07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 13, 2008

"குழலினிது "யாழ்" இனிது என்பர்"

"குழலினிது "யாழ்" இனிது என்பர்"

வசதியான சூழ்நிலை! நான் தமிழன் என்பதை, அரசியல் முதல், வீடு வரை நினைவுறுத்தும்.... பாராட்டும்.. ஒரு இடம்! அதுதான் தமிழ்நாடு!

இங்குதான், இது இத்தனை இருந்தாலும்..... சொந்தத் தமிழை மறக்கும் அவலம்!
அடிபட்டு,மிதிபட்டு, நசுக்குண்டு, ஊரை விட்டுத் துரத்தும் நிலை வரினும், தாய்த்தமிழை மறவேன் என ஒரு கூட்டம் இன்னொரு பக்கம் அலைவதைப் பார்க்கும் போது, ......பெருமைப்படுவதா,... இல்லை.. நம்மை நினைத்து அவமானப்பட்டுக் கொள்வதா என்பதே எனக்குள் எப்போதும் தோன்றும் உணர்வு.

இவர்கள் பதிவு... அது எத்தன்மையதாய் இருப்பினும்... விடாது படித்துவிடுவேன்!

இவர்கள் எல்லாருமே படிக்க வேண்டியவர்கள் என்றாலும், ஒரு சில மனதைக் கவர்ந்த பதிவர்களை இங்கு "யாழ் மாலை"யாய்த் தொடுக்கிறேன்!

"தூயா"

வீட்டில் சமைப்பதில் தொடங்கி, தமிழ்மணம் என்றால் உண்மையிலேயே என்ன என்பதைச் சொல்லுவதிலாகட்டும், ஈழத்தமிழரின் நிலையைப் படம் பிடித்துக் காட்டும் இவரது பதிவுகள் நெஞ்சை நிறைப்பவை. எல்லாருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக, சில ஆங்கிலப் பதிவுகளும் வைத்திருக்கிறார்! படித்துப் பயனுறுங்கள்!



"யோகன்-பாரிஸ்":


நான் அறிந்த பதிவர்களிலேயே மிக மிக எளிதானவர்! மிகவும் தன்னடக்கம் உள்ளவர்! தனது கருத்துகளை பிறர் பதிவில் மட்டுமல்லாமல், தனது பதிவுகளிலும் தெளிவாகச் சொல்லி வருபவர்!தமிழ் மீது இவருக்கு இருக்கும் பற்று என்னை எப்போதும் வியக்க வைக்கும்! தகராறு இல்லாத தரமான பதிவுகள் படிக்க இவரது வலைப்பூவைப் படியுங்கள்!

எம்.ரிஷான் ஷெரீப்":

"ஒரு பெருந்துயரத்தின் சாறலோடு பொழுதுகள் விடிகின்றன...! மாறாவடுக்களின் துயரஅலறல் தேசங்களெங்கும் முட்டிமோதி மனிதம் வாழும் இதயங்களெல்லாம் விழிநீரோடு எதிரொலித்திடினும் எவராலும் நீக்க முடியா ஒரு பெருந்துயரத்தின் சாறலோடு பொழுதுகள் கழிகின்றன...!"

புரிஞ்சிருக்குமே! ஆமாங்க! இவர் ஒரு கவிஞர்! யாழ் மக்கள் பற்றிய எண்ணங்கள், கவிதைகள், இஸ்லாம் பற்றிய தன் எண்ணங்கள் என இவர் எழுதும் பன்முகங்களைப் பார்க்கையில் இவர் மீது ஒரு தனி மதிப்பே வந்தது எனக்கு! படித்துப் பாருங்கள்! உங்களுக்கே புரியும்!

"கானா பிரபா"
Location: துரை வீதி, இணுவில், யாழ்ப்பாணம், Sri Lanka

"ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்!"

கலன்ங்க வைக்கும்ம் இவ்வரிகளால்தான் ...இப்படித்தான்... இந்தப் பதிவர் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்! ஆனால், தன்னலமில்லாது, இசை மீதான அளப்பரிய ஆசையினால், இன்று தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் தனது இசை பற்றிய பதிவுகளினால், மிகவும் அதிகமாகவே அறிமுகமான ஒரு பதிவர் இவர்!. இவரது ஒவ்வொரு பதிவும் படிக்கத் தகுந்தவை! ரசிக்கத் தகுந்தவை! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவை! இவரது சேவை ரேடியோ என்கிற நிலையிலும் இன்று தொடர்வது ஒரு பெருமைக்குரிய விஷயம்!

"வசந்தன்":

தன்னம்பிக்கை என்பதை மட்டுமே துணையாகக் கொண்டு தனிநடை போட்டு, தன் கருத்துகளைத் துணிவாகத் தொடர்ந்து எழுதிவரும் ஒரு துடிப்பான ஈழ இளைஞர். தமிழின் மீதும், தமிழ்க் கலாச்சாரத்தின் மீதும் இவருக்கு இருக்கும் ஈர்ப்பு எவருக்குமே ஒரு உத்வேகத்தை அளிக்கும். படித்து மகிழுங்கள்!

இவர்கள் அனைவருமே எனக்குத் தெரிந்தவர்கள்! ஆமாங்க! எப்படி எனக்கு ரஜினியைத் தெரியுமோ, ஜார்ஜ் புஷ்ஷைத் தெரியுமோ அப்படித்தான் இவர்களை நான் அறிவேன்! இவர்கள் எவருக்காவது என்னைத் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது!:)))))))))

ஈழத்துக் குரல்கள் இங்கு வெகுவாக வெவ்வேறு தொனியில் ஒலித்தாலும், தமிழ் என்னும் நமது பெருமையை முடிந்த வரையில் தங்களது பதிவுகளில் வெளியிடும் இவர்கள் அனைவரையும் பாராட்டி சரமாலை அணிவித்து மகிழ்கிறேன்!

13 comments:

  1. எனக்கு பிடித்த சில பதிவர்கள் இக்குழுமத்தில் இருப்பது சந்தோஷமாக இருக்கு.

    ReplyDelete
  2. வடுவூர் குமார் போன்ற சில தரமான பதிவர்கள் இன்னமும் இருப்பதே தமிழ்மணத்தின் சிறப்பு!

    இதைச் சொல்ல இங்கு ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்த ஒன்றுக்காகவே வலைச்சரத்துக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    என்ன சொல்வது?
    நல்லவர்கள் வாழ்க!
    முருகனருள் முன்னிற்கும்!

    ReplyDelete
  3. வடுவூர் குமார் போன்ற சில தரமான பதிவர்கள் இன்னமும் இருப்பதே தமிழ்மணத்தின் சிறப்பு!

    இதைச் சொல்ல இங்கு ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்த ஒன்றுக்காகவே வலைச்சரத்துக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    என்ன சொல்வது?
    நல்லவர்கள் வாழ்க!
    முருகனருள் முன்னிற்கும்!

    ReplyDelete
  4. ஈழ(தமிழ்) பதிவர்கள் குறித்த தொகுப்பு நன்றாக இருக்கிறது.

    பாராட்டுக்கள் !

    ReplyDelete
  5. நன்றி கோவியாரே!

    ReplyDelete
  6. தலைப்புக்கு ஒரு சபாஷ்!! ஆனா ஈழம் யாழ் மட்டுமே இல்லைன்னு யாராவந்து சண்டைக்கு வரப் போறாங்க!! :))

    ReplyDelete
  7. யாழ்ப் பதிவர்களில் மயுரேசனும் குறிப்பிடப் படவேண்டியவர் அய்யா!
    அவரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  8. ஈழமும் யாழும் எனக்கு ஒன்றே கொத்ஸ்!:))

    ReplyDelete
  9. ஈழமும் யாழும் எனக்கு ஒன்றே கொத்ஸ்!:))

    ReplyDelete
  10. மயூரனும் எனது பட்டியலில் இருந்தார் ஆசானே!

    ஆனால், அவர் பதிவுக்குள் செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டட்து!

    எனவே அவரை இணைக்க முடியவில்லை!

    புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  11. மயூரனும் எனது பட்டியலில் இருந்தார் ஆசானே!

    ஆனால், அவர் பதிவுக்குள் செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டட்து!

    எனவே அவரை இணைக்க முடியவில்லை!

    புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  12. ஈழத்தமிழின் அழகு அனைத்துப் பதிவர்களின் பதிவுகளிலும் ரசிக்க வேண்டிய ஒன்று. நல்ல தரமான பதிவர்கள். அமைதியானவர்கள். சுட்டிகளுக்கு நன்றி

    ReplyDelete
  13. அன்பின் VSK,

    இப்பொழுதுதான் இந்தப்பதிவைப் பார்த்தேன் நண்பரே..
    தாமதத்துக்கு மன்னியுங்கள்.

    உங்கள் சரத்தில் என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி நண்பரே :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது