07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 28, 2015

விடை பெறுகிறார் மூத்த பதிவர் G.M. பாலசுப்பிரமணியம், நன்றி அய்யா!!!


பொறுப்பேற்கிறார் இளம்பதிவர் பூ.கார்த்திக்,  வருக நண்பரே!

அன்பின் இனிய வலைப் பதிவர்களே! வணக்கம்!
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற, 
மூத்த பதிவர் அய்யா !
G.M. பாலசுப்பிரமணியம் அவர்கள் தான் ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
அவர் தனது வலைச்சர வாரத்தில் மனதைத் தொட்ட பல பதிவர்களின் இடுகைகள்  பலவற்றை  நமக்கெல்லாம் பகிர்ந்தளித்து 

சுமார், 350 க்கும் மேற்பட்ட மறுமொழிகளும், 
71 தமிழ் மணம் வாக்குகளையும்,
1575 மேற்பட்ட பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளார்.
தான் ஏற்றப் பணியை வெகு சிறப்பாக பதிவர்களை பகுந்தாய்வு செய்து வலையுலகிற்கு அவர் அடையாளம் காட்டிவிட்டு சென்றுள்ளார்.
தமது வலைச்சர வாரத்தை அழகாக வடிவமைத்து தொடுத்த அய்யா G.M.B அவர்களை நன்றி பாராட்டி, வணக்கம் செலுத்தி, வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
சென்று வருக அய்யா G.M. பாலசுப்பிரமணியம் அவர்களே!
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க....
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில், 1988ம் ஆண்டு பிறந்த 
வலைப் பதிவரும், நண்பருமான பூ.கார்த்திக். அவர்கள் விருப்பம் தெரிவித்து முன்வந்துள்ளார்.
"காற்றில் எழுதியவன்" என்ற வலை வாசகத்தோடு வலம் வரும்,
கார்த்திக் புகழேந்தி என்ற புனைப்பெயரில் எழுதி வரும்  இவர்
தமிழ் படைப்புலகில் 2011ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கியுள்ளார். திருநெல்வேலி மாவட்ட வட்டார மொழிநடையில் சிறுகதை எழுத்தாளராக அறியப்படும் இவருடைய முதல் புத்தகம் "வற்றாநதி" என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அகநாழிகை பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது
இவர் தனது உயர் கல்வியை பாளையங்கோட்டையில் உள்ள கதீட்ரல் மேனிலைப்பள்ளியில் முடித்து,  தற்போது சென்னையில் பணியாற்றுகிறார். கரிசல்காட்டு இலக்கிய கர்த்தா திரு.கி.ராஜநாராயணன் ஆசிரியராகவும், திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணன் இணை-ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியராக வெளியிடும் கதைசொல்லி கத்தாய/ நாட்டுப்புற சிற்றிதழின் ஆலோசகராகச் செயல்படுகிறார். 

பொருநை-பொதிகை-கரிசல் அமைப்பின் பொருநை-கரிசல் பதிப்பகத்தின் நிர்வாகம் மற்றும் பதிப்பகப் பணிகளை கவனித்து வருகின்றார். 

தினமணி, அந்திமழை, ஆகிய இதழியல் ஊடகங்கள் இவரது படைப்புகளுக்காக தங்கள் பாராட்டுகளை வழங்கியுள்ளன.
சாகித்ய அகாதமி விருதுபெற்ற திரு.கி.ராஜநாராயணன், திரு.ஜோ டி குருஸ் ஆகிய படைப்பாளிகளை தன்னுடைய ஆதர்ச எழுத்தாளர்கள் என்று குறிப்பிடுகின்றார்.
தென்மாவட்டங்களின் வரலாற்றுக்கு ஊடுபொருளாக இருக்கும் நாட்டுப்புறக் கதைகள், தொல்பொருள் ஆவணங்கள், வட்டார வழக்கு மொழிகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றின் மீது ஆர்வமும், பயணங்கள், புகைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள், திரைக்கதை, எழுத்து, வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகியவற்றில் ஈடுபாடும் கொண்டவர்.
இவரது அடுத்த சிறுகதைத் தொகுப்பு ஆரஞ்சு முட்டாய்என்ற தலைப்பில் வெளியாக உள்ளது.
பூ.கார்த்திக் அவர்கள் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பினை சிறப்புடன் செய்வதற்கு வலைச்சரம் குழு அன்போடு அழைத்து மகிழ்கிறது!
பூ.கார்த்திக் (கார்த்திக் புகழேந்தி) அவர்களை,  இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி! அவர்களை,  "வருக.... வருக.." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துகள்  G.M. பாலசுப்பிரமணியம் அவர்களே !
நல்வாழ்த்துகள் பூ.கார்த்திக் (கார்த்திக் புகழேந்தி) அவர்களே !
நட்புடன்,
புதுவை வேலு

20 comments:

 1. நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 2. பணியினை சிறப்பாக நிறைவு செய்த -
  அன்பின் ஐயா திரு.GMB அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்..

  தொடர்ந்து பணிஏற்க வருகை தரும் -
  திரு. கார்த்திக் புகழேந்தி அவர்களுக்கு நல்வரவு..

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரம் வாசல் வந்து கருத்தினை தந்தமைக்கும்
   பாராட்டி சிறப்பித்தமைக்கும் நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 3. ஒரு மனதளவில் இளைஞனிடமிருந்து தொடர் ஓட்டப் போட்டிக்கான பேட்டனை வாங்குகிறீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரம் வாசல் வந்து கருத்தினை தந்தமைக்கும்
   பாராட்டி சிறப்பித்தமைக்கும் நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 4. GMB ஐயா அவர்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  திரு. கார்த்திக் புகழேந்தி அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரம் வாசல் வந்து கருத்தினை தந்தமைக்கும்
   பாராட்டி சிறப்பித்தமைக்கும் நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 5. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரம் வாசல் வந்து கருத்தினை தந்தமைக்கும்
   பாராட்டி சிறப்பித்தமைக்கும் நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 6. @ யாதவன் நம்பிக்கு
  அறிமுகத்தில் கூறி இருக்கும் சுட்டி சொடுக்கினால் அவரது தளம் வரவில்லை. தயை கூர்ந்து சரி செய்யவும் நன்றி

  ReplyDelete
  Replies
  1. மீள் வருகைக்கு மிக்க நன்றி அய்யா!
   தங்களது கருத்து ஏற்கத் தக்கதே!
   இருப்பினும், நணபர் கார்த்திக் புகழேந்தி அவர்களது வலைப்பூவின் இணைப்பு கீழ் உள்ளதே! அதை சொடுக்கி அவரது வலைப்பூவை சூடலாம்!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
  2. @ யாதவன் நம்பி
   வலைப்பூவின் இணைப்பைத்தான் சொன்னேன் பார்க்கவும் நன்றி

   Delete
 7. மிகச் சிறப்பாக ஆசிரியர் பணியை நிறைவேற்றிய ஜிஎம்பி ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றியும். கார்த்திக் புகழேந்திக்கு வரவேற்பு.

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரம் வாசல் வந்து கருத்தினை தந்தமைக்கும்
   பாராட்டி சிறப்பித்தமைக்கும் நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 8. ஐயாவுக்கு வாழ்த்துக்கள்...
  கார்த்தி கலக்குங்க...

  ReplyDelete
 9. ஐயாவுக்கு வாழ்த்துக்கள். கார்த்திக்கு வருக வருக வலைச்சரம் தொடுக்க!

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரம் வாசல் வந்து கருத்தினை தந்தமைக்கும்
   பாராட்டி சிறப்பித்தமைக்கும் நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 10. இருவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வலைச்சரம் வாசல் வந்து கருத்தினை தந்தமைக்கும்
   பாராட்டி சிறப்பித்தமைக்கும் நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது