07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 4, 2008

படச்சரம்

“என்னவே ரொம்பநாள ஆளக் காணோம்?” என்று புதிதாக வந்த அண்ணாச்சியை கலாத்தார் ஐயர்! “ஆரம்பிச்சுட்டியா? உன்னோட வள்ளலை” என்ற அண்ணாச்சி. பிறகு மெதுவா ஆரம்பித்தார் “ரெண்டு நாளா நான் வராட்டியும் எந்த பாதிப்பில்லாம் நீங்க பாத்துகிறீங்களே அது போதாதா?” என்றபடி எல்லோரையும் ஒரு பெருமித பார்வை பார்த்தார், சாமி, பாய், அண்ணா, ஐயர் எல்லோரும் ஒரு விணாடி குளிர்ந்தனர்.

“இன்னிக்கி என்னாச்சுவே எல்லோரும் என்ன மௌனவிரதமா?” என்று கேட்ட ஐயரை தொடர்ந்து பாய் மொழியலானார்! “இப்படி தாம்பா நடக்குது வேற உலகத்துலையும். சொல்றதையும் எழுதுறதையும் ரொம்ப சீரியஸா படிக்கிறாங்களாம்! ஆனா ஏதோ ஹிட்லர் ஆட்சியில இருக்குற மாதிரி யாரும் கருத்து சொல்ல வரலையாம்பா, அதனால!” என்று சொல்லி முடிப்பதற்க்குள்! அண்ணாச்சி தொடர்ந்தார் “இது பழைய செய்தி பாய்! இப்ப பாருங்க இன்னும் மூணுநாள் பதிவு இருக்கு இதை ரொம்ப நல்ல முறையில எழுதணும்ன்னு துடிக்கிறாராம் அந்த பதிவர்!” “அப்பிடியாபா” என்ற பாய் “இதே தான் நானும் சொல்ல வந்தேன்!” என்று முடித்தார் பாய்.

“இன்னிக்கி படச் சரம் தரலாம்ன்னு இருக்கார்ய்யா” என்று இன்றைய செய்திக்கு தாவினார் சாமி உடனே பாய் ஆரம்பித்தார் “ஆமாப்பா. இவரோட ஒரு பெரிய இரசிப்புக்கு பாத்திரமானவராம் அந்த பொற்கிழி ஆசாமி!”. அப்டீயா? அமாப்பா! இவர் படமெடுப்பது உபதொழிலாம் வாத்தியார் வேலைபார்த்தவராம்! இவரோட படங்கள் பார்த்து ஜுபீடர்ல எடுத்ததான்னு கேட்பாராம்? அவ்ளோ நேர்த்தியா படம் எடுப்பாராம்பா, ஆனா” என்ற பாய் சற்று நிறுத்த. “கருப்புவெள்ளை தானே!, அதான் தெரியுமே!” என்று சாமி முடித்தார்.

மீனாட்சி அம்மன் கோவில் பத்தி பல படங்கள் சேகரித்த போது இவர் பல பதிவுகள பார்ப்பாராம்! அட இப்படியெல்லாம் படமெடுக்க முடியுமான்னு யோசிப்பதுண்டாம்! உதாரணமா அந்த செயர்க்கைகோள் படம், நேர்கோட்டில் எடுக்கப்பட்ட படம், கம்பத்தடி மண்டபத்தோட வெயில் விழும் படம், கோபுரத்தின் பக்கவாட்டு வெட்டு தோற்றம்ன்னு பல படம் வலையேற்றம் செஞ்சாரோன்னோ! அதையெல்லாம் இவர் எடுத்தது பல நெனச்சாளாம், இல்ல இது எல்லாம் தன்னோட ஒரு மென்பொருளுக்காக சேகரித்ததுன்னு பலரிடம் சொல்லிருக்காராம்! உண்மையும் அதானாம்!” என்று முடித்தார் ஐயர்.

“இப்போ ஒரு பதிவர்பா இவரோட சில பதிவுல பல படம் காட்டுவார் அதுவும் வெளியூரா, வெளிநாடா காட்டுவார்! அந்த படம் பார்க்க ஒரு விதமா இருக்கும்!” என்று சொல்லுவதற்க்குள் “ஓ அந்த மூத்த பதிவர்தானே!” என்றார் சாமி “ஆமாப்பா அவரேதான்! மூத்த சகோதரின்னு எல்லாரும் கூப்புடுவாங்கோ, இவங்க படத்துல ஒரு தனிமகத்துவம் என்னன்னா இவங்க பட்டு தெரிஞ்சிகிட்டது தான் அதிகமாம். அப்பறம் புஸ்தகம் படிச்சு தான் தெரிஞ்சுகிட்டாங்களாம்” என்று முடிக்க

“அந்த மகரந்தமானவர் கூட பல படப்பதிவுகள் எழுதினார்ல, அதுலையும் ஒரு சில படம் இருக்கே. அதோட மாயாஜால கதையில வர்றத தனியா சொல்லனும்ய்யா” என்று முடித்தார் சாமி.

“ஒவ்வொரு பதிவுலையும் விதவிதமா அம்மன் படங்களை காட்டும் அந்த ஒரே ஊர்காரரோட பதிவு இருக்கே அதையும் கண்டிப்பா சொல்லுவார்!” என்று சாமி கலக்க சிரித்தபடி அடுத்த மேட்டருக்கு தாவினார் அண்ணாச்சி “இதுவும் ஒரு ஆன்மீகம பற்றிய ஒரு பதிவு தான், திருமலை திருவிழாவையும், திருவரங்க திருவிழாவையும்!, அந்த ஆனந்த சயணமா இருப்பவர் பதிச்சிருக்கார், இன்னொரு ஆனந்தமானவர் இட்ட ஒரு தொடர்ல மயிலை பங்குனிப் பெருவிழா படத்தொடர் குடுத்திருக்கார்!. இந்த ரெண்டுக்கும் ஒரு ஒற்றுமை! ஒரு வேற்றுமை என்னன்னா. இரண்டும் திருவிழா சம்பதப்பட்டது, வேற்றுமை, ஒன்னு ஹரியோடது இன்னொன்னு சிவனோடது!” என்று முடித்தார் “அப்பிடிபாத்தாலும் ஒன்னு தானேபா!” என்றார் பாய்.

"படத்துக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து மாதம் ஒரு போட்டி நடறாங்களே அதை பற்றி எதாவது உண்டா?" என்று அண்ணா கேட்க. பாய் தலையாட்டி ஆமோதித்தார்.

"படமே இல்லாம படச்சரமா?" என்றபடி ஐயர் பெஞ்சை காலி செய்ய, எல்லோரும் சிரித்தபடி கலைந்தனர் சூழ்நிலை சமநிலையானது!

18 comments:

 1. படச்சரம் படபதிவு போட்டு மக்களை கவரும் அனைவருக்கும் சமர்பணம்!

  ReplyDelete
 2. படச்சரம் பட படன்னு இருக்குதா! படார்ன்னு ஆச்சுங்களா சொல்லுங்க சாமியோவ்!

  ReplyDelete
 3. //அருமையான தகவலோடு,
  தினம்லர் டீக்கடைப் பெஞ்சை தாங்கள்தான் எழுதுகின்றீர்களா?


  பொருத்தமான பதிகங்களோடு, தெய்வீகமான படங்களோடு திருவிழாவை நேரடியாக காணும் வாய்ப்பை தந்தீர்கள். மிக்க நன்றி.//

  என்று பின்னூட்டம் இட்டதுடன் மட்டும் நில்லாது, படச்சரத்திலும் சுட்டிக் காட்டியதற்க்கு நன்றி குருநாதரே.

  ReplyDelete
 4. நான் படிச்சுட்டுப் பேசாம போறது இந்த டீக்கடையில வெட்டி அரட்டை அடிக்கிறவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?????

  ReplyDelete
 5. சிவமுருகன்

  அருமையான தொகுப்பு - தருமியில் ஆரம்பித்து, தனது தொகுப்பினையும் தந்து ( இன்னும் 170 இருக்காம் ), துளசியையும் தொட்டு, கைலாஷி, கேயாரெஸ் என அனைவரையும் சுட்டியது பாராட்டத் தக்கது.

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 6. அழகா அனபா படச்சரம்னு சொல்லிட்டீங்க சிவமுருகன்.
  வெகு நேர்த்தியான எழுத்து.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. ////அருமையான தகவலோடு,
  தினம்லர் டீக்கடைப் பெஞ்சை தாங்கள்தான் எழுதுகின்றீர்களா?//

  இல்லிங்க.


  //பொருத்தமான பதிகங்களோடு, தெய்வீகமான படங்களோடு திருவிழாவை நேரடியாக காணும் வாய்ப்பை தந்தீர்கள். மிக்க நன்றி.//

  என்று பின்னூட்டம் இட்டதுடன் மட்டும் நில்லாது, படச்சரத்திலும் சுட்டிக் காட்டியதற்க்கு நன்றி குருநாதரே.//

  பாத்து கைலாஷ் யாராவது எனக்காக மடம் கட்டி காசு வசூல் பாண்ணீராம :-).

  ReplyDelete
 8. //நான் படிச்சுட்டுப் பேசாம போறது இந்த டீக்கடையில வெட்டி அரட்டை அடிக்கிறவங்களுக்கு எப்படி தெரிஞ்சது?????//

  ஒருவேளை அவங்களோட ஒற்றர்கள் தகவல் சொல்லியிருக்கலாம். :-) (அதுக்காக இவ்வோளோ கேள்வி குறிகளா?)

  ReplyDelete
 9. //( இன்னும் 170 இருக்காம் )//

  எல்லாம் அவுட் டேடட் ஆயிடுச்சி ஐயா அதாவது எல்லாம் வலையேற்றம் ஆகிவிட்டது!

  //
  நல்வாழ்த்துகள்
  //

  நன்றி.

  ReplyDelete
 10. //அழகா அனபா படச்சரம்னு சொல்லிட்டீங்க சிவமுருகன்.
  வெகு நேர்த்தியான எழுத்து.
  வாழ்த்துகள்.//

  நன்றி வல்லிசிம்ஹன். ஆங்காங்கே கொஞ்சம் பிழையுள்ளது மண்ணிக்கனும்.

  ReplyDelete
 11. //சூப்பரப்பு!!!//

  சூப்பர் தான் வந்திருக்காரே! நாலாவது பின்னூட்டத்துல அத சொல்றீங்களா?

  ReplyDelete
 12. //அருமையான தொகுப்பு - தருமியில் ஆரம்பித்து, தனது தொகுப்பினையும் தந்து ( இன்னும் 170 இருக்காம் ), துளசியையும் தொட்டு, கைலாஷி, கேயாரெஸ் என அனைவரையும் சுட்டியது பாராட்டத் தக்கது.//

  ஐயா! அபிராமி அந்தாதி பதிவையும், மகரந்தத்தையும் விட்டுட்டீங்களே! ஜீரா, வெண்பா எழுதி வசைபாட போறார்.

  ReplyDelete
 13. //ஐயா! அபிராமி அந்தாதி பதிவையும், மகரந்தத்தையும் விட்டுட்டீங்களே! ஜீரா, வெண்பா எழுதி வசைபாட போறார்//

  ஐயா இசைபாட போறார்ன்னு எழுத வசைன்னு ஆயிடுச்சு கொஞ்சம் பிழைத்திருத்தம் ஹி...ஹி...

  ReplyDelete
 14. //இந்த டீக்கடையில வெட்டி அரட்டை அடிக்கிறவங்களுக்கு//

  எங்க சிவா நடத்தும் ஆஸ்தான டீக்கடையில் வெட்டி அரட்டையா? ஐயகோ! குமரா! என்னை நன்றாகப் பார்! சிவா நடத்தும் தமிழ்க்கடையில் குற்றமா?

  ReplyDelete
 15. சிவா
  டீக்கடை பெஞ்சையும் தாண்டி, கிசு கிசு நல்லாவே எழுதறீங்க! :-)))
  குமுதம்-ல ஒங்கள் சேத்து கும்மிருவமா?

  ReplyDelete
 16. ////இந்த டீக்கடையில வெட்டி அரட்டை அடிக்கிறவங்களுக்கு//

  எங்க சிவா நடத்தும் ஆஸ்தான டீக்கடையில் வெட்டி அரட்டையா? ஐயகோ! குமரா! என்னை நன்றாகப் பார்! சிவா நடத்தும் தமிழ்க்கடையில் குற்றமா?//

  நேற்று கண் திருப்பினும், இன்று கண் திருப்பினும் குற்றம் குற்றமே! :-).

  //சிவா
  டீக்கடை பெஞ்சையும் தாண்டி, கிசு கிசு நல்லாவே எழுதறீங்க! :-)))//

  அவனா நீ! ன்னு என்னை சில பேர் கேட்டுடாங்க! இல்ல இல்ல நான் அவனல்லன்னு நம்பவைக்கறதுக்குள்ள சாமி! (பொய் கூட எல்லாரும் சுலபமா நம்பிருவாங்க ஆன இந்த உண்மைய நிருபிக்கறதுக்குள்ளா சாமி!

  //குமுதம்-ல ஒங்கள் சேத்து கும்மிருவமா?//

  இதுவேறையா இதுக்கு பயந்து தான் இத்தனை நாளும் பதுங்கி இருந்தேன். சீனா ஐயா எப்படியோ புடிச்சுட்டார், சீக்கிரம் பதுங்கிருவேன்! :-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது