07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 12, 2008

”கவுஜ”யாய் வாழ்வோம்!


கண்டபடி வரும் கவிதையை கவிதைன்னு சொன்னா கவிதைக்கு இழுக்குன்னு கவுஜயாக்கிய புண்ணியாத்மாக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!

۞۞۞۞۞

எங்க சென்ஷி அண்ணனோட இந்த கவுஜகளை படிச்சுட்டு சொல்லுங்க எப்பிடின்னு....!

காத்திருத்தல்
தனித்திருத்தல்
ல்லாமல் போவதல்ல காதல்...
காணவைத்தல்
தனிமைப்படுத்தல்
ல்லாமலும் நினைத்தலே காதல்....

உன்னை சந்தித்த
முதல் நாள் சாதாரணமானது
சந்தித்த நாள் முதல்
சதா ரணமானது

உண்டான் கொடுத்தான் வந்தானை தானறிய
கண்டான் தள்ளும் சூழ்கடல் மடியோரம்
வெந்தான் கிடைத்து சூடினான் மனதறிய
நொந்தான் பெற்ற செருப்படி அதிகமாம்!

۞۞۞۞۞

சரி எப்படி இது மாதிரி கவுஜகளை எழுதறதுன்னு கொஞ்சம் கொயப்பமாக இருக்கா!? கவலைய விடுங்க அதுக்கும் எங்க காயத்ரி அக்கா சூப்பர ஐடியா கொடுத்துருக்காங்க இந்த பதிவுல பாருங்க..!

'ஸ்பெஷல் கவுஜ' கொஞ்சம் டேஞ்சர். ஆனாலும் அதிக சிரமப்பட வேண்டியதில்ல. முறையான பயிற்சி (?!!) இருந்தா போதும். மொதல்ல ஊர் உலகத்துல இருக்கற கெட்ட வார்த்தை எல்லாம் கஷ்டப்பட்டு தெரிஞ்சு வெச்சிகிடனும் ரோட்ல போகும் போது சின்ன விஷயத்தயும் ஆர்வமா உத்து உத்து பாக்கறது நல்லது. (விவகாரமா பாத்து அடி விழுந்தா நான் பொறுப்பில்ல!) ரோட்டோரம் தூங்குற நாயி, பிச்சக்காரன்... இப்டி எல்லாத்தயும் நின்னு நிதானமா ரசிச்சு பாக்க கத்துக்கனும். ரொம்ப விரிவான கண்ணோட்டத்துல பாக்கறேன்னு முழிச்சு முழிச்சு பாத்து கண்ணுல தூசி விழுந்துட்டாக்கூட..

"கண்ணில் விழுந்த மண்ணாய் என்னில் உறுத்துகிறாய் நீ" ன்னு எதயாச்சும் இன்ஸ்டண்டா எழுத தெரியணும்!

۞۞۞۞۞

இது மாதிரி நானும் கவுஜ எழுதப்போறேன்னு ஆசை பாசம் எல்லாம் பட்டு கவுஜ எழுத ஆரம்பிச்சவங்கள்ல இவரும் ஒருத்தர்!

நான் கொண்டு போனதோ ஒரு சின்ன பாத்திரம் அதுல இரண்டே இரண்டு தான் புடிக்க முடிஞ்சது, அப்படி புடிச்ச கவுஜங்களை உங்களுக்காக சிந்தாம சிதராம புடிச்சி கொண்டு வந்து இங்க போட்டு இருக்கேன், எப்படி இருக்குன்னு படிச்சி பாத்துட்டு சொல்லுங்க.

ஒரு 71/2
7 1/2 மணிக்கு எழுந்து
இன்னொரு 71/2ஜ எழுப்பிச்சி !!!

۞۞۞۞۞

தம்பியோட காதலர்தின கவுஜையில் அவர் பார்க்கும் பார்வையினை பாருங்களேன்!

இப்போதெல்லாம் கண்ணாடி முன்
நிற்கையில் பாகற்காயை சுவைத்த
குழந்தையின் முகம் போல என்
முகமும் கோணலாகிவிட்டது

۞۞۞۞

சுனாமி வந்து ஊரையெல்லாம் தூக்குச்சு
உனக்கு ஒன்னும் ஆகலைன்னு போன் பண்ணி கேட்டே?
கழுதையா பார்த்தா யோகமாம், ஊருலே சொன்னாங்க!
உன்னை நண்பனை அடைச்ச நான் யோகவந்தாண்டா!
இது ராயல் ராமோட எதிர் கவுஜ

۞۞۞۞

இப்ப ஒர் அளவுக்கு கவுஜை பத்தி தெரிஞ்சுருக்கும் இனி எப்படி அதை எழுதி புத்தகமாக்கி வெளியே வுட்டு தூள் கிளப்புறதுன்னு நம்ம ஆசிப்

அண்ணாச்சியோட கவுஜையாய் வாழுங்கடே பதிவு படிங்க! ஒரு முழுமையான, கவுஜைகளுக்கான தகவல் கிடங்கு!

பக்கத்துக்கு ஒரு கவுஜை போதும். அதுவும் எண்ணி நாலு வரி - அதிக பட்சமா 5 வரி போதும். ஆனா அதை அப்படியே சும்மா போடக் கூடாது. இடது மூலையில் குட்டியா ஒரு கவுஜை . மேல் மூலையில நெஜம்மான ஒரு குட்டியோட படம். என்ன எழவை எழுதியிருக்கீங்கங்குறதப் பொறுத்து படத்தை 'ஜெலக்ட்' பண்ணனும். உங்க வாஸ்துப்படி படத்தை எங்க வேணும்னாலும் போடலாம். வாசிக்குறவன் வாஸ்துப்படி அவனுக்கு நேரம் சரியில்லாம போறதுக்குப் பரிகாரமத்தை அவன்தான் கண்டுபுடிச்சாகணும்

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்....!

கவுஜையாளர்களே! இன்னும் யாரும் மேலே படத்துல இருக்கறமாதிரி ஸ்பைரல் கவுஜ எழுதல!

யாராவது டிரைப்பண்ணுங்களேன்!

2 comments:

  1. மொத்தமா நிறையப்படிக்க இருக்க ஆயில்யன் அப்புறமா வந்து கருத்து சொல்றேன்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது