07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பாச மலர். Show all posts
Showing posts with label பாச மலர். Show all posts

Sunday, March 9, 2008

பூங்கொத்து - புதியவர்களுக்கும் / உங்களுக்கும்


பூங்கொத்து - புதியவர்களுக்கு
வரவேற்று..
பூங்கொத்து - உங்களுக்கு
நன்றி கூறி விடை பெற்று..


செந்தில்நாதன் செல்லம்மாள் ஐந்து வலைப்பூக்களில் பேசி வருகிறார். ஊஞ்சவேலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், தற்போது வாசம் அமெரிக்காவில். அன்னையின் மீதுள்ள பற்றுதல் அவர் பெயரைப் பார்த்தாலே புரிகிறது..இந்தப் பதிவில் அவர் கூறும் அனுபவம் நம்மை நெகிழ வைக்கிறது.

கோகிலவாணி கார்த்திகேயன் தன் வலைப்பூவில் எண்ணங்கள் அதிகம் பதிந்து வருகிறார். தற்போது மஸ்கட்டில் இருக்கிறார். இந்தப் பதிவில் ஜல்லிக்கட்டூ பற்றிப் பேசும் அவர்..மெல்ல மெல்லப் புகுந்து வரும் வேற்று மாநில திருவிழாக் கலாசாரத்தைச் சாடுகிறார்..

நுகர்வோர் நலன் என்ற குழுவினர் தம் வலைப்பூவில் நுகர்வோர் நலன் பற்றிய தகவல்கள் அதிகம் தருகின்றனர். மிகவும் பயனுள்ள குறிப்புகள் இதில் இடம்பெறுகின்றன.
இந்தப் பதிவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை அனுமதிக்கும் அரசாங்கம் பற்றிப் பேசுகின்றனர்.

அரச்ச மாவு என்ற குழுவினர் பல சுவாரசியமான பதிவுகள் தருகிறார்கள்..சிரிக்கப் பேசிச் சிந்திக்க வைக்கும் பதிவுகள்..தனியொரு பதிவுக்குச் சுட்டி தர இயலவில்லை...வலைப்பூ இங்கே.

கீர்த்தி, சென்னைவாசி..கோகுலைக் காதலிக்கவே பிறந்தவர்..பதிவுகள் முழுவதும் கோகுல் கோகுல் கோகுல் புராணம்தான்..மாதிரிக்கு ஒன்று.

கீரு தன் கூட்டாஞ்சோறு வலைப்பூவில் பெயருக்கேற்றாற் போல் பலவித தலைப்புகளில்
பதிவிட்டு வருகிறார்..சாஃப்ட்வேர் டெவலபர் நிலைமை பற்றிய பதிவு இது.

இன்பா(எ)சிவானந்தன், தீபம் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர், புதுச்சேரியில் இருக்கிறார். .. குட்டிக் கவிதையெழுதும் காதல் கவிஞர்..துடிதுடிக்க என்னும் குட்டிக்கவிதை படித்துப் பாருங்கள்.

-----------------------------------------------------------------------

வலைச்சர ஆசிரியர் பணி நிறைவாகவே இருந்தது. வலையின் இன்னும் பல பக்கங்களையும் புரட்டிப் பார்க்க உதவியது. வலைச்சரக் குழுவினர்க்கும், ஊக்குவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.

மேலும் வாசிக்க...

ரோஜாப்பூ- உறவுகள்

கொஞ்சம் முள்குத்து பொறுத்தால்
ரோஜாக்கள் கிடைக்கும்.
கொஞ்சம் வலிகள் பொறுத்தால்
உறவுகள் நிலைக்கும்.

உறவுகள் இன்றி நம் வாழ்க்கைக்கு நலமில்லை. வளமில்லை. சில உறவுகள் பற்றிப் பேசும் சில படைப்புகள் உங்கள் பார்வைக்கு.

சந்திரவதனாவின் அம்மா கதை அம்மா அப்பாவுக்கே உரித்தான இலக்கணங்கள் விளக்குகிறது. எது எப்படியிருந்தாலும் அம்மா அம்மாதான்.. "பிள்ளைகளுக்கும், அப்பாவுக்கும் இடையில் சண்டைகள் வந்து விடக் கூடாதென்று எத்தனை விடயங்களைப் பக்குவமாகச் சமாளித்திருப்பாள்."

கைப்புள்ளயின் தசரதர்கள் வாழ்வதில்லை என்ற பதிவு பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள உறவு பற்றிப் பேசுகிறது. "பிள்ளைகளின் பிரிவு பெற்றோரை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்று நான் பேசும் அதே வேளையில், பிள்ளையாய்ப் பிறந்தவர்களின் பேச்சினால் "கொல்லப்படும்" பெற்றோர்களைப் பற்றியும் பேசத் துணிகிறேன்."

கிருத்திகா அக்கா என்ற உறவு அன்பின் பரிமாணம் என்று உணர்வுகள் பேசுகிறார். "என்னெதிரே நிற்கும் அவளுள்ளும் நானே என்பதான எண்ணமின்னல் தொடர்ந்த நிமிடங்களில் நடந்த உரையாடல்களுக்கு வடிவங்களே இல்லை."

காட்டாறு, நீயும் என் அன்னையே என்று அத்தையின் அருமைகள் பேசுகிறார். "கேலிப்பேசி நான் துள்ள, செல்லக் கோபமாய் அவள் கை ஓங்கி வர, பிரளயம் உண்டாகும் அவ்வீட்டினிலே. என் அன்னையுடன் சண்டையிடுவாள். பேச மறுத்து முகம் திருப்பிடுவாள். என்னை மட்டும் கொஞ்சிடுவாள்; என் தாய் அறியாது."

தருமி முதியோர் பற்றி அப்படி என்ன பேசுகிறார்? "கொஞ்ச நாளைக்கு முன்பு என் வயதொத்த ஒருவர், இன்னும் இரு இளைஞர்களோடு எனக்கு ஒரு விவாதம். அதப் பத்தி உங்க கிட்டயும் சொல்லி, உங்க கருத்தையும் தெரிந்து கொள்ளலாமேன்னு ஒரு நினப்புல இந்தப் பதிவு."

திருமணம் என்று ஒன்று ஆனவுடன் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும்
உறவுநிலை மாற்றங்களை ரியாத் பதிவர் கே.வி.ராஜா எப்படிக் கூறுகிறார் பாருங்கள்.
மேலும் வாசிக்க...

Saturday, March 8, 2008

முல்லைப்பூ - நகைச்சுவை

முல்லைப்பூ சிரிக்கையில்
ரசிக்கலாம்
அழகும் நல்மணமும்.
இப்பதிவுகள் படிக்கையில்
ரசிக்கலாம்
நகையும் சுவையும்!

வெட்டிப்பயல் நகைச்சுவைப் புதையலே வைத்திருக்கிறார் தன் பதிவில்..எப்போதெல்லாம் மனம் கனக்கிறதோ..அப்போதெல்லாம் அவர் பதிவுக்குப் போய் வாருங்கள்..
மாதிரிக்கு ஒன்று..கண்ணில் தண்ணீர் வரும் வரை, வயிறு வலிக்க வலிக்கச் சிரிக்கலாம்..

அரை பிளேடு இதெல்லாம் கவிதையாடா என்று கேட்கிறார்..இவர் எழுதியிருக்கும் கவிதைகள் பாருங்கள்..அவர் கதை எழுதுவதுதானே வழக்கம்..

மஹாராஜா 2020 செய்திகள் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை செய்கிறார் பாருங்கள்!
ஒரு யூகமாய் எழுதியிருந்தாலும் இதெல்லாம் கூட நடந்தாலும் நடக்கும்..

உண்மைத்தமிழன் கூறும் தமிழனின் தத்துவங்கள் முற்றிலும் வித்தியாசமானவை..
மெக்கானிக்கல் இஞ்ஜினியர்? சாப்ட்வேர் இஞ்ஜினியர்?

கப்பிபய வ.வா.சங்கத்துக்காக எழுதிய தாரே கோடம்பாக்கம் பர் பதிவு...எத்தனை தடவை படித்தாலும் மீண்டும் மீண்டும் சிரித்துக் கொண்டேயிருப்பீர்கள்..


டுபுக்குவின் கல்யாணம் பதிவு பாருங்கள்..ஒரு கல்யாணத்துக்கு நேரில் போய் வந்தது
போல் உணர்வீர்கள்...கல்யாண வீட்டு உரையாடலில்தான் எத்தனை நகைச்சுவை!







மேலும் வாசிக்க...

பன்னீர்ப்பூ - சோகம் சுமக்கும் சமூகம்

பனித்துளிகள் சுமந்த பன்னீர்ப்பூக்கள்!
உரிய உறைவிடம் மரமென்றாலும்
உரிமைகள் பறிக்கப்பட்டுப்
பெரும்பாலும் இருப்பது தரையில்தான்..
கண்ணீர்த்துளிகள் சுமந்த இப்பதிவுகளும்
பன்னீர்ப்பூக்கள் போலத்தான்..
கிடைக்க வேண்டிய
நியாயங்கள் மறுக்கப்பட்டு ..
உரிமைகள் பறிக்கப்பட்டு..
வாழ்க்கை வதைபட்டு..

கோ. சுகுமாரனின் நட்சத்திர வாரப் பதிவு..பார்க்காதவர்களுக்காக மீண்டும் இங்கே..சாவு வந்தாதான் சமைப்போம் .‌ இது தொடர்பாக அவரே மீண்டும் வெளியிட்ட படமும் செய்தியும்..இதற்காகவும் போராட வேண்டிய நிலைமை.. போராடித் தீர்வு பெற்றார்கள்..
வாழ்த்துகள்..

சேவியர் பதிவில் மண்ணை உணவாக உண்ணும் மனிதர்கள்..நம்மில் பலர் உணவுப் பொருட்கள் எவ்வளவு குப்பைத் தொட்டியில் போடுகின்றோம்..ஆனால் இவர்கள் நிலை..?

யெஸ்.பாலபாரதி இந்தக் கொலையில் எனக்கும் பங்குண்டு என்கிறார்..அனுபவம் மனதைக் கனக்க வைக்கிறது .. இங்கேயும் உதவிப் பணிகள் துவங்கி விட்டன..

மங்கையின் வலிகளைப் பகிர்தலின் அவசியம் என்ற பதிவில் யாருடைய வலிகளைப் பேசுகிறார்? இன்றைய கால கட்டத்திலும் இப்படியெல்லாம் நடக்கிறது.. இதில் மகளிர் தினம் வேறு..

செல்வா(சந்திப்பு)வின் பள்ளிக்கூடம் ஒரு சிறுகதை..சமூக அவலம் மற்றொரு கோணத்தில் பேசும் சிறுகதை..மீள்பதிவிட்டிருக்கிறார்..இன்று தமிழ்மணத்தின் முகப்பில் கண்ணில் பட்டது..

நிவாரண நிதிக்காய் ஒரு போட்டி அறிவிப்பு:

தகவல்களுக்கு கிரிக்கெட் ரசிகனின் இப்பதிவைப் பாருங்கள்..மங்கை சுட்டிக் காட்டிய குழந்தைகள் குழந்தைகள்தானே பதிவுக்கான இந்த நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்று..வாழ்த்துகள்!
மேலும் வாசிக்க...

Friday, March 7, 2008

டிசம்பர்ப்பூ - கவிதைகள் 2

மார்கழிக் குளிரிலும்
மலர்ந்து நின்று
மகிழ்த்தும் டிசம்பர்ப்பூக்கள்..
மனச் சோர்விலும்
மலர்ச்சி தந்து
எழுச்சியூட்டும் கவிதைகள்..


வெண்ணிலாவின் வலைப்பூவில் துள்ளி விளையாடும் கவிதைகள் அழகு. இதோ மாதிரிக்கு ஒன்று கண்ணியமான காதல். இயற்கையை இரசிக்கையில் இளகிடும் மனது என்று கூறி இவர் வலையில் பூத்திருக்கும் இயற்கையின் காட்சிப்படங்கள் அருமை.

வேதாவின் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்த கருத்து நவிலும். சகிப்பு என்னும் இந்தக் கவிதை பேசும் உண்மை சுவாரசியம்.

நித்யகுமாரனின் குட்டிக் குட்டிக் கவிதைகளில் எட்டிப் பார்க்கும் எண்ணங்கள் அழகானவை. அழகு குத்தியவள்..நல்ல கற்பனை..

முகிலனின் என்னவளுக்கு ஒரு கடிதம் முற்றிலும் மாறுபட்ட, நெகிழ வைக்கும் ஒரு கவிதைக் கடிதம்.

ஸ்ரீயின் காதல் பால், குறளின் குரலை மாற்றிக் காதல் பேசுகிறது. காதல் படுத்தும் பாடு!
மேலும் வாசிக்க...

மனோரஞ்சிதப்பூ - அனுபவங்கள்

மனம் பேசும்
அனுபவம்
மனோரஞ்சிதம்.

டாக்டர் டெல்ஃபினின் இந்த‌ விந்தையான மனிதர்கள் அனுபவப் பகிர்வு படித்தீர்களா? மனம் கனத்துதான் போகிறது. அன்றாடம் இது போன்ற நிகழ்வுகள் சந்திக்கும் மருத்துவர் தொழில் உண்மையிலேயே கடினம்தானே..

ம‌தும‌தி முருகேஷ் இல்ல‌த்த‌ர‌சியின் இன்னல்கள் குறித்து என்ன‌ சொல்கிறார் பாருங்க‌ள்..பிரிவோம் சந்திப்போம் கதை மாதிரிதான்..

கார்த்திக் பிரபு அவர் சந்தித்த டாக்டர்கள் பற்றிய அனுபவங்களை நகைச்சுவையுணர்வுடன் பகிர்ந்து கொள்கிறார்.

பாபு மனோஹர் பார்த்த திரைப்படப் படப்பிடிப்பு அனுபவம்..பல்வேறு செய்திகளின் தொகுப்பாக விளங்குகிறது.

அருணாவின் பள்ளிக்காலக் குறும்பு .. போலிஸ் துரத்துவதாகக் கனவு காண வைக்கிறது.
மேலும் வாசிக்க...

Thursday, March 6, 2008

சூரியகாந்திப்பூ - கதைகள்.

சூரியன் சென்ற பக்கமெல்லாம்
சுழன்று பார்க்கும் சூரியகாந்தி
கதையென்று சொன்னாலே
வயது மறந்து திரும்பிப்பார்க்கும்
அனைவரின் குழந்தை மனம்.

மாதங்கி கூறும் உடனடி கதையில் தன் அம்மாவைப் பற்றிக் கவலைப்படும் மகள்..ஏன்?

உஷாவின் ஐந்தும் ஆறும் என்ற கதை மனிதனின் இயல்பு, பறவைகளின் இயல்பு பற்றி என்ன பேசுகிறது? இரு வேறு இழைகள் இணைத்து உஷா நெகிழ வைக்கிறார்.

சீமாச்சு எங்கேயோ கேட்ட ஒரு சின்னஞ்சிறு கதையை நீங்களும் கேளுங்களேன். இத்தனை சிறிய கதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

ரிஷான் ஷெரிப்பின் பள்ளிக்கூடம் கதை ஒரு சிறுமியின் மனநிலையைச் சித்தரிக்கிறது..
சின்னக்கதைதான்..ஆனால் சொல்லும் விஷயம் பெரியது.

ஜீவியின் நீர் மோர் என்ற கதையில் நீர் மோருக்கும் கிருஷ்ணகாந்துக்கும் என்ன சம்பந்தம்? உணர்வுப்பூர்வமான இயல்புகள்..தாக்குகின்றன.

சுல்தானின் கதையில் கணவன் மனைவி டைரிக்குறிப்பு, கணவன் சஞ்சரிக்கும் உலகம் மனைவி சஞ்சரிக்கும் உலகம் பற்றிப்பேசுகிறது. சிந்திக்கவும், ரசிக்கவும் ஒரு கதை.
மேலும் வாசிக்க...

ட்யூலிப் பூ - சற்றே வித்தியாசமாய்

இயல்பில் சற்று மாறும் எதுவும்
எளிதில் கவனம் ஈர்க்கும்..
ட்யூலிப் மலர்கள் போல்தான்
இவையும்!

கையேடு எழுதிய சற்றே வித்தியாசமான கடிதம் பல உண்மைகள் பேசிச் சிந்திக்க வைக்கிறது.

அப்பாவி இந்தியன் பதிவிட்ட இந்த வித்தியாச அழைப்பிதழ் பாருங்கள்..உயிரோடு இருப்பவர்களையே மதிக்காத இந்தக் காலத்தில்..

காண்டீபனின் இயற்கை வலைப்பூவில் வரும் பதிவுகள் அனைத்தும் சற்றே வித்தியாமான காட்சிகள்தான். வெள்ளை உயிரினங்கள் எத்தனை பார்த்திருக்கிறீர்கள் இதுவரை?

குலவுசனப்பிரியனின் அப்பாவின் பிரசவம் வித்தியாசமான அனுபவம்..புல்லரிக்க வைக்கிறது.
மேலும் வாசிக்க...

Wednesday, March 5, 2008

ஆர்கிட் பூ - புகைப்படம் / ஓவியம்

ஆர்கிட் மலர்கள்
வண்ணங்களுடன் அழகு போலவே
புகைப்படங்கள் செய்தியுடன்..

சதங்காவின் பதிவில் சதுரம் சதுரமாய் தர்பூசணிகள் சாதனைப் புகைப்படங்கள் பாருங்கள்...செய்திகளுடன் ஆலோசனையும்..அவரின் சித்திரங்களை சித்திரம் பேசுதடி
வலைப்பூவில் பாருங்கள்.

த‌மிழ்ப்பிரிய‌னின் பதிவில் இய‌ற்கையாக‌ சில‌ கின்ன‌ஸ் சாத‌னைக‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் அவற்றின் சாதனை விளக்கத்துடன்..

இலக்கியாவின் பதிவில் அழகிய மண்டையோடு பெறுமதி 100 மில்லியன் புகைப்படம்.
என்ன இது, 35 வயது ஐரோப்பியரின் மண்டையோட்டுக்கு வந்த வாழ்வு?

நானானி காண்பிக்கும் ப‌ட‌ம் அமெரிக்க‌க் காத‌ல் ஆர்ச்..காத‌லைச் சொல்லும் விதம் பற்றிய செய்திகள்..

கபீரன்பனின் இந்த ஓவியம் பாருங்களேன்..புகைப்படம் போலவே தத்ரூபமாய்

சேவியர் வழங்கும் காதலர் தினச் சிறப்பு ரோஜா புகைப்படங்கள் செய்திகளுடன்.
மேலும் வாசிக்க...

காட்டுமல்லிப்பூ / நித்யமல்லிப்பூ - வளைகுடா

காட்டுமல்லி..அழகுதான்
என்றாலும் மணமில்லைதான்..
இங்கு தனி(வி)த்திருப்போர்க்குப்
பணம்தான் என்றாலும் ரணம்தான்.

நித்யமல்லி.. அழகும் வாசமும் உண்டு

சட்டென்று வாடும் குணமுண்டு
குடும்பத்தோடு இங்கு இருப்போர்க்கு
வசதியும், மகிழ்ச்சியும் உண்டு
சட்டென்று சலிப்பும் வருவதுண்டு..

நிலவு நண்பனின் பதிவில், வளைகுடாவிலிருந்து விடுமுறைக்கு வரும்போது காணும் காட்சிகளை நகைச்சுவையுணர்வோடு விவரித்துள்ளார்..

கீழை ராஸாவின் சிறகுகள் தொலைத்த சிட்டுக் குருவிகள் "எண்ணெய் தேசத்தில் இளமை தொலைத்தவர்" கதை. பலரின் அனுபவம் பேசும் கதை இது.

ஜெயக்குமார் ஷேக்குகளுடனான அனுபவங்கள் பற்றிக் கூறுவதைக் கேளுங்கள்.
ஷேக்கு என்றால் திரைப்பட ஷேக்கு போலவா? காவா, மஜ்லிஸ் இதெல்லாம் என்ன?

லொடுக்குவின் பாலைவனப் பயணம் பாருங்கள். மணலில் அந்த வாகனங்களில் போகும் போது உள்ளுறுப்புகள் அனைத்தும் இடம் மாறி மீண்டும் தன்னிலைக்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

ரியாத் பதிவர் இம்னுஹம்துன் ஒரு பயணத்தின் பின்னால் என்ன கதை இருக்கிறது என்று கூறுகிறார். இங்கே வருவதற்குப் பல கஷ்டங்கள்..வந்த பின் பல கஷ்டங்கள்..
மேலும் வாசிக்க...

Tuesday, March 4, 2008

செவ்வந்திப்பூ - கவிதைகள் 1

வலை மொத்தம் பூத்திருக்கும்
வண்ணச் செவ்வந்திக்
கவிஞர் கூட்டம்!

காயத்ரியின் இந்த மரண தரிசனம் கவிதை..தோழியின் தந்தை மரணமடைந்த போது தேற்ற முடியாமல் நிற்கும் இயலாமை...இந்த நிலை எல்லோரும் அனுபவித்ததுதான் எப்போதோ ஒரு முறை.

ஜ‌மால‌னின் அக‌திக‌ளின் காடு என்ற‌ க‌விதை காடுகளைப் ப‌ற்றிய‌ இருவேறு பார்வைகள் - காடு ஒரு குறியீடாக, காடு ஒரு காடாக..பகிர்கின்றது.

கென் என்னும் கவிஞரின் எல்லோரின் மடியிலும் அடுத்தவர்க்கான கற்கள், மனிதனின் இயல்பான வன்மம் பேசுகிறது. இவர் பதிவில் பல நயமான கவிதைகள் கொட்டிக் கிடக்கின்ற‌ன.

யாழ் அகத்தியன் காதல் கவிஞர்தான். என்றாலும் அவர் அன்னையர் தினம் என்ற கவிதை எடுத்துரைக்கும் அன்னையின் அன்பு அவர் கவிநயத்தின் மற்றொரு கோணம் காட்டுகிறது.

ரியாத் பதிவர் முபாரக் எழுதிவரும் கவிதைகள் தனிமையின் தன்மையைப் பெரும்பாலும் பிரதிபலிக்கின்றன. குழந்தைகள் கடக்கும் காலை என்ற கவிதை குடும்பத்தைப் பிரிந்து வாழும் தகப்பனின் சோகம் தொட்டுப் போகிறது.
மேலும் வாசிக்க...

செம்பருத்திப்பூ - தகவல்கள்.

ஒலிபெருக்கி வடிவில்
இதழ்விரிக்கும் செம்பருத்தியாய்
நம்மைக்கூவி அழைக்கும்
தகவல்கள்
!

வ‌டுவூர் குமார் தெரியும். அவ‌ரின் இந்த வீடியோப்ப‌திவு தெரியுமா? அட‌டா..ந‌ம்ம‌ கால‌த்துல‌ இப்படியெல்லாம் இல்லாம‌ல் போய்விட்ட‌தே..ஏன் நம் குழந்தைகளுக்கு மட்டும் இப்படியெல்லாம் இருக்கிறதா என்ன? ஒரு வேளை பேரப்பிள்ளைகள் அனுபவிக்கக் கூடும். இப்படியிருந்தால் ஆசிரியர்களின் வேலை எத்தனை சுலபம்?

பொடியன் சஞ்சய் தன் பதிவில் தங்கம் வேண்டாம் என்று சொல்லுங்கள் என்கிறார். தங்கம் விற்கிற விலைக்கு அப்படித்தான் சொல்லியாக வேண்டும்.

பிரபு ராஜதுரை, வழக்கறிஞர் கர்ப்பிணிக்கு மரணதண்டனை பற்றிய தகவல்கள் என்ன கூறுகிறார்? சினிமா நீதிமன்றத்துக்கும் நிஜ நீதி மன்றத்துக்கும் எத்தனை வித்தியாசம்!

குருவிகள் தொகுத்து வழங்கும் விஞ்ஞானச் செய்திகள் மூலம் பல அறிவியல் தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் விலங்கியல், மிக நுண்ணிய பைபிள், உலகின் மிகப்பெரிய நாகப்பாம்பு, நிஜக் கரப்பான்களை ஏமாற்றிய இயந்திரக்கரப்பான்..இன்னும்..

ரியாத் ப‌திவ‌ர் பாலா, பேராசிரிய‌ர் மாசிலாம‌ணி அவ‌ர்களின்
புற்றுநோய் ஆராய்ச்சிக் க‌ண்டுபிடிப்புக‌ளைத் தொகுத்து வழங்குகிறார். எளிய‌ முறையில் குறைந்த‌ செல‌வில் புற்றுநோய் க‌ண்ட‌றிய‌ உத‌வும் இம்முறை விரைவில் ந‌ம் மருத்துவ‌ம‌னைக‌ளில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும். சென்னையில் இத‌ற்கான‌ மைய‌த்தில் இருந்து ப‌ணிபுரிய‌ப் பேராசிரிய‌ர் விரைவில் சென்னை திரும்ப‌விருக்கிறார்.
மேலும் வாசிக்க...

Monday, March 3, 2008

மல்லிகைப்பூ - தமிழ் இலக்கியம்.

மதுரை மல்லிகைக்கும்
மதுரத் தமிழுக்கும்
மயங்காதவருண்டா?

வலையில் தமிழ் மலர்கள் இல்லாமாலா? இதோ உங்கள் பார்வைக்குச் சில.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவோம்.

ஜாலி ஜம்பர் தன் தமிழ்த்தாய் வாழ்த்து இடை உருவல் என்ற பதிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிக் கேட்ட கேள்விக்குச் சிந்தாநதி ஆரியம் எங்கே போனது என்ற பதிவில் விளக்கம் தருகிறார். தமிழ்த்தாய் வாழ்த்தின் மூலம்/முழுமை என்ன? பொருள் விளக்கம் குமரன் இங்கே
தருகிறார்.

ரத்னேஷின் பெண்ணிடம் எப்போது அவள் வயதை ஞாபகப்படுத்தலாம் என்ற பதிவைப் பாருங்கள். வாளை மீனைப் பற்றிச் சினிமாப் பாடல் மட்டுமா பேசுகிறது? பரணரின் அகநானூற்றுப் பாடலுமல்லவா பேசுகிறது! நீர் நிலையின் மீது தீப்பிடித்த சுடர் போல் தாமரை என்று இலக்கியம் பகரும் உவமை நயம் இனிமையானது.

கவிப்ரியனின் தமிழமுது கந்தர் அந்தாதியின் 54 வது பாடலில் அப்படி என்ன சிறப்பு என்று கூறுகிறது. தத்தை தாத தித தத்து அத்தி?

மதுமிதா இதுவும் கடந்து போகும் என்னும் பதிவில் துன்பத்தைக் கைவிடச்சொல்கிறார்.
அதே நேரம், துன்பத்தை வர்ணிக்கும் விவேக சிந்தாமணிப் பாடலையும், நள வெண்பாப் பாடலையும் எடுத்துக் காட்டி அதன் நயம் போற்றுகிறார்.

செல்வி ஷங்கர் திருக்குறள் அதிகாரங்களை இனிய எளிய தமிழில் தொகுத்து வழங்குகிறார். கடவுள் வாழ்த்து தொடங்கி இன்னும் பல அதிகாரங்களும் தொடர்கின்றன.

ரியாத் பதிவர் நாக.இளங்கோவன் சிலம்பு மடல் என்ற தொடர் எழுதி வருகிறார்.
சிலம்பு மடல் 37 ல் அவர் கூறும் இளங்கோவடிகள் துறவு பற்றிய ஒரு கோணம் நாம் நினைத்துப் பார்க்காத ஒன்று.
மேலும் வாசிக்க...

பூக்கடைக்கு வாருங்கள்!

உங்களுடன் ஒரு வாரம்.வலைச்சரம் தொடுக்க இத்தனை சீக்கிரம் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. முத்துலட்சுமி, மற்றும் வலைச்சரக் குழுவினருக்கு நன்றி.

வலை வயலில் உழ ஆரம்பித்து மாதங்கள் நான்குதான் ஆகின்றன. அகலத்தை ஓரளவு எட்டியிருக்கிறேன். இன்னும் ஆழங்கள் அதிகம் பார்க்கவில்லை.(வலைச்சரத்துக்காகவும் கொஞ்சம் உழுததில் பார்த்த ஆழம்...யப்பா கண்ணைக் கட்டுகிறது சாமி.)

அறிமுக விளம்பரம்:

இன்னும் அதிகம் எழுதிவிடவில்லை. இருந்தாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி என் ஆரம்பப் பதிவுகள்சிலவற்றை அறிமுகம் செய்கிறேன். நெல்லுக்குப் பாயும் தண்ணீர் புல்லுக்கும் கொஞ்சம் பாய வேண்டாமா?

மதம்

ஒன்றுக்கொன்று துணை

உவமைகளில் பொய்யும் மெய்யும்

தனிமையை விரட்டத் தஞ்சம் புகுவது வலைத்தோட்டத்தில்தான். அப்படி நான் வலையில் வளைய வந்த போது எனக்குப் பிடித்த பதிவுகள் சில இச்சரத்தில் இடம் பெறும்.

பதிவர்களின் எழுத்து மற்றும் கருத்து வன்மையால் ஈர்க்கப்பட்டுப் படித்தது, பெயர்களால் கவரப்பட்டுப் பின் தொடர்ந்து படித்தது, பிறர் கொடுத்த சுட்டிகள் சுட்டியதைப் படித்தது,பின்னூட்டியவர்களைப் பின்தொடர்ந்துபடித்தது, வலைச்சரத்துக்காக
வலைவலையாய்,வகை வகையாய் வலைவீசித் தேடியது என்று அனுபவங்கள்
பலவிதம்.

சில பதிவுகள் நீங்கள் படித்தவையாக இருக்கக் கூடும்..எனினும் மீண்டும் தந்திருப்பது என்னைக்கவர்ந்தவை என்பதற்காக, புதியவர்களுக்காக. ஏனெனில் வலைச்சரத்தின் வாலைப் பிடித்துக் கொண்டே சென்றதில்தான் பல பதிவுகள் எனக்கு அறிமுகமாயின. சில பதிவுகள் உங்களுக்குப் புதியதாகவும் இருக்கக்கூடும்.

முடிந்த வரை உங்கள் மனதுக்கு மணம் தரும் சரமாய் அமைத்திட ஆசைதான். பார்ப்போம்.

கேடயக்குறிப்பு:

சரப்பூக்களில் எவ்வளவு மணம் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல் பரிசு கொடுங்கள்(?!) என்ற நாகேஷ் தருமியின் சாயல் வார்த்தைகளுடன் பூக்கடைக்கு உங்களை அழைக்கிறேன்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது