07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 16, 2015

யார் எழுதுகிறார்கள்?

இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுப் பார்ப்போமே! தொடர்ந்து எழுதுபவர்கள் சிலரே. தொடர்ந்து எழுதுபவர்கள் என்பதில் தினமும் எழுதுபவர்கள் மட்டுமல்ல, வாரம் ஓரிரு பதிவுகள் எழுதுபவர்கள், மாதம் இரண்டு மூன்று பதிவுகள் எழுதுபவர்களும் அடக்கம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வலைப்பதிவுகளில் கோலோச்சிய சில பதிவர்கள் கடந்த சில மாதங்களாக ஒன்றுமே எழுதாமல் இருக்கிறார்கள். வேலைப்பளு, நேரமின்மை எனப் பல காரணங்கள் கூறினாலும் அவர்களுக்கு சோம்பல் மற்றும் எழுதுவதற்கான உற்சாகமான மனநிலை இல்லை என்றே சொல்லலாம்.

இவர்களில் முக்கியமான ஒருவர் வாத்தியார். திரையுலகின் வாத்தியார் எம்.ஜி.ஆர். என்றால் வலையுலகின் வாத்தியார் எங்கள் பாலகணேஷ் அவர்கள் தான். அவரின் மின்னல் வரிகள் தளத்தில் பின்னூட்டம் இடுவதற்குப் பலமுறை போட்டி கூட நடந்திருக்கிறது. அவருடைய தளத்தைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்குத் தெரியும். அவருடைய சரிதா கதைகள், மொறுமொறு மிக்சர் உள்ளிட்ட பதிவுகளுக்கும் ஹாஸ்யமான எழுத்து நடைக்கும் பலர் அடிமை. இப்போது சில மாதங்களாக எழுதுவதே இல்லை. கேட்டால் இந்த வேலை இருக்கிறது, அந்த வேலை முடியட்டும், அதன் பின்னர் ஆரம்பிக்கிறேன் என்று சாக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்.

நான் பலமுறை நேரிலும், தொலைபேசியிலும் தனிப்பதிவில் எழுதியும் அவரை எழுத வருமாறு கேட்டுப் பார்த்துவிட்டேன். இப்போது வலைச்சரம் வாயிலாகவும் கேட்கிறேன். வாருங்கள் வாத்தியாரே! வலைச்சர வாசகர்களும் கேளுங்கள்.

அவருடைய பதிவுகளில் எனக்குப் பிடித்தவை

யார் எழுதுகிறார்கள் என்று தலைப்பிட்டு தற்சமயம் எழுதாதவரை அறிமுகப்படுத்தி விட்டேன். ஆமாம், யார் எழுதுகிறார்கள்? எல்லாருமே உற்சாகமாகத்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். முகநூலில் சிலர் மூழ்கிவிட்டதால் இங்கே எழுதுவதைக் குறைத்துக்கொண்டுள்ளார்கள். தொடர்ந்து எழுதிவருபவர்கள் சிலரைப் பார்க்கலாமா?


கடவுள் வாழ்த்துப் பாடல்களும் சிறு கவிதைகளும் இன்னும் சமையல் குறிப்புகளும் நிறைந்திருக்கிறது இவரது வலைத்தளத்தில். அவற்றில் என்னைக் கவர்ந்தவைஅடுத்தது எங்கள் ப்ளாக் என்னும் வலைப்பூ. இது தனி நபர் வலைப்பூ இல்லை என்றாலும் ஸ்ரீராம் சார், கௌதமன் சார் ஆகியோர் உற்சாகமாக எழுதிவருகிறார்கள். சில சமயங்களில் ஒரே ஒரு படம் மட்டும் பதிந்து பின்னூட்டங்களை அள்ளிச்செல்பவர்கள். வெள்ளிக்கிழமை வீடியோ மற்றும் அலுவலக டார்ச்சர் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இந்த வலைப்பூவில் சில:
அடுத்தது சும்மா எனும் வலைப்பூவில் எழுதிவரும் தேனம்மை லட்சுமணன் அவர்கள். செட்டிநாட்டு வீடுகளாகட்டும், புத்தக அலசல்களாகட்டும், பயணக் கட்டுரைகளாகட்டும், சமையல் குறிப்பு, கோலங்கள் எல்லாவற்றிலும் வெளுத்துக்கட்டுபவர். இவரது பதிவுகளில் எனக்குப் பிடித்த சில:
நம் புலவர் திரு.ராமானுஜம் ஐயா அவர்கள் எழுதிவரும் கவிதைகள் அனைவரும் அறிந்ததே. அவருக்கு இப்போது வயது எண்பதுக்கும் மேல். இந்த வயதிலும் தனது உடல் நலனையும் பொறுத்துக்கொண்டு தவறாது கவிதைகள் எழுதிவருகிறார். பின்னூட்டங்கள் தான் தன்னை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதாக ஒரு நாள் நேரில் பார்த்தபோது சொன்னார். அவரது கவிதைகளில் சில:
புத்தம் புதிய வலைப்பதிவர் ஒருவரைப் பார்க்கலாமா? முகநூல் நண்பர் செல்ல பாண்டியன். பெங்களூருவில் வசித்துவரும் இவரது வலைப்பூ The Tramp Times தற்போது தான் அறிமுகமானது. என்னுடைய பதிவுகளை யார் படிக்கப் போகிறார் என்று அங்கலாய்த்திருந்தார். நாமும் நமது பின்னூட்டங்களை அளித்து அவரை உற்சாகப்படுத்துவோம். இவரது தளத்தில் சிற்சில மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளன. வலைச்சித்தர் உதவுவார் என்று நம்புவோம். இவர் எழுதிய பதிவுகளில் சில:
மீண்டும் நாளை சில பதிவர்களுடன் சந்திக்கலாம். தங்களது பின்னூட்டங்களைப் பதிந்து வையுங்க. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக மறுமொழியையும் பதிவு செய்கிறேன்.


நன்றி


43 comments:

 1. பாண்டியன் அவர்களின் பயணம் இனி எக்ஸ்பிரஸ் வேகம் தான்... அன்பர்களே தொடருங்கள்...

  ReplyDelete
 2. ஆசிரியர் வந்துட்டார், அமைதியா இருங்க. அவர் சொல்வதைக் கேட்போம்.

  ReplyDelete
 3. சுவாரஸ்யமான அறிமுகங்கள். ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அறிமுகப்படுத்திய உறவுகளுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 5. நன்றி! தம்பி! என் வயது எண்பத்தி மூன்று !

  ReplyDelete
  Replies
  1. 83 ஐ
   73

   தலை வணங்குகிறது.

   இவர் வலைக்கு நான் செல்லாத நாள் இல்லை என்றே சொல்ல இயலும்.

   தமிழக அரசு என்றாவது ஒரு நாள் அல்ல.... கூடிய விரைவில் இவரது பாடல்களை அரசு பள்ளிப் புத்தகங்களில் பதிவிடின்
   தமிழுக்கு அரசு செய்யும் தொண்டாக அமையும்.

   மரபுக்கவிதைகள் இவர் பதிவிலும் பிரான்ஸ் நாட்டு புலவர் பாரதி தாசன் அவர்கள் பதிவிலும் தான் காண இயல்கிறது.

   இவர் எழுத்து ஒன்றே
   நமது பலம்.

   சுப்பு தாத்தா.

   Delete
 6. பால கணேஷ் அவர்கள் கடந்த பதிவர் மாநாடு நடந்து முடிந்த பின்னே இருந்து சற்று கோபமாக இருக்கிறார் . அவருடைய கோபம் இன்னும் தணியவில்லை என நினைக்கிறேன்.

  நானும் உங்களைப் போல் தான் அவரிடம் நேரில் சொல்லவில்லை என்றாலும் அவர் பதிவில் அவரிடம்

  உங்கள் கருணைப் பார்வையை தொடருங்கள் என்று கேட்காமல் இல்லை.

  போதாக்குறைக்கு,அவர் இன்னும் ஒரு பதிவு எழுதுகையில், மயிலை கற்பக விநாயகருக்கு 1008 தேங்காய்கள் உடைத்து, , 1008 கொழக்கட்டைகள் நைவேத்யம் செய்வதாக மனமுருக வேண்டிக்கொண்டு இருக்கிறேன்.

  சுப்பு தாத்தா.
  (வேண்டுதல் சிலவு அவர் சிஷ்யர் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. )

  ReplyDelete
  Replies
  1. நம்ம பசங்கள என்னன்னு நெனச்சீங்க சுப்புத்தாத்தா..? எனக்கே 108 கொழுக்கட்டைகள் சமர்ப்பிக்கறவங்க விநாயகருக்கு 1008 செய்யறது பெரிய விஸயமா என்ன..? ஹா... ஹா... ஹா...

   Delete
  2. கருணைப் பார்வை என்பதெல்லாம் இந்த எளியவனுக்கு மிகப் பெரிய வார்த்தை ஐயா. நிச்சயம் இதை ஏற்று நான் இனி வேகமெடுக்கிறேன்.

   Delete
 7. அருமையான பதிவுகள்.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. நன்றி, எங்களைக் குறிப்பிட்டுள்ளமைக்கு! எங்களோடு இடம் பெற்றிருப்பவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. ஒரு காலத்தில் ஒருநாள் விட்டு ஒருநாளாவது பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தேன். அப்புறம் அப்படியே குறைந்து போய் எழுதவே விஷயம் இல்லாதது போல் ஆகிவிட்டது. போதாக்குறைக்கு முகப்புத்தகம் என்னும் பூதம் பிடித்துக் கொண்டவுடன் சின்னச் சின்னதாக அங்கேயே எழுதினால் ஆச்சு என்று ஆகி விட்டது...:)) பெரும்பாலானவர்கள் இப்படித் தான் என்று நினைக்கிறேன்...:))

  இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நல்லாச் சொன்னேள் போங்கோ... முகப்புத்தக பூதத்தைச் சற்று ஒதுக்கிவிட்டுத் தான் மீண்டும் இந்தப் பேட்டைக்கு நாம வர வேண்டியிருக்கு... அட்லீஸ்ட் நம்ம டாஷ்போர்ட்ல எப்டி போஸ்ட் போடறதுன்னு மறக்கறதுக்குள்ளாறயாவது. ஹி.... ஹி... ...

   Delete
  2. நீங்கள் நடைவண்டி அடுத்த தொடர் எழுதுங்க பின் ஓடிவருகின்றேன் அண்ணாச்சி நானும் முகநூல் போகாமல் இன்னும் மேய்ச்சல் மைதாணம் எல்லாம் தொடருங்க.

   Delete
 12. தம்ப்ரீ.... அங்கங்க சாக்குப் போக்குச் சொல்லி ஓடிடறேன்னு இப்ப பப்ளிக்குல மாட்டி வுட்டுட்டியே... உன் வேண்டுகோளின் பின்னான, என் மீது நீ வைத்திருக்கும் மலையளவு நம்பிக்கை இந்த நிமிடம் என்னைச் சற்றே வெட்கமுற வைக்கிறது. எனவே... இனி சோம்பலை உதறி வேகமெடுக்கிறேன் நிச்சயமாக.... (பாத்துக்கங்க மக்களே... விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.. போ.போற்றலும் தூ. தூற்றலும் போகட்டும் ஸ்.பை.க்கே.. ஹி... ஹி... ஹி...)

  ReplyDelete
  Replies
  1. வா.. வாத்யாரே வூட்டாண்ட.. நீ வராங்காட்டினா வுடமாட்டோம்....ஜாம்பக்கு ஜக்கு அட மேற்கு மாம்பலக் கொக்கு..

   Delete
  2. இந்தக் கொக்கிற்கு எல்லா கொக்குகளும் ஒத்தைக் கால்ல தவமிருக்குதாமே...செய்தி அடிபடுது...

   Delete
 13. அறிமுகப்படுத்திய உறவுகளுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 14. ஹஹஹா என் பேர் வரல. தப்பிச்சேன்

  ReplyDelete
 15. ஹஹஹா என் பேர் வரல. தப்பிச்சேன்

  ReplyDelete
 16. ஹஹஹா என் பேர் வரல. தப்பிச்சேன்

  ReplyDelete
  Replies
  1. ஆவி! ஏம்பா இப்படி கோர்ட்ல சொல்றா மாதிரி 3 தடவ? வடிவேலு ஸ்டைலா!! நான் ரௌடி நான் ரௌடினு சொல்றா மாதிரி...ஹஹஹ்

   Delete
 17. என்னையும் இங்கு குறிப்பிட்டு காட்டியமைக்கு நன்றிகள் சகோ.

  என்னுடன் அறிமுகமாகிய சகோக்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  ReplyDelete
 18. வாத்தியார் பாலகணேஷ் சாரின் எழுத்துக்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். சரிதா கதைகளில் அவரின் ஹாஸ்யம் பிரம்மிக்க வைக்கும். அவர் தொடர்ந்து எழுதாமல் இருப்பது வருத்தமே! மற்றபடி அனைவரும் நான் விரும்பி படிக்கும் எழுத்தாளர்கள்தான். இறுதியில் அறிமுகம் செய்துள்ள புதிய வலைப்பூவிற்கு சென்று பார்த்து உற்சாகம் ஊட்டுகின்றேன்! வலையுலகம் செழிக்க இந்த பின்னூட்டங்கள் தானே முக்கியம்! தொடர்வோம்! நன்றி!

  ReplyDelete
 19. அனைத்து அறிமுக பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
  த ம 5

  ReplyDelete
 20. இன்றைக்கு நீங்கள் அறிமுகம் செய்தவர்களில் வலையுலக வாத்தியார் பாலகணேஷ், சகோதரிகள் ஆர்.உமையாள் காயத்ரி, தேனம்மை லட்சுமணன், எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் & கௌதமன், மற்றும் புலவர் அய்யா ராமானுஜம் ஆகிய அனைவரது பதிவுகளையும் தமிழ்மணத்தில் தொடர்ந்து வாசிக்கும், வாகர்களில் நானும் ஒருவன்.

  மின்னல்வரிகள் ஏனோ வலைப்பக்கம் அதிகம் வருவதில்லை. சகோதரி ஆர்.உமையாள் காயத்ரி அவர்களது பதிவுகளில் சுவையான சமையல் வாசனை அதிகம்.

  தமிழ்மணத்தில் அடிக்கடி சளைக்காமல் அதிகம் எழுதும் சகோதரி தேனம்மை லட்சுமணன் அவர்களின் பதிவுகளில் செட்டிநாட்டு கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அதிகம் காணலாம். இவரது சாட்டர்டே போஸ்ட் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

  எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் & கௌதமன் ஆகியோரது அனுபவங்கள் படிக்க சுவாரஸ்யமானவை.

  வயதானால் என்ன, வலைப்பக்கம் வந்து தொடர்ந்து எழுதுவேன் என்று எழுதும் புலவர் ராமானுஜம் அய்யாவின் மரபுக்கவிதைகள் சிறப்பானவை.

  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஸார்.

   Delete
 21. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  நிறைய படங்கள் போட்டு பத்தி பத்தியா எழுதுவதென்றால் வலைப்பூ தான் பெஸ்ட் சாய்ஸ்.

  ReplyDelete
 22. தங்கள் பணி தொடரட்டும், அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 23. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  கணேஷ் - விரைவில் தனது பக்கத்தில் பதிவுகள் எழுதிட வேண்டும்..... நல்லதாய நகைச்சுவை பதிவு படித்து நாளாயிற்று! வாங்க வாத்தியாரே சீக்கிரம்!

  ReplyDelete
 24. புதிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி! மற்றவர்கள் அனைவரும் நமது நண்பர்கள் வாத்தியாரக் கூப்பிட்டாச்சு.....சகோதரிகள்...எங்கள் ப்ளாக் மிகவும் ரசனையான ஒன்று....சகோதரிகள் கலக்குகின்றார்கள்....புலவர் ஐயாவின் கவிதைகள் உட்பட

  அனைவருக்கும் வாழ்த்துகள்....

  ReplyDelete
 25. இன்றைய வலைச்சர அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்.
  கில்லர்ஜி.

  ReplyDelete
 26. இன்றைய வலைச்சர அறிமுகங்களுக்கு என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 27. மின்னல்வரி மீண்டும் சிரிக்க வைக்கட்டும்.

  ReplyDelete
 28. புதியவரின் தளத்துக்கு இனிச்செல்கின்றேன்.புலவர், உமையாள் , எங்கள் பிளாக் எல்லாம் நானும் படிக்கும் தளங்கள் .

  ReplyDelete
 29. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. உமையாள் காயத்ரியின் பதிவுகள் எனக்கும் பிடித்தமானவை. சமையல் பதிவுகளில் அசாத்ய பொறுமையோடு புகைப்படங்கள் போட்டுப் பகிர்ந்திருக்கும் விதம் அற்புதம் :) & ருசிகரம் :)

  பால கணேஷ் சகோவின் எழுத்துக்களும் எனக்குப் பிடிக்கும். நகைச்சுவையின் மொத்தக் குத்தகைக்காரர்.

  எங்கள் ப்லாக் நம் அனைவரின் ஃபேவரைட் ப்லாகும் கூட :)

  புலவர் ராமானுஜம் ஐயாவின் பதிவுகளும் சிறப்பானவை. செல்லபாண்டியன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  மிக்க நன்றி கார்த்திக் என்னுடைய பதிவுகளையும் வலைச்சரத்தில் குறிப்பிட்டுச் சிறப்பித்தமைக்கு. :)

  ReplyDelete
 31. பல அறிமுகப்பதிவர்கள் அறிமுகமானவர்கள். அறியாதவர்களின் பதிவுகளைப் படிக்கவுள்ளேன். தங்களின் அறிமுகத்திற்கு நன்றி. நாளை சந்திப்போம்.

  ReplyDelete
 32. காலை 6 மணி லேந்து வலைச்சரம் ஏர்போர்ட் லே அரைவல் லௌஞ்சி லே சரவணன் சார் வர்ற ப்ளைட்டுக்காக வைட் பண்ணிட்டு இருக்கோம்.

  இன்னும் லேன்ட் ஆகல்லே...

  யாருக்கும் ஏன் லேட் அப்படின்னும் தெரியல்ல.

  சீனா சார்க்கு செல் அடிச்சா சுவிச் ஆப் அப்படின்னு சொல்லுது.

  சரவணா !! எங்கப்பா போன ??

  வாங்கய்யா.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. நானும் இன்றைய பொழுது மூன்றுதரம் விமாணநிலையம் வந்து பார்த்தேன் சுப்பு தாத்தா அவரைக்காணவில்லை!சரவணா ஏதும் செல்பியில் மூழ்கிவிட்டாரோ மோடியுடன் [[[[[[[[[[[[[[[[[[[[[[

   Delete
 33. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் சரவணன் கலக்குங்க

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது