07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 3, 2008

பூக்கடைக்கு வாருங்கள்!

உங்களுடன் ஒரு வாரம்.வலைச்சரம் தொடுக்க இத்தனை சீக்கிரம் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. முத்துலட்சுமி, மற்றும் வலைச்சரக் குழுவினருக்கு நன்றி.

வலை வயலில் உழ ஆரம்பித்து மாதங்கள் நான்குதான் ஆகின்றன. அகலத்தை ஓரளவு எட்டியிருக்கிறேன். இன்னும் ஆழங்கள் அதிகம் பார்க்கவில்லை.(வலைச்சரத்துக்காகவும் கொஞ்சம் உழுததில் பார்த்த ஆழம்...யப்பா கண்ணைக் கட்டுகிறது சாமி.)

அறிமுக விளம்பரம்:

இன்னும் அதிகம் எழுதிவிடவில்லை. இருந்தாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி என் ஆரம்பப் பதிவுகள்சிலவற்றை அறிமுகம் செய்கிறேன். நெல்லுக்குப் பாயும் தண்ணீர் புல்லுக்கும் கொஞ்சம் பாய வேண்டாமா?

மதம்

ஒன்றுக்கொன்று துணை

உவமைகளில் பொய்யும் மெய்யும்

தனிமையை விரட்டத் தஞ்சம் புகுவது வலைத்தோட்டத்தில்தான். அப்படி நான் வலையில் வளைய வந்த போது எனக்குப் பிடித்த பதிவுகள் சில இச்சரத்தில் இடம் பெறும்.

பதிவர்களின் எழுத்து மற்றும் கருத்து வன்மையால் ஈர்க்கப்பட்டுப் படித்தது, பெயர்களால் கவரப்பட்டுப் பின் தொடர்ந்து படித்தது, பிறர் கொடுத்த சுட்டிகள் சுட்டியதைப் படித்தது,பின்னூட்டியவர்களைப் பின்தொடர்ந்துபடித்தது, வலைச்சரத்துக்காக
வலைவலையாய்,வகை வகையாய் வலைவீசித் தேடியது என்று அனுபவங்கள்
பலவிதம்.

சில பதிவுகள் நீங்கள் படித்தவையாக இருக்கக் கூடும்..எனினும் மீண்டும் தந்திருப்பது என்னைக்கவர்ந்தவை என்பதற்காக, புதியவர்களுக்காக. ஏனெனில் வலைச்சரத்தின் வாலைப் பிடித்துக் கொண்டே சென்றதில்தான் பல பதிவுகள் எனக்கு அறிமுகமாயின. சில பதிவுகள் உங்களுக்குப் புதியதாகவும் இருக்கக்கூடும்.

முடிந்த வரை உங்கள் மனதுக்கு மணம் தரும் சரமாய் அமைத்திட ஆசைதான். பார்ப்போம்.

கேடயக்குறிப்பு:

சரப்பூக்களில் எவ்வளவு மணம் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல் பரிசு கொடுங்கள்(?!) என்ற நாகேஷ் தருமியின் சாயல் வார்த்தைகளுடன் பூக்கடைக்கு உங்களை அழைக்கிறேன்.

39 comments:

  1. வாங்க..வந்து மதுரைப் பெருமையயைப் பரப்புங்கோ...

    வலைச்சர ஆசிரியர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் பாச மலரே.. :)

    ReplyDelete
  2. ஐய்யா.நான் தன் முதல் போனி..

    ReplyDelete
  3. ஒரு முழம் மல்லி என்ன விலை..

    ReplyDelete
  4. நெருக்கமா கட்டினாத் தான் மதுரை மல்லி..

    ReplyDelete
  5. ஏ..இந்தக் கும்மிப் போதும்மா இன்னும் கொஞ்சம் வேனுமா..

    ReplyDelete
  6. பார்த்து கும்முங்க என்றுச் சொன்னால் பார்க்காம கும்முங்க என்றுத் தானே அர்த்தம்..

    ReplyDelete
  7. ஆஹா..போதும் போதும் டிபிசிடி...நன்றி..

    ReplyDelete
  8. //பார்த்து கும்முங்க என்றுச் சொன்னால் பார்க்காம கும்முங்க என்றுத் தானே அர்த்தம்//

    இப்படி வேறு அர்த்தம் வருமா? எதுக்கு வம்பு..கும்முங்க என்ற வார்த்தையை நீக்கி விடுகிறேன்...

    ReplyDelete
  9. கும்மி அலவ்டா....இருங்க கொஞ்சத்துல வர்றேன்.

    ReplyDelete
  10. வலைச்சரம் தொடுக்கும் ஆசிரியர் ஆனதிற்கு வாழ்த்துக்கள், பாச மலர்!!

    ReplyDelete
  11. vaalthukal paasamalar,

    kumma porangalam. jaakirtha

    ReplyDelete
  12. கலக்குங்க பாசமலர் ஆண்ட்டி

    ReplyDelete
  13. கலக்குங்க பாசமலர் ஆண்ட்டி

    ReplyDelete
  14. வலைச்சர ஆசிரியைக்கு வாழ்த்து(க்)கள்

    ReplyDelete
  15. TBCD ஐயாவுக்கு ஏன் இந்த கும்மி வெறி :)). பாவம் ஊர்க்காரங்க பயப்படப்போறாங்க பாத்து........

    ReplyDelete
  16. வலைச்சரத்தின் இந்த வாரம் பாச மலர்ச்சரம்.

    ReplyDelete
  17. புதுகைத்தென்றல்,தமிழ்ப்பிரியன்,

    அதெல்லாம் என் பதிவுக்குதான்...இனிமே கும்ம மாட்டாங்க..

    ReplyDelete
  18. தமிழ்ப்பிரியன், நிலாக்குட்டி, சுல்தான்,

    வாழ்த்துகளுக்கு நன்றி..

    ReplyDelete
  19. அக்கா நீங்களா??

    வாங்க வாங்க

    ReplyDelete
  20. வலைச்சர ஆசிரியைக்கு வாழ்த்து(க்)கள்

    ReplyDelete
  21. //
    நிலா said...
    கலக்குங்க பாசமலர் ஆண்ட்டி
    //
    செல்லம் மாம்ஸ்க்கு முன்னாடியே வந்துட்டியா!!

    ReplyDelete
  22. //
    சுல்தான் said...
    வலைச்சரத்தின் இந்த வாரம் பாச மலர்ச்சரம்.
    //
    ஆமாங்க வழுக்காத 'பாச'சரம்தானுங்க!

    ReplyDelete
  23. என்ன சிவா..பாசத்துக்கு அப்படி ஓர் அர்த்தம் சொல்லிட்டீங்க..
    வாழ்த்துகளுக்கு நன்றி..

    ReplyDelete
  24. //
    பாச மலர் said...
    என்ன சிவா..பாசத்துக்கு அப்படி ஓர் அர்த்தம் சொல்லிட்டீங்க..
    வாழ்த்துகளுக்கு நன்றி..
    //
    ச்சும்மா ஒரு வெள்ளாட்டுக்கு!!

    ச்சின்னப்பையன் தப்பு பண்ணா கண்டுக்காதீங்க (காபி ரைட்,டீ,பூஸ்ட், ஹார்லிக்ஸ் ரைட் ரிசர்வ்ட்)

    ReplyDelete
  25. பாச மலர் அக்காவுக்கு வாழ்த்துக்கள்...கலக்குங்கள் ;))

    ReplyDelete
  26. \\தனிமையை விரட்டத் தஞ்சம் புகுவது வலைத்தோட்டத்தில்தான். அப்படி நான் வலையில் வளைய வந்த போது எனக்குப் பிடித்த பதிவுகள் சில இச்சரத்தில் இடம் பெறும்.\\

    அதே...அதே....அப்படியே உங்க கவிதைகளையும் கொடுத்திருக்கலாம் ;))

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் பாசமலர்,

    பாசமலர் எடுத்து-இவ்வார
    வலைச்சரம் தொடுத்து-எங்கள்
    பார்வைக்கு கொடுத்து...

    அப்பப்பா ஏன் இப்படி படுத்துறீங்க...என்பதற்கு முன் ஜூட்...

    ReplyDelete
  28. மலர்,

    வருகை மட்டும் பதிவு இப்போது

    இரு தினங்கள் பணியின் காரணமாக தேனி செல்கிறேன்.

    வியாழன் தொடர்கிறேன்

    சீனா

    ReplyDelete
  29. நன்றி கோபி..

    கீழை ராஸா, இந்தப் பகுதிக்கு ஜூட் விட்டாப் பரவாயில்லை..அடுத்த பகுதிகளுக்குப் படித்து விட்டுப் பின் ஜூட்..

    சீனா சார்..உங்க சௌகரியம் போல் வந்து படிங்க..இதெல்லாம் சொல்லணுமா..

    ReplyDelete
  30. நான் எப்பவுமே எதிலயும் லேட் தான் மேடம்; ஆனா எதையும் மிஸ் பண்ணினதில்லை.

    இதையும் . . .

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. டிசிபிடி அய்யா, ஏன் இத்தன கொலவெறி! ஊர்ப்பாசமா, நடத்துங்க!!

    ReplyDelete
  32. //சரப்பூக்களில் எவ்வளவு மணம் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல் பரிசு கொடுங்கள்(?!) என்ற நாகேஷ் தருமியின் சாயல் வார்த்தைகளுடன் பூக்கடைக்கு உங்களை அழைக்கிறேன்//

    :)))

    ReplyDelete
  33. லேட் ஆனா என்ன ரத்னேஷ் சார்..வந்துட்டிங்கள்ல...

    வாங்க அபி அப்பா..அதெல்லாம் ஊர்ப்பாசம்தான்..

    சென்ஷி..உங்க நாகேஷ் சொன்னதும் புன்னகையா..

    ReplyDelete
  34. ஆகா.. நீங்களா...சூப்பர். கும்பி சூப்பரா நடக்குது போல :D

    ReplyDelete
  35. வாங்க ராகவன்..ஆமா.ஆமா..இதுல வந்தது என் பதிவாச்சே..

    ReplyDelete
  36. பாசமலர் மேடம்,

    நீங்கள் தான் வலைச்சரம் ஆசிரியர் என்று டிபிசிடி கூட என்னிடம் சொல்லவில்லை.
    :(

    வாழ்த்துக்கள் !
    :)

    ReplyDelete
  37. நன்றி கோவி கண்ணன் சார்..

    //நீங்கள் தான் வலைச்சரம் ஆசிரியர் என்று டிபிசிடி கூட என்னிடம் சொல்லவில்லை.//

    உங்களைக் காப்பாற்றும் நல்ல எண்ணமாக இருக்கலாம்..

    ReplyDelete
  38. ஆகா ஆகா - சுய அறிமுகமா

    உவமைகளில் பொய்யும் மெய்யும் அருமை. மொழி மாற்றக் கவிதையில் சொல்லாட்சியின் சிறப்பு பாராட்டத்தக்கது. நல் வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது