07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 13, 2008

ரயில் பயணங்களில்....


இரயில் பயணத்தின் போது காணக் கிடைக்கும் காட்சிகள் வேறெங்கேயும் காணக் கிடைக்காதது. மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இரயில்வண்டி பயணித்துக் கொண்டிருக்கையில், இரயில் பாதையினை ஒட்டிச் செல்லும் ஒற்றையடி மண்பாதை எங்குச் சென்று சேர்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆசை பலமுறை வந்திருக்கின்றது

இப்படியாக பல பயண அனுபவங்களை கூறிக்கொண்டு வந்தாலும் கூட இறுதியில் சொன்ன என் மனதை விட்டு விலகாத காட்சியாக வர்ணித்திருக்கும் கைப்புள்ள!

ரெண்டு ரூவாம்மா, காசைக் கீழே போட்டுருங்க, நான் எடுத்துக்கறேன்" என பையன் மறுபடியும் சொல்வதையும் அதற்கு அப்பயணி செவிமடுக்காதிருந்ததும் "காசைக் கீழே போட்டுருங்கம்மா, காசைக் கீழே போட்டுருங்கம்மா"என்று அவன் கத்திக் கொண்டே வண்டியின் பின் ஓடி வந்ததும், அவனுடைய கத்தல் அழுகையாக மாறியதையும், வண்டியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் அழுது கொண்டே நின்று விட்டதையும், அந்த பையன் ஒரு புள்ளியாக மறையும் வரை நான் அதை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்ததையும் இன்று வரை என்னால் மறக்க இயலவில்லை.

۞۞۞۞۞

ரயில் போக்குவரத்து நின்றுபோன யாழில் இருந்து இவரின் ரயில் பயண அனுபவங்கள் பதிவாக

பெரும் பாலான மாலை வேளைகளில் எங்களது முக்கியமான விளையாட்டில் ஒன்று ரெயினுக்கு டாட்டா காட்டுவது. அதில் போகிற பயணிகளும் கைகாட்டுகிறார்கள் என்று வேறு நினைத்துக்கொள்வோம்!

மனசு சரியில்லாத தருணங்களில் எந்த நிலையத்திலும் இறங்காமல் ரயிலில் நீள வழிகளில் மாறிமாறிப் பயணித்திருக்கிறேன். ஆனாலும் ரயில் பயணம் என்பது எனக்குப் பிடித்த ஒன்றாகவே இருக்கிறது

۞۞۞۞۞

எல்லே ராமின் நினைவுகளில் என்றும் என்னால் மறக்க முடியாத எங்க ஊரு ரயிலு கதை

கடமை தவறாத, ஆஸ்துமாக்காரன் மாதிரி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தது, மயிலாடுதுறை ஜங்ஷன்-தரங்கம்பாடி ரயில்

சாயங்கால வேளைகளில் ரயில்வே டிராக்கில் காலாற நடந்து போகின்ற சுகமே தனி. சூரிய அஸ்தமனத்தில் நெடுந்தூரம் சென்று மறையும் தண்டவாளக் கொடுகளை வரைய ஒரு ரவிவர்மா வேண்டும்

சில வருடங்கள் முன்பு எல்லாமே நின்று விட்டது :-(

۞۞۞۞۞

இன்றைக்கும் அந்தப் ரயில் பயணங்கள் களைப்பை ஏற்படுத்தாத சுகமான நினைவு ஒத்தடங்கள்.

றெயினில ஏறி சீற்றில் உட்கார்ந்து போவதை முதல் நாள் இரவே கற்பனை செய்து பார்த்துவிடுவேன்.

இன்னொரு நாள் அவன் 10 சத நாணயக்குற்றியைத் தண்டவாளத்தில வச்சு றெயின் சில்லால நசிபட்டுப் பெருத்துப் போன அந்த நாணயத்தைக் காட்டினான். அதை அதிசயமாப் பார்த்துக்கொண்டே "ஹிம் நானும் சதானந்தன் போல தண்டவாளப் பக்கம் உள்ள வீட்டில இருந்திருக்கலாம்" எண்டு அப்ப நினைச்சனான்.

۞۞۞۞۞

துளசியக்காவோட ரயில் பயணம் எப்பா...! எத்தனை ஊர்கள் நிறைய ரயில் பயண அனுபவங்களை சொல்லியிருக்காங்க!

ரயில்லே போறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும், நாங்க ச்சின்னப்பிள்ளைகளா இருக்கும்போது, 'பட்டணத்துக்கு'ப் போறதுன்னாவே கொண்டாட்டம்தான். என்னதான் மெயில்,எக்ஸ்ப்ரெஸ்ன்னு இருந்தாலும் பாஸெஞ்சர் வண்டின்னா இன்னும் மஜா. ஆனா...........வீட்டுலே அம்மா சம்மதிக்க மாட்டாங்க. சாயந்திரமா ரயில் ஏறுனா, மறுநாள் காலையில் பட்டணம்.

அதுக்கப்புறம் சில வருசம் கழிச்சு இங்கே வந்து சேர்ந்தாச்சு. பொன்னு மாதிரி மூணே ரயிலுங்க இங்கே ஓடிக்கிட்டு இருந்துச்சு. வடக்கே போக ஒண்ணு, தெக்கே போக ஒண்ணு, மேற்கே போக ஒண்ணு. கிழக்கே ஏன் போகலைன்னு கேக்கமாட்டீங்க தானே? கிழக்கே கடல்தான். :-)

۞۞۞۞۞

ரொம்ப ஈசியாக சென்னையிலிருந்து பெங்களூருக்கு பெங்களுர் டிரெயினில் பயணிப்பவர்களை கண்டுபிடிக்கறத சொல்லித்தரும் அம்பி.

ஆண்கள் எல்லோரும் டவுசர் பாண்டிகளாக இருப்பார்கள். தோளில் ஏதேனும் கேக்ரான்-மோக்ரான் சாப்ட்வேர் கம்பனி ப்ரீயா குடுத்த பை இருக்கும். இடது கையில் கண்டிப்பாக ஒரு பிஸ்லரி பாட்டில் இருக்கும், வலது கையில் காமிரா மொபைல் (யாருக்கு தான் பேசுவார்களோ?). ஏதேனும் ஒரு காதில் கடுக்கன், ஈயம் பித்தளையில் தேள் டாலர் போட்ட செயின் கண்டிப்பாக இருக்கும்.

۞۞۞۞۞

ரயில் பயண ஸ்டேஷன் அனுபவங்களை ரசித்து ருசித்து சொல்லும் பதிவு இது!

பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத இடம்.. உள்ளே நுழைந்ததும் நமக்கும் ஏதோ ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. நேரம் எவ்வளவு இருந்தாலும் கொஞ்சம் வேகமாகவே நகரத் தூண்டுகிறது. நெரிசலில் வளைந்து வளைந்து ஊடுருவி செல்கிறேன்..

மெதுவாக நகரத் தொடங்கிய ரயிலை நோக்கிய கையசைப்புகள் .. வாயிலில் இருந்து தலை மறையும் வரை பார்த்து அசைக்கப் படும் கைகளும் ஏதோ பேசிக்கொள்கின்றன போலும்.

எனக்காக அசையாத கைகளாயிருந்தாலும் , அவை எப்படியோ எனக்காக அசைக்கப்பட்ட கைகளை நியாபகப்படுத்தி விடுகின்றன. நியாபகம் சிலவேளைகளில் கண்ணின் ஒரத்தில் லேசான ஈரத்தையும் விட்டுச்செல்கிறது.

۞۞۞۞۞

இது ஜொள்ளுப்பாண்டியோட ரயில் மயிலு

அது என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியலை என் கம்பார்ட்மெண்டில் மட்டும் எப்பவுமே நம்ம கூட வர்றதெல்லாம் ரிட்டயர்ட்மெண்ட் வாங்கி 10 வருசம் ஆன பல்லுப்போன பாட்டிகளும் ஜொள்ளுப்போன தாத்தாக்களும் தான். (ஆமாம் அப்ப யாருக்குத்தான் லக் அடிக்கிது எல்லாருமே எனக்கில்ல எனக்கில்லன்னு புலம்புறாங்க!?!??)

உங்க கூட அதுவும் எட்டிக்கிள்ளுற தூரத்திலே (சும்மா ஒரு பேச்சுக்குதான்கேச்சுகிடாதீங்க!) உக்கார்துகிட்டு வந்தா என்ன பண்ணறது ?? ஆத்தா! அம்மா! என்ன பண்ணறதுன்னே தெரியலையே!? “மீட் மை சவுத் இண்டியன் டயானா !! “ ன்னு சொல்றதுக்கூட எந்த ஒரு ஆப்பவாயனும் பக்கத்திலே இல்லையேன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது !

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!

பெரும்பாலும் அனைவருக்கும் ரயில் பயண அனுபவங்கள் இருக்கும்!பயணத்திற்கு சாப்பாடு கட்டிக்கொண்டு போனது,ரயில் கேண்டீன் சாப்பிட்டது,என்று பல பல அனுபவங்கள் நேரம் கிடைக்கையில் பகிர்ந்துக்கொள்ளுங்களேன் பதிவுகளில்...!

3 comments:

 1. பெரும்பாலும் அனைவருக்கும் ரயில் பயண அனுபவங்கள் இருக்கும்!பயணத்திற்கு சாப்பாடு கட்டிக்கொண்டு போனது,ரயில் கேண்டீன் சாப்பிட்டது,என்று பல பல அனுபவங்கள் நேரம் கிடைக்கையில் பகிர்ந்துக்கொள்ளுங்களேன் பதிவுகளில்...!


  en blogil ippadi sila pathivugal irukkum.

  rayil payanam marakka mudiyatha ondru.

  ReplyDelete
 2. ஆயில்யன்
  உங்க ரயில் வண்டி என்னுடைய நினைவு வண்டியை கிளப்பி விட்டது.
  இன்னும் 2 நாளில் இது பற்றி ஒரு கவிதை எழுதி என் ஃபிளாக்கில் போடுகிறேன்.

  ReplyDelete
 3. பஸ், ரயில் அனுபவங்கள் தொகுத்தாச்சு... லாரி, மோட்டார் அனுபவங்கள் எல்லாம் தொகுக்கலையா?

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது