07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 6, 2008

கதம்பச்சரம்.

“என்னபா! எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்றபடி டீக்கடை அரட்டையை ஆரம்பித்தார் பாய். “உமக்காக தான்வே வெய்ட்டிங்க்” என்ற ஐயர் “ஒரு வாரத்தை எப்படியோ "வருத்ததையே வருக்காம" புதுஸ்ஸா சரம் போட்டு முடிச்சுட்டார் உம்ம பதிவர்” என்று மெதுவாக ஆரம்பிக்க. “ஆமாபா! இன்னும் ரெண்டு நாள் பதிவு எல்லாம் எழுதி முடிச்சுட்டார்பா, தன்னோட பதிவுல எழுதி வச்சிருக்காராம்! நாளைக்கும் இன்னிக்கும் சரியான நேரத்துல பதிச்சுவாராம்பா!”

உடனே சாமி “என்னமோ எப்படி ஆரம்பிக்குறது எப்படி தொடர்ரதுன்னு முழிச்சி கிட்டு இருந்தவரு, இப்போ முடிச்சுடவும் போறாரா? நல்லாருக்கு!” என்று முடிக்க “ஆனா முக்கியமா தன்னோட "ஆல்வேஸ் ரீடர்ஸ்" பலர் வரலைன்னு தன்னோட நெருங்கிய வட்டத்துல சொல்லி வருத்தப்பட்டாராம்!, அவங்களும் "கவலபடாதேள்! அவா எல்லாம் தன்னோட ரீடர்ல படிச்சிக்கிட்டு இருப்பா-னு" தேற்றி இருக்கா ஓய்!” என்று பாய் முடிப்பதற்க்குள்…

“இன்னிக்கி என்ன சரமாம் சொல்லுங்க பாய்!” என்று நிகழ்வுகளுக்கு கொண்டுவந்தார் சாமி, “எல்லாரும் கடைசிநாள்ல தான் கதம்பம் கட்டுவாங்க, ஆனா இவர் இன்னிக்கு போடுறாராம்” என்று பாய் சொல்லிக் கொண்டிருந்த போதே சாமி குறிக்குட்டு “இதுக்கு ஏதாவது தனிப்பட்ட காரணம் உண்டா”-ன்னு கேட்க. “உண்டுபா, ஆனா அதை நாளைக்கு சொல்வார்பா!” என்று நிறுத்தினார் பாய்.

“கண்டிப்பா மொதல்ல சாமி கும்புடுவார் அதான்பா ரெண்டு பேர் சேர்ந்து ஒரு பதிவு போடுறாங்களே அதுல இருந்து ஆரம்பிப்பார்!”. “அது தமிழ் பதிவாவே! இது ஒரு செங்கிருத பதிவு தானேவே” என ஐயர் வம்பிழுக்க காதில் வாங்காத பாய் “அப்பறம் இவர் அபிராமி அந்தாதிக்கு சரணம் வச்சு! கொஞ்சம் வீடு பேறு பொருள் பற்றி சொல்வார்,” என்று முடித்தார் பாய் “இத்தனை விஷயம் படிச்சுருக்காரா பாய்” என்று ஒன்றும் அறியாதவரய் கேட்டார் அண்ணாச்சி. பாய் “இவர் ஒவ்வொரு நாளும் பணம் புழங்கும் விதம் பற்றிய அறிய ஆர்வம் அதிகமாகுதாம்பா,”

“நமது உழைப்பை இன்னொருவருக்கு பலனளிக்கும்படி கொடுத்து அதற்கு பதிலாக அவரது உழைப்பை நமக்கு பலனளிக்கும்படி வாங்கிக் கொள்வதற்கான இடைப் பொருள்தான் பணம்.”

“இப்படி எழுதுவங்கள படிச்சா ஏன் ஆர்வம் வராது ஓய்!” என்று ஐயர் சொல்ல!

“பணத்தை பதுக்கி வச்சு சாப்டது அந்த காலம் பணத்தை வெளியில உலவவிட்டு சம்பதிக்கிறது, சாப்புடறது இந்த காலம்” ன்னு தத்துவம் உதிர்த்தார் நாயர் டீ ஆற்றியபடி.’

’உச் கொட்டிய பெஞ்ச் தன்னுடைய தலைப்பிற்க்கு திரும்பியது’ ஐயர் ஆரம்பித்தார் “போனவருஷம் கொஞ்சநாள் ஹாஸ்டல்ல இருந்தார்ல அதுல “தீ எக்னாமிக்ஸ் டைம்ஸ்” படிக்க ஆரம்பிச்சாராம், எல்லா தமிழ் சைட்ல போய் பங்கு சந்தை பற்றி படிப்பாராம்” .“அது ஏம்பா பொருளாதாரம்ன்னு சொன்னவுடனே பங்குசந்தை வருது” என பாய் கேட்க அண்ணாசி ஆரம்பித்தார் “அதாவது பாய்! ஒருத்தன் ஓரிடதில பணத்த வச்சுகிட்டு என்ன பண்ணாலாம்ன்னு யோசிக்கிறான், இன்னொருத்தன் பணத்துக்கு என்னாட பண்றதுன்னு யோசிக்கிறான். இவனுங்க ரெண்டு பேரையும் இணைக்குறது தான் இந்த பங்கு சந்தை! ரெண்டாவது ஆசாமிக்கு பணம் லாபம் கெடைச்ச அதை முதலீட்டாளர்களான முதலாவது ஆசாமிகளுக்கு பங்கு கொடுப்பதும்!?!?, தலைகீழா நடக்றதும் கண்கூடு” என்று அண்ணாச்சி முடிக்க. “அப்டியா! ரொம்ப நன்றி அண்ணாச்சி! அடுத்தது இவர் தொடுக்க போறது ஒரு ஊரபற்றின பதிவுபா!” “தலை நகர பற்றி தானே அதுவும் அந்த மூத்த பதிவர் எழுதுனது, ரொம்ப சூப்பரான படத்தை எல்லாம் போட்டு பதிச்சாங்களே அதைத் தானே சொல்ற,


என கேட்ட சாமியை ஆமாம் என தலையாட்டி அமோதித்தார்.

“ஒரு சில மாதமாய் அவ்வப்போது படிக்கும் சில செய்திகள் இருக்கும்பா!”

அப்பறம் இவருக்கு ரொம்ப பிடிச்ச செய்தியாம்! அதாவது காதல், இவருக்கும் காதலுக்கும் காததூரமாம்! அவ்ளோ பிடிக்குமாம்! இருந்தாலும் ஒரு சில காதல் பதிவுகளையும் காதல் பற்றிய கவிதைகளையும் படிப்பாராம் ஆனால் பின்னூட்டமிடமாட்டாராம். "என முடித்தார் பாய்.

“பிறகு மறுபடியும் நாளைய சஸ்பென்ஸ் பற்றி ஞாபகப் படுத்திட்டு முடிச்சுக்குவாரு!” அப்பிடிதானே பாய் என்று அண்ணா சொல்ல! ஆமாம் போட்ட படி பாய் எழுந்திருக்க எல்லோரும் கலைந்தனர்.

“இதை படிக்கும், படிக்கவிருக்கும் அனைவருக்கும் சமர்பணம்”

8 comments:

 1. டீக்கடை அரட்டையர்களே. உங்க பதிவரைக் கவலைப்பட வேணாம்ன்னு சொல்லுங்க. ரீடர்லயும் படிக்கிறோம். நேரடியா பதிவுலயும் வந்து படிக்கிறோம். பின்னூட்டம் மட்டும் தான் போடலை. அம்புட்டுத் தான்.

  ReplyDelete
 2. வலைச்சர ஆசிரியருக்கு கொஞ்சம் தாமதமான வாழ்த்துக்கள்.

  பொருள் செய், தமிழ்நிதி சுட்டிகள் மிக அருமையானவை, மிக்க பயனுள்ளவை. முழு வலைப்பூவுமே படிக்க வேண்டியன.

  மற்ற சுட்டிகளும் அருமை.

  ReplyDelete
 3. //டீக்கடை அரட்டையர்களே. உங்க பதிவரைக் கவலைப்பட வேணாம்ன்னு சொல்லுங்க. ரீடர்லயும் படிக்கிறோம். நேரடியா பதிவுலயும் வந்து படிக்கிறோம். பின்னூட்டம் மட்டும் தான் போடலை. அம்புட்டுத் தான்.//

  அப்டீங்கறீங்க - அண்ணாச்சி.

  ReplyDelete
 4. //வலைச்சர ஆசிரியருக்கு கொஞ்சம் தாமதமான வாழ்த்துக்கள்.//

  நன்றி

  //பொருள் செய், தமிழ்நிதி சுட்டிகள் மிக அருமையானவை, மிக்க பயனுள்ளவை. முழு வலைப்பூவுமே படிக்க வேண்டியன.

  மற்ற சுட்டிகளும் அருமை//

  அவசியமாக ஒவ்வொருவரும் படிக்க வேண்டியவை, அதனால் கதம்பத்தில் க(த)ட்டி விட்டேன்.

  ReplyDelete
 5. சுட்டித்தனமான சுட்டிகளை தந்தமைக்கு வட்டியும் முதலுமாய் வாழ்த்துகள்!!

  நாளும் வர்ரது தான்,பின்னூட்டமிடத்தான் நேரமில்லை :( நன்றாக தொடுக்கிறீர்கள்.

  ReplyDelete
 6. //சுட்டித்தனமான சுட்டிகளை தந்தமைக்கு வட்டியும் முதலுமாய் வாழ்த்துகள்!!//

  நன்றி. (எத்தனை %)

  //நாளும் வர்ரது தான்,பின்னூட்டமிடத்தான் நேரமில்லை :( நன்றாக தொடுக்கிறீர்கள். //

  அப்டீயா!?

  ReplyDelete
 7. குமரன் மற்றும் மௌளி யின் ஸ்தோத்ரமாலா, குமரனின் அபிராமி அந்தாதி, பொருள் செய், தமிழ்நிதி, துளசியின் மலை மந்திர் - அனைத்துமே அருமை .

  கதம்பம் கட்டியமைக்கு நண்றி சிவமுருகன்

  ReplyDelete
 8. சிவமுருகன்,

  பதிவுகள் அனைத்தும் தினமலர் டீக்கடை பெஞ்சு பாணியில் மாறுபட்டு அசத்தி இருக்கிறீர்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது