07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 16, 2008

வாழ்த்தும் வரவேற்பும்

கடந்த ஒரு வார காலமாக வலைச்சர சுனாமியாக வந்து, இங்கே வீசிய பதிவுகளைப் பார்ப்பதற்குள், படிப்பதற்குள் அடித்துச் சென்ற வெள்ளமே, அருமை நண்ப, ஆயில்ய !

எப்படித்தான் இப்படிப் பதிவுகள் போடுவதற்கு நேரம் இருக்கிறதோ தெரிய வில்லை. இங்கு மட்டுமல்லாது தனது வீடான கடகத்திலும் கலக்கியது பாராட்டத் தக்கது. கும்மி குரூப்பினைக் கட்டினுள் வைத்து, கும்மிகளை தார்மீகமாகத் தடை செய்து, நன்றிப் பதிவுக்கு மட்டும் விதி விலக்கு அளித்த ராஜ தந்திரம் நன்று.

முப்பத்தொரு பதிவுகள் - மூக்கில் விரல் வைக்கும் சாதனை ! வலைச்சரத்தின் வரலாற்றிலேயே இல்லாத அளவு - இது வரை இருந்த சாதனையாளர்கள் இம்சை, மங்களூர் சிவா, சீனா ஆகியவர்களின் வரிசையில் முன்னிலை வகிக்கும் முதல்வனே !!! நன்றி நன்றி நன்றி - நல்வாழ்த்துகள்.

கொடுத்த பொறுப்பினை உழைத்து முடித்த முயற்சி உயர்வானது. மொழியினை, உறவினை, இறைவனை, நட்பினை, நடப்பினை, நகைச்சுவைப் பாங்கினை, மலரும் நினைவினை, சொந்த ஊரின் சிறப்பினை, மக்களை, விலங்கினை, இயங்கும் ஊர்தியினை ஒன்று விடாமல் உரைத்த பாங்கு சிறப்பானது. சீரிய சிந்தனை, நல்லுழைப்பு, இடை விடா முயற்சி இத்தனையும் சேர்ந்து சிறந்த பதிவாகி வலைச்சரத்தை மலைச்சரமாக்கியது உமக்கே உரிய பெருமை. நன்றி.

---------------------------------------------------------------------------

இந்த வார ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் நல்ல நண்பர் பிரேம்குமார் சண்முக மணி. புதுவையைச் சேர்ந்தவர். கணினியியல் பொறியாளர். மொழியின் சிறப்பு என்னும் வலைப்பூவின் உரிமையாளர். நம்மில் ஒருவனாக நடை போடுகிறார். நல்ல கவிதைகளின் ஆர்வலர். கவிதைகள், காதல், நட்பு, சக பதிவர்கள் பற்றி பதிவுகள் இட்டிருக்கிறார். கவிதைப் பதிவுகளே அவற்றில் மகுடமாய் உள்ளது.

வருக வருக நண்பரே !!
வலைச்சரத்தில் வாரி போல் பதிவுகளைத் தருக தருக!

நல்வாழ்த்துகளுடன்

சீனா ..... (Cheena)


9 comments:

 1. //முப்பத்தொரு பதிவுகள் - மூக்கில் விரல் வைக்கும் சாதனை ! //

  சாதனைக்கு வாழ்த்துக்கள். சாதனைகள் முறியடிக்கப்படும்!

  ReplyDelete
 2. //இங்கு மட்டுமல்லாது தனது வீடான கடகத்திலும் கலக்கியது பாராட்டத் தக்கது.//

  அங்க தான் தினமும் கலக்குறாரே!!!

  ReplyDelete
 3. ///எப்படித்தான் இப்படிப் பதிவுகள் போடுவதற்கு நேரம் இருக்கிறதோ தெரிய வில்லை.///


  அவருக்கு வேலையே பதிவு போடுறது தான். அப்புறமென்ன கேள்வி?

  ReplyDelete
 4. ///கடந்த ஒரு வார காலமாக வலைச்சர சுனாமியாக வந்து, இங்கே வீசிய பதிவுகளைப் பார்ப்பதற்குள், படிப்பதற்குள் அடித்துச் சென்ற வெள்ளமே///


  அவர் பதிவ அவரே அடிச்சிட்டு போய்ட்டா எப்படி படிக்கிறது?

  ReplyDelete
 5. ///கும்மி குரூப்பினைக் கட்டினுள் வைத்து, கும்மிகளை தார்மீகமாகத் தடை செய்து, நன்றிப் பதிவுக்கு மட்டும் விதி விலக்கு அளித்த ராஜ தந்திரம் நன்று.///  இதில் ராஜதந்திரம் ஏதுமில்லை. வேறு என்ன என்று இங்கு சொல்வதற்கு இல்லை:))

  ReplyDelete
 6. பாரதி, நன்றி - மறு மொழிகளுக்கு - ஆயியன் பாராட்டப் பட வேண்டியவர்.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் ஆயில்யா.. இது ஒரு பெரிய சாதனை. :-)

  ReplyDelete
 8. //முப்பத்தொரு பதிவுகள் - மூக்கில் விரல் வைக்கும் சாதனை ! //

  சாதனைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. /
  நிஜமா நல்லவன் said...
  //முப்பத்தொரு பதிவுகள் - மூக்கில் விரல் வைக்கும் சாதனை ! //

  சாதனைக்கு வாழ்த்துக்கள். சாதனைகள் முறியடிக்கப்படும்!
  /

  ஆஹா இதுல எதோ உள்குத்து இருக்கே சீனா சார் சீக்கிரம் நெ.நல்லவரை கூப்பிடுங்க சரம் தொடுக்க

  :))))))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது