ஒலிபெருக்கி வடிவில்
இதழ்விரிக்கும் செம்பருத்தியாய்
நம்மைக்கூவி அழைக்கும்
தகவல்கள்!
வடுவூர் குமார் தெரியும். அவரின்
இந்த வீடியோப்பதிவு தெரியுமா? அடடா..நம்ம காலத்துல இப்படியெல்லாம் இல்லாமல் போய்விட்டதே..ஏன் நம் குழந்தைகளுக்கு மட்டும் இப்படியெல்லாம் இருக்கிறதா என்ன? ஒரு வேளை பேரப்பிள்ளைகள் அனுபவிக்கக் கூடும். இப்படியிருந்தால் ஆசிரியர்களின் வேலை எத்தனை சுலபம்?
பொடியன் சஞ்சய் தன் பதிவில்
தங்கம் வேண்டாம் என்று சொல்லுங்கள் என்கிறார். தங்கம் விற்கிற விலைக்கு அப்படித்தான் சொல்லியாக வேண்டும்.
பிரபு ராஜதுரை, வழக்கறிஞர்
கர்ப்பிணிக்கு மரணதண்டனை பற்றிய தகவல்கள் என்ன கூறுகிறார்? சினிமா நீதிமன்றத்துக்கும் நிஜ நீதி மன்றத்துக்கும் எத்தனை வித்தியாசம்!
குருவிகள் தொகுத்து வழங்கும்
விஞ்ஞானச் செய்திகள் மூலம் பல அறிவியல் தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் விலங்கியல், மிக நுண்ணிய பைபிள், உலகின் மிகப்பெரிய நாகப்பாம்பு, நிஜக் கரப்பான்களை ஏமாற்றிய இயந்திரக்கரப்பான்..இன்னும்..
ரியாத் பதிவர்
பாலா, பேராசிரியர் மாசிலாமணி அவர்களின்
புற்றுநோய் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளைத் தொகுத்து வழங்குகிறார். எளிய முறையில் குறைந்த செலவில் புற்றுநோய் கண்டறிய உதவும் இம்முறை விரைவில் நம் மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்படும். சென்னையில் இதற்கான மையத்தில் இருந்து பணிபுரியப் பேராசிரியர் விரைவில் சென்னை திரும்பவிருக்கிறார்.
மேலும் வாசிக்க...
மதுரை மல்லிகைக்கும்
மதுரத் தமிழுக்கும்
மயங்காதவருண்டா?
வலையில் தமிழ் மலர்கள் இல்லாமாலா? இதோ உங்கள் பார்வைக்குச் சில.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவோம்.
ஜாலி ஜம்பர் தன்
தமிழ்த்தாய் வாழ்த்து இடை உருவல் என்ற பதிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிக் கேட்ட கேள்விக்குச்
சிந்தாநதி ஆரியம் எங்கே போனது என்ற பதிவில் விளக்கம் தருகிறார். தமிழ்த்தாய் வாழ்த்தின் மூலம்/முழுமை என்ன? பொருள் விளக்கம்
குமரன் இங்கேதருகிறார்.
ரத்னேஷின் பெண்ணிடம் எப்போது அவள் வயதை ஞாபகப்படுத்தலாம் என்ற பதிவைப் பாருங்கள். வாளை மீனைப் பற்றிச் சினிமாப் பாடல் மட்டுமா பேசுகிறது? பரணரின் அகநானூற்றுப் பாடலுமல்லவா பேசுகிறது! நீர் நிலையின் மீது தீப்பிடித்த சுடர் போல் தாமரை என்று இலக்கியம் பகரும் உவமை நயம் இனிமையானது.
கவிப்ரியனின் தமிழமுது கந்தர் அந்தாதியின் 54 வது பாடலில் அப்படி என்ன சிறப்பு என்று கூறுகிறது. தத்தை தாத தித தத்து அத்தி?
மதுமிதா இதுவும் கடந்து போகும் என்னும் பதிவில் துன்பத்தைக் கைவிடச்சொல்கிறார்.
அதே நேரம், துன்பத்தை வர்ணிக்கும் விவேக சிந்தாமணிப் பாடலையும், நள வெண்பாப் பாடலையும் எடுத்துக் காட்டி அதன் நயம் போற்றுகிறார்.
செல்வி ஷங்கர் திருக்குறள் அதிகாரங்களை இனிய எளிய தமிழில் தொகுத்து வழங்குகிறார்.
கடவுள் வாழ்த்து தொடங்கி இன்னும் பல அதிகாரங்களும் தொடர்கின்றன.
ரியாத் பதிவர்
நாக.இளங்கோவன் சிலம்பு மடல் என்ற தொடர் எழுதி வருகிறார்.
சிலம்பு மடல் 37 ல் அவர் கூறும் இளங்கோவடிகள் துறவு பற்றிய ஒரு கோணம் நாம் நினைத்துப் பார்க்காத ஒன்று.
மேலும் வாசிக்க...
உங்களுடன் ஒரு வாரம்.வலைச்சரம் தொடுக்க இத்தனை சீக்கிரம் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. முத்துலட்சுமி, மற்றும் வலைச்சரக் குழுவினருக்கு
நன்றி.வலை வயலில் உழ ஆரம்பித்து மாதங்கள் நான்குதான் ஆகின்றன. அகலத்தை ஓரளவு எட்டியிருக்கிறேன். இன்னும் ஆழங்கள் அதிகம் பார்க்கவில்லை.(வலைச்சரத்துக்காகவும் கொஞ்சம் உழுததில் பார்த்த ஆழம்...யப்பா கண்ணைக் கட்டுகிறது சாமி.)
அறிமுக விளம்பரம்:இன்னும் அதிகம் எழுதிவிடவில்லை. இருந்தாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி என் ஆரம்பப் பதிவுகள்சிலவற்றை அறிமுகம் செய்கிறேன். நெல்லுக்குப் பாயும் தண்ணீர் புல்லுக்கும் கொஞ்சம் பாய வேண்டாமா?
மதம்ஒன்றுக்கொன்று துணை உவமைகளில் பொய்யும் மெய்யும்தனிமையை விரட்டத் தஞ்சம் புகுவது வலைத்தோட்டத்தில்தான். அப்படி நான் வலையில் வளைய வந்த போது எனக்குப் பிடித்த பதிவுகள் சில இச்சரத்தில் இடம் பெறும்.
பதிவர்களின் எழுத்து மற்றும் கருத்து வன்மையால் ஈர்க்கப்பட்டுப் படித்தது, பெயர்களால் கவரப்பட்டுப் பின் தொடர்ந்து படித்தது, பிறர் கொடுத்த சுட்டிகள் சுட்டியதைப் படித்தது,பின்னூட்டியவர்களைப் பின்தொடர்ந்துபடித்தது, வலைச்சரத்துக்காக
வலைவலையாய்,வகை வகையாய் வலைவீசித் தேடியது என்று அனுபவங்கள்
பலவிதம்.
சில பதிவுகள் நீங்கள் படித்தவையாக இருக்கக் கூடும்..எனினும் மீண்டும் தந்திருப்பது என்னைக்கவர்ந்தவை என்பதற்காக, புதியவர்களுக்காக. ஏனெனில் வலைச்சரத்தின் வாலைப் பிடித்துக் கொண்டே சென்றதில்தான் பல பதிவுகள் எனக்கு அறிமுகமாயின. சில பதிவுகள் உங்களுக்குப் புதியதாகவும் இருக்கக்கூடும்.
முடிந்த வரை உங்கள் மனதுக்கு மணம் தரும் சரமாய் அமைத்திட ஆசைதான். பார்ப்போம்.
கேடயக்குறிப்பு:சரப்பூக்களில் எவ்வளவு மணம் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல் பரிசு கொடுங்கள்(?!) என்ற நாகேஷ் தருமியின் சாயல் வார்த்தைகளுடன் பூக்கடைக்கு உங்களை அழைக்கிறேன்.
மேலும் வாசிக்க...
போனவாரத்தில் மிகவேகமாக ஆரம்பித்து இணையத்தொடர்பு பிரச்சனையில் தடாலென முடித்துவிட்டு போனார் அபி அப்பா.. பிறந்தவீட்டுப்பெருமை ரொம்பவே அருமை. மகளிர் பிரச்சனை நல்லதொரு தொகுப்பு.. இசைப்பதிவும் , நச்சென்று பத்து சுட்டிகளும் என்று குறை ஒன்றும் இல்லை அபி அப்பா.. ... நீங்கள் நீளநீளமான பதிவுகளாக வித்தியாசமான பதிவுகளாக எங்களுக்கு இணைப்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.. நீங்கள் நூலகத்தில் சேர்த்து மட்டும் வைக்காமல் நன்றாகப்படியுங்கள்.. தொடர்ந்து சேர்த்து வையுங்கள். மிகவும் நன்றி.. .
--------------------------------------------------------------
அடுத்து இந்த வாரம் நம்முடன் தன் விருப்பப்பதிவுகளை பகிர்ந்து கொள்ள வருபவர்... மதுரை என்றால் மல்லி மலர் இவர் மதுரையிலிருந்து வந்த பாசமலர்.. இவரின் பெட்டகத்தில் நிறைப்பது சுரைக்காய் , ஏட்டுசுரைக்காய்.. அப்பறம் சுரைக்காய் கூட்டாம்.. அப்படி சொல்லிக்கொண்டாலும் நல்லதை தேடி கண்டு கொண்டு தான் நிறைக்கிறார் .. தன் பெட்டகத்தில்.. மதுரைப்பதிவர்கள் இணைந்து நடத்தும் பதிவிலும் உறுப்பினர்..பேரண்ட்ஸ் கிளப் என்னும் குழுவில் இணைந்து குழந்தை வளர்ப்பு பற்றிய நல்ல கருத்துக்களை எழுதி வருபவர். நிறைய பதிவுகளை வாசித்து தன் கருத்துக்களையும் நல்ல முறையில் பதிவு செய்பவர்.. எனவே அவர் ரசித்த பதிவுகளின் தொகுப்பை இவ்வாரம் வலைச்சரமாக்குவார்.
மேலும் வாசிக்க...
என்னவோ போங்க என்னிடமிருந்து உங்களை காக்கவே ஆண்டவன் மூன்று நாட்களாக என் நெட்டை பிடுங்கி விட்டுட்டான் போல இருக்கு. இருந்தாலும் விட மாட்டேன்.
திருவையாறு சுப்பு அவர்கள் கேட்டிருந்தார் அபிஅப்பாவின் அகராதியில் கர்னாடக இசைக்கு இடம் இருக்குமா என்று. என்ன அப்படி கேட்டுட்டீங்க, அது பத்தி எழுதினா எழுதிகிட்டே இருக்கலாம். அப்புடி ஒரு ஞானம் தான் போங்க.
இன்றைக்கு சில சுட்டிகளை தந்திருக்கேன். அதிலே தி.ரா.ச சார் லிங்க்கும் இருக்கு. சுதாராம் எழுதும் விமர்சன பதிவுகள் தேடி எடுக்க முடிய வில்லை. திருவையாறு சுப்பு அவர்களின் சுட்டிகளும் கொடுத்து இருக்கிறேன்.
இதோ நூலகத்துக்கு
இங்கே அழுத்தி போங்க!!
இன்னும் நிறைய சுட்டிகள் தரலாம் என நினைத்தேன். நெட் சொதப்பல் காரணமாக முடியவில்லை. அதனால இத்தோடு விடை பெறுகிறேன். வந்து ஆதரவு தந்த எல்லோருக்கும் என் நன்றிகள்.
மேலும் வாசிக்க...