07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஆயில்யன். Show all posts
Showing posts with label ஆயில்யன். Show all posts

Sunday, June 15, 2008

நன்றி சொல்லவே உமக்கு....!

நன்றி சொல்லும் நேரம் வந்தது!

நலமாக வலைச்சரப்பணி செய்த காலம் கடந்தது! (ஒரு வாரம்தானாம்...!)

நன்றி சொல்லும்போது அனைவருக்கும் மகிழ்ச்சி இருக்கலாம்! ஆனால் சொல்லும் மனிதரின் மனதில் ஏதேனும் ஒரு சோகம் தயங்கி தங்கியிருக்கும் என்பது உண்மை!(இதெல்லாம் ரொம்ப ஓவரு அப்படின்னு ஃபீல் பண்ணாதீங்கப்பா!)

காயத்ரி அக்காவின் நட்சத்திர நன்றிகளோடு

இலவச கொத்தனாரின் நட்சத்திர நன்றிகளோடு

மோகன் தாஸின் நட்சத்திர நன்றிகளோடு

மலைநாடானின் நட்சத்திர நன்றிகளோடு

கண்ணபிரான் ரவிஷங்கரின்(KRS) நட்சத்திர நன்றிகளோடு

அபி அப்பாவின் நட்சத்திர நன்றிகளோடு


வலைச்சரத்தில் என் நன்றியினையும் கூறிக்கொண்டு ,

இந்த ஒரு வாரமும் என் வலைசர பதிவுகளுக்கு வந்து, பதிவுகளை பார்த்து,படித்து பின்னூட்டமிட்டு சென்ற பதிவர்களுக்கும், பார்த்து சென்ற பதிவர்களுக்கும், என் நன்றியினைகூறி வலைச்சரதிலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்!

நன்றி!



வணக்கம்!
மேலும் வாசிக்க...

பாட்டும் இவர்கள்! பாவமும் இவர்கள்!


அனைத்து வசதிகளும் கிடைக்க ஆரம்பிததுவிட்ட இணையம்!

24 மணி நேரமும் ஓடிக்கொண்டேயிருக்கும் இணைய வானொலிகள்

ஆடியோ ரீலிசான அடுத்த சில மணி நேரங்களில் இணையத்திலும் எப்படியோ ரீலிசாகிவிடும் அதிசயம்!

இத்தனை விஷயங்களையும் தாண்டி எந்தவொரு ஆயாசமும் இன்றி வந்துக்கொண்டிருக்கிறது தமிழ் திரைப்படப்பாடல்கள்! தொடர்ச்சியாக! ஒவ்வொருமுறையும் அவர்களின் பதிவுகளில் நிரம்பி நிற்கும் பாடல் பற்றிய உற்சாகங்களை பார்த்தாலே தெரியும் உங்களுக்கு...!

பல பதிவுகளில் பாடல் ஒசைக்கேட்டாலும் கூட அதி விருப்பமாய் மனம் அடித்து பிடித்துக்கொண்டுபோய் நிற்க வைக்கும் சில பதிவர்கள் தளங்கள்!


ரேடியோஸ்பதி (றேடியோஸ்பதி)


பதிவர்களின் விருப்பங்கள் அவ்வப்போது வந்து அசத்தி செல்கிறது! அதோடு மிகவும் பிடித்த போட்டி - நாம போட்டிக்கு கஷடப்படுறோமோ இல்லையோ கானா பிரபா ரொம்பவே கஷடப்பட்டு படத்தை பார்த்து அதிலேர்ந்து யாரும் ஈசியா கண்டுபிடிக்காத அளவுக்கு பின்ணணி இசையை பிரித்து சொல்றதுக்கே எனக்கு பொறுமை இல்லை! எவ்ளோ பொறுமையா செய்து முடிக்கும இவரின் இந்த வலைப்பதிவு!

۞۞۞۞۞

தேன்கிண்ணம்

இப்பத்தான்ய்யா ஆரம்பிச்சாங்கன்னு சொல்ற மாதிரி ரொம்ப குறுகிய காலகட்டத்தில இத்தனை பாடல் பதிவுகள் குறிச்சொற்களை வைத்து நாம் எளிதில் எடுத்து விட முடியும் நம்க்கு பிடித்த எந்த வொரு பாடலையும் குழுவில் தேனீக்களுக்கு ரொம்ப பிடித்தமான விளையாட்டுப்போல பாடல் பதிவது!

குறிப்பிட்டு சொல்ல வைக்கும் தேனீயாக மைஃப்ரெண்ட்டு! ஹலோ எனக்கு இந்த பாட்டு போடமுடியுமான்னா? கேட்டா..? இல்ல இப்ப நான் பிசி அப்பிடி இப்பிடின்னு எந்த ஒரு பதில் மெசேஜும் இருக்காது! அடுத்த கொஞ்சம் நேரம் கழிச்சு பாட்டு போட்ட செய்தியை அனுப்பிடுவாங்க!

۞۞۞۞۞
பாடும் நிலா பாலு!

தமிழ் சினிமா உலகில் பாலுவுக்கு தனி இடம் உண்டு என்றால் தமிழ் பதிவுலகில் எஸ்.பி.பியின் பாடல்களுக்கென் தனி இடம் இது பாடும் நிலா பாலு!

பாலு பாடிய பாடல்களின் பெட்டகச்சாலையாக காட்சியளித்துக்கொண்டிருக்கும் இந்த வலைப்பதிவில் அ - ஃ வரையிலான அனைத்துபாடல்களும் இருக்குங்க!

இசையின் மீது கொண்ட ஆர்வம்!
அலுப்பில்லாத உழைப்பு!

இவையிரண்டும் மட்டுமின்றி பாடல் கேட்போரின் பலத்த ஆதரவு இதுவே இன்று வரையிலும் இவர்களை இணையத்தில் இயங்க செய்துக்கொண்டிருக்கும் விஷயங்கள்!

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!

நம் விருப்பங்களை நிறைவேற்றும் இந்த வலைப்பதிவுகளிலும் மூலமும் கூட நீங்கள் நட்பின் முகவரிகளை நிறைய காணமுடியும் சென்று பாருங்களேன்!
மேலும் வாசிக்க...

மயிலாடுதுறை - ஊர்க்காரங்க சொல்றாங்க!!


வலைச்சரத்தில் ஊர்ப்பெருமை பேசாம விட்டா நல்லாவா இருக்கும்னு மனசுக்குள்ள கேள்வி எழவே இல்லை! ஏன்னா..! ஏற்கனவே தீர்மானமா முடிவு பண்ணுன விஷயம்தானே!

எங்க ஊர்க்கார பதிவர்கள் எல்லாருமே ஊரைப்பத்தி சொல்லியிருக்கும்போது வுட்டுட முடியும்ங்களா!


பிறந்தக பெருமை எனக்கு ஊரைப்பத்தின நினைப்பு வரும்போதெல்லாம் இந்த பதிவுகளுக்குள் முழ்கிவிடுவேன் ஏன்னா இவரு போன பாதைகளிலே நானும் பயணித்திருக்கிறேன்ல

எங்கள் கிராமமாகிய நல்லத்துக்குடி, மாயவரம் டவுன் ஸ்டேஷனில் இருந்து, அதாவது மயிலாடுதுறையின் சர்வதேச வரைபட எல்லைக்கோட்டில் இருந்து 'கொஞ்சூண்டு' உட்பட்ட இடம். கொஞ்சூண்டு என்றால் நிஜமாகவே கொஞ்சூண்டு தான். கால் மைலுக்கும் குறைவு. ஒரு அரைக்கால் மைல் இருக்கலாம். ஆனால், பனிக்கட்டி படர் இந்திய சியாச்சேன் மலை-பாகிஸ்தான், இஸ்ரேல்-பாலஸ்தீனிய எல்லைக்கோடுகளை விட இது அதி முக்கியத்துவம் வாய்ந்த சென்சிடிவ்வான இடம்.(இன்னும் கொஞ்ச தூரம் போன எங்க வீடு வந்துடும் தெரியுமா?)

பாகம் ஒண்ணு
பாகம் ரெண்டு
பாகம் மூணு
பாகம் நாலு
பாகம் அஞ்சு
பாகம் ஆறு!

۞۞۞۞۞

ஊருல இருக்கற தியேட்டரை பத்தின பதிவு இது புது புது படம் பார்க்கறதுக்கு அடிச்சு புடிச்சு போய் நின்ன ஞாபகங்கள் வருது! மயிலாடுதுறை வாழ் பெருமக்களுக்கு (முக்கியமாக சினிமாவில் ஆர்வமில்லாதவர்களுக்கும்) பியர்லஸ் தியேட்டரை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. சினிமா ரசிகர்களுக்கோ இது சினிமா பேலஸ்!

ரீலிஸான நாளன்று பாலம் முழுவதும் கூட்டத்தால் நிறைந்திருக்கும். வெயிலானாலும் மழையானாலும் கூட்டத்துக்கு பஞ்சமிருக்காது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழ்.

۞۞۞۞۞

எங்க ஊருல வார விடுமுறையை கொண்டாடணும்னா இங்க தான் நாங்க வருவோம் உசரத்தில போய் உக்காந்துக்கிட்டு சைக்கிளை திரும்ப மிதிக்காமலே சர்ருன்னு வர்றது இப்படியெல்லாம் செய்யலாம் இந்த இடததுல் எந்த இடம்ன்னு இவுங்க சொல்லியிருக்காங்க போய் பாருங்க!

மேலே போனதும் நடைபாதை மேலே சைக்கிளை வைத்துவிட்டு கீழே ரயில் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டே கேள்விகேட்க ஆரம்பித்துவிடுவோம். அந்த

கண்ணாடி போட்ட ரூமில் யாரு இருக்கா? அங்க இருந்து கொடுக்கராங்களே பெரிசா வட்டமா அது தான் சாவியா? விளக்கு ஏத்தறது பார்க்கரது கூட சந்தோஷம்..

۞۞۞۞۞

இதே மேம்பாலம்தான் ஆனா இவுருக்கு கொஞ்சம் அதி(டி)க அனுபவம் அதான் படமெல்லாம் கூட போட்டிருக்காரு!

அப்போது ஏழாங்கிளாஸ் படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். மேம்பாலத்தின் உச்சியிலிருந்து சைக்கிளை மிதிக்காமல் உருட்டிக்கொண்டே ஓட்டிவந்தால் காவேரி நகர் பஸ் ஸ்டாப் வரை போய்விட முடியுமா என்பதை பரீட்சித்துப் பார்க்க ஆசை. ரோட்டோரமாய் நின்று கொண்டிருக்கும் லாரி சரக்கு போர்ட்டர்கள் எதிர்பார்த்த மாதிரியே எதிரே வந்த லாரிக்காரன் மீது சைக்கிளை மோதியதால் வாழ்க்கையில்...

۞۞۞۞۞

எங்க ஊரு பெரிய கோவிலை பத்தி ரொம்ப விரிவா அதேசமயத்தில ரொம்ப பொறுமையா,எல்லாரையும் கூட்டிக்கிட்டு போய் காமிக்கிறாரு அபி அப்பா இங்க இன்னும் அம்மன் கோவில் பாக்கி இருக்கு! அதுக்கு அப்புறமா கூட்டிக்கிட்டு போவாரு!

۞۞۞۞۞

மயிலாடுதுறையில இருக்குற நாலு கோவில்களில் இதுவும் ஒண்ணு

புனுகீஸ்வரர் கோயில்.. சின்ன வயசில் வாரத்தில் முக்கால்வாசி நாட்கள் கோயிலில் தான் சாயங்காலப்பொழுதுகள். வியாழன் தட்சிணாமூர்த்திக்கு ..அபிசேகத்திலிருந்து ஒருகை சுண்டல் வரை என்று ஆரம்பிக்கும் , வெள்ளிக்கிழமை விடுமுறை என்றால் துர்க்கைக்கு விளக்கு .. சனிக்கிழமை சனிபகவான் அர்ச்சனை, எள்ளுசாதம் ஒரு பிடி..
ஞாயிற்றுக்கிழமை வாரவழிபாடு.. அம்மா அப்பா போகும் இடமெல்லாம் நாங்களும்..

۞۞۞۞۞

எஙக ஊருக்காரரோட ஊர்ப்பயண அனுபவம்
இந்த வருடம் மயிலாடுதுறையில் குடியரசு தின விழாவில் பள்ளிக்குக் கொடியேற்றி, சிறப்புரையாற்றச் சென்றிருந்த போது.. குழந்தைகளுக்குப் பரிசு வழங்க வேண்டியிருந்தது.. அப்பொழுது தன் மகளின் ஆட்டத்தைக் காண வந்திருந்த ஒரு (ஏழை உழைப்பாளி) தந்தையை மேடைக்கு அழைத்து அவரையும் சில பரிசுகளை அவர் கையால் வழங்க வைத்தது...

۞۞۞۞۞

இன்னிக்கு வரைக்கும் முகமூடி போட்டுக்கொண்டிருக்கும் எங்க மாயவரத்துகாரரு! அனுபவம்!

ஒன்பதாம் வகுப்பில், முதல் தமிழ் மாதத்தேர்வு. நாங்கள் 5 பேர் கூட்டுத்தேர்வு (இதை ஆங்கிலத்தில் காப்பி அடிப்பது என்கிறார்கள்) எழுதியதில் எனக்கு மட்டும் கூட்டணியில் மட்டுமல்ல வகுப்பிலேயே முதன் மதிப்பெண் வந்தபோது கூட்டணி கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் ஆச்சர்யம்தான்... கூட்டணி தர்மத்தை மீறி உள்குத்தாக நான்கு பதில்கள் அதிகம் எழுதிவிட்டேனோ என்று சந்தேகத்தில் மார்க் ஆராய்ச்சி மேற்கொண்டதில் தமிழாசிரியர் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழைக்கு எல்லாம் கால் அரை மதிப்பெண்கள் குறைக்கிறார் என்பது அறிய வந்தபோது நான் கையறு நிலைக்கு தள்ளப்பட்டேன். ஒரு காலத்தில் எழுத்துப்பிழை இல்லாமல் மட்டுமல்ல, குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம் முதற்கொண்டு இலக்கண ரீதியாகவும் இயல்பிலேயே சரியாக எழுத வாய்த்திருந்தது என்பதை நினைத்தால் இப்பொழுது பெருமூச்சுதான் விடமுடிகிறது.


۞۞۞۞۞

இதுவும் எங்க ஊரு மூக்கு அண்ணே!

அடிக்கடி போய் வந்தாலும் அலுக்காதது மாயவரம் மாயூரநாத ஸ்வாமி கோயில்தான். வருடம் முழுமைக்கும் ஏதாவது நடந்து கொண்டிருந்தாலும், ஐப்பசி மாதம் முழுக்க திருவிழாக் கோலம் பூண்டுவிடும் கோயில் அது. ஐப்பசி மாதம் முதலாம் தேதி கோயிலில் கொடி ஏறியதுமே, லேசாக மழை தூறி விடும். அன்று தொடங்கி, ஐப்பசி 30, கடைமுழுக்கு வரை, கோயில் புறப்பட்டு, ச்ந்நித்த் தெரு, வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக, எங்கள் தெருவான மேலவீதி வந்து, பிறகு பட்டமங்கலத் தெரு வழியாக நேராக லாகடம்

۞۞۞۞۞

மாயவரத்துக்காரரு! இவரோட ஸ்கூல் படிப்பு + அப்படியே சினிமாவுக்கு போன செய்தி இது

'இலங்கைப்பிரச்னை'க்காக பள்ளிக் கூடங்களில் ஸ்டிரைக் நடந்து கொண்டிருந்த காலகட்டம். நேஷனல் ஹைஸ்கூலில் ரோட்டுப்பக்க ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருப்பேன். பத்தரை மணி சுமாருக்கு ஸ்டிரைக்கை வெற்றிகரமாக முடித்த மற்ற பள்ளிக்கூட மாணவர்கள் ஒன்றாக திரண்டு எங்கள் ஸ்கூல் பக்கம் வரும் இரைச்சல் கேட்கும். மனசு உற்சாகத்தில் கரை புரள ஆரம்பிக்கும். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஸ்டிரைக் காரணமாக ஸ்கூல் லீவு விட்ட 'பெல்' சப்தம் எழும். நாங்கள் சுமார் இருபது பேர் திடுதிடுவென விஜயா தியேட்டருக்கு ஓடுவோம்

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!

இன்னும் கூட நிறைய பேர் தமிழ் பதிவுலகத்தில் இருக்காங்க அவங்களும் சரி இவுங்களும் சரி இன்னும் நிறைய பதிவுகளை எழுதணும்ன்னு ஒரு கோரிக்கை வைச்சுக்கிறேன்ப்பா!
மேலும் வாசிக்க...

தலைப்பு வைக்க தெரியிலப்பா! - எல்லாமே சிரிப்புத்தான்!


இது ஒரு பெரிய தொகுப்புங்க! அவ்ளோதான் தலைப்பு வைக்கவும் தெரியல!


வ.வா.சங்கத்து ஆளுங்களுக்கு மலேஷியாவா சுத்தி காமிச்ச கதை இது ரெண்டு பார்ட்டா வந்த இந்த மேட்டர்ல எல்லா வ.வா.சங்கத்துல ஆளுங்களும் மைஃபிரெண்டு தன் கணினி தமிழால எவ்ளோ அடிச்சாலும் தாங்கிக்கிட்டே ஊரைசுத்தி பார்த்துட்ட வந்திருக்காங்க நீங்களே பாருங்களேன்!

۞۞۞۞۞

நீங்க பேய் பாத்தீருக்கிங்களா? இப்படித்தான் டைட்டில் அப்பவே முடிவு பண்ணிருப்பாரு போல குசும்பன் பதிவுல இருக்கிற மேட்டர்களை விட கமெண்ட்ல இருக்கிற மேட்ட்டர்கள் செம கலக்கல்தாங்க!

வளர வளர ரொம்ப தைரியசாலி ஆய்ட்டேன். கரப்பான் பூச்சிய மீசைய பிடிச்சி தூக்கறது, எலிய வாலப்பிடிச்சு தூக்கறதுன்னு (செத்தது தான்!) எல்லாரும் ஆச்சரியப்படற அளவுக்கு வீர சாகசமெல்லாம் பண்ண ஆரம்பிச்சேன்!! ஒரு முறை பெரிசா பெருச்சாளி ஒன்னை நான் அசால்ட்டா ஒரு கைல பிடிச்சிட்டு போன தகவல் தெரிஞ்சு "எனக்கு வால் (ள் இல்ல!) பிடித்த வீராங்கனை கவிதாயினி காயத்ரியோட இந்த பதிவு

இதுதான் ஹைலைட்!

பாவி குசும்பா.. எங்கம்மா கமெண்ட் எல்லாம் படிச்சி கண்ல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சிட்டு "உன் போஸ்ட்ட விட இந்த கமெண்ட்ஸ் நல்லாருக்கு" ன்னு இன்சல்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க. நல்லாருப்பா!

۞۞۞۞۞

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...1 பார்ட்டு பாட்டா போட்டு தாக்கியிருக்காருங்க மெதுவா பொறுமையா அனுபவிச்சு படிங்க!

நான் சொல்லும் ஜொள்ளு எனப்படுவது யாதெனின், அகலாது அனுகாது, மனதைப் புண்படுத்தாமல், அப்புறம் நினைத்துப் பார்க்கும் போது உதட்டின் ஓரத்திலோ, மனதின் ஓரத்திலோ சம்பந்தப்பட்ட பெண்மணி உட்பட எல்லாருக்குமே ஒரு புன்முறுவல் வரவைக்குமே...அது..அந்த குறும்பு, சேட்டை, ஃபீலீங்...அதே தான். இந்த சேட்டை சில நேரங்களில் காதலாக டெவலப் ஆகி சில அபாக்யவான்களுக்கு கல்யாணத்தில் முடிந்திருக்கிறது

۞۞۞۞۞

தமிழ் பிளாக்கர்ஸ் முக்கியமான ஆளுங்கள இவரு கூட்டிக்கிட்டு போறாருங்க சன் டிவியில நிகழ்ச்ச்சிக்கு அங்க நடக்குற இல்ல இல்ல பேசுற கூத்துகள்தான் படிச்சு படிச்சு சிரிக்க வைத்த பதிவுகளில் இது

۞۞۞۞۞

கப்பி மொக்கையாக சொன்ன விஷயமாம் இது

வேலை பார்க்கற பில்டப்பை கொடுத்துட்டு இந்த பக்கமும் அந்த பக்கமும் நடந்துட்டிருக்க உடன்பிறப்புகள், மொய் எழுதற கோபக்கார மாம்ஸ், அவருக்கு அசிஸ்டெண்டா வருங்கால மொய் எழுத்தாளர், அவங்களை குழப்பறதுக்காகவே சுத்தி ஒரு குரூப்பு, முண்டா பனியனோட கிச்சன்ல ஒரு குரூப்பு, கொடுத்த காசுக்கு மேலையே காது கிழிக்கும் நாதஸ்வர ட்ரூப், தாலி கட்டினதும் கையில இருக்க அட்சதை தூவிட்டு திரும்ப சேர்ல உட்காராம அப்படியே பந்திக்கு போற மக்கள்ஸ், பந்தி ஆரம்பிக்கறதுக்கு அரைமணி நேரம் முன்னாடியே இலையைப் போட்டு சாப்பாடு அயிட்டங்களையும் போட்டு ஈ மொய்க்க விடற ஆபிசர்ஸ், டால்டா வாசனை மாறாத பொங்கல், நீச்ச தண்ணி காபி, காலி பக்கெட்டை இந்த பக்கமும் அந்த பக்கமும் கொண்டு போய் சீன் போடும் சித்தப்ஸ், சாப்பிடறதையும் விடாம படம்புடிக்கும் கேமராமேன், சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள

۞۞۞۞۞

தன் பெயர் பிரச்சனைகளை கூறும் தருமி அய்யா!

நீங்களும் தமிழில் ‘சாம்‘ என்பதையும், ஆங்கிலத்தில் ‘Sam‘ என்பதையும் மனதுக்குள் சொல்லிப்பார்த்துக் கொள்ளுங்கள்; அப்போதுதான் என் பிரச்சனை என்ன என்பது அதன் முழுப் பரிமாணத்துடன் உங்களுக்குப் புரியும். அதுவும் என் பெயருடன் வேற்றுமை உருபுகளைச் சேர்த்துப் பாருங்களேன்:

குழலியைக் கண்டேன் - நல்லா இருக்கு; சாமைக் கண்டேன் - இது எப்படி நல்லாவா இருக்கு?
வீ.எம்மால் முடியும்; ,, சாமால்…ம்..ம்.. ‘’
முகமூடிக்கு நல்ல மனசு ‘’சாமுக்கு…எனக்கே பிடிக்கலை
ஷ்ரேயாவிடம் சொல்லுங்கள் ‘’ சாமிடம்..ஏதோ ‘சாமி மடம்’ மாதிரி இருக்கு.
துளசியின் செல்லங்கள் ,, சாமின்… Ho Chi Minh மாதிரி இல்ல?
ஸ்ரீரங்கனோடு பேசணும். ‘’ சாமோடு….நிச்சயமா நல்லாவேயில்லை
பாலாவுடன் தொடர்பு கொள்ளணும் ‘’ சாமுடன்…அவசரத்தில் தமிழ்சசியை தமிழச்சி
என்று வாசிப்பதுபோல சா மூடன் என்று வாசிக்கக்கூடும்

ஷ்ஷ்ஷ்ச் எப்படியெல்லாம் ஃபீல்பண்ணியிருக்காரு பாருங்க!

۞۞۞۞۞

இது உஷா அக்காவின் கலக்கல் காமெடிகளில் ஒன்று நானே நட்சத்திரம் ஆனேனே!

அட மறந்தே போயிட்டேனே, மொதல் இடுகை, தன்னடக்கத்துடன் பணிவான வணக்கம். கடைசி இடுகை நன்றி நவிதல்"
இடுகைன்னா...
அதுதாங்க போஸ்ட்!
"ரெண்டு மூணு கவிதைகள் இருக்கு, பின்னிரவில் முயங்கும் பூனைகளின் எச்சங்கள், மரணத்தவன் கை எழுதுகோல் சித்திரங்கள் .. அப்புறம்"
"பூனையா? காக்கா, குருவி போடுவதைத் தான் எச்சம்னு தமிழ்ல சொல்லுவாங்க"
"ஐயா சாமி! இது நவீன இலக்கியம், பூனை, எப்பவாவது நாய் ஆகிய ரெண்டே விலங்குகள் மட்டுமே கவிதையில வரும். மரணம், சாவு, தற்கொலை, இரவு, நிழல், மேல் தட்டு வர்க்க பார்வையில் கெட்ட வார்த்தைகளாய் சொல்லப்படும் சில சொற்கள்... இதெல்லாம் நவீன இலக்கியத்தின் இலக்கணங்கள். இதை மீறி யாராலும் நவீன கவிதையோ அல்லது கட்டுரையோ எழுதிட முடியாது!

۞۞۞۞۞

இது பரீட்சை ரிசல்ட பத்தின லக்கியோட பதிவு!

அப்பாவுக்கு என் மீதிருந்த நம்பிக்கை பயம் கொடுத்தது. என்ன எழுதி கிழித்திருந்தேன் என்பது எனக்குத்தானே தெரியும்? நான் படித்தது காமர்ஸ் க்ரூப்.
மச்சான். அது நம்ப டிஸ்ட்ரிக்ட் ரிசல்ட் இல்லேடா!”

“பரவாயில்லை.. பார்த்துக்கலாம். ஏதாவது ப்ரிண்டிங் மிஸ்டேக் ஆகியிருக்காதா என்ன?” செந்திலின் பதில் எனக்கு மகிழ்ச்சியை வரவழைத்தது. பையனும் காலி. சூப்பர்!

பின்னர் மதிப்பெண்கள் வந்தபிறகு கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. மேத்ஸ் எக்ஸாம் ஆனந்தராஜை பார்த்து எழுதினேன். அந்த தறுதலை ஏகப்பட்ட அடிஷனல் ஷீட் வாங்கி எழுதினான். உலகத்திலே மேத்ஸ் எக்ஸாமை கற்பனை செய்து எழுதிய ஒரே நாயாக அவன் தான் இருப்பான்! சரி பதிவுதான் இப்படி சிரிக்கவைச்சுட்டாரேன்னு பின்னூட்டத்தை பாருங்களேன்!

PSV said...
நன்று. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இங்கு வெளியிடப் பட்டுள்ளன.
லக்கிலுக் said...
பி.எஸ்.வி. அவர்களே! அங்கும் என் நம்பரை தேடிப்பார்த்தேன். காணவில்லை :-(

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுக்கோளாய்...!

1ம் இல்லைங்க படிச்சுட்டு நல்லா சந்தோஷமா சிரிங்க அவ்ளோதான்!
மேலும் வாசிக்க...

சுத்துறாங்க சுத்துறாங்க கொசுவத்தி சுத்துறாங்க!


மலரும் நினைவுகளை பகிர்ந்துக்கொள்வதில் எப்பொழுதுமே ஒரு சந்தோஷம்தான் அதுவும் ஒருவரின் பழைய நினைவுகளை பார்த்து, அதே போன்று அனுபவம் பெற்றிருந்தவருக்கும் மனதில் நினைவுகளோடு சந்தோஷம் பீறிட்டுக்கிளம்பும்!

இந்த கொசுவத்திகள் தனிமையின் இசை!

இந்த மாதிரி ஒரு கொசுவத்தி ஏத்தி பதிவுல புகை மண்டலத்தையே கிளப்பிய அபி அப்பா!

மாலை 4.00க்கு எல்லாம் எங்க வீட்டுல கூடிடுவாங்க. அதுல நீ எந்த கலர் புடவை நான் எந்த கலர் புடவை எல்லாம் முதல் நாள் முடிவுசெஞ்ச மாதிரி வந்து பார்த்தா ஏதாவது ஒரு சித்திக்கு புடவை சுமாரா இருக்கும்.அவங்க எல்லார் கிட்டயும் அவசரமா டாய்லெட் போகனும்ன்னு வீட்டுக்கு ஓடுவாங்க. திரும்பும் போது வேற பளிச் புடவைல வருவாங்க. "இவ இதுக்கு தாண்டி போயிருக்கா"ன்னு கோரஸா திட்டு விழும். அது வரை சும்மா இருக்கும் அம்மா எல்லாரையும் ஒரு நோட்டம் விட்டுட்டு உள்ளே போய் பன் கொண்டையோட வெளியே வந்து ஒட்டு மொத்த வயிதெரிச்சலையும் கொட்டிப்பாங்க

۞۞۞۞۞

கப்பி காலேஜு படிச்சப்ப நடந்துச்சாம் இது

கல்லூரியில் எல்லா வருடமும் டிசம்பர் 31-ம் தேதி இரவு திறந்தவெளி மைதானத்தில் இரண்டு திரைப்படங்கள திரையிடுவோம். அதில் கண்டிப்பாக 'பாட்ஷா' இருக்கும். 12 மணிக்கு சரியாக உடைந்த மரக்கிளைகளை ஒரு இடத்தில் சேர்த்து 'காம்ப் ஃபயர்' என்ற பெயரில் கொளுத்திவிட்டு ஆடலுடன் பாடலென குத்தாட்டம்.

۞۞۞۞۞

இது சின்ன அம்மிணியோட ஞாபகமிருக்கான்னு கேட்டு ஏத்துன கொசுவத்தி!
தெருநாய்க்கு ஜிம்மின்னு பேர் வைச்சு, அதுக்கு சோறு போட்டு வளத்தது; நொண்டி , நாலுகல் நடுரோட்டில விளையாடினது. இப்பேல்லாம் ரோட்டில இருக்கற போக்குவரத்துக்கு நடக்கறதே பெரும்பாடா இருக்கு. இதுல எங்க விளையாடறது.

۞۞۞۞۞

சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட நம்ம வாக்கர் கோபி (மாசத்துக்கு ஒரு தடவை மட்டும் பதிவுலகில் நடக்கறதால) அனுபவம்!

வலது கால்ல ஒரே மிதிதான் இடது கால் முட்டியில சைக்கிள் பெடலலா ஓங்கி ஒரு அடி அப்படியே பொத்துன்னு விழுந்து சில்லரையை அள்ள வேண்டியது தான். பெத்த கடமைக்கு என்னையும் நாளைக்கு வேலைக்கு போற கடமைக்கு சைக்கிளையும் தூக்கிட்டு நம்ம தலையில ஒரு செல்ல தட்டு முதல்ல உன் சைசுக்கு இருக்குற வண்டியை ஓட்ட கத்துக்க அப்புறம் இந்த வண்டியை ஓட்டலாம்!

۞۞۞۞۞

பொங்கல் பற்றிய இவரின் கொசுவத்தி (ஆக்சுவலா இது பண்டிகை தலைப்புக்கு போகணும் ஆனா இவரு கொசுவத்தியில எனக்கு புகை மண்டலமா கிளம்பிடுச்சு!)

சின்னச் சின்னதாய்க் கோலங்கள் போட்டுக் கொண்டிருக்கையில் வீட்டிலிருந்து ஒவ்வொன்றாய்ப் பொங்கல் பொருட்கள் கொட்டாய்க்குக் கொண்டு வருவார்கள் அப்பத்தா.."எதயாவது ஒழுங்கா எடுத்து வைக்கிறாளுகளா.." என்று அவ்வப்போது வசவு முனகல்கள் மருமகள்களுக்காய். இரும்பு அடுப்பில் அரிசி மாவை வரிசை வரிசையாய் ஒழுக விட்டுப் போடும் மாக்கோலம், பொங்கல் வைக்கும் இடத்தில் கட்டம் கட்டிச் செம்மண் கோலம், கரும்புத் துண்டுகளில் மாலை, கட்சி வண்ணப் பெயிண்ட் பூசிய மாட்டுக் கொம்புகள்

۞۞۞۞۞

கூழ் வத்தல் செய்த கதைகளை சொல்லும் நானானி!

கிரிக்கெட் காப்டன் வீரர்களை பொசிஷன் செய்வதுபோல் ஓரோர் இடத்தில் அமர்ந்து கொண்டு, விஸ்வாமித்திரர் யாகத்தை ராமலட்சுமணர் காவல் காத்தது போல் காக்கைகளை அண்டவிடாமல் காவல் காப்போம்.

இடையில் நாங்கள் சின்னச்சின்ன கிண்ணங்களில் கூழை எடுத்து வைத்துக்கொண்டு கையிலெடுத்து வாயில் வழித்துவழித்து சாப்பிடுவோம். எவ்ளோ நல்லாருக்கும்
தெரியமா? அங்கேயே எங்க காலை உணவு முடிந்துவிடும்.

۞۞۞۞۞

நானானி போன்றதொரு கூழ் வடகம் பிழிந்த அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ளும் இன்னொரு பதிவர்

இருள் பிரியும் முன்னரே அனைவரும் எழுப்பி விடப் படுவோம். அம்மாவும் சின்ன பெரியம்மாவும் கையில் திணிக்கும் 'லொட்டு லொசுக்கு'சாமான்களை மேல் தட்டட்டி(மொட்டி மாடி)க்கு எடுத்துச் செல்வதும், அங்கு 'பராக்கு'ப் பார்க்காமல் காக்காய் விரட்டுவதும்தான் எங்கள் ட்யூடி!

இதுதான் கொசுவத்தியோட ஸ்பெஷாலிட்டி (பத்தவைச்சது முடியறதுக்குள்ள பல பேருக்கும் பத்திக்கும்!)

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுக்கோளாய்...!

நீங்களும், அப்பப்ப சமயம் கிடைக்கும்போதெல்லாம் நல்லா கொசுவத்தி சுத்துங்க! உங்களை பார்த்து நாலு பேரு நாலு கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சு அப்புறம் ஒரே புகைமண்டலாமாக்கிட்டுத்தான் அடுத்த வேலை பார்க்கணும் என்ன ஒ.கேவா?
மேலும் வாசிக்க...

மனசுக்குள்ளேயே வைச்சிருந்தேனாக்கும்! - ஆன்மீக பாடல்கள்!


சிறுவயதில் கேட்டிருந்த பக்தி பாடல்கள் இணையத்தில் கண்டு பின் கொண்ட சந்தோஷ வெளிப்பாட்டின் தொகுப்பே இது...!


சீர்காழியின் தமிழ் குழையும் குரலில் காலை வேளைகளில் பெரும்பாலும் தினமும் கேட்ட பாடலில் இதுவும் ஒன்று! இணையத்தில் பார்த்தேன் கேட்டேன் ரசித்தேன்!இப்போது இங்கு தருகிறேன்! கற்பூர நாயகியே கனகவல்லி குழுப்பதிவிலிருந்து

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது

۞۞۞۞۞

வெள்ளிகிழமைகளிலும் ஞாயிற்றுகிழமைகளின் மாலையிலும் இந்த பக்தி மாலையில் மனம் மகிழாமல் இருந்தது கிடையாது! கற்பூர நாயகியே கனகவல்லி குழுப்பதிவிலிருந்து

படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி,
அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி,
ஜய ஜய சங்கரி கௌரி மனோகரி, அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி,
சிவ சிவ சங்கரி சக்திமஹேஸ்வரி,
திருவருள் தருவாள் தேவி
திருவருள் தருவாள் தேவி

۞۞۞۞۞

இங்கு அயலகம் வந்த பிறகும் கூட, கூடவேகொண்டு வந்திருந்த சீர்காழியின் முருகன் பாடல்களில் வாரத்தில் பல நாட்கள் கேட்கும் இந்த பாடல்,ஏதோ ஒரு சமயத்தில் இந்த பதிவில் பார்த்தேன் மகிழ்ச்சியாக இருந்தது!

தமிழிசை பாடுகின்ற வானம்பாடி - என்
தலைவன் முருகனை தினம் தேடி - நான்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி!
அமிழ்தினும் இனிதான தமிழ்ப்பாட்டு - அந்த
ஆறுமுகம் மயங்கும் அதைக்கேட்டு - செந்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி! - என்
தலைவன் முருகனை தினம் தேடி!

۞۞۞۞۞

கந்தர் சஷ்டி திருவிழா நாளில் வைத்தீஸ்வரன் கோவிலில் உறவினர் வீட்டில் முகாமிட்டு கொண்டாடியபோது இரவு காட்சி ஷண்முகம் தியேட்டரில் நான் பார்த்த அருணகிரிநாதர் திரைப்படம்! அப்பா ஆஹாஒஹோவென்று புகழ்ந்த படத்தின் இந்த பாடல் பல வருடங்கள் கழித்துத்தான் புரிந்துக்கொண்டேன்!

முருகனருள் பதிவிலிருந்து பாடல் ஒலியாகவும் ஒளியாகவும் தமிழ் வரிகளாகவும்....!

முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கு இறை சத்திச் சரவண
முத்திக்கு ஒரு வித்துக் குருபர ...... என ஓதும்

۞۞۞۞۞


மார்கழி மாதத்தின் காலை மாலை இருவேளைகளிலும் கூம்பு ஸ்பீக்கரில் அலறும் இந்த பாடல்கள் அப்போது யாருமே இதை டிஸ்டர்பன்ஸாக நினனக்கா விஷயம், இப்பொழுது நினைத்தால் ஆச்சர்யமாயிருக்கிறது! (ஆமாங்க அந்த காலத்து ஸ்பீக்கர் ச்வுண்டுல இந்த பாட்டு கேக்கறது இரு ஆனந்த அனுபவம்!)

மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா
கோடிகள் கொடுத்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்..ஆ.
(வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கோவை மருதமலை செல்கையில் ஏனோ தானாகவே மனதில் ஒலிக்கும் இந்த பாடல்!)

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்....

உங்களுக்கு பிடித்த பால்ய கால நினைவுகளில் நின்ற பக்தி பாடல்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்!
மேலும் வாசிக்க...

பண்டிகைகள் அல்லது விசேஷங்கள்!


சந்தோஷம் மிகும் விஷயங்கள் பெரும்பாலும் குடும்பத்தினர் அனைவரும் சேர்த்திருக்கும் விழாக்கள் பண்டிகைகள் சமய்த்திலேயே நிகழ்கின்றன அப்படிப்பட்ட விசேஷங்களின் அனுபவங்கள் இங்கு தொகுப்பாக...!

۞۞۞۞۞

தீபாவளி என்றாலே கொஞ்சம் அதிக குஷிதான் விதவிதமான இனிப்புகள் விதவிதமான உடுப்புகள் என்று அந்த அனுபவங்ளை பகிர்ந்துக்கொண்ட பல பதிவுகளில் சில மட்டும் இங்கு உங்களுக்கு தீபாவளி என்றாலே கண்டிப்பாக காலையில் இட்லி இருக்கும். என்னடா இவன் இட்லியை போய் இவ்வளவு பெருசா சொல்றானேன்னு நினைக்கலாம். எங்க ஊரில் காலையில் சிற்றுண்டி என்பதெல்லாம் பொதுவாக கிடையாது. ஒம்பது மணிக்கு சாப்பாடு தான். மதியம் ஏதேனும் சிற்றுண்டி, காப்பி கிடைக்கும்.

۞۞۞۞۞

இது சீனா அய்யாவோட தீபாவளி நினைவுகள்

தீபாவளி அன்று, தாயும் பாட்டியும் அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து பலகாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். முடிப்பதற்கு மதியம் ஒரு மணி ஆகி விடும். நாங்கள் சிறுவர்கள் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக, காலை நான்கு மணியிலிருந்து, எழுந்து எண்ணெய் தேய்த்து, தூக்கக் கலக்கத்துடன் சுடு தண்ணீரில் குளித்து விட்டு துண்டைக் கட்டிக்கொண்டு காத்திருப்போம்.

۞۞۞۞۞

இது ஈழத்து நண்பரின் இனிய தீபாவளி.!

மடத்துவாசல் பிள்ளையாருக்கும் தீபாவளி நாள் தான் நிறையப் பட்டுத் துணிகள் கிடைக்கும். பூசை முடிந்து, கடைசியில சண்டேஸ்வரர் சுவாமியைக் கும்பிடேக்கை, புதுச் சட்டையில் இருந்து ஒரு நூலைப் பவ்யமாக இழுத்தெடுத்து, அந்த நூலைச் சண்டேஸ்வரருக்குச் சார்த்தி விட்டுக் கிளம்புவோம்!

۞۞۞۞۞

இது டுபுக்குவின் பண்டிகை நாள்

கார்த்திகை மாதம் வந்ததும் தினமும் வாசலில் இரு விளக்கு வைப்போம். திருநாள் அன்று பழைய விளக்கு எல்லாம் தேய்த்து வைத்து பின் ஈரம் போக துடைத்து வைப்போம்.

50 விளக்கு என்றால் 100 திரி திரிக்கச் சொல்வார்கள் அம்மா.இரண்டு இரண்டாக இடவேண்டுமாம் .அப்போதெல்லாம்..இன்று கிடைப்பது போல் திரி கடைகளில் வாங்கும் பழக்கம் இல்லை.பஞ்சை திரியாக்கி எண்ணி வைப்போம்..


۞۞۞۞۞

இவருக்கு சரஸ்வதி பூஜை சமயத்தில் வந்த விநாயகர் பற்றிய ஞாபகங்கள்

பரீட்சைக்கு கொண்டுபோய் எழுதும் பைலிலும் பிள்ளையாருக்கு மூலையில் கட்டாயம் ஒரு இடம் இருக்கும். மேலும் பரீட்சைத் தாளிலும் ‘பிள்ளையார் துணை’ என்று எழுதித்தான் ஆரம்பிப்பேன். பிள்ளையாரும் என்னைக் கைவிட்டதில்லை; அதன்பிறகு யாழில் இருந்தவரை வகுப்புப் பெண்கள் மனசு எரிய எரிய என்னை முதலாம் பிள்ளையாக வகுப்பில் வைத்திருந்தார்

(தட்ல இருக்கிறத அப்படியே கையால எடுத்து திங்க தோணுதுங்க!)

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!

குறையாகச் சொல்லவில்லை...மாற்றுங்களைய்யா...டீ.வி. பொட்டியிலிருந்து வெளி வந்து சந்தோஷமாக இந்த பண்டிகைகளை கொண்டாடுவோம்...குடும்பத்தோடு தெருவிற்கு வாங்கள்..(நன்றி டுபுக்கு!)
மேலும் வாசிக்க...

சங்கம் - பயமறியா பாவையர்கள்!


பயமறியா பாவையர் சங்கம் - பேரபார்த்துமே ஆஹா எதோ ஆண்களுக்கு எதிரான சங்கம் மாதிரி நினைச்சு ஃபீல் பண்ணாதீங்க அங்க இருக்கற அம்புட்டு பேரும் என்னோட அக்காக்கள்தான்! (மைஃப்ரெண்ட் சைடுலேர்ந்து கத்துறாங்க இல்ல இல்ல...! நான் தங்கச்சின்னு!)

அந்த மெம்பர்ஸெல்லாம் போட்ட்டு தாக்குன விஷயங்களதான் இது!

கடலை போடறது பத்தியும் அது சம்பந்தமான விஷயங்களையும் ரொம்ப விரிவாக ஆராயும் இந்த ப.பா.உறுப்பினரின் ஆய்வு உங்களுக்கு ரொம்ப முக்கியமானதாக இருக்ககூடும் என்று இங்கு இணைக்கப்படுகிறது!

வறுபட்டுடுச்சுனு நினைச்சு பாத்தா வறுபடாம இருக்குமாம். இன்னும் வறுபடலைனு நினைச்சு நல்லா வறுத்தா தீஞ்சு போயிடுமாம். அந்த மாதிரிதான் பொண்ணுங்ககிட்ட பாத்து ஜாக்கிரதையா பேசனுமாம். அதனாலதான் பசங்க பொண்ணுங்ககிட்ட பேசறத கடலை வறுக்கறதுன்னு சொல்வாங்களாம்

۞۞۞۞۞

இது ப.பா சங்கத்துல இருக்கற அம்புட்டு மெம்பர்ஸும் சேர்ந்து இல்லைல்லை தனி தனியா அடிச்ச லூட்டிஸ்களை அப்படியே தர்றேன் படிச்சுட்டு சிரிச்சுட்டு போங்க!

ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ்

۞۞۞۞۞

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்..

இதுவும் கூட ப.பா சங்கத்து மெம்பர்ஸெல்லாம் சேர்த்து எடுக்கப்போறதா நினைச்சு எடுத்த படம்!

ப.பா சங்கத்து ஆளுங்க செம கிரேட்ங்க (வாழ்த்தி சொல்லறதுக்கு இங்கீலீஸ் வேர்டு கூட வர மாட்டேங்குதேடா ஆயில்யா...! ) நல்ல திறமைசாலிங்கங்க! பாருங்களேன் ஒரு தீம் எடுத்துக்கிட்டு அதை ஒரே மெம்பர் கண்டினியூ பண்ணாம அல்லாருமே சேர்த்து அசத்தியிருக்கறதை!

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்.....!

ஒண்ணுமில்லைங்க ப.பா சங்கம் இப்ப நல்லா ரெஸ்ட் எடுக்குது! சீக்கிரத்திலேயே எழுந்து வந்து பழையபடி ச்சேசே புதியபடி அசத்தணும் அவ்ளோதான்!
மேலும் வாசிக்க...

ஆன்மீகத்தோடு வாழ்வு

ஆன்மீகம் பற்றிய பதிவுகள் தமிழ் வலைப்பதிவுகளில் ஏராளம் எனக்கு தெரிந்து பிடித்த சில பதிவுகள் மட்டும் உங்களின் பார்வைக்கு பக்தியுடன்....



திருநீறு பற்றிய SPVR சுப்பையா அய்யாவின் பதிவிலிருந்து

குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார் கள்.என்நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன.ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள். ஆகவே நீ ஒரு நாளும் உன்நெற்றிக்கு வெள்ளை அடிக்காதே.....!

உன் ஆன்மாவிற்கும், அறிவுற்கும் உகந்தது எதுவோ அதை மட்டும் செய்! மனதை நெறிப்படுத்து இந்த உடம்பு சாம்பல் ஆகப் போகிறது என்பதை நினைவிற் கொள்ள தினமும் இரண்டு முறையாவது இந்த சாம்பலிலான திருநீற்றைப்பூசிக்கொள்!


۞۞۞۞۞

சிங்கை கிருஷ்ணனின் திருமந்திரம் பற்றிய பதிவில் திருமுறைகள் சொல்லும் சேதி திருமந்திரத்தில்கூறப்பட்டிருக்கும் அடிப்படை சித்தாந்தம் பற்றிய சில செய்திக்ள்!

சைவ சித்தாந்தத்தில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. அதாவது சரியை. கிரியை, யோகம், ஞானம் ஆகியவைதான் மூலக்கூறுகள்.சரியை என்ற ஒழுக்கத்தாலும் கிரியை என்ற அர்ப்பணத்தாலும் யோகம் என்பது பொருந்தி இருந்தாலும் ஞானம் என்ற அருளால்
இறைவுணர்தலுக்கு சைவ சித்தாந்தம் வழி கோலுகிறது.


மேலும் உருத்திராக்கம் பற்றிய இவரின் பதிவில் பல செய்திகள் உருத்திராக்கம் பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும்

۞۞۞۞۞

புத்திமான் காணும் பொருள் எவையும் ஆன்மாவிற்
புத்தியால் ஒன்றல் புரிவித்தே - சுத்தமாம்
விண்ணென வொன்றாய் விளங்கிடு மான்மாவை
யெண்ணுக வெப்போது மே.

தான் காணும் பொருள் யாவற்றிலும், தன் அறிவினைக் கொண்டு ஆன்மாவில் இணைதலைச் செய்து காட்டுவர் உயர் ஞானம் பெற்றார்.

நான் யாருக்கு உதவி செய்தாலும் நான் செய்யும் அந்த உதவிக்கு எப்படி உதவலாம் என்று என்னை சந்தோஷப்படுத்த யோசித்து செயல்படும் அவர்களின் அந்த நல்ல மனம் தான்!

ஆத்ம்போதம் அழகாய் விளக்கமாய் இவரின் பதிவில் எப்பொழுது நேரம் கிடைத்தாலும் கண்டிப்பாக சென்று படித்து பாருங்கள்!


۞۞۞۞۞

ஆன்மீகம் சம்பந்தமாக சொல்லவேண்டுமென்றால் நிறைய விஷயங்கள் உண்டு உதாரணத்திற்கு நீங்க இங்கு செல்லுங்களேன்!

எத்தனை செய்திகள் எதையும் குறிப்பிட்ட சொல்லவே முடியாத அளவு அனைத்துமே கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

நன்றி கீதாம்மா! தொடருங்கள் ஆன்மீக பயணத்தினை....!

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...

தினம் தினம் கடந்துபோகும் வாழ்க்கையில் மனதில் இன்பங்களும் துன்பங்களும் வந்து செல்லும் மனத்தில் கொஞ்சம் ஆன்மீகத்திற்கும் இடம் அளித்து வாழும் வாழ்க்கையில் நிம்மதியாக்கிகொள்வோம்
மேலும் வாசிக்க...

Saturday, June 14, 2008

ரஜி(ஜீ)னி!


எத்தனையோ மனிதர்களின் இதயத்திற்குள் இனம்புரியாத சந்தோஷத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் சொல்!

ஒவ்வொரு படத்தின் வரவுக்கும் காத்திருக்கும் ரசிகர்களின் கூட்டம்! தமிழகத்தில் ரஜினி என்பது மறக்கமுடியாத ஒரு பெயராக இன்றளவிலும் சின்னஞ்சிறு குழந்தைகளையும் ஈர்க்கும் சக்தியாக விளங்குவது எல்லோருக்கும் தெரிந்த, அதே சமயத்தில் வெளிக்காட்டிக்கொள்ளாத தகவல்!

ரஜினியை பற்றிய வலைப்பதிவுகள் பல பல வந்தாலும்,
வந்துக்கொண்டிருந்தாலும்,சிறப்பானதாய் இருக்கும் சில பதிவுகள் உங்களின் பார்வைக்கு!



இவர் ஆரம்பத்தில் ரஜினியை வெறுத்து பேசிக்கொண்டிருந்தவராம் ஆனால் பாருங்கள் நண்பனின் கருத்தில் இவருக்கும் ரஜினி ரொம்ப பிடித்தமானவராக மாறிய நிகழ்வினை பதிவில்...!

நம்ப வீட்டு குழந்தை தத்தக்கா பித்தக்கானு நடந்தாலும், தப்பு தப்பா பேசினாலும் அதை பார்த்து ரசிக்கத்தான் தோணுமே தவிர அதுக்கு நடக்க தெரியலை பேச தெரியலைன்னு கிண்டல் பண்ணத்தோணாது. அது மாதிரிதான் ரஜினி எனக்கு!"

அந்த சின்னக்கண்களையும், தவறான அழுத்தமில்லாத தமிழ் உச்சரிப்பையும் என்னை அறியாமலேயே ரசிக்க ஆரம்பித்திருந்தேன். அதுவும் அந்த "காதலின் தீபம் ஒன்று.. ஏற்றினாலே என் நெஞ்சில்.." என்ற பாட்டு! அது படமாக்கப்பட்ட விதமும் அதில் அவரது காதல் வயப்பட்ட மனநிலையை உணர்த்தும் அசைவுகளும் பயங்கர ரொமாண்டிக்காக இருக்கும்!

۞۞۞۞۞


ரஜினி பற்றிய தன் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ளும் இவரின் பதிவில் முத்தாய்ப்பாக வரும் விசயம்!

என் தலைமுறைக்கு ரஜினி என்பவன் உணர்வுகளில் கலந்து விட்டான். பகுத்தறிவிற்கு முதலிடம் தரும் அன்பர்கள் இந்த உணர்ச்சியை வெற்றிக் கொள்கின்றனர். நான் உணர்வுகளால் ஆனவன் நான் இங்கு தோல்வியுறுகிறேன் எனக்கு ரஜினி என்னும் ஆளுமையின் தாக்கம் இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும்.


۞۞۞۞۞

ரஜினி பற்றியே சிந்தித்து, அவர் பற்றிய பல தகவல்களை தொகுத்து இணையங்களில் தந்த இவரின் முதல் ரஜினி சந்திப்பு அனுபவம் இப்படியாக....

இரண்டு நாட்களாக தேவதைகள் மாதிரி அந்தரத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் கடந்தது போன சந்தோஷமான தருணங்களை நினைத்து பார்ப்பது சுகம். என்னைப் பொறுத்துவரை அது போன்ற சந்தோஷ தருணங்களில் பெரும்பாலனவை ரஜினி சம்பந்தப்பட்டவை.

۞۞۞۞۞

ரஜினி பற்றிய இவரின் பார்வை மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட பார்வையாக பதிவாக...

அவரிடம் எல்லோருக்கும் பிடித்தது அவரது ஸ்டைலா ? நடிப்பா ? முடியைக் கோதிவிட்டு 'கண்ணா ... ஆறுலயும் சாவு, நூறுலயும் சாவு' சொல்லும் போது விசில் தூள்பறக்கும்.

ரஜினிக்குப் பின் நிற்பது அன்பினால் வந்த கூட்டமா ? ஓரளவுக்கு உண்மையென்றாலும் அதிகம் இருப்பது ...சாதி நடிகர்களையும், சாதி அரசியல் வாதிகளையும் வெறுத்து நொந்தக் கூட்டம். அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்... ரஜினி தேர்தலில் நின்றால் அவருக்குத் தான் என் ஓட்டும் !

۞۞۞۞۞

சூப்பர் ஸ்டாருக்கு ஒரு சூப்பர் கச்சேரி வைச்ச சென்னை கச்சேரி தேவ் அண்ணா!

தன்னோட வெற்றியைத் தனக்குன்னு கொண்டாடமல் இறைவனின் பாதம் சமர்ப்பிக்கும் அந்த குணம்.மதவாதியோன்னு நினைக்கத் தோன்றினாலும்... மதம் என்பதோடு மனதோடு என்று இவர் எப்போதோச் சொன்னதாக ஞாபகம்...!

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...

ரஜினி சொன்னதையே மறுக்கா சொல்லிக்கிறேன்ப்பா!

பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை..லட்சியமாவது புடலங்காயாவது.. சுகமாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்ந்து ..கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ வைக்கணும் அவ்வளவுதான்" -ரஜினி
மேலும் வாசிக்க...

எட்டிப்பிடித்த எட்டுக்கள்!


தமிழ்பதிவுலகில் இந்த எட்டு விளையாட்டு எல்லோரையும் ஆர்வத்துடன் அழைத்து வந்திருந்தது ஒரு காலத்தில்..!

அந்த எட்டுகளில் நான் எட்டிப்பிடித்த எட்டுக்கள்!

அருணா ஸ்ரீனிவாசன் அவர்களின் 8
நாம் எவ்வளவுதான் சாதாரணமானவர்களாக இருந்தாலும் நம் வாழ்க்கையில் மனம் நிறைந்த அனுபவங்கள் இல்லாமல் இருக்காது. அதனால் சாதனை என்று இல்லாவிட்டாலும் இதம் தரும் அனுபவங்கள் என்ற வகையில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுவதால் - இதோ என் வரிசை.

۞۞۞۞۞

மதுமிதாவின் 8 ல் ஒன்று இது..

மனித மனங்களின் அதிநுட்ப வேறுபாடுகளை அறியும் பக்குவம் வளர்ந்த காலகட்டம். குடும்பம், சமூகம் குறித்த எல்லா கோணங்களின் இயல்பையும் அறியும் ஆர்வம் வளர்ந்தது. உறவுகளின் மனச்சிக்கல்கள், பிரிவுக்கு நிர்ப்பந்தப் படுத்தும் சூழல் எல்லாமே கற்றுக் கொடுத்தவை ஏராளம்!

۞۞۞۞۞

மாலனின் 8 ஆரம்பிக்கும்போதே, என் வாழ்க்கை என்னால் தீர்மானிக்கப்பட்டு நடத்தப்படவில்லை.கணியன் பூங்குன்றன் சொன்னதைப் போல, நீர் வழிப்படும் புணை போல (ஆற்றில் மிதந்து செல்லும் கட்டை போல) அது போய்க் கொண்டிருக்கிறது.

உண்மைதான் எட்டுக்குள் சென்று பாருங்கள் சிறப்பாய் இருக்கும்! (நான் மிகவும் ரசித்த 8)

۞۞۞۞۞

ஏழரையில் ஆரம்பிக்கும் 8 அமீரகத்து அண்ணாச்சியோடது! (நான் மிகவும் ரசிதது சிரித்த எட்டு!)

இந்த எட்டு ஆட்டத்தை நெனச்சா பதிவுலகத்துக்கு ஏழரையும், பதிவு எழுதுறவங்களுக்கு அரையும் இருக்குன்னு தெளிவாவே தெரியுது. கோட்டித்தனத்துக்கு அளவேயில்லாம போய்க்கிட்டிருக்கு. கோட்டித்தனம்னு வந்ததுக்கப்புறம் நாம இல்லன்னா எப்படி

۞۞۞۞۞

நுனிப்புல் உஷா அக்காவின் 8

இலவசம் கூப்பிட்டாஹ, இப்ப கவிதா கூப்பிடராஹான்னு கரக்காட்டக்காரனில் கோவை சரளா பீற்றிக் கொண்டா மாதிரி நானும் ஆரம்பிக்கிறேன். ஏதோ ஏழைக்கு தகுந்த எள்ளுருண்டையாய் தேடிப்பிடித்து என் பெருமைகளை பறை சாற்றுகிறேன்!

۞۞۞۞۞

இது அய்யனாரு 8 படிச்சுப்பாருங்க ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்!

எந்த ஒரு புள்ளியிலும் தேங்கிடாத,தேங்க விரும்பாத என் சிக்கலான மனம்.அலைவும் திரிபும் என் இயல்பான குணமாய் அமைந்து விட்டது.இந்த குணத்தினால் நிறைய சிக்கல்களைத்தான் அதிகம் சந்தித்து முடிந்தது என்றாலும் கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் அற்புதம்.என் 9 வருட பணி அனுபவத்தில் இதுவரை 10 நிறுவனங்கள் மாறிவிட்டேன்.தமிழ்நாட்டின் முக்கிய நிறுவனங்களில்,நகரங்களில் எல்லாம் வாழ்ந்தாயிற்று.இப்பாலைக்கு வரும்போதும் எவ்வித பின் யோசனைகளும் இல்லாமல் ஒன்றிலிருந்து தப்பிப்பது மட்டுமே பிரதான நோக்கமாக இருந்தது மிகுந்த பெருமையிருந்தது.

۞۞۞۞۞

இது சர்வேசனோட 8 அந்த டைமிங்கல எல்லாரும் மாஞ்சு மாஞ்சு ரொம்ப சீரியஸா எட்டுபோட்டிக்கிட்டிருக்கும்போது இவரு எட்டை எட்டிபார்த்துட்டு அப்படியே ஆ...ன்னு ஆச்சர்யபாட்டு போக கடைசியில் என்னோட எட்டு எல்லாம் ஏட்டுல மட்டும் எழுதறதுக்குத்தான் சொல்லியிருக்காருங்க

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!

இந்த எட்டுக்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ வித்தியாசமான சொன்ன எட்டுக்களுக்கும் கூட உண்டு நீங்களும் எட்டுகளை பதிவுகளில் கொட்டிப்பாருங்களேன்! (லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கும்ல!)
மேலும் வாசிக்க...

பஸ் பயணம் - போலாம் ரைட்!


ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதிகம் பிரயாணப்படுவது பெரும்பாலும் பஸ் மூலமாகவேத்தான் இருக்கும்! காலங்களின் மாற்றங்களுக்கேற்ப வாகனங்களின் வகைகள் மாறினாலும் கூட பல்வேறு வகையான மனிதர்களினை படிக்கும் இடமாக விளங்கும் பஸ் பயணங்கள் பற்றிய சுவையான பதிவுகள்...!



அருட்பெருங்கோவின் சுந்தரா டிராவல் பயணம் இது...!

அண்ணே. ஒரே பொகையா இருக்கு. அந்த கண்ணாடிய கொஞ்சம் தெறந்து விடுங்களேன்’னு அவருக்கு முன்னாடியிருந்த கண்ணாடிய காட்டி கேட்டேன். இன்னும் கடுப்பாகி என்ன பார்த்து மொறைக்க ஆரம்பிச்சாட்டார். அமைதியே ஆனந்தம்ங்கற தத்துவம் அந்த பார்வைல எனக்குப் புரிஞ்சது...!

என்னமோ டீசலே இல்லாம வண்டியோடற மாதிரி ரெண்டு ஓட்டுனர்ங்க முகத்துலையும் அப்படி ஒரு வெற்றிப்புன்னகை. நாங்களும் ஒரு ஆர்வத்துல கையெல்லாம் தட்டிட்டோம். அதுக்கப்புறம் வண்டியோட தாலாட்டுல நானும் தூங்கிட்டேன்!

۞۞۞۞۞

என் தம்பி டிரைவர், நான் கண்டக்டர் ரெண்டு பேரும் வாயாலேயே பஸ்சை ஓட்டிக்கிட்டுப் போவோம். எங்க வீட்டு மாடிக்குப் போற ஒரு படிக்கட்டுல என் தம்பி ஒக்காந்துக்குவான், படிக்கட்டுக்கும் செவுத்துக்கும் நடுவுல இருக்குற ஒரு சின்ன இடுக்குல ஒரு மொத்தமான குச்சியைச் சொருகி வச்சிக்குவான், அது தான் எங்க பஸ்சோட கியரு. நான் கண்டக்டராச்சே? என்னோட தொழிலுக்கான உபகரணங்கள்னு பாத்தா அம்மாவோட பழைய ஹேண்ட்பேக் ஒன்னு... அது தான் நம்ம கண்டக்டர் பை. அதுக்குள்ளே ரெண்டு விசில் கெடக்கும்...10 காசு 20 காசுன்னு சில்லறை கொஞ்சம் இருக்கும்(அப்போ தான் பையைக் குலுக்குன்னா கண்டக்டர் பையைக் குலுக்கற ஒரு எஃபெக்ட் கெடைக்கும்), அதோட பழைய பல்லவன் பஸ் டிக்கட் நெறைய இருக்கும்

இப்படியாக இவரோட அனுபவம் போகுது அப்படியே அவர் பின்னாடியே போய் பாருங்க பஸ் பயணம் ரொம்ப சூப்பரா இருக்கும்!

۞۞۞۞۞

கப்பியின் பஸ் பயணங்கள் கூட, விதவிதமான பிரயாணிகளின் சந்திப்புக்களை தந்து செல்கிறது!

ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒரு வயதான கிழவி உட்கார இருக்கை கிடைக்காமல் தரையில் அமர்வதும் நடத்துனரோ அல்லது ஒரு நடுவயது பெண்மணியோ அவளை எழுப்பி விடுவதும் தவறாமல் நடக்கிறது

எத்தனை முறை பேருந்தில் பயணம் செய்தாலும் ஒவ்வொரு முறையும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் அது நாம் போக வேண்டிய இடத்திற்கு தான் செல்கிறதா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

۞۞۞۞۞

பயணங்கள் எப்பொதுமே சுவையானவையாக சிலரால், மிகச் சிலரால் அறியப்படுகிறது. எனக்குப் பயணங்கள் பெரிதாக ருசிப்பதில்லை. அவற்றைவெறுப்பதும் இல்லை. வாழ்கையில் பல விஷயங்கள் எனக்கு அப்படித்தான் என்று கூறும் இவரின் பதிவில் நிறைய அனுபவங்கள்


۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!

விதவிதமான மனிதர்களை சந்திக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால்,நீங்களும் பஸ் பயணங்களை அதிகம் மேற்கொள்ளுங்களேன்....!
மேலும் வாசிக்க...

வானொலிக்கால நினைவுகள்!


வானொலி கேட்டுக்கொண்ட்டே நாட்களை நகர்த்துவது என்பது ஒரு சுகானுபவம்தான் அதுவும் என்னைப்போன்றவர்களுக்கு ரேடியோ ஆன்லைன்னில் எப்பொழுதுமே போய்க்கொண்டேதான் இருக்கும! ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் சின்ன வயதில் சலிப்பாக தெரிந்திருந்தாலும் இப்போது
நினைத்துப்பார்க்கையில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சியை அளிக்கும் விஷயமாகவே உள்ளது!
என்னைப்போலவே இன்னும் பலரின் எண்ணங்கள் இங்கே...!




ஒரு பகுதிநேர வானொலி அறிவிப்பாளரின் எண்ணங்களில் வானொலி நினைவுப்படுத்தும் விளம்பரம் - கண்டிப்பாக தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் கூட இந்த விளம்பரம் கேட்காத ஆட்கள்லே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபலமான விளம்பரம்! என் அத்தானின் வயலினிலே அருவி போல் தண்ணீரு பாயுதே, பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமே இது" முதல் அடிகளைப் பெண்குரலும் இரண்டாவது அடியை ஆண்குரலுமாகப் பாடும் சென்னை வானொலியின் விவசாய நிகழ்ச்சியின் விளம்பரப்பாடல்!

۞۞۞۞

கப்பியின் வானொலி தொடர்பான நினைவுகள்!

ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி" இது தான் அந்த நாட்களில் படுக்கையிலிருந்து எழ அலாரம். அதிகாலையில் எழுந்ததுமே அப்பா வானொலியை உயிர்ப்பித்துவிடுவார். சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், "ஏசு அழைக்கிறார்", நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில் பாடல்கள் என்று ஆரம்பிக்கும். அப்போது விழிப்பு வந்தாலும் போர்வையை இழுத்துப் போர்த்தி அரைத்தூக்கத்தில் படுத்திருப்பது பரமசுகம்

۞۞۞۞۞

சின்னகுட்டியின் வானொலி கிரிக்கெட் நேரடி ஒலிபரப்பு நினைவுகள்!

உந்த கிரிக்கற் மச்சுக்கள் நடந்தால் காதோரம் வைத்து உந்த டிரான்சிஸ்ட் பெட்டிகளோடு மாரடிச்சு கொணடிருப்பன். விடிஞ்சால் பொழுதுவிட்டால் உதோடை கிடக்கிறாய் மோனை வேற வேலை வெட்டி இல்லையே அதாலை போன அப்பம்மா புறு புறுத்தண்டு போகுது.

۞۞۞۞۞

வானொலியை தோழியாக்கி அதன் அருமை பெருமைகளை சிலாகித்து சொல்லும் இவரின் வானொலி பற்றிய பதிவு!

۞۞۞۞۞

தினமும் சீக்கிரம் எழுந்து வானொலிச் செய்திகளைக் கேட்டு செய்திகளை கொஞ்சம் விரிவாக தயார் செய்ய ஆரம்பித்தேன். 7 மணிக்கு அல்லது 7.30 மணிக்கு (நேரம் சரியாக நினைவில்லை) வானொலியில் மாநிலச் செய்திகளை சரோஜ் நாராயணசுவாமி வாசிப்பார். அவரது குரல் மிக மிக தெளிவாகவும், கம்பீரமாகவும் இருக்கும். நான் பள்ளியின் அதிகாரப்பூர்வ செய்திவாசிப்பாளனாக இருந்த காலக்கட்டத்தில் இருந்து இன்று வரையிலும்
இணைபிரியாமல் வானொலி பற்றி சொல்லும் இவரின் லுக்கான பதிவு!

۞۞۞۞۞

இன்னப்பாடல் தான் என்றில்லை விளம்பரப்பாடல்கள் கூட கூடவே பாடுவேன். மழைக்காலம் வந்தால் அந்த ரேடியோ பாடாது . அதுக்கு குளிரடிக்கும் போல. பின்னர் அதை கொஞ்சம் வெயிலடிக்கும் போது கொண்டு போய் மாடியில் காயப்போட்டால் பாடும். தட்டி கொட்டி பாடும்!

கூடைக்குள்ள வைத்து தேரோட்ட சத்தங்களையும் வாத்தியங்களையும் கோயில் மணி சத்தங்களையும் பதிவு செய்திருக்கிறோம் . அதைக் கேட்கும் போது அங்கேயே இருக்கும் உணர்வைத்தரும். - இப்படியெல்லாம் பல சிறுமுயற்சிகள் பண்ணுனவங்க பதிவு !

۞۞۞۞۞

சென்னை கச்சேரி தேவ் ரசிச்சு ரசிச்சு பாட்டு கேட்ட அனுபவங்களை பாருங்களேன்!

மதியம் நல்லா சாப்பிட்டுட்டு ரூம் கதவைச் சாத்திட்டு வெயில் ஜன்னல் வழியா வருவதை திரைப் போட்டு பாதி தடுத்தும் தடுக்காமலும் மல்லாக்கப் படுத்துகிட்டு ரேடியோவைப் போட்டா அந்த அனுபவம் இருக்கு பாருங்க அட்டகாசம் பொழுது பக்காவாப் போகும்...

۞۞۞۞۞

வானொலி நிலையங்கள் பற்றியும் வெவ்வேறு காலகட்டங்களில் பிரபலமாக இருந்த வானொலி அறிவிப்பாளர்கள் பற்றியும் ஒரு தகவல் பெட்டகமாக இந்த வலைப்பூவில்

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுக்கோளாய்...!

நீங்கள் செய்யும் பணி தடையின்றி எந்தவொரு இடையூறும் இன்றி அதே சமயத்தில் மகிழ்ச்சியோட வைத்திருக்க உதவும் வானொலிப்பெட்டியை பயன்படுத்திப்பாருங்கள்! பின் பதிவிட்டு தாருங்கள் உங்கள் அனுபவங்களை!
மேலும் வாசிக்க...

Friday, June 13, 2008

ரயில் பயணங்களில்....


இரயில் பயணத்தின் போது காணக் கிடைக்கும் காட்சிகள் வேறெங்கேயும் காணக் கிடைக்காதது. மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இரயில்வண்டி பயணித்துக் கொண்டிருக்கையில், இரயில் பாதையினை ஒட்டிச் செல்லும் ஒற்றையடி மண்பாதை எங்குச் சென்று சேர்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆசை பலமுறை வந்திருக்கின்றது

இப்படியாக பல பயண அனுபவங்களை கூறிக்கொண்டு வந்தாலும் கூட இறுதியில் சொன்ன என் மனதை விட்டு விலகாத காட்சியாக வர்ணித்திருக்கும் கைப்புள்ள!

ரெண்டு ரூவாம்மா, காசைக் கீழே போட்டுருங்க, நான் எடுத்துக்கறேன்" என பையன் மறுபடியும் சொல்வதையும் அதற்கு அப்பயணி செவிமடுக்காதிருந்ததும் "காசைக் கீழே போட்டுருங்கம்மா, காசைக் கீழே போட்டுருங்கம்மா"என்று அவன் கத்திக் கொண்டே வண்டியின் பின் ஓடி வந்ததும், அவனுடைய கத்தல் அழுகையாக மாறியதையும், வண்டியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் அழுது கொண்டே நின்று விட்டதையும், அந்த பையன் ஒரு புள்ளியாக மறையும் வரை நான் அதை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்ததையும் இன்று வரை என்னால் மறக்க இயலவில்லை.

۞۞۞۞۞

ரயில் போக்குவரத்து நின்றுபோன யாழில் இருந்து இவரின் ரயில் பயண அனுபவங்கள் பதிவாக

பெரும் பாலான மாலை வேளைகளில் எங்களது முக்கியமான விளையாட்டில் ஒன்று ரெயினுக்கு டாட்டா காட்டுவது. அதில் போகிற பயணிகளும் கைகாட்டுகிறார்கள் என்று வேறு நினைத்துக்கொள்வோம்!

மனசு சரியில்லாத தருணங்களில் எந்த நிலையத்திலும் இறங்காமல் ரயிலில் நீள வழிகளில் மாறிமாறிப் பயணித்திருக்கிறேன். ஆனாலும் ரயில் பயணம் என்பது எனக்குப் பிடித்த ஒன்றாகவே இருக்கிறது

۞۞۞۞۞

எல்லே ராமின் நினைவுகளில் என்றும் என்னால் மறக்க முடியாத எங்க ஊரு ரயிலு கதை

கடமை தவறாத, ஆஸ்துமாக்காரன் மாதிரி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தது, மயிலாடுதுறை ஜங்ஷன்-தரங்கம்பாடி ரயில்

சாயங்கால வேளைகளில் ரயில்வே டிராக்கில் காலாற நடந்து போகின்ற சுகமே தனி. சூரிய அஸ்தமனத்தில் நெடுந்தூரம் சென்று மறையும் தண்டவாளக் கொடுகளை வரைய ஒரு ரவிவர்மா வேண்டும்

சில வருடங்கள் முன்பு எல்லாமே நின்று விட்டது :-(

۞۞۞۞۞

இன்றைக்கும் அந்தப் ரயில் பயணங்கள் களைப்பை ஏற்படுத்தாத சுகமான நினைவு ஒத்தடங்கள்.

றெயினில ஏறி சீற்றில் உட்கார்ந்து போவதை முதல் நாள் இரவே கற்பனை செய்து பார்த்துவிடுவேன்.

இன்னொரு நாள் அவன் 10 சத நாணயக்குற்றியைத் தண்டவாளத்தில வச்சு றெயின் சில்லால நசிபட்டுப் பெருத்துப் போன அந்த நாணயத்தைக் காட்டினான். அதை அதிசயமாப் பார்த்துக்கொண்டே "ஹிம் நானும் சதானந்தன் போல தண்டவாளப் பக்கம் உள்ள வீட்டில இருந்திருக்கலாம்" எண்டு அப்ப நினைச்சனான்.

۞۞۞۞۞

துளசியக்காவோட ரயில் பயணம் எப்பா...! எத்தனை ஊர்கள் நிறைய ரயில் பயண அனுபவங்களை சொல்லியிருக்காங்க!

ரயில்லே போறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும், நாங்க ச்சின்னப்பிள்ளைகளா இருக்கும்போது, 'பட்டணத்துக்கு'ப் போறதுன்னாவே கொண்டாட்டம்தான். என்னதான் மெயில்,எக்ஸ்ப்ரெஸ்ன்னு இருந்தாலும் பாஸெஞ்சர் வண்டின்னா இன்னும் மஜா. ஆனா...........வீட்டுலே அம்மா சம்மதிக்க மாட்டாங்க. சாயந்திரமா ரயில் ஏறுனா, மறுநாள் காலையில் பட்டணம்.

அதுக்கப்புறம் சில வருசம் கழிச்சு இங்கே வந்து சேர்ந்தாச்சு. பொன்னு மாதிரி மூணே ரயிலுங்க இங்கே ஓடிக்கிட்டு இருந்துச்சு. வடக்கே போக ஒண்ணு, தெக்கே போக ஒண்ணு, மேற்கே போக ஒண்ணு. கிழக்கே ஏன் போகலைன்னு கேக்கமாட்டீங்க தானே? கிழக்கே கடல்தான். :-)

۞۞۞۞۞

ரொம்ப ஈசியாக சென்னையிலிருந்து பெங்களூருக்கு பெங்களுர் டிரெயினில் பயணிப்பவர்களை கண்டுபிடிக்கறத சொல்லித்தரும் அம்பி.

ஆண்கள் எல்லோரும் டவுசர் பாண்டிகளாக இருப்பார்கள். தோளில் ஏதேனும் கேக்ரான்-மோக்ரான் சாப்ட்வேர் கம்பனி ப்ரீயா குடுத்த பை இருக்கும். இடது கையில் கண்டிப்பாக ஒரு பிஸ்லரி பாட்டில் இருக்கும், வலது கையில் காமிரா மொபைல் (யாருக்கு தான் பேசுவார்களோ?). ஏதேனும் ஒரு காதில் கடுக்கன், ஈயம் பித்தளையில் தேள் டாலர் போட்ட செயின் கண்டிப்பாக இருக்கும்.

۞۞۞۞۞

ரயில் பயண ஸ்டேஷன் அனுபவங்களை ரசித்து ருசித்து சொல்லும் பதிவு இது!

பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத இடம்.. உள்ளே நுழைந்ததும் நமக்கும் ஏதோ ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. நேரம் எவ்வளவு இருந்தாலும் கொஞ்சம் வேகமாகவே நகரத் தூண்டுகிறது. நெரிசலில் வளைந்து வளைந்து ஊடுருவி செல்கிறேன்..

மெதுவாக நகரத் தொடங்கிய ரயிலை நோக்கிய கையசைப்புகள் .. வாயிலில் இருந்து தலை மறையும் வரை பார்த்து அசைக்கப் படும் கைகளும் ஏதோ பேசிக்கொள்கின்றன போலும்.

எனக்காக அசையாத கைகளாயிருந்தாலும் , அவை எப்படியோ எனக்காக அசைக்கப்பட்ட கைகளை நியாபகப்படுத்தி விடுகின்றன. நியாபகம் சிலவேளைகளில் கண்ணின் ஒரத்தில் லேசான ஈரத்தையும் விட்டுச்செல்கிறது.

۞۞۞۞۞

இது ஜொள்ளுப்பாண்டியோட ரயில் மயிலு

அது என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியலை என் கம்பார்ட்மெண்டில் மட்டும் எப்பவுமே நம்ம கூட வர்றதெல்லாம் ரிட்டயர்ட்மெண்ட் வாங்கி 10 வருசம் ஆன பல்லுப்போன பாட்டிகளும் ஜொள்ளுப்போன தாத்தாக்களும் தான். (ஆமாம் அப்ப யாருக்குத்தான் லக் அடிக்கிது எல்லாருமே எனக்கில்ல எனக்கில்லன்னு புலம்புறாங்க!?!??)

உங்க கூட அதுவும் எட்டிக்கிள்ளுற தூரத்திலே (சும்மா ஒரு பேச்சுக்குதான்கேச்சுகிடாதீங்க!) உக்கார்துகிட்டு வந்தா என்ன பண்ணறது ?? ஆத்தா! அம்மா! என்ன பண்ணறதுன்னே தெரியலையே!? “மீட் மை சவுத் இண்டியன் டயானா !! “ ன்னு சொல்றதுக்கூட எந்த ஒரு ஆப்பவாயனும் பக்கத்திலே இல்லையேன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது !

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!

பெரும்பாலும் அனைவருக்கும் ரயில் பயண அனுபவங்கள் இருக்கும்!பயணத்திற்கு சாப்பாடு கட்டிக்கொண்டு போனது,ரயில் கேண்டீன் சாப்பிட்டது,என்று பல பல அனுபவங்கள் நேரம் கிடைக்கையில் பகிர்ந்துக்கொள்ளுங்களேன் பதிவுகளில்...!
மேலும் வாசிக்க...

பூனைகள்!


தமிழ் வலைப்பதிவுகளில் அதிகம் ஆதரவு கொடுத்து எழுதப்பட்ட வீட்டுப்பிராணிகளில் பூனைக்குத்தான் அதிகம் மவுஸ் போல...!

பூனைகளுடனான அன்பு காட்டுதலை அனுபவித்து எழுதியது போன்றதொரு சிறுகதை பதிவில்

பெற்றவர்களை வயது வந்த பிள்ளைகள் விட்டுவிட்டு விலகிப்போகும், வயதான காலத்தில் பெரியவர்களை பெரும்பாலும் ஹோமுக்கு அனுப்பும், இருபத்து மூன்று வருஷ மணவாழ்க்கையை தடாலென்று அறுத்துவிட்டு புத்தம் புதுசாக கல்யாணம் பண்ணிக் கொண்டு வெட்கப்படும் அமெரிக்க சமூகத்தில், பிராணிகளை போற்றும் குணம் ஆச்சரியமளித்தது முதலில். ஆனால் இப்போதுதான், மற்ற இடங்களின் தாங்கள் எதிர்கொள்ளும் வெறுமையை ஈடுகட்ட இவர்கள் பிராணிகளை நாடுகிறார்களோ என்ற சம்சயம் வருகிறது

۞۞۞۞۞

தம்பியின் பூனை பற்றிய சோகங்கள்

ஒரு சாதாரண விஷயம் என் மனதை எப்படி பாதித்தது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதை ஒரு விபத்து என்று சொல்ல முடியாது, திட்டமிட்ட கொலை என்றும் சொல்ல முடியாது. விதி என்று கூட வைத்து கொள்ளலாம். எந்த ஒரு உயிரின் மீதும் அதிக நேசம் கொள்ளும்போது அதனை பிரிந்தால் ஏற்படும் வலி நெஞ்சை விட்டு விலகாது. அதை சொல்லுவதுதான் இந்த சம்பவம். மற்றவர்களுக்கு சாதாரணமாக தோன்றலாம் ஆனால் இது என்னை அறியச்செய்தது. நீ இத்தனை கேவலமானவனா இல்லை இத்தனை கோபக்காரனா என்பதை தெரியப்படுத்தியது. என்ற பீடிகையுடன் ஆரம்பிக்கும் தம்பி செய்த காரியம் கொஞ்சம் சரியில்லாததுதான் என்று தோன்றினாலும் முடிவில் மனதில் தோன்றும் சோகம் எவரையும் கை நீட்டி குற்றம் சொல்ல வைக்காது என்பது மட்டும் உண்மை!

۞۞۞۞۞

ஒரு சிறுகதை எழுதும் எழுத்தாளர் அதை பிறரிடத்தில் கொண்டுச்செல்லும்போது உண்டாகும் அனுபவ நிகழ்வுகள் கதை கற்பனையானாலும் கூட அதை கொண்டு சென்ற இடத்தில் ஏற்படும் எழுதியது!

பார்த்தால் மூலையில் கருப்பும் சாம்பல் நிறமும் சேர்ந்த நிறத்தில் மிக அழகாய் ஒரு பூனைக்குட்டி உடம்பை உதறியவாறு நின்றிருந்தது. அது எங்களைப் பார்த்து திரும்ப மியாவ் என்றது. உள்ளே வரலாமா என்று பட்டன் போன்ற கண்ணை உருட்டி பார்த்தது அனுமதிக்கேட்பதுப் போல இருந்தது.

அசட்டு பாசம் வெக்கவும் வேண்டாம். பின்னால அவஸ்தையும் படவேண்டாம்!. இத ரொம்ப தூரக் கொண்டுப் போய் விட்டுடு. பக்கத்துல விட்டா திரும்பி வந்துடும்.

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!

அசட்டு பாசம் வெக்கவும் வேண்டாம். பின்னால அவஸ்தையும் படவேண்டாம்!.
மேலும் வாசிக்க...

கலக்கல் கடிதங்கள்!



தமிழ் வலைப்பதிவுலகில் எத்தனையோ விதவிதமான கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன! எல்லாமே ஒவ்வொரு விதமான சுவையோடு,சுவரஸ்யமாகவும் இருக்கும் கடிதங்கள்தான்!

தமிழ் பதிவுலகில் சிலர் எழுதிய நகைச்சுவை கடிதங்களை மட்டும் கொஞ்சம் படிப்போம் வாங்க!

۞۞۞۞۞

அயல்நாட்டு தம்பிக்கு அண்ணன் வரைந்த கடிதம்

பொறுத்தது போதும்!
ஃபிகரைத் தேடு!
கடலை போடு!
மாலையில் கூடு!
விடியும் வரை ஆடு!!
இளமை கொண்டாடு!!

۞۞۞۞۞

ஊதிய உயர்வு கடிதம் எழுதி தரச்சொல்லி கேட்டு வந்த நண்பனுக்கு ஆப்பு கடிதம் எழுதி அனுப்பிய அன்பு நண்பர் அதை அவரின் பதிவில் சொன்ன சுவாரஸ்யம்

உயர"மான இடத்தில் அமர்ந்திருக்கும் டவர் கிரேன் ஆப்பரேட்டரை கூட நிர்வாகத்தின் தொலை பேசி வழி கூப்பிடாமல் விசில் "ஊதி"யே கூப்பிட்டு வேலை வாங்கும் எனக்கு நீங்கள் ஏன் "ஊதி"ய உயர்வு தரக்கூடாது? இதை சிந்தித்து சீர் தூக்கி பார்த்து ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

۞۞۞۞۞

கல்லூரியில் படிக்கும் மாணவன் அதுவும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் அடிக்கும் ரவுசுகளுக்கு அளவே கிடையாது என்பது உண்மைதான்!

அதுவும் வார்டனின் சிக்கி தவிக்கும் விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான ஐடியாக்கக் தோன்றும் எப்படிடா அவரிடமிருந்து எஸ்கேப ஆகுறதுன்னு அப்படி எஸ்கேப் ஆனா மாணவனின் அப்பாலஜி லெட்டர் இது!

வார்டன் : என்னடா இது லெட்டரு?
நான்: அப்பாலஜி லெட்டர் சார்.
வார்டன்: என்ன எழுதிருக்குனு ஒரு தடவை படி.
நான்: (லெட்டரின் தமிழாக்கம்)

ராத்திரி வார்டன் வரும் போது ரூம்ல சும்மா உக்கார்ந்திருந்தேன். இனிமே ராத்திரி அவர் வரும்போது ரூம்ல இருக்க மாட்டேன்.
இப்படிக்கு,பாலாஜி

۞۞۞۞۞

ஆத்தங்கரை விநாயகருக்கு ஒருத்தரு எழுதியிருக்கர கடிதத்தை படிச்சுப்பாருங்களேன்!

ஆத்தங்கரையோரமா உட்கார்ந்துகிட்டு குளிக்கப் போகிற பிகர்களை லுக்குவிட்டுக்கிட்டு கொழுக்கட்டைய தின்னுக்கிட்டு ஒய்யாராமா உட்கார்ந்திருக்கிற பொழப்பில்ல என்னுது. நாயாப் பேயா ஓடியாடற பொழப்பு. ஐந்நூத்தி சொச்ச தமிழ் ப்ளாக்குல ஐம்பதாவது எட்டிப்பார்த்து :)))))) "ஸ்மைலியோ, "சூப்பர் கலக்குறீங்க"ன்னோ, "எதார்த்தமான நடை..நல்லாருக்கு"ன்னோ, "இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்"ன்னோ கமெண்டு போட்டாத்…தேன்...நம்ம கல்லாவுல இருபத்து சொச்சம் கமெண்டாவது தேறும்.!

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்தே விடுக்கும் வேண்டுக்கோளாய்..!

கடிதம் எழுதறதே ரொம்ப சுவாரஸ்யமான விசயம்தான்! சாதரண லெட்டர்ல எழுதுற வழக்கம் விட்டுப்போய், இப்ப இமெயில் கூட எழுதறதுக்கு முடியாத மாதிரியான சூழ்நிலையில் இருக்கறவங்க, அட்லீஸ் பதிவுலயாவது அப்பப்ப லெட்டர் போடுங்களேன்!
மேலும் வாசிக்க...

500 ஆக்கங்கள் மட்டுமல்ல அதற்கு ஊக்கம் கொடுத்தவர்களுக்கும்....!



உங்களின் ரசிப்பு தன்மை!

எங்களின் ரசிப்பு தன்மை!

எல்லாமே கூடும் ஒரு புள்ளியாக

வலைச்சரம்!

உங்களின் எண்ணங்களோடு ஒத்து போகும் எங்களின் எண்ணங்கள்!

நம் எண்ணங்களை நிறைவு செய்யும் வலைப்பதிவுகள்!

நாம் வளர்க்கும் எண்ணங்களால் மட்டுமே - தமிழ் வாழும்!

எண்ணங்களை பதிவுகளாய் வெளிப்படுத்தியவர்களுக்கு

உங்களின் எண்ணங்களை பின்னூட்டங்களாக்கி வாழ்த்தி செல்லுங்கள்!

பார்க்க தவறவிட்ட பல நல்ல பதிவுகளை வலைச்சரத்தில் பார்த்துச்செல்லுங்கள்!



பின்னூட்டங்களால் தான் இந்த வலைச்சரத்தின் வேகம் 500ல் சென்று கொண்டிருக்கிறது!

500 ஆக்கங்கள் மட்டுமல்ல அதற்கு ஊக்கம் கொடுத்தவர்களுக்கும்...

வலைச்சரத்தின் ஆசிரியர் குழு சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது!

۞۞۞۞۞

இருக்கு இடத்திலிருந்தே விடுக்கும் வேண்டுக்கோளாய்....!

வலைச்சரம் வாசித்துப்பாருங்கள்!

உங்களுக்கு பிடித்த பதிவுகளையும் பின்னூட்டத்தில் தந்து செல்லுங்கள்!
மேலும் வாசிக்க...

கடை! கடையாம்! காரணமாம்!!




சொந்த ஊர்ல ஆரம்பிச்சு அப்படியே, கிளம்பி ஒவ்வொரு ஊராக சென்று உணவு ருசி பார்த்த கதைகளை செய்தியாக சொல்லும் இவர் பதிவில் குறிப்பிட்டுள்ள கடைகளை குறிப்பெடுத்து வைத்துள்ளேன் சந்தர்ப்பம் இருந்தால் சந்திப்போம் அந்த கடைகளை என்று....!

۞۞۞۞۞

ஈரோடு சுற்றுவட்டாரத்தில இருக்கு ஹோட்டல்கள் மற்றும் நினைவில் நிற்கும் கடைகளை பத்தி ஒரு ஃப்ளாஷ் பேக் அனுபவமாய் சுரேகாவின் பதிவில் முழுக்க முழுக்க சித்த மருத்துவமுறைப்படி.. இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு தயாரித்து வழங்கும் கடை சந்தர்ப்பம்
கிடைத்தால் கண்டிப்பாக செல்லவேண்டும் என்று குறித்து வைத்துக்கொண்ட இந்த செய்தி!

۞۞۞۞۞

காலேஜ்ல் பரீட்சை முடிஞ்சு லீவு விட்டா போதும் எங்க ஊர்ல இருக்கற இந்த ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டுட்டுத்தான், எல்லா நண்பர்களும் ஊருக்கு மூட்டை கட்டுவானுங்க ஏன்னா..! அந்தளவுக்கு செண்டிமெண்ட் கடையும் கூட! தெருவில் போகும் போது பார்த்த கடை அதை பற்றி நிறைய தெரிந்திருந்த அபி அப்பாவின் பதிவில்தான் பின்னர் தெரிந்துக்கொண்டேன் ஏன் அந்த கடைக்கு அவ்ளோ கூட்டம் என்று!

நீங்களே பாருங்களேன் எவ்ளோ அனுபவித்து சொல்லும் விசயத்தை....

பாய் கடையில் ஒரு எண்ணை பாட்டில் வாங்கி அதை ஒரு பெரிய அலுமினிய தட்டிலே ஊற்றி, அதிலே அந்த மசாலா பொடியை கொட்டி தேவையான அளவு கல் உப்பு(கல் உப்புதான் போடுவார்) போட்டு அதிலே ஒவ்வொறு துண்டா நல்லா குளிப்பாட்டி அந்த தட்டிலேலே வரிசையா அடுக்கிகிட்டே வரும் அழகு சூப்பரோ சூப்பர். பின்பு அந்த பெரிய்ய அலுமினிய தட்டை மெல்லிய வேஷ்டி துணியால மூடி கட்டி மார்கெட்டிலேயே வச்சுட்டு காவலுக்கு ஒரு பையனை போட்டு விட்டு “தட்டிமெஸ்ஸுக்கு பைக் படபடக்கும்.

۞۞۞۞۞

டீக்கடையோடு இணைந்த சென்னை வாழ்க்கையினை வாழ்ந்து அனுபவித்த விதத்தை கூறும் இவரின் டீக்கடை சுகங்களும் இவரால் குறிப்பிடப்படும் டீக்கடை பயன்களும் உண்மைதான்!

டீக்கடைகள் தரும் சுகங்கள் அலாதியானவை. மிக அருமையான நட்புசூழல் டீக்கடைகளில் டீ ஊற்றி வளரக் காத்திருக்கிறது.எவ்வளவு வளர்ந்தாலும், என்னால் டீக்கடைகளுக்கு போகாமல் இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. நண்பர்களைப் பார்த்தல், சும்மா இந்த பக்கம் வந்தேன் என எவ்வளவு கதையளந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி, சமூகத்தை வெகு அருகிலிருந்து உற்று நோக்கும் விஷயம் தானோ என்னவோ என்னை அதீதமாய் வசீகரிக்கிறது.

۞۞۞۞۞

டீக்கடைகள் சுதந்திர இந்தியாவின் சுறுசுறுப்பு சின்னங்கள். நாம் சோம்பேறித்தனம்னு ஒத்துகொள்கிற\சமாச்சாரமாகிய காலையில் எழுந்திருக்காமல்,உறங்குவது, டீக்கடைகளின் அகராதியிலேயே கிடையாது.டீக்கடை சிக்கனத்தின் சின்னமும் கூட, ஒரு செய்தித்தாளை இத்தனை பேருக்கும் மேல் உபயோகிக்கலாம் என்று ஒரு பெரிய சிக்கன பாடத்தை நமக்கு சொல்லி கொடுக்கின்றன. பழைய செய்தித்தாள்களையும் பல விதத்தில் உபயோகிக்க
கற்று தருகின்றன டீக்கடைகள்.உதாரணமாக , பஜ்ஜியை பொட்டலம் கட்டுவது...
இப்படியாக செல்லும் இவரின் டீக்கடை நினைவுகள் !

۞۞۞۞۞

இது என்னோட தம்பட்டம் பதிவு டீக்கடை பற்றியது!

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுக்கோளாய்....

எல்லாரும் ஸ்ட்ராங்கா ஒரு டீ சாப்பிட்டிக்கிட்டே படிங்க பதிவுகள்ல ஏன்னா அப்பத்தான் நல்ல உற்சாகமாவும் இருக்கும் !!!
மேலும் வாசிக்க...

சங்கம் - வருத்தப்படாத வாலிபர்கள்!


வருத்தபடாத வாலிபர் சங்கத்துக்கு அறிமுகம் அப்படி இப்படின்னு ஏதுனா சொன்னோம்! சங்கத்துல அதிகம் அடி வாங்கிய கைப்புள்ளய விட நான் அதிகம் அடி வாங்க வேண்டியிருக்கும் அதுனால் ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு போய்டலாம்....!

சங்கத்து உறுப்பினர் ஆர்கெட்டில் அலம்பல் செயத விஷயங்களை பற்றிய ஒரு ஃபுல் டீடெயில்ட்டு ரிப்போர்ட்டு!

ஆர்கெட்ல இருக்கறவங்களுக்கே தெரிஞ்சுருக்கும் என்னாமா சீனப்போடுறானுங்கன்னு கண்டிப்பா ஆச்சர்யப்பட்ட அனுபவங்கள் இருக்கும் அதெல்ல்லாம் இதுல இருக்கு அப்படியே கொஞ்சம் செக் பண்ணி பார்த்துக்களாம்!

۞۞۞۞۞

கல்யாணமானவர்களுக்கென, அ ஆரம்பிச்சு ஃ வரைக்கும் அவ்ளோ ரொம்ப முக்கியமான டிப்ஸ்!

கண்டிப்பாக கல்யாணம் ஆனவர்களுக்கு மனதுக்குள் சந்தோஷம் பீறிட்டு கிளம்பும் கல்யாணம் ஆகாதவங்களுக்கும் கூட சந்தோஷம் வரலாம் ஏன்னா எதிர்காலத்தை நினைச்சுப்பார்த்து எப்போதுமே சந்தோஷம் தானே படணும்!

۞۞۞۞۞

சங்கத்து உறுப்பினரை பேட்டி காணும் இந்த பதிவு!

ஆமாங்க ஆபிஸர்.. நான் குதுரையிலே பிகர்வலம் போனப்போ எல்லாரும் அந்த குதுரையேதான் பார்க்கிறாய்ங்கே! என்னை பார்க்கமாட்டேக்கிறாய்ங்கே? அதுதான் நான் குதுரையிலே ஒடகார்ந்து இருக்கிறபோ அதை தலையே குனிஞ்சிக்கிற சொல்லிட்டேன்..."

۞۞۞۞۞

ஃபிகருக்கு பிராக்கெட் போடுவது எப்படி என்றொரு அனுபவ ஆய்வுகுறிப்புக்களை தரும் பதிவு (ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்!)

அப்படியே திரும்பிப் பாத்தா மயில். திடீர்னு ஒரு தவுஸண்ட் வாலா சரவெடி வெடிச்ச மாதிரி பட படன்னு பி.பி.ஸி, ஸ்டார் மூவீஸ், டிஸ்கவரி ன்னு பல சேனல்கள அட் எ டைம்ல ஓபன் பண்ண மாதிரி பேசினா. ஒரு எழவும் வெளங்கல. இதுக்குத்தான் தமிழ்ல பேசுனா நாலனா ஃபைன்னு போட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடத்துல சேந்திருக்கணும்.

ஃபிகர் செட் ஆகுறதுக்கு முன்னாடி யோசிக்காமப் பேசுனா ஆப்பு. செட் ஆனதுக்கப்புறம் யோசிச்சாலே ஆப்பு - பொன்மொழிகள் விரவிக்கிடக்கும் பதிவும் கூட!

۞۞۞۞۞

செம கலக்கல் பதிவாக அதுவும் தொடராக வந்து எல்லோரையும் சிரிக்க வைத்த விவாஜி - தி பார்மர்

கேமராவை ஜூம் பண்றோம்..
அப்படியே ஒரு சிஸ்டம் ஷட் டவுண் ஆகுது..
மானிட்டர் ஆப் ஆகுது..
கனெக்ஷ்ன் ஓயர் எல்லாம் கழட்டுறாங்க..
நம்ம ஹீரோவை அப்படியே பிடிச்சி எழுப்பி கூட்டிட்டு போறாங்க...

கையைப் பிடிச்சுட்டு இழுத்துட்டுப் போகும் போது ஆபிஸ்ல்ல ஒரு ஒரு டிபார்மெண்ட்ல்ல இருந்தும் மக்கள் சவுண்ட் விடுறாங்க..

"அய்யோ எங்க பார்மர் எங்களுக்கு எல்லாம் மாசம் பத்தாயிரம் பேருக்கு கடலைப் போடுறது எப்படின்னு ஐடியா கொடுத்தாரே அவரைப் போய் இப்படி பிடிச்சுட்டுப் போறீங்களே"

"ஆறு வருசமா சேட்டிங்க்கெ இல்லாத எங்க ஆபிஸ்க்கு எங்க பார்மர் ஒரு வாரத்துல்ல சேட்டிங் சாப்ட்வேர் எல்லாம் டகால்டியா டவுண்லோட் பண்ணிக் கொடுத்தாரே"

۞۞۞۞۞

இன்னிக்கு சங்கத்துக்கு ஆப்புரேசல் தேதி தெரியும்ல்ல

அண்ணே ஆப்புரேசல் எனக்கு நல்லாத் தான்னே வரும்... நானெல்லாம் சங்கத்துக்கு எந்த பங்கமும் வராமா சொக்கத் தங்கமா உழைச்சு.. ஒரு நிரந்தர அங்கமா இருக்கேண்ணே.. நம்ம தலக்கு என்னியப் பத்தி நல்லாவேத் தெரியும்... என் ஆப்புரேசல் யார் ஏத்தி விட்டாலும் தல கேக்காது "அப்படின்னு ராம் ராயலாச் சொல்ல...

ஒரு வீர வரலாறு சொல்லும் போது அங்கே என்ன கிசுகிசுன்னு சத்தம்! பாருங்கப்பா போய்....!

۞۞۞۞۞

இது எல்லாம் சங்கத்துல ஒரு தொகுப்பா இருக்கிற ஒன் லைனர்ஸ்! நல்லா படிச்சு மனப்பாடமா வைச்சுக்கோங்க பின்னால உதவும்!

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்....!

என்ன வேண்டுகோள் விடறது...?!

எல்லாரும் எதற்கும் வருத்தபடாத வாலிபர்களா வாழ்ந்து பாருங்க சூப்பரா இருக்கும் அவ்ளோதான்!
மேலும் வாசிக்க...

2 வீலர்கள்!



சின்ன வயது கனவுகள் நாள் அதிகமாக அதிகமாக மனதுக்குள்ளே உழன்று ஊற்று எடுத்து நிற்கும் நினைவுகளாய்..!

இளவஞ்சியின் புல்லட் கனவுகள் (எனக்கும் கூட சின்ன வயது ஆசைதான்! இதுவரைக்கும் வாய்ப்புகள் இருந்தும் ஏனோ நிறைவேற்றி கொள்ள முடியவில்லை!)

நல்ல வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்தவர்கள் பற்றி சொல்லுவார்களாம் இப்படி! - வாழ்ந்திருக்கான்ய்யா மனுசன்- இதைத்தான் சொல்ல தோன்றியது இவரின் புல்லட் அனுபவ பதிவு!

50 கிலோ உடம்புல அந்தக்கால பேஷனான பேகிபேண்ட்டு படபடக்க, டக்-இன் பண்ணாத 42 சைசு தொளதொள சட்டை முதுகுக்கு பின்னாடி காத்து ரொம்பி புட்டுனு நிக்க, சுருள்சுருளான பங்க் ஹேர்ஸ்டைலு!

எனது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக இதனைச் சொல்லி பெருமையடித்துக் கொள்ள! ஊருக்குப் போனபின் புதுசாய் ஒரு Bullet Machismo 350 வாங்க வேண்டும். இப்போது நினைத்தாலும் மனதோரம் மகிழ்ச்சி கொடுக்கும் என் அந்தக்கால அலம்பல்களை நினைவுப்படுத்த இல்லாவிடினும், அப்பாவுடனான எனது வாழ்க்கையின் நினைவுகளை அந்த "தட்தட்தட்..." சத்தத்தின் மூலமாக மீட்டெடுக்கவாவது!

۞۞۞۞۞

சைக்கிள் பற்றிய இளமைக்கால நினைவுகளாய்....!

சைக்கிள் பராமரிக்கிறதிலை சிலருக்கு கை வந்த கலை. தங்களை சோடிக்கினமோ இல்லையோ.. சைக்கிளை விதம் விதமாக சோடிப்பினம். வயர்களை சுத்துவினம். புதுவிதமான முன் லைட் பின்லைட் சைட்லைட் என்று எல்லாம் போடுவினம்.முன் சில்லு பின் சில்லு களிலை பூ போல வளையமொன்றை போட்டு வைப்பினம். ஓடக்கை அது சேர்ந்து சுத்தக்கை நல்ல வடிவாக இருக்கும்.சில பேர் அதிலையும் சின்ன லைட் பூட்டியும் விடுவினம்.
(ஈழத்து நண்பர் ஒருவரின் துணையோடு நான் பார்த்து படித்து ஈழத்து தமிழ் புரிந்துக்கொண்ட பதிவும் கூட..!)

۞۞۞۞۞

பெரும்பாலும் எல்லா அப்பாக்களுமே இந்த விசயத்தில் ஒற்றுமையாகத்தான் இருப்பார்கள் போலும் என நினைக்கத்தொடங்கும் இந்த வரிகள்!

புதுவண்டியை வாங்கிக் கொண்டு, நான்தான் முதன் முதலில் ஓட்ட வேண்டும் என்று திருச்சியிலிருந்து திருவரங்கத்திற்கு உருட்டிக் கொண்டே வந்திருக்கிறார். பாவம் அப்பாவின் நண்பர் புகழேந்தி மாமாவும் கூடவே நடந்து வந்திருக்கிறார்.

இந்த முறை ஊருக்குப் போன போதும் ஆசை தீர சைக்கிள் ஓட்டினேன். அடிக்கடி செயின் கழண்டு கொண்டாலும் அந்த கடக் கடக் சத்தம் ஒரு சந்தோசத்தை தருகிறது.

சைக்கிளிடமிருந்து பிரிந்த காலங்களில் மனதில் கோர்த்து வைத்திருந்த ஆசையினை விடுமுறையில் நிறைவேற்றிகொண்டவர்! நல்ல அனுபவ பதிவு!

۞۞۞۞۞

எங்க ஊருக்காரருக்கு ஏற்பட்ட்ட சைக்கிள் அனுபவத்தை பாருங்களேன்!

கோடை விடுமுறையில் காலை வேளையில் சிலு சிலு காற்றில் சைக்கிளில் பயணம் செய்வது ஓர் ஆனந்தம். சில சில சமயம் எதிர் காற்றில் வேகமாய் போய் விட்டு வரும் பொழுது மெதுவாக வருவது மற்றொரு சுகம். அல்லது பெரிய பாலத்தில் வேகமாய் ஏறிவிட்டு இறங்கும் பொழுது ஹாயாக இறங்குவது சூப்பரோ சூப்பர்!!!

சைக்கிளில் முன்பக்கம் காதலியை வைத்து வேகமாக ஓட்டிக் கொண்டு போனது உண்டா? அந்த சுகத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது. அதுவும் யாருக்கும் தெரியாமல்"escape" வது கலக்கல் கண்ணா, கலக்கல்..!

ஆனாலும் அவருக்கு இருக்கும் இந்த சந்தேகத்தை யாரேனும் தீர்த்து வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை? வாய்ப்பு கிடைத்தால் அண்ணிக்கு தெரியாமல் சிவா அண்ணன்கிட்ட கேட்கணும்...! :-)

۞۞۞۞۞

அப்படியே என்னைய மாதிரியே சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டவரின் பதிவு இது!
பலநாள் முயற்சியில வண்டிய வேகமா தள்ளிக்கிட்டே போய் பெடல்மேல நின்னுக்கிட்டே கொஞ்சதூரம் போக பழகிட்டேன். அப்பயே, 'சைக்கிள்ள நாம பல சாதனைகள் பண்ணவேண்டியிருக்கு; எப்ப கொரங்கு பெடல் போடுறதுன்னு அவசரமா முக்கோணத்துல காலவிட்டதுல, அடுத்த பக்கம் கால விடவே முடியாம நேர போயி எதுத்தாப்ல இருந்த மரத்துல கொஞ்சம் கூட பிசிரே இல்லாம மோதிட்டேன்!

۞۞۞۞۞

நிறைய சைக்கிள் பற்றிய அனுபவங்களை பதிவுகளில் கண்டவர்களுக்கும், பதிவுகளாய் விட்டுச்சென்றவர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் பதிவு!

அண்ணா கண்ணனின், சைக்கிள் பாகங்கள் அனைத்தும் அன்னை தமிழில்....!

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!

சைக்கிள் சம்பந்தமான பதிவுகள்னு பார்க்க போனா ஏராளமாத்தான் இருக்குது! ஆனா மத்த 2வீலர் வண்டிகள பத்தி அந்தளவுக்கு அதிக அனுபவ பதிவுகள் இல்லை! ஆமாம் என்ன எல்லாரும் சைக்கிள் மட்டுமேத்தான் ஓட்டியிருக்கீங்களா....?
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது