07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 3, 2008

மல்லிகைப்பூ - தமிழ் இலக்கியம்.

மதுரை மல்லிகைக்கும்
மதுரத் தமிழுக்கும்
மயங்காதவருண்டா?

வலையில் தமிழ் மலர்கள் இல்லாமாலா? இதோ உங்கள் பார்வைக்குச் சில.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவோம்.

ஜாலி ஜம்பர் தன் தமிழ்த்தாய் வாழ்த்து இடை உருவல் என்ற பதிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிக் கேட்ட கேள்விக்குச் சிந்தாநதி ஆரியம் எங்கே போனது என்ற பதிவில் விளக்கம் தருகிறார். தமிழ்த்தாய் வாழ்த்தின் மூலம்/முழுமை என்ன? பொருள் விளக்கம் குமரன் இங்கே
தருகிறார்.

ரத்னேஷின் பெண்ணிடம் எப்போது அவள் வயதை ஞாபகப்படுத்தலாம் என்ற பதிவைப் பாருங்கள். வாளை மீனைப் பற்றிச் சினிமாப் பாடல் மட்டுமா பேசுகிறது? பரணரின் அகநானூற்றுப் பாடலுமல்லவா பேசுகிறது! நீர் நிலையின் மீது தீப்பிடித்த சுடர் போல் தாமரை என்று இலக்கியம் பகரும் உவமை நயம் இனிமையானது.

கவிப்ரியனின் தமிழமுது கந்தர் அந்தாதியின் 54 வது பாடலில் அப்படி என்ன சிறப்பு என்று கூறுகிறது. தத்தை தாத தித தத்து அத்தி?

மதுமிதா இதுவும் கடந்து போகும் என்னும் பதிவில் துன்பத்தைக் கைவிடச்சொல்கிறார்.
அதே நேரம், துன்பத்தை வர்ணிக்கும் விவேக சிந்தாமணிப் பாடலையும், நள வெண்பாப் பாடலையும் எடுத்துக் காட்டி அதன் நயம் போற்றுகிறார்.

செல்வி ஷங்கர் திருக்குறள் அதிகாரங்களை இனிய எளிய தமிழில் தொகுத்து வழங்குகிறார். கடவுள் வாழ்த்து தொடங்கி இன்னும் பல அதிகாரங்களும் தொடர்கின்றன.

ரியாத் பதிவர் நாக.இளங்கோவன் சிலம்பு மடல் என்ற தொடர் எழுதி வருகிறார்.
சிலம்பு மடல் 37 ல் அவர் கூறும் இளங்கோவடிகள் துறவு பற்றிய ஒரு கோணம் நாம் நினைத்துப் பார்க்காத ஒன்று.

8 comments:

  1. பாசமலர்,

    ஜாலிஜம்பர், சிந்தாநதி இவர்கள் இட்ட தமிழ்தாய் வாழ்த்து இடுகைகளின் தொடர்ச்சியாக நானும் ஒரு இடுகை இட்டிருந்தேன். தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பொருளுடன். அதன் சுட்டியை இங்கே தருகிறேன். :-)

    http://koodal1.blogspot.com/2007/07/blog-post_3193.html

    ReplyDelete
  2. நன்றி குமரன்..உங்கள் சுட்டியையும் இணைத்து விடுகிறேன்..

    ReplyDelete
  3. ஆகா...முதல் மாரியாதை தமிழுக்கா.!!

    அருமை..அருமை ;)

    ReplyDelete
  4. அருமை மட்டும் சொன்னா எப்படி..படிச்சுப் பாருங்க..

    ReplyDelete
  5. மேடம்,

    // அருமை மட்டும் சொன்னா எப்படி..படிச்சுப் பாருங்க..//

    நாங்க படிக்காமலே இப்படி 'அடிச்சு விடறோம்'னு எப்படிக் கண்டு பிடிக்கிறீங்க?

    ReplyDelete
  6. அய்யோ ரத்னேஷ் சார்..நா சும்ம கோபிகிட்ட வம்பு பண்ணேன்..நிஜம்மாவே படிக்கலியா?

    ReplyDelete
  7. \\RATHNESH said...
    மேடம்,

    // அருமை மட்டும் சொன்னா எப்படி..படிச்சுப் பாருங்க..//

    நாங்க படிக்காமலே இப்படி 'அடிச்சு விடறோம்'னு எப்படிக் கண்டு பிடிக்கிறீங்க?
    \\

    \\பாச மலர் said...
    அய்யோ ரத்னேஷ் சார்..நா சும்ம கோபிகிட்ட வம்பு பண்ணேன்..நிஜம்மாவே படிக்கலியா?\\

    ;))))))))))))))))

    அட கொடுமையே..;)

    ReplyDelete
  8. அனைத்துச் சுட்டிகளுமே அருமையான பதிவுகளைத் தருகின்றன. அரிய பணி - தேடிப் பிடித்துத் தந்தமைக்கு நன்றி - மலர்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது