07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 9, 2008

அம்மா!


விவரிக்க முடியாத வார்த்தைகளாய் அம்மா!
அம்மா பற்றிய தம் அனுபவங்களை ஆசைகளை பாசத்தின் வெளிப்பாட்டினை பரிவோடு வளர்த்து ஆளாக்கிய அன்னையை பற்றி சொல்லும் பதிவுகளில்....

சுமைகளை தாங்கி
துயரங்கள் பல உன்னை வருடினாலும்
புயலுக்கு பின் மலர்ந்த பூப்போல்
புன்னகையுடன்
பூக்கிறாய்
ஒவ்வொரு விடியலிலும் ... என்று தன் அம்மா பற்றிய அனுபங்களை அழகாக கவி வடித்திருக்கும் சிந்து

۞۞۞۞۞

இன்று எப்படியாவது சமாதானப்படுத்தி அவளை ஒரு புகைப்படம் எடுத்தே தீரவேண்டும். இந்த புகைப்படத்தில் இருப்பதுபோல நிற்கவைத்து எடுக்க வேண்டும். வெளியில் நீல வான பின்னணியில்.....

இப்படியாக ஒரு பிள்ளையின் எண்ணங்களை ஆசைகளை அழகாக சொல்ல்லி அதை அழகாய் மறுக்கும் அம்மாவினை (எல்லா அம்மாக்களும் இப்படித்தான் போல) பற்றி எழுதிய கதை இது!

۞۞۞۞۞

அம்மா உன் பிறந்த நாளை கொண்டாடுவோம்! என்று கூறினால் வெட்கப்புன்னகை பிடுங்கி தின்ன சற்று ஆத்திரத்துடன் கோபித்துக்கொள்ளும் அம்மாக்கள்தான் அதிகம் உண்டு!
பிறந்த நாள் போன்ற ஒரு வருடாந்திர நிகழ்ச்சியை நல்ல சிறப்பாக குடும்பத்தோடும், மற்றும் குடும்பமின்றி இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்றும், கொண்டாட நினைப்பது வெகு சிலருக்கே தோன்றும் நற்சிந்தனை அது பற்றி இன்னும் கொஞ்சம் படங்களுடன் பாருங்களேன் பதிவர் அண்ணா கண்ணனின் அவர்களின் என் அம்மாவின் 60 வது பிறந்த நாளில்...

۞۞۞۞۞

அம்மாவை பற்றி அருமையான விளக்கத்துடன் தொடங்கும் கீதா அம்மாவின் இந்த பதிவில்

அம்மா என்பவள் ஆதார சுருதி! மழைபோல் அன்பை வர்ஷிக்கும் ஒரு உன்னத சக்தி! மண்ணிலிருந்து கிளம்பும் மண்வாசனை போல் அவள் நினைவு ஒரு இனிய மணம் தரும் ஆற்றல் உள்ளது. பூமியானது எப்படி இத்தனை உயிர்களையும், தனக்குப் பாரம் சிறிதும் இல்லை என்பது போல் தாங்குகின்றதோ அவ்வாறே ஒரு தாய் தனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் மாறாத பாசம் காட்டுவாள். தாயன்புக்கு ஈடு, இணை இல்லை. ஒரு துறவி ஆனாலும் தாயன்பை மட்டும் விடவே முடியாது. இந்த உலகை ரட்சிக்கும் சக்தியே அன்னை என்னும் மாபெரும் சக்தி.

உண்மைதானே! கடவுள் எல்லோருக்கும் சமமாய் அன்பை கொடுத்தான் அம்மா என்றொரு உருவில்...!

۞۞۞۞۞

சற்று கண்டிப்புடன் இருக்கும் அம்மாக்களை பற்றி பிள்ளைகளுக்கு,அப்போதைக்கு கொஞ்சம் மனதுக்கு கடினமாக இருப்பதாக தோன்றினாலும் பின்விளைவுகள் என்றும் இனியவைதான்! ஆனாலும் இவரது பதிவில் பாருங்களேன் நல்ல கலகலப்பான அம்மாவினை அப்படியே கண்டிப்பான அம்மாவாக உருவகப்படுத்தி இவர் யோசித்த விஷயங்களை...

ஆறு மணிக்கு எழுந்திரு. உடனே பல் தேய். பல் தேய்த்துக் கொண்டே வீட்டிற்குள் உலாத்தாதே. குளித்து விட்டுதான் சாப்பிட வேண்டும். அழுக்குத் துணியை ஒழுங்காய் அதற்கான கூடைக்குள் போடு. தலை வாரி பெரியதாய் பொட்டிட்டுக் கொள். சீப்பில் முடியை உடனே எடு. இதெல்லாம் இன்றோடு முடியப் போகிறது. ஆஹா! - என்று தோன்றினாலும் கடைசி வரிகளில் கவி பாடிய இம்சை அரசியின் வரிகள்
கடவுள் உண்டா
என்கிற விவாதங்களைப்
புறக்கணித்து அனுதினம்
நான் வணங்கும்
கடவுள் நீ...

۞۞۞۞۞

வெளிநாடுகளில் பல ஆண்டுகளாய் பணி புரிந்து அங்கேயே செட்டில் ஆகும் சூழலில் இருக்கும்போது அடிக்கடி நாட்டிறகு வந்து செல்லுதல் என்பது இயலாத விஷயமாக மாறி விடும் அது போன்ற சமயங்களிலோ அல்லது அத்தியவசிய தேவைகளின்போதே சிலர் தம் பெற்றோரை தம் நாடுகளுக்கு சில மாதங்களுக்கு வரவழைப்பார்கள் அந்த மாதிரியான நேரங்களில் கண்டிப்பாய் உள்ளதில் ஏற்படும் மகிழ்ச்சிகளையும் அதே சமயத்தில் கூடவே பணியாற்றும் நண்பர்களோடும்யும் தம் குடுமப உறவுகளோ இணைந்திருக்கும்போது இருக்கும் மகிழ்ச்சியை மட்டும் இவர் தம் பதிவுகளில் வெளிப்படுத்துவதை பாருங்களேன் பெயரில் தொலைததவனாக இருந்தாலும் நிறைய சந்தோஷங்களை பெற்றிருப்பார் என தோன்றியது இந்த அனுபவங்கள்!

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்....!

அன்னை தமிழ் பற்றி எழுதும் அனைவரும் கண்டிப்பாய் தம் அன்னை பற்றியும் அவர்தம் அன்பு பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்களேன் தமிழ் உலகத்துக்கு!

5 comments:

 1. சூப்பரு தல...

  நாம எல்லாருமே அம்மாவ பத்தி ஒரு பதிவு கட்டாயம் போடணும்

  ReplyDelete
 2. அருமை அன்பர் ஆயில்யன்

  அனைத்து அன்பர்களும் அருமை அன்னையைப் பற்றியும் அவர்தம் அன்பினைப் பற்றியும் அழகு தமிழில் அலங்காரப் பதிவொன்று அவரவர் வலைப்பூக்களில் இட அன்புடன் வேண்டுகிறேன்

  ReplyDelete
 3. Beautiful and Different

  ReplyDelete
 4. /விவரிக்க முடியாத வார்த்தைகளாய் அம்மா!/

  அருமையான பல பதிவுகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது