07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சிவமுருகன். Show all posts
Showing posts with label சிவமுருகன். Show all posts

Saturday, June 7, 2008

இப்படிக்கு இந்த வார ஆசிரியர்

“வாங்க அண்ணாச்சி” என்று வந்த அண்ணாச்சியை வரவேற்ற ஐயர்! பாய் பார்த்து ஒரு சைகை செய்தார் பாய் ஆரம்பிப்பதற்க்குள் அண்ணாச்சி “என்ன நாயரே! இன்னிக்கு எப்படி கட தொறந்தீங்க! ஓ! நீர் ஆளுங்கட்சிக்கு சப்போர்ட்டா?” என்று நாயரை பதில் சொல்ல விடாமல் பாய் அருகில் போய் இடம்பிடித்தார், அண்ணாச்சி தோள் மீது கைபோட்டபடி பாய் ஆரம்பித்தார் “ஒரு வாரம் போனதே தெரியலையாம்பா! அதுக்குள்ள “இப்படிக்கு இந்த வார ஆசிரியர்” ஆகிறார்பா நம்ம பதிவர்!” “ஆமாம் பாய் என்னமோ 'சஸ்பென்ஸ்' ன்னு சொன்னீங்க அதென்னது” என தன் ஞாபக சக்தியை காட்டினார் அண்ணா. “அத கொஞ்ச நேரத்துல சொல்றேன்பா” என சூடு கிளப்பினார் தன் டீக்ளாசை ஆற்றியவர், பின்னர் தொடர்ந்தார். “இன்னிக்கி தன்னை உருவாக்கிய தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம் சொல்ல போறார்பா!” “அதென்னவே, ஏதோ ஆரம்பிக்கறப்போ வணக்கம் சொல்லுவா! முடிக்கும் போது நன்றி தானேவே சொல்லுவா இவரென்ன வழக்கத்த மாத்துறார்!.” என்று ஐயர் தன் பங்கிற்க்கு சூடாக்கினார். “அதொன்னும் இல்லபா கொஞ்ச நாள் பதிவுபக்கமே வராம இருந்தவர், இப்போ இந்த தொடர்ல எழுதினதுக்கப்பறம் தன்னால இப்படியும் எழுத முடியுதேன்னு நினைச்சாராம்” என்று நிறுத்த, “சரிய்யா ஒத்துக்குறேன் சரத்துக்கு வர்ரீங்களா?” என்று அண்ணா ஆவலாய் கேட்டார்.

முதல் வணக்கம்) “அதாவது வலைக்கு வர்ரதுக்கு முன்னாடி தமிழ் எழுதக்கற்றுத்தந்தது இவரோட இரண்டாம் வகுப்பு ஆசிரியராம் அதுவரைக்கும் தமிழ்ன்னு கூட சரியா எழுதமாட்டாராம்! அப்பறம் மூன்றாவது படிக்கும் போது ஆசிரியர் பவாணிங்கரவங்க நல்ல சுழி வச்சு எழுத சொல்லித் தந்தாங்களாம், அப்பறம் ஆறாம் வகுப்புல வகுப்பாசிரியர் பூங்கோதை மூக்கு உள்ள எழுத்துக்களை தனிவிதத்துல வரும்னு சொல்லி தந்தாங்களாம், கடைசியா பத்தாம் வகுப்பு படிக்கும் போது தனியியல் ஆசிரியர் சுரேஷ் கொஞ்சம் நெளிவு சுளிவுகளை சொல்லித்தந்தாராம், பல தமிழ் செய்திகளை சூத்திரப்படுத்தி அதை எப்படி ஞாபக வைத்துக்கொள்வதுன்னு சொல்லி தருவாராம், இவங்க யாரும் தமிழை தனி பாடமா எடுத்து படிக்காதவங்க. அதே போல பல செய்திகளை கதைகளாக சொல்லி தரும் எட்டாம் வகுப்பு ஆசிரியர் பாக்கியம், அதோட கணக்கையும், ஆங்கிலத்தையும், படிக்கும் நெளிவுகளையும் கற்றுத்தந்த ஒன்பதாம் வகுப்பாசிரியர் இராதா கிருஷ்ணன் அவர்கள்ன்னு இவரோட மொழி வகுப்பு ஆசிரியர் எல்லாருக்கும் மொதல்ல ஒரு வணக்கம்ன்னு சொல்லுவார், கரெக்டா பாய்” என்று சாமி கேட்க! பாய் அமோதித்தார்.

(இரண்டாவது வணக்கம்) “எங்கோ இருந்த இவரை எதையோ படித்து கொண்டிருந்தவனை இங்கே பார் என்று திசை திருப்பிய அந்த ஆன்மீக வின்மீனுக்கும், எப்படி எழுதினா என்ன அதையெல்லாம் நாங்க வந்து படிக்கிறோம்ன்னு சொன்ன, ஞானவெட்டியான், தி.ரா.ச. , என்னார், அப்பறம் தன்னை இப்படி எழுதுங்கன்னு சொன்ன ஜீ.ரா., எப்போதும் ஆசியோட தர்ர வலைபதிவர்களின் டீச்சர் மற்றும் வலையுலகில் நல்லமுதை மட்டுமே பதிக்கும் (மதுரையம்பதி) , தன் சமூகத்தை வேறுஒரு விதகோணத்தில் காணவைக்கும் ’மழை’ பிரதீபுக்கும், எல்லா நகைச்சுவையையும் ஒரு ஆன்மீகத்தோடு இணைக்கும் கே.ஆர்.எஸ். , பல அரிய செய்திகளை சொல்லும் ‘என் எண்ணங்கள்’ கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் , அரசியலையும் மற்ற அனைத்தையும் விமர்சிக்கும் கால்காரி சிவா அண்ணாவுக்கும், ‘வஜ்ரா ’ சங்கருக்கும், என்னாலும் இவ்ளோ பதிவுகள வித்யாசமாய் எழுத முடியும்ன்னு வலைசர குழுவினர், பொறுப்பாசிரியர் சீனா, லிஸ்ட்ல புதுஸ்ஸா சேர்ந்திருக்கும் கைலாஷி, என அனவருக்கும் நன்றியுடன் வணக்கம்ன்னு சொல்லுர்பா” என பாய் முடிக்க! “ஆசையா ஆரம்பித்த வலைபூக்கள் எல்லாம் அப்படியே நிக்குதுன்னு நெனைக்குறாரா என்ன?” ன்னு அண்ணா அரட்டையின் போக்கை சற்று திசை மாற்ற, அதற்க்குள் பொறுமை தாங்காத அண்ணாச்சி “பாய்! மொதல்ல சஸ்பென்ஸ் தாங்கலை சிக்கிரம் சொல்லுங்க” என மற்றவர்களை தன்பக்கம் சேர்த்துக் கொண்டார்.

“அதாவதுபா ரெண்டு வருசத்துக்கு முன்னாடி மூத்த பதிவரோட 32வது திருமணநாள் வந்தது! அப்போ இவர் வாழ்த்தை சொன்னதோட ரெண்டு நாளைக்கப்புறம் தன்னோட அம்மாவின் பிறந்தநாள்ன்னு சொன்னார்பா! இப்போ முந்தாநேத்து அந்த மூத்த பதிவரு கல்யாண நாள் பதிவு பதிச்சிருக்காராம், அப்போ நீங்களே தெரிஞ்சிக்கோங்கபா!”. “அதாவது இவரோட அம்மாவுக்கு இன்னிக்கி பொறந்த நாள் அதானே பாய்” என்று அண்ணாச்சி விஷயத்தை உடைக்க, பாய் ஆமோதித்தபடி “அதுவும் அவங்க அம்மா இன்னியோட தமிழ் வருஷத்துல வர்ர எல்லா வருஷத்துலையும் பொறந்த நாள் கொண்டாடிட்டாங்களாம்” என்று விஷயத்தை முடித்தார் “அட அப்போ இது மணிவிழா” என அண்ணா சொல்ல! பாய் தொடர்ந்தார் “இவர் ஆரம்பிச்ச எல்லா பதிவுகளும் கொஞ்சம் நாளைக்கு இப்படியே இருக்கட்டும், வீட்ல ஒரு மடிகணினியும் இணைய இணைப்பும் வாங்கிட்டா எல்லாத்தையும் முடிச்"சுடலாம்"ன்னு நினைக்கிறாராம்”.

“இன்றைய சரத்தை உலகத்தில் தன் சேய்யை சான்றோன் எனக்கேட்க துடிக்கும் அனைத்து தாயுள்ளம் கொண்டவர்களுக்கும் சமர்பணம்ன்னு சொல்லுவார்பா!”. என்றபடி எழ முயர்ச்சித்த பாய்யை அண்ணாச்சி பற்றி இழுத்து நிறுத்தினார், “என்ன பாய் அப்பறம் என்ன சங்கதி” என்று கேட்க, “அதான் முடிட்ச்சிட்டாரேபா, அடுத்த வாரம் இவரோட நட்சதிரக்காரர் தொடருவார்பா” என்று பாய் நிறுத்த ஐயர் தொடர்ந்தார், “முடிஞ்சிருச்சேன்னு கவலைப்படாதேள் நல்ல படியா ஆச்சுதே சந்தோஷபடுங்கோ” என ஐயர் முடித்தார். பெஞ்ச் அமைதியானது.
மேலும் வாசிக்க...

Friday, June 6, 2008

கதம்பச்சரம்.

“என்னபா! எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்றபடி டீக்கடை அரட்டையை ஆரம்பித்தார் பாய். “உமக்காக தான்வே வெய்ட்டிங்க்” என்ற ஐயர் “ஒரு வாரத்தை எப்படியோ "வருத்ததையே வருக்காம" புதுஸ்ஸா சரம் போட்டு முடிச்சுட்டார் உம்ம பதிவர்” என்று மெதுவாக ஆரம்பிக்க. “ஆமாபா! இன்னும் ரெண்டு நாள் பதிவு எல்லாம் எழுதி முடிச்சுட்டார்பா, தன்னோட பதிவுல எழுதி வச்சிருக்காராம்! நாளைக்கும் இன்னிக்கும் சரியான நேரத்துல பதிச்சுவாராம்பா!”

உடனே சாமி “என்னமோ எப்படி ஆரம்பிக்குறது எப்படி தொடர்ரதுன்னு முழிச்சி கிட்டு இருந்தவரு, இப்போ முடிச்சுடவும் போறாரா? நல்லாருக்கு!” என்று முடிக்க “ஆனா முக்கியமா தன்னோட "ஆல்வேஸ் ரீடர்ஸ்" பலர் வரலைன்னு தன்னோட நெருங்கிய வட்டத்துல சொல்லி வருத்தப்பட்டாராம்!, அவங்களும் "கவலபடாதேள்! அவா எல்லாம் தன்னோட ரீடர்ல படிச்சிக்கிட்டு இருப்பா-னு" தேற்றி இருக்கா ஓய்!” என்று பாய் முடிப்பதற்க்குள்…

“இன்னிக்கி என்ன சரமாம் சொல்லுங்க பாய்!” என்று நிகழ்வுகளுக்கு கொண்டுவந்தார் சாமி, “எல்லாரும் கடைசிநாள்ல தான் கதம்பம் கட்டுவாங்க, ஆனா இவர் இன்னிக்கு போடுறாராம்” என்று பாய் சொல்லிக் கொண்டிருந்த போதே சாமி குறிக்குட்டு “இதுக்கு ஏதாவது தனிப்பட்ட காரணம் உண்டா”-ன்னு கேட்க. “உண்டுபா, ஆனா அதை நாளைக்கு சொல்வார்பா!” என்று நிறுத்தினார் பாய்.

“கண்டிப்பா மொதல்ல சாமி கும்புடுவார் அதான்பா ரெண்டு பேர் சேர்ந்து ஒரு பதிவு போடுறாங்களே அதுல இருந்து ஆரம்பிப்பார்!”. “அது தமிழ் பதிவாவே! இது ஒரு செங்கிருத பதிவு தானேவே” என ஐயர் வம்பிழுக்க காதில் வாங்காத பாய் “அப்பறம் இவர் அபிராமி அந்தாதிக்கு சரணம் வச்சு! கொஞ்சம் வீடு பேறு பொருள் பற்றி சொல்வார்,” என்று முடித்தார் பாய் “இத்தனை விஷயம் படிச்சுருக்காரா பாய்” என்று ஒன்றும் அறியாதவரய் கேட்டார் அண்ணாச்சி. பாய் “இவர் ஒவ்வொரு நாளும் பணம் புழங்கும் விதம் பற்றிய அறிய ஆர்வம் அதிகமாகுதாம்பா,”

“நமது உழைப்பை இன்னொருவருக்கு பலனளிக்கும்படி கொடுத்து அதற்கு பதிலாக அவரது உழைப்பை நமக்கு பலனளிக்கும்படி வாங்கிக் கொள்வதற்கான இடைப் பொருள்தான் பணம்.”

“இப்படி எழுதுவங்கள படிச்சா ஏன் ஆர்வம் வராது ஓய்!” என்று ஐயர் சொல்ல!

“பணத்தை பதுக்கி வச்சு சாப்டது அந்த காலம் பணத்தை வெளியில உலவவிட்டு சம்பதிக்கிறது, சாப்புடறது இந்த காலம்” ன்னு தத்துவம் உதிர்த்தார் நாயர் டீ ஆற்றியபடி.’

’உச் கொட்டிய பெஞ்ச் தன்னுடைய தலைப்பிற்க்கு திரும்பியது’ ஐயர் ஆரம்பித்தார் “போனவருஷம் கொஞ்சநாள் ஹாஸ்டல்ல இருந்தார்ல அதுல “தீ எக்னாமிக்ஸ் டைம்ஸ்” படிக்க ஆரம்பிச்சாராம், எல்லா தமிழ் சைட்ல போய் பங்கு சந்தை பற்றி படிப்பாராம்” .“அது ஏம்பா பொருளாதாரம்ன்னு சொன்னவுடனே பங்குசந்தை வருது” என பாய் கேட்க அண்ணாசி ஆரம்பித்தார் “அதாவது பாய்! ஒருத்தன் ஓரிடதில பணத்த வச்சுகிட்டு என்ன பண்ணாலாம்ன்னு யோசிக்கிறான், இன்னொருத்தன் பணத்துக்கு என்னாட பண்றதுன்னு யோசிக்கிறான். இவனுங்க ரெண்டு பேரையும் இணைக்குறது தான் இந்த பங்கு சந்தை! ரெண்டாவது ஆசாமிக்கு பணம் லாபம் கெடைச்ச அதை முதலீட்டாளர்களான முதலாவது ஆசாமிகளுக்கு பங்கு கொடுப்பதும்!?!?, தலைகீழா நடக்றதும் கண்கூடு” என்று அண்ணாச்சி முடிக்க. “அப்டியா! ரொம்ப நன்றி அண்ணாச்சி! அடுத்தது இவர் தொடுக்க போறது ஒரு ஊரபற்றின பதிவுபா!” “தலை நகர பற்றி தானே அதுவும் அந்த மூத்த பதிவர் எழுதுனது, ரொம்ப சூப்பரான படத்தை எல்லாம் போட்டு பதிச்சாங்களே அதைத் தானே சொல்ற,


என கேட்ட சாமியை ஆமாம் என தலையாட்டி அமோதித்தார்.

“ஒரு சில மாதமாய் அவ்வப்போது படிக்கும் சில செய்திகள் இருக்கும்பா!”

அப்பறம் இவருக்கு ரொம்ப பிடிச்ச செய்தியாம்! அதாவது காதல், இவருக்கும் காதலுக்கும் காததூரமாம்! அவ்ளோ பிடிக்குமாம்! இருந்தாலும் ஒரு சில காதல் பதிவுகளையும் காதல் பற்றிய கவிதைகளையும் படிப்பாராம் ஆனால் பின்னூட்டமிடமாட்டாராம். "என முடித்தார் பாய்.

“பிறகு மறுபடியும் நாளைய சஸ்பென்ஸ் பற்றி ஞாபகப் படுத்திட்டு முடிச்சுக்குவாரு!” அப்பிடிதானே பாய் என்று அண்ணா சொல்ல! ஆமாம் போட்ட படி பாய் எழுந்திருக்க எல்லோரும் கலைந்தனர்.

“இதை படிக்கும், படிக்கவிருக்கும் அனைவருக்கும் சமர்பணம்”
மேலும் வாசிக்க...

Thursday, June 5, 2008

விமர்சனச்சரம்

விமர்சனச்சரம்.

கேரளாவில் நடந்த முழூ அடைப்பை அடுத்து நம்ம டீக்கடை நாயரும் கடை திறக்கவில்லை ஆகவே பெஞ்ச் பெரியவர்கள் சந்தித்துக்கொள்ள முடியவில்லை! இருந்தாலும் கொஞ்சம் முயன்று பார்க்கிறேன்.

விமர்சனம் என்பது ஒருவரை இன்னொருவர் தாழ்த்தும் செயலல்ல அவரை அவரே சீர்படுத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பம். இப்படியாக பல தங்களது பார்வையில் கண்டகாட்சிகள் விமர்சனமாக இணையத்தில் பதித்துள்ளனர் அவற்றை தொகுக்கும் சரம் இந்த விமர்சனச்சரம்.

குருவின்னு ஒரு படம் வந்தாலும் வந்தது பல பதிவர்கள் தங்கள் பங்கிற்க்கு விமர்சனம் எழுதி தள்ளினர்!

படம் வரும் முன்னரே இதன் கதை இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்று மின்னஞ்சல்கள் பறந்து கொண்டிருந்தது.

அப்பேற்ப்பட்ட எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா இப்படம் வாருங்கள் நம்பதிவர்களின் விமர்சனத்தை பார்க்கலாம்!

கடைலயூரில், செல்வன் எழுதுறார், படம் பரவாயில்லை என்று சான்றளித்த செல்வன் கொஞ்சம் காட்டமாகவே விமர்சித்திருந்தார்.
TBCD அவர்கள் சற்றே ஒரு படி மேலே போய் ஒவ்வொரு தலைப்பாக ஆராய்கிறார் மொத்தத்தில் சரியில்லையாம் .

“குருவி பார்த்து யாம் பெற்ற துன்பம் பெற வேண்டாம் இவ்வையகம்.” என்று இங்கே எழுதினார் இரவிசங்கர்.

நெல்லை செய்திகளில் இரசிகர்களுக்குகாக எடுக்கப்பட்ட படம் என்று தெள்ளதெளிவாக சொல்லிவிட்டனர்.
அதோட சில வேறு மொழி படம்
வஜ்ரா சங்கர் அருமையாக அரசியலையும் அறிவியலையும் ஆராய்பவர் இவர் எழுதிய மனிதவெடிகுண்டு என்ற இரண்டு ஆங்கில பட விமர்சனம்
“சவுதி அரேபியாவில் உள்ள ஒரு அமேரிக்க குடியுருப்புப் பகுதியில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றை பற்றி துப்பறியச் சென்று, அங்கு அவர்கள் ஆளாகும் பிரச்சனைகள் பற்றிய படம்….ஆறுதலான நல்ல விஷயம், படத்தில் பேசப்படும் அரபு dialect பாலஸ்தீன அரபு மொழி. அது சற்றே ஹீப்ரூவை ஒத்திருக்கிறது.”

எனக்கேன் வம்பு படம் பார்த்தவங்க தான் சொல்லனும்! நானே படம் பார்க்குறத விட்டு (ஒன்னு ரெண்டு மூணூ நாலு அங்ங்ங்ங்ங்) அஞ்சு வருசமாச்சு.

இப்ப தொடர் பற்றிய விமர்சனம் அண்ணன் குமரன் ஒரு தொடர் பதித்தார்! சூப்பராக வந்த தொடர், சும்மாவா ஆண்மீக சூப்பர்ஸ்டார்ல! புல்லாகி பூண்டாகின்னு பேரு. கதை படிக்க ஆரம்பித்தால் விட மனசு வராது அதை பற்றி ஒரு சிலர் விமர்சனம் எழுதினர் முதலில் பாலஜி

“தல வரலாறு (தலயோட வரலாறு படம் இல்லைங்க) கதையா மாறிடுமோனு ஒரு பயத்துல கூட இதை செஞ்ச மாதிரி தெரிஞ்சிது. ஆனா இந்த மாதிரி கதைகள்ல வாசகர்களுக்கு ஆயிரம் கதை கேட்டாலும் அலுக்காது என்றே தோன்றுகிறது. கோவிலை இன்னும் பொறுமையாக சுற்றி காண்பித்திருக்கலாம்.”

இப்பிடி இன்னும் நிறைய எழுதியுள்ளார்.

அப்பறம் நம்ம ஜீவ்ஸ், யோகன் ஐயா, திரு. ஜீவா - காலத்தின் (கோவி.கண்ணனின்) கடைக்கண் பார்வை: ரொம்பவே வித்யாசமாக மேலும் அருமையாக இருந்தது அதில் ஒரு துளி இங்கே.
“அதுவும் நீங்கள் எடுத்துக் கொண்ட 'சப்ஜெக்ட்' மனம் போன போக்கில், நினைக்கும் எதையும் கற்பனையில் எழுதும் செய்தி இல்லை. சில ஆன்மீகச் செய்திகளைச் சுவைபடச் சொல்வதற்காக எடுத்துக் கொண்ட உருவம் கதையாக நேரிட்டதால், இயல்பாகவே அப்படிப்பட்ட கதைகள் எழுதுவதில் ஏற்படும் சில சங்கடங்களை நீங்களும் எதிர்கொள்ள நேரிட்டது….கதையை நீங்கள் முடித்த பாங்கும் மிகுந்த நிறைவேற்படுத்தியது.”

மேலும் பலர் எழுதிய விமர்சனம் இங்கே.

அப்பறம் சில கே.ஆர்.எஸ். எழுதிய நையாண்டி பதிவுகள், நகைச்சுவையாக ஆரம்பித்து ஒரு பல பெரிய உண்மைகளை சொன்ன பொகவத் கீதை, கைப்புள்ளவை தலையானந்தாவாக்கிய சங்கத்து செய்தி, ஆன்மீக பதிவர்களை ஒரு கணம் நரகத்தில் தள்ளிய பதிவு இப்படி ஒரு பல பதிவுகள் இன்றும் படித்தால் சிரித்துக்கொண்டே இருக்கலாம்.

ஜோதிடத்திற்க்கு தமது பதிவுகளை அற்பணித்துக் கொண்ட ஐயா சுப்பையா வாத்தியார் அவர்களின் பதிவுகள் நிச்சயமாக இந்த வாரம் எனக்கு எத்தனை தர்மசங்கடம் வந்திருக்கும் என்று கணிக்க கற்று தந்துவிடும். இவர் எழுதிய சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் யாரும் அறியாத செய்தியாக இருக்கவேண்டும். பரல்களை எண்ணி வாழ்வை கணிக்க கற்றுத்தரும் இந்த தொடர்கள் எல்லாம் என்றும் இனிப்பவை.

(ஒருவேளை இந்த பதிவுக்கு என்றும் இனிப்பவை சரம்ன்னு பெயர் வைத்திருக்கலாமோ!)

நாளை டீக்கடை திறக்கும், அண்ணாச்சி மற்றும் குழுவினர் வருவர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சகல செய்திகளை அறிந்து வைத்துகொள்ளும் அனைத்து சகலகலா வித்தகர்கள் அனைவருக்கும் இச்சரம் சமர்பணம்.
மேலும் வாசிக்க...

Wednesday, June 4, 2008

படச்சரம்

“என்னவே ரொம்பநாள ஆளக் காணோம்?” என்று புதிதாக வந்த அண்ணாச்சியை கலாத்தார் ஐயர்! “ஆரம்பிச்சுட்டியா? உன்னோட வள்ளலை” என்ற அண்ணாச்சி. பிறகு மெதுவா ஆரம்பித்தார் “ரெண்டு நாளா நான் வராட்டியும் எந்த பாதிப்பில்லாம் நீங்க பாத்துகிறீங்களே அது போதாதா?” என்றபடி எல்லோரையும் ஒரு பெருமித பார்வை பார்த்தார், சாமி, பாய், அண்ணா, ஐயர் எல்லோரும் ஒரு விணாடி குளிர்ந்தனர்.

“இன்னிக்கி என்னாச்சுவே எல்லோரும் என்ன மௌனவிரதமா?” என்று கேட்ட ஐயரை தொடர்ந்து பாய் மொழியலானார்! “இப்படி தாம்பா நடக்குது வேற உலகத்துலையும். சொல்றதையும் எழுதுறதையும் ரொம்ப சீரியஸா படிக்கிறாங்களாம்! ஆனா ஏதோ ஹிட்லர் ஆட்சியில இருக்குற மாதிரி யாரும் கருத்து சொல்ல வரலையாம்பா, அதனால!” என்று சொல்லி முடிப்பதற்க்குள்! அண்ணாச்சி தொடர்ந்தார் “இது பழைய செய்தி பாய்! இப்ப பாருங்க இன்னும் மூணுநாள் பதிவு இருக்கு இதை ரொம்ப நல்ல முறையில எழுதணும்ன்னு துடிக்கிறாராம் அந்த பதிவர்!” “அப்பிடியாபா” என்ற பாய் “இதே தான் நானும் சொல்ல வந்தேன்!” என்று முடித்தார் பாய்.

“இன்னிக்கி படச் சரம் தரலாம்ன்னு இருக்கார்ய்யா” என்று இன்றைய செய்திக்கு தாவினார் சாமி உடனே பாய் ஆரம்பித்தார் “ஆமாப்பா. இவரோட ஒரு பெரிய இரசிப்புக்கு பாத்திரமானவராம் அந்த பொற்கிழி ஆசாமி!”. அப்டீயா? அமாப்பா! இவர் படமெடுப்பது உபதொழிலாம் வாத்தியார் வேலைபார்த்தவராம்! இவரோட படங்கள் பார்த்து ஜுபீடர்ல எடுத்ததான்னு கேட்பாராம்? அவ்ளோ நேர்த்தியா படம் எடுப்பாராம்பா, ஆனா” என்ற பாய் சற்று நிறுத்த. “கருப்புவெள்ளை தானே!, அதான் தெரியுமே!” என்று சாமி முடித்தார்.

மீனாட்சி அம்மன் கோவில் பத்தி பல படங்கள் சேகரித்த போது இவர் பல பதிவுகள பார்ப்பாராம்! அட இப்படியெல்லாம் படமெடுக்க முடியுமான்னு யோசிப்பதுண்டாம்! உதாரணமா அந்த செயர்க்கைகோள் படம், நேர்கோட்டில் எடுக்கப்பட்ட படம், கம்பத்தடி மண்டபத்தோட வெயில் விழும் படம், கோபுரத்தின் பக்கவாட்டு வெட்டு தோற்றம்ன்னு பல படம் வலையேற்றம் செஞ்சாரோன்னோ! அதையெல்லாம் இவர் எடுத்தது பல நெனச்சாளாம், இல்ல இது எல்லாம் தன்னோட ஒரு மென்பொருளுக்காக சேகரித்ததுன்னு பலரிடம் சொல்லிருக்காராம்! உண்மையும் அதானாம்!” என்று முடித்தார் ஐயர்.

“இப்போ ஒரு பதிவர்பா இவரோட சில பதிவுல பல படம் காட்டுவார் அதுவும் வெளியூரா, வெளிநாடா காட்டுவார்! அந்த படம் பார்க்க ஒரு விதமா இருக்கும்!” என்று சொல்லுவதற்க்குள் “ஓ அந்த மூத்த பதிவர்தானே!” என்றார் சாமி “ஆமாப்பா அவரேதான்! மூத்த சகோதரின்னு எல்லாரும் கூப்புடுவாங்கோ, இவங்க படத்துல ஒரு தனிமகத்துவம் என்னன்னா இவங்க பட்டு தெரிஞ்சிகிட்டது தான் அதிகமாம். அப்பறம் புஸ்தகம் படிச்சு தான் தெரிஞ்சுகிட்டாங்களாம்” என்று முடிக்க

“அந்த மகரந்தமானவர் கூட பல படப்பதிவுகள் எழுதினார்ல, அதுலையும் ஒரு சில படம் இருக்கே. அதோட மாயாஜால கதையில வர்றத தனியா சொல்லனும்ய்யா” என்று முடித்தார் சாமி.

“ஒவ்வொரு பதிவுலையும் விதவிதமா அம்மன் படங்களை காட்டும் அந்த ஒரே ஊர்காரரோட பதிவு இருக்கே அதையும் கண்டிப்பா சொல்லுவார்!” என்று சாமி கலக்க சிரித்தபடி அடுத்த மேட்டருக்கு தாவினார் அண்ணாச்சி “இதுவும் ஒரு ஆன்மீகம பற்றிய ஒரு பதிவு தான், திருமலை திருவிழாவையும், திருவரங்க திருவிழாவையும்!, அந்த ஆனந்த சயணமா இருப்பவர் பதிச்சிருக்கார், இன்னொரு ஆனந்தமானவர் இட்ட ஒரு தொடர்ல மயிலை பங்குனிப் பெருவிழா படத்தொடர் குடுத்திருக்கார்!. இந்த ரெண்டுக்கும் ஒரு ஒற்றுமை! ஒரு வேற்றுமை என்னன்னா. இரண்டும் திருவிழா சம்பதப்பட்டது, வேற்றுமை, ஒன்னு ஹரியோடது இன்னொன்னு சிவனோடது!” என்று முடித்தார் “அப்பிடிபாத்தாலும் ஒன்னு தானேபா!” என்றார் பாய்.

"படத்துக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து மாதம் ஒரு போட்டி நடறாங்களே அதை பற்றி எதாவது உண்டா?" என்று அண்ணா கேட்க. பாய் தலையாட்டி ஆமோதித்தார்.

"படமே இல்லாம படச்சரமா?" என்றபடி ஐயர் பெஞ்சை காலி செய்ய, எல்லோரும் சிரித்தபடி கலைந்தனர் சூழ்நிலை சமநிலையானது!
மேலும் வாசிக்க...

Tuesday, June 3, 2008

நகைச் சுவை சரம்

மீண்டும் பெஞ்ச் சூடிபிடித்தது! "என்னவே! என்னோவோ ஒரு வாரம் எழுத போனார் திரும்பிடலாமான்னு யோசிக்கிறாரோ?" என்றார் டீக்கடையில் இருந்த ஐயார் " "என்ன சங்கதி" என்றபடி பாய் அருகில் சாமியும், அண்ணாவும் அமர்ந்தனர். "அதொன்னும் இல்லபா ஒரு பதிவர் பத்தி ரெண்டு நாளுக்கு முன்னால பேசுனோம் அதுல ஒன்னும் அவ்வளவா பெருஸ்ஸா இல்லபா!" "பெருசா இல்லாமலா பேசுனீங்க! இப்ப சொல்றீங்களா இல்லையா" என்று அதட்டினார் சாமி.
"ஒவ்வொருநாளும் ஒரு பதிவா போடலாம்ன்னு இருந்த கதையா?" என்று அண்ணா வார்த்தையை விட! "அதே தாம்பா!" என்று பாய், துள்ளாத குறையாக கத்தினார். "அதொன்னும் இல்ல ராசா! நேத்து இவர் வழக்கமா ஒரு கபேக்கு போயி டைப் அடிப்பாராம் நேத்து பெங்களூர் ரிலையன்ஸ்ல ஏதோ கோளாராம் அதான் போயி டைப் அடிக்க முடியலையாம்! நாளைய சங்கதிய கேளும்"

"இடுக்கண் வருங்கால் நகுக சொன்னாருல வள்ளுவர்! அத வச்சுக்கிட்டு விளையாடலாம்ன்னு நினைக்குறாராம் இந்த பதிவர்." "அப்போ சங்கத்து சிங்கங்களை பற்றி சொல்லுவார்ங்றீரா" என்று ஐயர் கொஞ்சம் சீரியஸாக! "கண்டிப்பா அது தானே இவர் கலாய்க்க கத்துக்கிட்ட இடம். இன்னிக்கி இவரோட சுற்றுவட்டம் சிரிக்குதுன்னு அதுக்கு இந்த சங்கம் பெரிய பங்குண்டு." என்று சாமி முடிக்க. பாய் தொடர்ந்தார்

"அப்பறம் யோசிபவரோட லொள்ளுல நனைவிடுவார்பா!" "அவரோட ஒரு சில பதிவுகளையும் குறிப்பிட்டு சொல்லுவாராம்." என்று பாய் சற்று மூச்சு வாங்குவதற்க்குள் "அதானவே அந்த இளைஞனோட காதலி, அவரோட குருஞ்செய்தி அதத்தானே சொல்றீரு?" "அட ஆமாப்பா!" என்று பாய் அமைதியானார்.

சமயம் பாத்து அண்ணா அரம்பித்தார்"இதோ பாரும் ஓய் சாதாரணமாக எல்லாம் ஒரு நகைச்சுவைய பத்தி சொல்லிட முடியத்து, இவரோ ஆன்மீக பதிவரு!" என்று முடிப்பதற்க்குள்! "இல்லபா மூணுநாலு நகைச்சுவை பதிவும் போட்டுருக்கார்பா, ஒரு தொடரே கூட எழுதிற்க்கார்பா" என்று பாய் வக்காலத்து வாங்க "ஒத்துக்குறேன்பா இருந்தாலும் அடுத்த அறிமுகமா என்ன போடுவார், அதையும் சொல்லும்!"

"அப்படி கேளு சொல்லுறேன்!" என்ற அண்ணா தொடர்ந்தார் "இவர் ஒருவரோட ஆஸ்தான கமெண்டர்ன்னு பேர் வாங்குனவய்யா!" "யாரு! அந்த குச்சி மிட்டாய் குருவி ரொட்டி எல்லாம் தன்னோட ஆர்குட்ல காட்டுவாரே அந்த மழைக்கு அசராதவர் தானே?" என்று சாமி கண்டுபிடிக்க! உடனே "அதே பிரதாபமான ஆளுதான்யா"என்று உறுதி செய்தார்!

"அப்பறம் ஒரு முக்கியமானவர் இவர் ஒரு காலத்துல தினம் ஒரு பதிவா போடுவார்! காலய்க்கரதுல இவருக்கு நிகர் இவர் தான்னு பதிவரே சொல்லிருக்கார்" "அந்த சுஜாதா கதையில வர்ர ஹீரோ பேர் கொண்டவர்தானே?" என்று அசரிரியாய் சாமி சொல்ல எல்லோரும் திரும்பி அவர்பக்கம் பார்த்தனர்!"


"ஏதோ திரும்பிடலாம்ன்னு வார்த்தை கேட்டுச்சே, அது என்னதுய்யா? " என்று சாமி ப்ளாஷ் பேக்க்குக்கு போக! "அதெல்லாம் ஒன்னுமில்லைபா! சும்மா என்ன எழுதலாம்ன்னும் இவர் யோசிச்சாராம் ஒன்னும் வரததால சரி வித்ட்ரா பண்ணலாமான்னு யோசிச்சாராம், ஆனா ஒன்னும் நடக்கலைபா!" "என்னமோ ஒரு மாசத்துக்கு முன்னாடியே எழுத ஆரம்பிச்சுடதா சொன்னீரு?" என்று தன்னோட ஞாபக சக்தியை ஐயர் காட்ட! "ஆமாபா எழுதி வச்சார் எல்லாம் தன்னோட ஆபீஸ் கணினில ஒரு போல்டர்ல வச்சாராம்! அது இப்போ கணலையாம்! மறுபடியும் டைப்ப ஆரம்பித்து பதிவ தொடர்ந்து போடுவாருன்னு அவரோட நன்பர்கள் சொல்றாங்கபா!" இப்போ எல்லாம் அந்த அலுவலகத்துல செக்யூரிட்டி அதுவும் ஐடி செக்யூரிட்டி பயங்கரமாம்! அதான் இந்த மாயத்துக்கு காரணமா இருக்கலமோன்னு யோசிக்கிறாராம் நம்மவர்.


"சரிப்பா அப்பறம் என்ன எழுதறார்?" என்று மீண்டும் ட்ராக்க்கு கொண்டுவந்தார் சாமி!


"கொஞ்சநாளுக்கு முன்னாடி ரெண்டுன்னு ஒன்னு ஓடிச்சில்ல அதுல ஒரு பதிவு இவர ரொம்பவே சிரிக்க வச்சுதாம். "


"அப்பறம் இவரோட எந்தவொரு நகைச்சுவைபதிவ படிச்சாலும் சிரிப்பாராம்! அதான் இவரோட தனித்துவமாம்" என்று முடித்துக்கொண்டார்.


"அதெப்படிப்பா இவரோ அவர் வராம ஒரு பதிவ எழுதினார்?" என்று நமுட்டு சிரிப்பு சிரித்தப்படி அண்ணா எழுந்திருக்க, மற்றவருக்கும் புரிய எல்லோரும் சிரித்த படியே கிளம்பினர். பெஞ்ச் அமைதியானது.


ஏழாம் சுவையான இந்த நகைச்சுவையை சுவைக்கும், சுவைக்க வைக்கும் அனைவருக்கும் இச்சரம் சமர்பணம்.

மேலும் வாசிக்க...

ஆன்மீக சரம்

ஒரு குழந்தைக்கு உணவூட்டுவது பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய வேலை! அதே குழந்தையை தூங்க வைப்பது அதைவிட பெரியா வேலை! அதை எழுப்ப வேண்டுமெனில்! (ஈஸ்வரா, யோசிச்சாலே தாங்க முடியலை). அதை ரொம்ப எளிதாக இந்த வலையில் நம்ம கே.ஆர்.எஸ். எழுதிருக்கார். முதலில் ஆன்மீகத்திற்க்கு தேவை எழுவது! அதாவது (அஞ்ஞான) தூக்கத்தில் இருந்து துயில் எழுவது.எழுப்ப நம்ம கே.ஆர்.எஸ் துனைக்கு வருகிறார்.


இந்த கலி காலத்துல பாட்டு, நடனமுன்னு ஆடிப்பாடி இருந்தாலே போதும் அது தான் முக்திக்கு வழின்னு பெரியவங்க சொல்லுராங்க, அதை நம்ம பதிவர்கள் எப்படியோ கண்டுபிடிச்சி, ஒரு சில குழுபதிவா இயங்கிவருகின்றனர்.

அதில் கண்ணனுக்கு ஒரு பதிவுண்டு அதில் எல்லா பதிவுகளும் அருமையாக அதுவும் ஒரு சில புதிய பாடல்களும் மேலும் ஒரு சில என்றும் இனிக்கும் பாடல்களும் உள்ளன.

என்னெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
என்னெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
சயனத்தில் ஆதி சேஷன் மேலே
திருவடி திருமகள் மடி மேலே

இப்படி பாடல்கள் பல. உருகி உருகி பாடும் பாடகர்களை கேட்டாலே நம் பாவங்கள் எல்லாம் உருகிவிடும்.

அதே போல் முக்கண்ணனுக்கும், முருகனுக்கும் (சிவமுருகன்ன்னு ஒரே வார்த்தையா சொல்லிடவ?) தனித்தனியாக இருகுழுப் பதிவுகள் உள்ளன

"கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா!
நின் தாள் துணை நீ தா!"

என்பதையும்

"முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா"

என்றபாடலையும் கேட்டால், சைவம் பற்றி அறியாதவரும் இதில் சிந்தைவையபட்டு விடுவர்.

மேலும் அம்ம(மா)னுக்கும் ஒரு பதிவு வச்சிருக்காங்க, கற்பூர நாயகியே கனவலில்லின்னு பேரு உள்ள போயி பார்த்தா மாரியாத்தா முதல் மதுரை அரசாளும் மீனாட்சி வரை எல்லாரும் அருளுகின்றனர்.

படித்து பாடி பரவச பட அந்தந்த பதிவுகள பார்த்தீங்கன தெரியும்.

மேலும் பலர் தங்களின் ஆன்மிக அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் ஒரு தள(ல)ம். ஆச்சார்ய ஹ்ருதம்.

சமர்பணம் : ஆன்மீக உலகில் பவனி வரும் அனைவருக்கும் இச்சரம் சமர்பணம்.

மேலும் வாசிக்க...

Monday, June 2, 2008

அதிகாரி ஆசிரியராகிரான்!

சுய சரம்.

டிஸ்கி: இதை கொஞ்சம் டீகடை உரையாடல் பாணியில் படித்து பாருங்கள்

அதிகாரி ஆசிரியராராம்யா! என்றபடி பாய் வந்தார்! “வாரும்ங்காணும்” என்று வரவேற்ற ஐயர்! “என்ன பாய், இன்னிக்கி அரசியல் பேச மாட்டேன்னுட்டு என்னமோ ஆரம்பிக்க்றேள்!” என்று வார்த்தை விட பாய் சுறுசுறுப்பானார்!

“அரசியல் இல்லபா! இது வேற உலகத்த பத்தி! பதிவுலகம்ன்னு சொல்லுவாங்கபா! அதுல நடக்க போறத பத்தி தான் சொல்லுறேன்!” “ஓ! அந்த அப்பனும் மகனும் பேரா இருக்குற பதிவர் பத்திதானே சொல்லுறேள்!” “அட கண்டு பிடுச்சிட்டியே! அவர பத்தி தெரியுமாபா?”

“3 வருஷத்துக்கு முன்னாடி ஆபீஸ்ல பொழுது போகாம, கூகுள்ல எதையாவது தேடி போய் படிப்பாராம் அப்பறம், பதிவுகள்ல ஆன்மீக சூப்பரு இருக்காரோன்னோ அவரோட பதிவுகள படிக்க ஆரம்பிச்சு, கொஞ்சம் கொஞ்சமா பதிவுபக்கம் வந்தாராம், அப்பறம், நம்பிக்கை, முத்தமிழ்-ன்னு தமிழ்ல்ல இருக்குற ஒருசில தமிழ் குழுமத்தில் சேர்ந்து எழுத ஆரம்பித்தாராம், பிறகு பதிவுலக டீச்சர் பதிவுகள படிக்கிறது, இனியது கேட்பது, மாதவி பந்தல்ல ஒதுங்குறது, சுப்ரபாதம் கேட்பது, சிலர் வீட்டுக்கு போறது, தேவகோட்டைக்கு போறது, வகுப்பறைக்கு போறது, ஆன்மீகம் அறிவது, காற்று வெளியில உலாவுரது, மழையை இரசிப்பது, சங்கத்து சங்கதிகளை படிப்பது, அதோட தமிழ்மணம் முகர்ரது, தேன் கூட்டை பார்ப்பதுன்னு இருந்தாராம்யா, அப்பறம் ஒருநாள் ஆன்மீக சூப்பருவோட ஒரு பதிவ பார்த்து இவரே மீனாட்சி அம்மன் கோவிலோட ஒரு படபதிவு தொடரும், மதுரை சித்திரை திருவிழா தொடரும், ஞானவெட்டியான் என்ற ஒரு பதிவரின் பதிவுகள படிச்சு சித்தர் பாடல்கள்ன்னு ஒரு வலைபூவும், தன்னோட வேலை பற்றி சொல்ல SAP-பற்றின்னு ஒரு வலைபூவும், மதுரை கோவில்ன்னு ஒரு சில பதிவுகளும் போட்டார், இடையிலே ஒரு சில பாடல்கள யுனிகோட்ல குடுத்தவரு, சௌராஷ்ட்ர திருக்குறளுக்கு ஒரு நல்ல இடத்தை தரனும்ங்கற இவரோட ரொம்பநாள் கனவை, இப்போ பதிவுவழியா யுனிகோட்ல தந்து தாகத்த தீர்த்துகிட்டு இருக்கார், சரிதானே?”

“சரி தான்பா! ஆனா அவர் ஒரு அதிகாரி அது தெரியுமாபா?” “அதுவும் தெரியுங்காணும், அதுமட்டுமில்ல சொத்த பிரிச்சுட்டாளோன்னோ ’ “அண்ணன் தம்பிங்க” அதுல தம்பியோட கடன் தரும் நிருவனத்துல நம்ம அதிகாரி, மனிதவள துறையில் உயரதிகாரியா, வேலை பார்க்குறார்,!” “அட விஷயத்த அப்பிடியே புட்டு வைக்கிறீயேபா.! அதெப்பெடிப்பா கணினி படிச்ச இவர் மனிதவளத்துல வேல பார்க்குறார்?”

“ கொஞ்சநாள் இவர் ஒரு மத்தியஅரசு திட்டத்துல ஒரு மேலதிகாரிக்கு சின்ன லெவல்ல காரியதரிசியா இருந்தாராம், அப்பறம் ஒரு நிறுவனத்துல மனிதவள துறைல உதவியளாரா வேலைபாத்து அப்பிடியே உயர்ந்துட்டாராம்.” “ஆனா அவர் எப்போ ஆசிரியர் ஆனார்! அதை சொல்லுவே! ஒரு சில ட்ரெய்னிங் மாட்யூல் வகுத்து தன்னோட சக-ஊழியர்களுக்கு ட்ரெய்னிங் கொடுத்துருக்கார்! ஆனா எப்போ ஆசிரியரானார் அதைக்கொஞ்சம் சொல்லுங்காணும்”

தமிழில் பதிவுகள்ன்னு வர்ர பல பதிவுகள எடுத்துக்காட்டும் வலைச்சரத்துல வாரம் ஒருவர் ஆசிரியாரா இருப்பார்பா!, அதுல நம்ம அதிகாரிய ஆசிரியராக்கனும்ன்னு அந்த பதிவோட பொறுப்பாசிரியர் நினைச்சு இவர அணுகினாராம். இவரும் ஒத்துகிட்டாராம்ய்யா”

“அதெப்படிபா, புதுஸ்ஸா ஒருவேலைய தேடிகிட்டு இருக்கும்போது எப்படி இதுக்கெல்லாம் இவருக்கு நேரம் கெடைக்குது”

“இது ஒரு மாசத்துக்கு முன்னாடியே இதுக்கு சரின்னு சொல்லிட்டு எல்லா பதிவுகளையும் எழுத ஆரம்பிச்சுட்டார்பா!” “அப்பறம் இப்போ தினமும் தன்னோட வீட்டு பக்கதுல இருக்குற ’கபே’ போயி பதிவுகள படிப்பாராம்!” “ஏகமனதா இன்னிக்கு ஆரம்பிக்குறார்”

“என்ன பதிவுகள எழுத போறாராம்?”

“அதை ஏம்பா கேக்குற! ஒன்னுக்குள்ள ஒன்னா, ரொம்ப நெருங்கி இருக்குரவங்களுக்கும் இதைப்பத்தி ஒன்னும் சொல்லலயாம்! ஆனா எனக்கு தெரிஞ்ச வரை தன்னோட நன்பர்களிடம் “ஆறு பதிவு இலட்சியம், மூனு பதிவு நிச்சயம்ன்னு” அண்ணா மாதிரி சொல்லுராம்பா! இது வலைச்சரம்ங்கறதால ஒவ்வொரு நாளும் ஒரு விதமானசரம் இருக்கும்னும் அந்த சரத்தை யாராவது ஒருவருக்கோ ஒரு சாரருக்கு சமர்பணம்ன்னு சொல்லுவார்ன்னு அவரோட நன்பர்கள் நம்புராங்க பா!”

முருகா! சிவ சிவ! என்றபடி எழுந்தார் ஐயர்! “பாய்” மாயமானார்!

தினமும் எல்லா செய்திகளையும் படித்து, விவாதிக்கும் அனைவருக்கும் இன்றைய சரம் சமர்பணம்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது