் நற்தொழிலை...
 
============================================================
 
 
மனிதன் எதைநோக்கிச் செல்கிறான் என்று பலவாறு வினா தொடுத்து அதற்கான விடைகளையும் அவரே கொடுக்கிறார் நண்பர் சுந்தரமூர்த்தி. நம்பிக்கை விடாமுயற்சி ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு சிறுதொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்கிறார் ஒரு பதிவில்...

பெருத்துப்போன மக்கட்செறிவில்
சிறுத்துப் போச்சி வேலைவாய்ப்பு....
யாரையும் நோக்காதே
ஊரையும் பார்க்காதே
உன் வாழ்க்கை உன் கையில்
தொடங்கிடு ஒரு தொழிலை
நம்பிக்கையுடன் இன்றே...
நலமாய் வாழ்வாய் நன்றே....
 
============================================================
 
 
அறிந்ததும் அறியாததும் என்று சொல்லிக்கொண்டு நாம் அறிந்திடாத பல செய்திகளை நமக்கு விருந்தளிக்கிறார் நண்பர் செல்லப்பா. பெண்களுக்கான சிறுதொழில் வாய்ப்பு மற்றும் அதன் வழிகாட்டுதலுடன் முதலீடு இல்லாமல் செய்வது எப்படி என்று அவர் எழுதிய இப்பதிவினைக் காணுங்கள்.

சிக்கனமா முதல்போட்டு
சிக்கென்ற லாபமுடன்
சிரித்தே வாழ்ந்திட
சிறப்பான வழிசொன்ன
சீர்மிகு படைப்பாளியே - நின்முன்
சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்...
 
=============================================================
 
 
பெண்களின் பார்வையில் உலகம் என்று நான்கு பெண்களின் தளத்தில் சகோதரி ஜெயஸ்ரீ நாராயணன் அவர்கள் சிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினைப் பொருட்கள் வேலைப்பாடுகள் பற்றி உரைத்தும் கற்றும் கொடுக்கிறார்.

மாநிலம் போற்றும்
மாதவ மங்கையே - எம்
மனதை குளிர்வித்தாய்
மங்காத பொக்கிஷமாய் - எமக்கு
மட்காத வாழ்வளித்தாய்....
 
===========================================================
 
 
சிறுதொழில் முன்னேற்றம் எனும் தளத்தில் நண்பர் ஹாஜா மொஹைதீன் அவர்கள் சிறுதொழில் எப்படி ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முறை என்ன. எந்தெந்த தொழில்களுக்கு அரசு சலுகைகள் மற்றும் மானியங்கள் கிடைக்கின்றன என்பதை  சொல்கிறார். வாருங்கள் படித்து பயன்பெறுவோம்.

அறியாத செய்திகளை
அச்சில் கோர்த்து சொன்னீங்க
அழகழகா விடயங்களை
அடுக்கடுக்கா சொன்னதற்கு
அன்பார்ந்த நன்றிகள் ஐயா
அருமையான அண்ணாச்சி......
 
========================================================
 
 
நம்மால் முடியுமென்று நம்பு என்று என் கண்கள் தளத்தில் நண்பர் பக்ருதீன் அலி அவர்கள் அருமையான பதிவொன்றை இட்டிருக்கிறார். மூலதனம் இதுவே முதல் தனம். அப்படியான மூலதனத்துக்கு கடன் வசதி, அதாவது சிறுதொழில் வளர்ச்சிக்கு உதவும் நிதித்துறை நிறுவனங்கள் வங்கிகள் அதற்கான முறை வழிகாட்டல் என தகவல்கள் நிரம்பி வழிகிறது.

வெத்து கையா இருந்தா
எவன் மதிப்பான் இவ்வுலகில்
தொழில் தொடக்கி சம்பாதிக்க
வழியொன்னு தெரியாம
விழிபிதுங்கி நின்னேன்
அழகான பதிவைச் சொல்லி
எம் மனசில பால் வார்த்த ராசா
நல்லா இருக்கனுமய்யா...
 
==========================================================
 
 
இனிக்க இனக்க கூவிய இணையக்குயில் நீண்ட நாட்களாகக் காணவில்லை. நண்பர் துரை டேனியல் அவர்கள் தனது தளத்தில் சிறுதொழில் தொடங்க ஆலோசனைகள் வழங்குகிறார்.

பரணிக் கரையில்
பிறந்த மன்னவனே
பதுசாக நீங்க சொன்ன
பக்குவத்தை நாங்களுமே
மனசுக்குள்ள போட்டுவைச்சி
நிம்மதியா தொழில் செய்வோம்...
 
==============================================================
 
ளரும் மக்கட்தொகைப் பெருக்கத்தால் வேலைவாய்ப்பு என்பது அருகிப் போய்வருகிறது. இந்நிலையில் நமக்கு நாமே நம் வாழ்வினை நல்வழியில் நடத்திட பொருளாதார சிக்கல் இல்லாமல் இனிதே வாழ்ந்திட சிறுதொழில் அவசியம்.

ப்படி நாம் ஒருபுறம் நம் பொருளாதாரத்தை நாமே சரி செய்ய சிறுதொழில் செய்ய முன்வர... மத்திய அரசாங்கமோ மீண்டும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கையை திரும்பவும் கொண்டுவருகிறதாம். கேட்கவே மனம் வேதனைப்படுகிறது. இரும்புக்கோட்டை கொண்டு தடுப்போம் அந்நிலையை.
 
 

அன்பன்
மகேந்திரன்

9 comments:

 1. பொருளாதார சிக்கல் இல்லாமல் -
  நமக்கு நாமே நம் வாழ்வினை நல்வழியில் நடத்தி
  இனிதே வாழ்ந்திட சிறுதொழில் அவசியம்!.

  - முத்தான கருத்தினை முன் நிறுத்திய பதிவு!..

  அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 2. சிறுதொழிலுக்கு ஊக்கமான பகிர்வு புதிய தளங்கள் சில துரைடெனியல் பர்ரி நானும் சிந்தித்ததுண்டு.

  ReplyDelete
 3. முத்தப்பருவம் முத்தான கவிதைகளுடன் முன்னேற்ற வழிகாட்டி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வணக்கம் சகோதரரே!

  தினமொரு சிந்தனை! சீரான தேர்வு!
  இனம்வாழ இட்டீர் இணைப்பு!

  அருமையான, ஊக்கம் மிக்க உங்கள் தேர்வுகள்!
  மிகச் சிறப்பு!
  அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. மிகச்சிறப்பான தளங்களின் அறிமுகம்! வாழ்த்துக்கள்! சிறுதொழில் முனைவோருக்கு மிகவும் பயன் அளிக்கும் இன்றைய தொகுப்பு! நன்றி!

  ReplyDelete
 6. சிறுதொழில் தொடங்க இந்த பதிவுகள் நிச்சயம் பயன்படும்!
  சிறப்பான தொகுப்பிற்கு,
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. வித்தியாசமான பதிவர்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. மிகவும் உபயோகமான, அருமையான ஒரு பதிவு.
  அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது