07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 18, 2015

முத்தமிழ் பேசும் வலைப் பூ வாசம்!





முடி சூடிய வலைப் பூ முகங்களை வலைச்சரத்தில் கண்டோம்.

தொடர்ந்துமுத்தமிழ் பேசும், வலைப்பூவின் வாசத்தை நுகர்வோம்,

நுகர்ந்ததை பகர்வோம்!

வாருங்கள்!


தமிழை பற்றி பேசும்போது முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வசுவநாதம் அவர்கள் தமிழுக்கு தந்த விளக்கம் அறு சுவையாக மணக்கும்.


தமிழுக்கு "முத்தமிழ்' எனவும் பெயர் உண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும்; இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச்செய்யும். நாடகத்தமிழ் நடந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்தும். எண்ணமும், துணிவுமின்றி எச்செயலும் நடைபெறாது. இது உளநூற் புலவர்களின் கருத்து. இதை நமது முன்னோர்கள் அன்றே அறிந்து பெயரிட்டிருப்பது அவர்களின் அறிவாற்றலை விளக்குகிறது எனபார் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்.


 நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு' என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும்மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை'யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.


 ""தமிழுக்கும் அமுதென்று பேர்'',  தமிழ்தமிழ் எனக் கூற அது "அமிழ்ந்து' என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. ""தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்'' எனவும் கூறி,  உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட ஒப்பற்றக் கவிஞர் அவர்.


 இனிமைச் சிறப்பு

 "தமிழ்' என்பதற்கு "இனிமை' என்றும் ஒரு பொருளுண்டு. இதனை "இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்'' என்பதனால் நன்கறியலாம்.


 "பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்''  என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது:


""போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடிசுவையாயிருக்கப் போகிறது?'' என்பாராம்! என்னே தமிழின் சுவை!

என்னே தமிழின் இனிமை!


கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டுவரும்படி சொல்லியிருந்தேன். அவன் அன்று வராமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித்தேன். அவன் பேசினான்.


 ""நேற்றே மலைக்கு நடந்தேன்பலவிடங்களில் அலைந்தேன்; இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன்; ஒரு கொடியைப் பிடித்தேன்; ஏறிச் சென்று கலைத்தேன்; சட்டியில் பிழிந்தேன்; நன்றாக வடித்தேன்; அதனைக் கண்டு மகிழ்ந்தேன்; அதில் சிறிது குடித்தேன்; களித்தேன்; அயர்ந்தேன்; மறந்தேன்; இன்று காலை எழுந்தேன்; நினைத்தேன்; தேனை அடைத்தேன்; எடுத்தேன்; விரைந்தேன்; நடந்தேன்; வந்தேன்; சேர்ந்தேன்; இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்'' என்று.


 நானும் இதைக்கேட்டு மகிழ்ந்தேன். அவனுக்கு உரியதையும் தந்தேன். அடடா! எப்படி தேன்எவ்வளவு தேன்ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறதே! இதைப் பார்த்தேன்குடித்தேன் என்று கூறாமல் 
"படித்தேன்' எனக் கூறுங்கள்.

அப்பொழுதுதான், ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி "தேன்' என ருசிக்கும். என்னே தமிழின் இனிமை!


இது போன்று, வலைப் பூ பதிவாளர்களின் பயன் தரும் பதிவுகளை படித்தேன் என்று சொல்லுங்கள். 
படித் தேனாக ருசிக்கட்டும்.


இனி இன்றைய சிறப்பு பதிவாளர்களும் அவர்களது பதிவுகளும்!

http://makizhnirai.blogspot.com/2014/09/periyar-rationalist-leader.html

மைதிலி கஸ்தூரிரங்கன்

“தந்தைபோற்றுதும்!!”


புதைத்து விட்டு, வழிபடும் மரபினர் நாம்
அதனால்தான் கொள்கைகளை புதைத்துவிட்டு
வகுத்தவர்களை வழிபடுகிறோம் !!
என்கிற, இவரது குறும்பாவை ஒன்றே போதும்
இந்த பதிவை நன்றென சொல்ல!   - (இயல்)

http://haridhass.blogspot.fr/ 

புதுவை சந்திரஹரி

ஒரு பக்க கதை (ஸ்டாப்)


தட்டுப் பாடுகள் நிறைந்த சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்னும் எதார்த்த கருத்தை
மனித நேயம் குறித்த மற்றொரு பார்வையை சொல்லி இருக்கிறார் இவர்.


புதுவையை சேர்ந்த இவர், நான் படித்த "கலவைக் கல்லூரியின்" ஆசிரியர்.
"தாய்" பத்திரிகை  ஏற்பாடு செய்திருந்த பாடல் எழுதும் போட்டிக்கு நீங்கள்  வந்திருந்த போது, நானும் நண்பர் கேசவ சேகரும் வந்து இருந்தோம். கேசவசேகர் அவர்களுக்கு முதல் பரிசு கிட்டியதை இங்கு நினைவு கூறுகின்றேன் அய்யா! நன்றி!) - (இயல்)

 

http://thanjavur14.blogspot.fr/2015/03/blog-post-kumbakonam-.html 


துரை செல்வராஜு

இளைய மகா மகம்


பழையதும், புதியதும், அருமையான படங்களுடன் விளக்கமான விடயங்கள் தந்தமைக்கு நன்றி என்று பாராட்டிய கில்லர்ஜி யின் பின்னூட்டக் கருத்தையே சொல்லிய படியே சிறப்பிக்கின்றேன் இவரது இந்த பதிவை!- - (இயல்)

 http://vazhvuneri.blogspot.fr/2015/02/blog-post.html

சூரி சிவா ("சுப்புத் தாத்தா)
உலகத் தாய்மொழி தின வாழ்த்துக்கள்
 

பிறரது திறமைகளை உலகறிய செய்யும் திறவு கோல் !
தமிழ் மொழியின் இசைஅருவி இவர்! -  (இசை)


http://kaarigan-vaarththaiviruppam.blogspot.fr/2014/10/xxi.html

காரிகன்

இசைவிரும்பிகள் XXI -- அலங்காரம் கலையாத அழகு.

தமிழ் திரைப் படங்களின் அகராதி  பிலிம் நீயுஸ் ஆனந்தன் என்பார்கள்!
காரிகன் அவர்களோ தமிழ் இசைப் பாடல்களின் அகராதி என்று சொன்னாலும் அது மிகையன்று. அவ்வளவு தகவல்களை நாம் பெற முடியும்.
தகவல் அறியும் சட்டத்தை நாம் நாடாமலே!
 நன்றி காரிகன்!  -  (இசை)

http://unmaiyanavan.blogspot.fr/ 
சொக்கன் சுப்ரமணியன்
நாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்  

வளரும் தலைமுறையினரிடம் நாடகத் தமிழை வளர்க்கும் வித்தை அறிந்த விந்தை மனிதர் இவர்! - (நாடகம்) 


http://www.gunathamizh.com/2010/01/blog-post_24.html


முனைவர் இரா.குணசீலன்
பெண்களின் கூந்தல்மணம் இயற்கையானதா?

பெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா? இலக்கிய ஆராய்ச்சிக்கு உரிய முறை யாது? எது உயர்ந்த ஆராய்ச்சி என்று ஆராயுமாறு நம்மைத் தூண்டுகிறயது இப்பதிவு.


http://manidal.blogspot.fr/2010/04/blog-post_27.html

முனைவர்மு.பழனியப்பன்



இணையத்தில் தமிழ்

தமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ !  இணையத்தின் வழியே இலக்கியம் வள்ர்ந்தோங்க வேண்டுகிறார்.


http://mathysblog.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D




கோமதி அரசு 

ஓடிவிளையாடு பாப்பா



பாரதிதாசன் அவர்களின் குடும்ப விளக்கில் குழந்தை வளர்ப்புப் பற்றி, விளையாட்டைப் பற்றி வரும் பாடலையும், பாண்டி விளையாட்டின் தத்துவப் பொருளையும் சிறப்புற விளக்கியுள்ளார் இந்த பதிவினில்!  


http://umayalgayathri.blogspot.com/2014/06/kavithai-manathin-anal.html


R. உமையாள் காயத்ரி
மனதின் அனல் – கவிதை

நல்லவை தீயவை - யாதும்
அனலுக்கு ஒன்றே...! தமிழ் அனல் தகதகக்கிறது இவரது கவிதை வரிகளில்!




http://saratharecipe.blogspot.fr/2014/02/150.html



சாரதா.  


எனது அம்மா - 150 வது பதிவு

தமிழ்நாட்டில் பாளையங்கோட்டையில் வசிக்கிறார் சமையல் ஆர்வம் உள்ளதால் இணையத்தின் வழியே சமையல் குறிப்புகளை பகிர்ந்து வருகிறார் வெகு சிறப்பாக!
இவரது 150 வது பதிவு "எனது அம்மா"
தாய்மை பாசத்தை இணைய வலையில் பிண்ணியிருக்கிறார் அனைவரும் போற்றும் வகையில்!



http://www.trtamilkkavithaikal.com/2015/02/blog-post_18.html

ரூபன்


எரியும் தீப்பிழம்பு

ஈழத்து தமிழரின் இன்னல்களை இடியென இடித்துரைக்க செய்கிறார் இவரது இணையில்லா கவிதை மூலம்.

முத்தமிழை பாட பாட வாய் மணக்கும்!
இன்றைய பதிவர்களின் பதிவர்களின் பதிவுகளை படிக்க படிக்க
இதயம் இன்பத்தில் மூழ்கி, துன்பம் தராது துடிக்கும்!


நாளை நல்ல பல பல்சுவை தரும் பதிவர்களோடு சந்திக்கின்றேன்.





நன்றி!

நட்புடன்,
 
புதுவை வேலு



 











 



 



 
 







 
 

 


 




 















 









 
 


 
 

55 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    இதோ தொடருகிறேன் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. என்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சிறந்த பதிவினை தந்தீர்கள்
      வாழ்த்துகள்!
      தங்களது தமிழ் பணி சிறக்கட்டும்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  2. முத்தமிழ் அறிஞர்களின் வலைப்பூக்களோடு என்னுடைய வலைப்பூவையும் கோர்ததற்கு மிக்க நன்றி நண்பரே.
    தாங்கள் இயல்,இசை,நாடகம் பற்றி விளக்கிய விதம் அருமை. அதிலும் முத்தமிழோடு நண்பர்களை அறிமுகப்படுத்தப்பட்ட விதம் அருமை. அருமை.

    அறிமுகம் ஆன அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

    என் தளம் வந்து சொன்ன சகோதரர் ரூபன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சொக்கன் அவர்களே!
      வாழ்த்துகள்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  3. வணக்கம்
    ஐயா
    கில்லர் ஜி பற்றி சிறப்பாக பாராட்டியுள்ளீர்கள் வலைப்பூ இணைப்பு கொடுக்க வில்லை... ஒரு வலைப்பூ புதியது அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. என்னைக் ''கவனித்தமைக்கு'' நன்றி நண்பரே...

      Delete
    2. வணக்கம் ரூபன் அவர்களே!
      கில்லர்ஜி பதிவு 19/03/2015 அன்று வலைச்சரத்தில் வெளியாகி உள்ளது!
      நீங்கள் கண்டது செல்வராஜூ அய்யாவுக்கு அவர் அப்போது இட்ட பின்னூட்டம் அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  4. முத்தமிழை ரசித்தோம். அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  5. அனைத்தும் சிறந்த தளங்கள்... நமது நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் (DD)அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  6. அன்றும் இன்றும் என்றும் : அடுத்து என்ன...?

    http://dindiguldhanabalan.blogspot.com/2015/03/What-next.html

    ReplyDelete
    Replies
    1. வலைசரத்தில் காண்க!
      தன்பாலன் அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  7. திரு யாதவன் நம்பி,

    எனது தளத்தை அறிமுகம் செய்தமைக்கு மிகவும் நன்றி. இசை அகராதி சற்று மிகைப்படுத்தப்பட்ட சொல். அத்தனை தகவல்கள் என்னிடமில்லை. என் வலைப்பக்கம் ஒரு நடை வரவும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி காரிகன் அவர்களே!
      நான் அறிந்த வரையில்
      நீங்கள் ஒரு இசை பெட்டகம்
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  8. திரு ரூபன்,

    வலைச்சரத்தில் எனது தளம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த உங்களுக்கு எனது நன்றி.

    ReplyDelete
  9. முத்தமிழுக்குள் எம்மையும் இணைத்து அறிமுகம் செய்வித்த
    அன்பின் யாதவன் நம்பி அவர்களுக்கு நன்றி...

    இன்றைய தொகுப்பில் தொடுக்கப்பட்ட -
    தமிழ் மலர்கள் அனைவருக்கும் அன்பின் இனிய நல்வாழ்த்துக்கள்!..

    தளத்திற்கு வருகைதந்து அறிமுக செய்தியினை -
    அளித்த அன்பின் ரூபன் அவர்களுக்கு மிக்க நன்றி!.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் துரை செல்வராஜூ அய்யா!
      வாழ்த்துகள்!
      வருகைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  10. காரிகன் அவர்களின் இசை பதிவு...
    கஞ்சி தொட்டி தேடி வந்தவனுக்கு களஞ்சியம் கிடைத்த கதை போல்.. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி!.

      Delete
    2. தங்களை அறிமுகம் செய்யாமல் விடுபட்டு போய் விட்டது நண்பரே!
      மன்னிக்கவும். எனது தளத்தில் சிறப்பு செய்துவிடுகிறேன். நன்றி!

      Delete
  11. முத்தமிழ் விளக்கம் தித்திக்கும் தேன்!

    ReplyDelete
    Replies
    1. தித்திக்கும் முத்தமிழ் தேனை பருகியதற்கு மிக்க நன்றி
      புலவர் அய்யா அவர்க்ளே!

      Delete
  12. முதலில் நீங்கள் அறிமுகம் செய்த அனைத்து பதிவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் !
    என்னுடைய பதிவாகிய எனது அம்மா சிறந்த பதிவாக நீங்கள் தேர்ந்து எடுத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அம்மா பதிவுடன் எனது வலைப்பூவையும் அறிமுகப்படுத்திய உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இன்று அம்மாவும் எனது வீட்ற்கு வந்த்திருக்காங்க. அவர்களிடமும் காண்பித்தேன். அம்மாவும் மிகவும் சந்தோஷப்பட்டாங்க. எனக்கு இன்று மிகவும் சந்தோஷமான நாளாக அமைந்தது. அதற்க்கு உங்களுக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. "தாயிற் சிறந்த கோயிலும் இல்லை" -
      நல்ல பதிவை தந்தீர்கள்
      நல்ல பண்பை சிறப்பித்து!
      நன்றி சகோதரி! தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  13. ஆஹா! இன்றைய அறிமுகங்களில் நம் நண்பர்கள் மிளிர்கின்றார்கள்! பதிவும் அருமை! அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்ட்துக்கள்! தொடர்கின்றோம்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா!
      அனைவருக்கும் வாழ்த்துக் கூறி இனிய கருத்தை இங்கு வந்து சொன்னமைக்கு, தந்தேன் நன்றியினை தகவலோடு முத்தமிழ் பதிவோடு!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  14. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாவாணரே!
      தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  15. Replies
    1. நல்ல தொகுப்பு என்று பாராட்டியமைக்கு மிக்க நன்றி முனைவர் அய்யா!
      வருக!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி!
      தனிமரம் !
      புதுவை வேலு

      Delete
  18. முத்தமிழ் விளக்கம் அருமை. அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி!
      புதுவை வேலு

      Delete
  19. அன்புள்ள அய்யா,

    செந்தமிழ்ச் சொல்லெடுத்து தேன்னிசைத் தொடுத்து - வண்ண
    சந்தத்திலே முத்தமிழ் சரம் தொடுத்து- தமிழின் பெருமையை
    உலகிற்கு உரைத்திட்டவரே!

    வலையுலகப் பதிவர்களை அறிமுகப் படுத்தினீர்கள்.

    அருமை.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணவை அய்யா!
      தங்களது பதிவினை ரசித்து வருகிறேன்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  20. தேன்! தேன்! தமிழ்த் தேன்! சுவைத்தேன்!
    த.ம.10

    ReplyDelete
    Replies
    1. தித்திக்கும் முத்தமிழ் தேனை பருகியதற்கு மிக்க நன்றி

      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  21. வணக்கம் யாதவன் நம்பி , வாழ்க வளமுடன்.
    என் பதிவையும் இங்கு இடம்பெற செய்தமைக்கு நன்றி.

    உங்கள் தமிழ்தேன் பற்றிய விளக்கம் அருமை. (சுவைத்தேன்)
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    நேற்றுதான் ஊரிலிருந்து வந்தேன்.
    ரூபன் அவர்கள் வலைச்சரத்தில் என் பதிவு இடம்பெற்றதை தகவல் சொன்னார்கள். அவர்களுக்கு நன்றி.
    வலைச்சரத்தில் அறிமுகபடுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி!
      தேனான கருத்தை சுவையோடு இணைத்து தந்தமைக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  22. முத்தமிழ் பேசும், வலைப்பூவின் வாசத்தை நுகர்வோம்,//

    என் பதிவை முத்தமிழ் பேசும் வலைபூவில் இணைத்து தகவல் சொன்னதற்கு நன்றி .

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி!

      பதிவாளர்கள் சிறப்பிக்க பட்ட செய்தியை கொண்டு வந்து சேர்க்கும் மிக அளப்பறிய உதவியை செய்து வரும் திரு ரூபன் அவர்களுக்கு இனிய நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  23. அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரி!
      வருகை தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  24. நீங்கள் குறிப்பிட்ட முத்தமிழுக்கு இன்னும் இனிமை கூட்டும் விதமாய், இரண்டாயிரம் அகவை கடந்தும் நவீனத்துக்கு ஈடு கொடுக்கும் மொழி என்பதற்கு சான்றாய், நான்காவது தமிழாய் தழைத்து நிற்கிறது இணையத்தமிழ் !

    அதற்கு பங்களிப்பவர்களின் அறிமுகங்கள் அருமை ! அனைவருக்கும் வாழ்த்துகள் !!

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. நான்காம் தமிழை நாடறிய செய்தமைக்கு நன்றி சாமானியரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  25. அன்பின் சக பதிவர்களே !

    வருகிற 23.03.2015 / 30.03.2015 / 06.04.2015 / 13.04.2015 / 20.04.2015 / 27.04.2015 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் இருந்து ஒரு வார காலத்திற்கு வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க விரும்பும் நண்பர்கள் cheenakay@gmail.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்க. ஆவன செய்ய முயற்சி எடுக்கப் படும்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. இணைய வானத்தின் இலக்கியப் பூ
      இணையற்ற பதிவர்களின் வலைப் பூ

      வலைச்சரம் தந்ததய்யா வாய்ப்பு(பூ)

      சிந்தட்டும் சிறப்பு என்னும் சிரிப்பு!
      புதுவை வேலு

      மிக்க நன்றி வலைச்சரம் குழுவினருக்கு, நன்றி அன்பின் சீனா அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  26. முத்தமிழ் மொழிந்து
    முத்துக்களோடு முத்தாய்
    என்னையும் அறிமுகம் செய்தமைக்கு அன்பான நன்றி.

    அன்பு தம்பி ரூபன் அறிமுகத்தை அறிய தந்து இருக்கிறார் அவருக்கும்,
    அன்புடன் அறிமுகம் செய்து அதனை தெரியப்படுத்திய தங்களுக்கும் நன்றி.

    தம 11

    உடல் நிலை காரணமாக வரயியலவில்லை சகோ. அதான் காலதாமதம் ஆகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. தங்களது உடல் நிலையை கவனமாக பேணுங்கள் சகோதரி!
      "ஆரோக்கியமே அனைத்திற்கும் ஆதாரப் புருஷன்"
      நலம் பெறுக! பலத்துடன் பதிவுகளைத் தருக!
      ஜெய் சாய்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  27. முத்தமிழ் பேசும் வித்தகர்கள்...
    அருமை... அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முத்தமிழ் வித்தகர்களுக்கு சிறப்பு செய்ய வந்தமைக்கு
      மிக்க நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது