07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 3, 2008

ஆன்மீக சரம்

ஒரு குழந்தைக்கு உணவூட்டுவது பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய வேலை! அதே குழந்தையை தூங்க வைப்பது அதைவிட பெரியா வேலை! அதை எழுப்ப வேண்டுமெனில்! (ஈஸ்வரா, யோசிச்சாலே தாங்க முடியலை). அதை ரொம்ப எளிதாக இந்த வலையில் நம்ம கே.ஆர்.எஸ். எழுதிருக்கார். முதலில் ஆன்மீகத்திற்க்கு தேவை எழுவது! அதாவது (அஞ்ஞான) தூக்கத்தில் இருந்து துயில் எழுவது.எழுப்ப நம்ம கே.ஆர்.எஸ் துனைக்கு வருகிறார்.


இந்த கலி காலத்துல பாட்டு, நடனமுன்னு ஆடிப்பாடி இருந்தாலே போதும் அது தான் முக்திக்கு வழின்னு பெரியவங்க சொல்லுராங்க, அதை நம்ம பதிவர்கள் எப்படியோ கண்டுபிடிச்சி, ஒரு சில குழுபதிவா இயங்கிவருகின்றனர்.

அதில் கண்ணனுக்கு ஒரு பதிவுண்டு அதில் எல்லா பதிவுகளும் அருமையாக அதுவும் ஒரு சில புதிய பாடல்களும் மேலும் ஒரு சில என்றும் இனிக்கும் பாடல்களும் உள்ளன.

என்னெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
என்னெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
சயனத்தில் ஆதி சேஷன் மேலே
திருவடி திருமகள் மடி மேலே

இப்படி பாடல்கள் பல. உருகி உருகி பாடும் பாடகர்களை கேட்டாலே நம் பாவங்கள் எல்லாம் உருகிவிடும்.

அதே போல் முக்கண்ணனுக்கும், முருகனுக்கும் (சிவமுருகன்ன்னு ஒரே வார்த்தையா சொல்லிடவ?) தனித்தனியாக இருகுழுப் பதிவுகள் உள்ளன

"கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா!
நின் தாள் துணை நீ தா!"

என்பதையும்

"முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா"

என்றபாடலையும் கேட்டால், சைவம் பற்றி அறியாதவரும் இதில் சிந்தைவையபட்டு விடுவர்.

மேலும் அம்ம(மா)னுக்கும் ஒரு பதிவு வச்சிருக்காங்க, கற்பூர நாயகியே கனவலில்லின்னு பேரு உள்ள போயி பார்த்தா மாரியாத்தா முதல் மதுரை அரசாளும் மீனாட்சி வரை எல்லாரும் அருளுகின்றனர்.

படித்து பாடி பரவச பட அந்தந்த பதிவுகள பார்த்தீங்கன தெரியும்.

மேலும் பலர் தங்களின் ஆன்மிக அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் ஒரு தள(ல)ம். ஆச்சார்ய ஹ்ருதம்.

சமர்பணம் : ஆன்மீக உலகில் பவனி வரும் அனைவருக்கும் இச்சரம் சமர்பணம்.

6 comments:

 1. அன்பின் சிவமுருகன்,

  அருமை அருமை - ஆன்மீகச் சரம்

  பெருமாள் பள்ளி எழுவதிலிருந்து, கண்ணன் பாட்டு, சிவன் பாட்டு, முருகனருள், அம்மன் பாட்டு, ஆச்சார்ய ஹிருதயம் என அனைத்து அருமையான பதிவுகளையும் சுட்டிக் காண்பித்து இட்ட ப்திவு பாராட்டத்தக்கது

  ReplyDelete
 2. திரட்டிகளில் இணையாத பதிவர்களை/ப்ளாக்குகளையும் சேர்த்து சரந்தொடுத்து சார்பற்ற நிலையெடுத்த நண்பா...சூப்பர்.

  ReplyDelete
 3. //திரட்டிகளில் இணையாத பதிவர்களை/ப்ளாக்குகளையும் சேர்த்து சரந்தொடுத்து சார்பற்ற நிலையெடுத்த நண்பா...சூப்பர்.//

  நன்றி மௌலி அண்ணா!

  ReplyDelete
 4. ஆபீஸ் ஆணியெல்லாம் முடிஞ்சி எங்க சிவாவுக்கு சரம் வெடிக்க தோ வந்தாச்சேஏஏஏஏஏஏஏ!

  //சார்பற்ற நிலையெடுத்த நண்பா//

  மெளலி அண்ணா, ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு? "சார்புற்ற நிலையெடுத்த" ???
  :-)))))

  என்ன சார்பா???
  இறைச் சார்பு!!!

  ReplyDelete
 5. //ஆபீஸ் ஆணியெல்லாம் முடிஞ்சி எங்க சிவாவுக்கு சரம் வெடிக்க தோ வந்தாச்சேஏஏஏஏஏஏஏ!//

  ஆபீஸா எனக்கா! ஆணீயா அப்டீன்னா! :-). HR-காரனுக்கு ஆணி, ஜோக்கடிக்காதீங்க கே.ஆர்.எஸ்.

  ////சார்பற்ற நிலையெடுத்த நண்பா//

  மெளலி அண்ணா, ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு? "சார்புற்ற நிலையெடுத்த" ???
  :-)))))

  என்ன சார்பா???
  இறைச் சார்பு!!!//
  இரை சார்பா, இறைசார்பா :-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது