07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 29, 2008

இங்கேயும் போய் பாருங்க... வாசியுங்க..சுவாரஸ்யமான மொக்கை மற்றும் நகைச்சுவை நையாண்டி பதிவுகள் நிறைந்த வலைப்பூ வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு சொந்தமானது. அதில் இந்த மாதம் தான் நண்பர் ரிஷான் என்னை அழைத்துசென்றார். அட, அட.. நான் மறுபடி என் கல்லூரி நாட்களுக்கு சென்றது போலிருந்தது. நானும் கூட என்னை சங்கத்துல சேத்துக்கச்சொல்லி கேட்டிருக்கேன். வலைப்பதிவ நண்பர்கள் அங்கே கூடிச்சேர்ந்து கும்மியடிக்கும் அழகே அழகு.

***oo$oo***

நான் தமிழ்திரைப்படப்பாடல் வரிகள் தேடித்தேடி இணையத்தில் சுற்றிக்கிடந்த காலமெல்லாம் உண்டு. அதன்பின்புதான் தெரிந்துகொண்டேன். பழைய பாடல், புதிய பாடல்கள் என அனைத்தையும் அழகாய் ஓரிடத்தில் தருகிறது தேன்கிண்ணம். மிகவும் பயனுள்ளதொரு வலைப்பூ!

***oo$oo***

செய்திகள், விமர்சனம், மொக்கை, அனுபவம் என இருக்கும் எல்லாத்தலைப்புகளின் கீழும் அழகாக பதிவுகள் இடும் நண்பர் ஆயில்யன் இவரது பதிவுகளில் குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி பெரும்பாலும் அனைத்து பதிவுகளும் என்னை அதிகம் கவர்ந்தவை. கலக்கல் ஆயில்யன்!!

***oo$oo***

வளர்ந்து வரும் வலைப்பூ என்றாலும் மிக நேர்த்தியான பதிவுகளுடன் அழகானது தோழி ராமலக்ஷ்மி அவர்களின் முத்துச்சரம். அவரது கதையின் ஜானி ஜானி நோ பாப்பா- வில் அந்த புகைப்படம் மிக அழகு! கிராமத்தில் எங்கள் வீட்டை சுற்றிக்கொண்டே இருக்கும் அந்த பெயரில்லாத ஒரு நாயை (மன்னிக்கனும்.. இந்த இடத்தில் நாய் என்று சொல்ல மனது கஷ்டமாக இருந்தது உண்மைதான்) ஞாபகபடுத்தியது.

***oo$oo***

சமீபகாலமாய் நான் வாசிக்க துவங்கியுள்ள ஒன்று நண்பர் ச்சின்னப்பையன் அவர்களின் வலைப்பூ. நன்று.

***oo$oo***

இன்னும் நிறைய வலைப்பூக்களைப்பற்றிய விமர்சனங்களும் சுட்டிகளும் நேரமின்மையால் இட முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.

4 comments:

 1. கோகுலன்

  நன்றாகச் செல்கிறது - நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. ஆஹா...
  சூப்பர் மொக்கை,சூப்பர் அறுவையில் வருத்தப்படாத வாலிபர் சங்கமுமா? நன்றி நண்பா :)

  ReplyDelete
 3. //வளர்ந்து வரும் வலைப்பூ என்றாலும் மிக நேர்த்தியான பதிவுகளுடன் அழகானது தோழி ராமலக்ஷ்மி அவர்களின் முத்துச்சரம். அவரது கதையின் ஜானி ஜானி நோ பாப்பா- வில் அந்த புகைப்படம் மிக அழகு!//

  இத்தனை விரைவில் வலைச் சரத்தில் பரிந்துரைக்கப் படுவேன் என்பது நான் சற்றும் எதிர்பாராதது. தங்களைப் போன்றோர் தருகின்ற ஊக்கமானது இன்னும் நேர்த்தியான பதிவுகளைப் படைக்க வேண்டும் என்கின்ற ஆவலையும் பொறுப்புணர்ச்சியையும் அதிகமாக்குகிறது. மிக்க நன்றி கோகுலன்.

  ReplyDelete
 4. //(மன்னிக்கனும்.. இந்த இடத்தில் நாய் என்று சொல்ல மனது கஷ்டமாக இருந்தது உண்மைதான்)//

  நாயை (மன்னிக்கணும்) சக மனிதரைப் போலவே நடத்தி நேசிக்கும் பண்புடைய மனிதர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். மனிதர்களிடம் கூட அரிதாகி வரும் நன்றியுணர்ச்சியை அதனிடமிருந்துதான் நாம் கற்க வேண்டும். இல்லையா கோகுலன்?

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது