07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label அபிஅப்பா. Show all posts
Showing posts with label அபிஅப்பா. Show all posts

Sunday, March 2, 2008

குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!

என்னவோ போங்க என்னிடமிருந்து உங்களை காக்கவே ஆண்டவன் மூன்று நாட்களாக என் நெட்டை பிடுங்கி விட்டுட்டான் போல இருக்கு. இருந்தாலும் விட மாட்டேன்.

திருவையாறு சுப்பு அவர்கள் கேட்டிருந்தார் அபிஅப்பாவின் அகராதியில் கர்னாடக இசைக்கு இடம் இருக்குமா என்று. என்ன அப்படி கேட்டுட்டீங்க, அது பத்தி எழுதினா எழுதிகிட்டே இருக்கலாம். அப்புடி ஒரு ஞானம் தான் போங்க.

இன்றைக்கு சில சுட்டிகளை தந்திருக்கேன். அதிலே தி.ரா.ச சார் லிங்க்கும் இருக்கு. சுதாராம் எழுதும் விமர்சன பதிவுகள் தேடி எடுக்க முடிய வில்லை. திருவையாறு சுப்பு அவர்களின் சுட்டிகளும் கொடுத்து இருக்கிறேன்.

இதோ நூலகத்துக்கு இங்கே அழுத்தி போங்க!!

இன்னும் நிறைய சுட்டிகள் தரலாம் என நினைத்தேன். நெட் சொதப்பல் காரணமாக முடியவில்லை. அதனால இத்தோடு விடை பெறுகிறேன். வந்து ஆதரவு தந்த எல்லோருக்கும் என் நன்றிகள்.
மேலும் வாசிக்க...

Thursday, February 28, 2008

எழுத்தாளர் சுஜாதாவுக்கு அஞ்சலி!!!


எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவுக்காக நம் வலைச்சரம் மிகவும் வருந்துகிறது! அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!
மேலும் வாசிக்க...

Wednesday, February 27, 2008

நான் என்னாத்த சொல்ல! இதுக்கு தலைப்பே வைக்க தெரியலைங்க எனக்கு!!!

எனக்கு ஏன் தான் இப்படி புத்தி போச்சுன்னே தெரியலைங்க. மனசு ஆசைப்பட்டுடுச்சு. அதனால புத்தி கெட்டு போச்சு. கதிர் தம்பிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி உதவி கேட்கலாமான்னு நெனச்சேன். தப்பா நெனச்சுகிட்டா என்னா பண்றதுன்னு மனசுல குழப்பம் வேற. சரி என்ன தான் ஆகுதுன்னு பார்ப்போம்ன்னு போன் பண்ணி மெதுவா தயங்கி தயங்கி விஷயத்தை சொன்னேன்


உடனே தம்பி”என்ன ஆச்சு உங்களுக்கு எதுக்கும் ரெஸ்ட் எடுங்க மனசும் உடம்பும் லேசாகும், நாங்க தான் இப்படின்னா நீங்க கூட எதுக்கு சின்ன பசங்க எங்க கூட கூத்தடிக்கப் பார்க்கறீங்க, பேசாம இருங்க நேரா வீட்டுக்கு போன் போட்டுடுவேன்”ன்னு சொன்ன பிறகு எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாத்தான் போச்சு. அதிலும் வீட்டுக்கு போன் அது இதுன்னதும் கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன். நான் உடனே “சரி தம்பி, விஷயம் நமக்குள்ளவே இருக்கட்டும், வெளியே தெரிய வேண்டாம்”ன்னு சொன்னேன். அதுக்கு தம்பி “2 நாள் முன்ன என் ரகசியத்தை உலகம் முழுக்க சொன்னதுக்கு பழி வாங்க எனக்கு இது நல்ல சந்தர்ப்பம் தான் ஆனா இது வரை நீங்க சேர்த்து வச்சிருக்கும் இமேஜ்க்காக பார்க்கிறேன்”ன்னு சொல்லி போனை வச்சுட்டார்.

வீட்டுக்கு வந்து புரண்டு புரண்டு படுத்தாலும் மனசு குரங்கு துள்ளி துள்ளி குதிச்சுகிட்டு இருக்கு. வேற வழியில்லாம கோபிக்கு போன் பண்ணினேன். விஷயத்தை பக்குவமா எடுத்து சொல்லியும் அவன் கோவத்தை என்னால் அடக்க முடியலை. “உங்க வயசு என்னா ஏன் இப்படி புத்தி போகுது உங்களுக்கு”ன்னு ஏகப்பட்ட திட்டு. அதோட போய் பச்ச தண்ணிய தலையிலே ஊத்திகிட்டு வந்து படுத்துட்டேன்.

காலை எழுந்து ஆபீஸ் போன உடனே சேட்டிலே குசும்பன் தென்பட்டதும் எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு. மெதுவா சேட்ல பிட்ட போட்டேன்.அவன் கொஞ்சம் விவரமானவன். அதிகம் கோவம் வராது. தம்பி, கோபி மாதிரி இல்லை. அதனால என் அவஸ்தையை மெதுவா புரிய வச்சேன். அதுக்கு அவன் சேட்டில இருந்து போனுக்கு தாவி “அபிஅப்பா உங்க அவஸ்த்தை எனக்கு புரியுது. ஆனாலும் நீங்க இதை என் கிட்ட கேட்டிருக்க கூடாது. கேட்டாலும் என்னால சரியா பதில் சொல்ல முடியாது ஏன்னா நான் கொஞ்சம் கூச்ச சுபாவம், அதனால பெட்டர் சாய்ஸ் அண்ணாச்சி தான் உங்களுக்கு. அவருக்கு இதிலே நல்ல அனுபவம் இருக்குன்னு கேள்விப்பட்டேன். நீங்க அவர் கிட்ட கேளுங்க”ன்னு சொல்லி போனை வச்சுட்டார்.

இத போய் என்னாத்த அவர் கிட்ட கேட்கிறது எதுனா தப்பா நெனச்சுட்டார்ன்னா என்ன பண்றதுன்னு பேசாம இருந்துட்டேன். பின்ன ஏதோ ஒரு குருட்டு தைரியத்துல போன் பண்ணினா மனுஷன் கேஷுவலா இத பத்தி பேசறார். எனக்கோ கொஞ்சம் கூச்சமாத்தான் இருந்துச்சு. பின்ன அவரே சொன்னார் “பாருங்க ஒரு முடிவு எடுத்திட்டீங்க ஆனா அதுக்கு முன்ன நல்ல எலுமிச்சம்பழமா வாங்கி தலையிலே கர கரன்னு தேச்சு குளிச்சுட்டு பின்னவும் நீங்க அதே முடிவிலே இருந்தா எனக்கு கூட வேண்டாம் ஜஸ்ட் அய்யனார் கிட்டே போன் பண்ணுங்க, எல்லாம் சுமூகமா முடியும்”ன்னு சொன்னார்.

எங்கே அவர் சொன்ன மாதிரி குளிச்சா மனசு மாறிடுமோன்னு உடனே அய்யனாருக்கு போன் பண்ணினேன். பாவி பய புள்ள என்னமா பேசுது மாங்கு மாங்குன்னு.”இதிலே என்ன அபிஅப்பா வயசெல்லாம் இது மனசு சம்மந்தப்பட்ட விஷயம்”ன்னு ஏதேதோ பேசிட்டு கடைசியா “சரி நீங்க ஒண்னு பண்ணுங்க சாயந்திரம் அல்கூஸ் கிராண்டு மால் பின்ன ஒரு முட்டு சந்து இருக்கு இல்லியா அங்க வாங்க என் கிட்ட இப்ப 4 இருக்கு உங்களுக்கு பிடிச்சதை எடுத்துகோங்க”ன்னு சொன்ன பிறகு தான் எனக்கு மனசு திருப்தியாச்சு.

எனக்கு வேலையும் ஓடலை ஒன்னும் ஓடலை. எப்படா ஆபீஸ் முடியும்ன்னு பார்த்துகிட்டே இருந்து அந்த முட்டு சந்தை அடைந்து அய்யனாரை பார்த்த பின்ன தான் திருப்தியாச்சு. 4ல் ஒண்ணு நான் செலக்ட் பண்ணினப்ப அய்யனார் சொன்னார் “எடுத்தவுடனே எதுக்கு ஓவர் டோஸ், மைல்டா ஆரம்பிங்க”ன்னு சொன்னது எதுவும் என் காதிலே விழலை. சரி நான் வீட்டுக்கு போகிறேன்ன்னு சொல்லிட்டு சட்டைக்குள்ளே மறைச்சு கிட்டு ஓடி வந்துட்டேன் வீட்டுக்கு.

வீட்டுக்கு வந்ததும் போன் பண்ணினார் அய்யனார் “என்ன அபிஅப்பா என்னா ஆச்சு உங்களுக்கு”ன்னு கேட்டப்பதான் சொன்னேன். “இல்ல அய்யனாரே, வலைச்சரம் எழுதறேன். வெரைட்டி குடுக்கலாம்ன்னு ஆசை, பின்னவீனத்துவம் பத்தியும் குடுக்க ஆசை, எனக்கு ஏற்கனவே கெட்ட பேர் இருக்கு படிக்காம பின்னூட்டம் போடறேன்ன்னு. அதான் அதை பத்தி தெரிஞ்சுக்க கொஞ்சம் படிக்கலாமேன்னு தான், இப்ப எடுத்துட்டு வந்த புக் பேரே நல்லா இருக்கே “ஆவியில் சதை”யா சூப்பர்ல்ல அய்ஸ்”ன்னு சொன்னேன்.

அதுக்கு அவர் “அடப்பாவி மனுஷா அதுக்கு நான் சில சுட்டி தர்ரேன் அதை படிங்க முதல்ல பின்ன இந்த புத்தகத்தை படிக்கலாம்”ன்னு சொன்னாருங்க. இதோ நான் படித்த அந்த பதிவுகளை லைப்ரரி கதைவை உடச்சிகிட்டு உள்ளே போய் “ஸ்ஸ்ஸ்ஸ் பேசாதே” போர்டை தூக்கி கடாசிட்டு சத்தம் போட்டு படிங்க. அப்பதான் கொஞ்சம் புரியிற மாதிரி இருக்கும்! கட்டுடைப்போம் அதுக்கு முன்ன லைப்ரரி கதவை உடைப்போம்!!
மேலும் வாசிக்க...

Tuesday, February 26, 2008

"நச்"ன்னு பத்து முத்து!!!!

துபால்ல வெள்ளின்னாதானே ரெண்டு அப்படின்னா இன்னிக்கு என்ன வெள்ளிகிழமைன்னு எல்லாம் கேக்கப்பிடாது. உங்களுக்காக நான் ஓடா உழைச்சு மாடா தேய்கிறேன் அய்யா தேய்கிறேன். இந்த பதிவில் நான் சுடப்போவது பத்து சுட்டிகளை. பத்தும் முத்து. அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்.

இதை எழுதிய அந்த நண்பர் எனக்கு அறிமுகம் இல்லாதவர் இந்த நிமிடம் வரை. ஒரு முறை தம்பி லக்கி இந்த பதிவை போய் பாருங்க செம சூடுன்னு சொன்னார். போய் பார்த்தேன். அவ்வளவுதான், அன்னிக்கு 3 மணி நேரம் ஓவர் டைம் பார்த்தேன்ல ஆபீஸ்ல. அப்படி ஒரு ஈர்ப்பு அந்த பதிவுகளில். அவர் ஒரு புகைப்பட பிளாக் ஒண்னும் வச்சிருக்காருங்க. அதிலே தலையை விட்டு பார்த்தேன் அன்னிக்கே. அப்போதுதான் நான் மாயவரம் பாதிரி மாம்பழம் பத்தின ஒரு பதிவு தயார் பண்னி வச்சிருந்தேன். (அந்த நேரத்தில் தான் மைஃபிரண்டு தங்காச்சி டுரியான் பழம் பதிவு போட்டிருந்துச்சுங்க) ஆனா அப்போ எனக்கு பாதிரி மாம்பழ போட்டோ கிடைக்கலை. மத்த மாம்பழம் மாதிரி இல்லை இந்த பாதிரிபழம். பச்சை கலரில் தான் இருக்கும். கிழவி மாதிரி(சரி கிழவன் மாதிரியும் தான்) நாளுக்கு நாள் சுருங்குமே தவிர அழுகாது. சுருங்க சுருங்க வாசமும், டேஸ்ட்டும் தூக்கும். மாயவரத்துகாரங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. எல்லார் வீட்டு பீரோவிலும் பாதிரியை பழுக்க வைப்பாங்க. அடுத்த நாள் சட்டை எல்லாம் பாதிரி வாசனையா இருக்கும்.

சரி விஷயத்துக்கு வருவோம். நான் அவரின் போட்டோ பிளாக்கிலே ஒரு கிழவி போட்டோ பார்த்தேன். அப்படியே பாதிரி மாம்பழம் மாதிரி சுருங்கி. நான் லக்கிகிட்ட கேட்டேன் அதை சுட்டுக்கவான்னு. அவரை கேக்காம சுட்டா திட்டுவார்ன்னு சொன்னார். அப்படீன்னா கேட்டுட்டு சுட்டுக்கவான்னு கேட்டேன். அதுக்கு லக்கி அப்படி கேட்டா நேர்ல வந்து திட்டுவார்ன்னு சொன்னார். சரி அவருக்கு எதுக்கு செலவு வைக்கணும்ன்னு அந்த பதிவையே இன்னும் டிராப்ட்டிலே வச்சிருக்கேன்.

சரி அவர் எழுதினதுல என்ன என்ன சுட்டி தந்திருக்கேன் தெரியுமா? அஃப்கோர்ஸ் தீபாவெங்கட் பத்தின பதிவுங்க. நான் இந்த பதிவை படிக்காமல் சுட்டி மாத்திரம் தருகிறேன் என நிலாகுட்டி, பேபிபவன் கூட சொல்ல மாட்டாங்க.(நழ நழ – இப்படிக்கு நட்டு)

அடுத்து அடுத்து பதிவுகளில் நரிக்குறவர் வாழ்க்கை, அவங்க வீரசிவாஜியின் படை வீரர்கள் என்கிற விஷயம், தற்போதைய அவர்களின் வாழ்வு முறை எல்லாம் இருக்கின்றது. அந்த பதிவிலே பாருங்க ஜோதிகா என்கிற 3 வயசு நரிக்குறத்தி பாப்பா போட்டோ போட்டிருக்கார் பாருங்க கொள்ளை அழகு. அந்த கண் இப்பவும் கண் முன்னே நிக்குது. அந்த உதட்டு சாயம் ஜூப்பரோ ஜூப்பர். அதுவும் இப்படித்தான் சொல்லியிருக்குமோ “ழீங்கல்லாம் ழென்நோழ நொழந்தைங்க”ன்னு தோணுச்சு.

பின்ன குடுகுடுப்பைகாரங்க பத்தின பதிவு. அவங்க பூர்வீகம், வாழ்க்கை அமைப்பு, ஒரு ஆடு மாடு வளர்த்து தன் பிள்ளை குட்டிங்க படிக்க வைக்க முடியாத அவலம்…ஊப்ஸ்ஸ்ஸ்.. படிங்க

பின்ன ஒரு சேதி படிச்சேன், சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில்வேயில் 50% டிக்கெட் விலைக்குறைப்புன்னு. ஆனா நான் கொடுக்கும் இந்த சுட்டியிலே பாருங்க பாவம்ங்க அந்த தாத்தா.

அடுத்து சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் தொழிலாளிகளின் வாழ்க்கை அவலம். கொடுமையே கொடுமைங்க.

நம் வலைச்சகோதரி லிவிங்ஸ்மைல் வித்யாவுக்கு ஆதரவாக ஒரு நச் பதிவு. அதிலே ஒரு பின்னூட்டம் அனானியாக “இந்த பதிவை தமிழக முதல்வருக்கோ, ஜனாதிபதிக்கோ அனுப்ப வேண்டும்” என்று. செய்தார்களா என தெரியவில்லை. இதை படிக்கும் நாமாவது அனுப்ப வேண்டும்!

அடுத்து பாலியல் அறிவு பற்றிய ஒரு சூப்பரோ சூப்பர் பதிவு! அதை படிங்க படிங்க படிங்க கூச்சம் தேவையில்லை. எல்லோருக்கும் அவசியம். ஒருமுறை தருமிசார் பதிவிலே டாக்டர் டெல்பினம்மா “கன்னித்தாய்” பற்றி குறிப்பிட்டு இருந்தது எனக்கு மட்டுமல்ல தருமி சாருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. தெரிஞ்சுக்க வேண்டியது ஆயிரம் இருக்குங்க!!

அதனால இப்ப லைப்ரரி கதவை திறங்கப்பா. வழக்கம் போல இங்க வந்து கும்முங்க!

நன்றி திரு. மரக்காணம் பாலா அவர்களே! உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பர்மிஷன் கேக்க! ஆனாலும் உங்கள் கருத்துக்கள் எல்லோருக்கும் இன்னும் அதிகமாக போய் சேர்ந்து எல்லோரும் பயன் பெறவே இப்படி செய்துவிட்டேன்!
மேலும் வாசிக்க...

'நச்' சுட்டிகளுக்கு முன்னே கொஞ்சம் பிறந்தகப் பெருமைகள்!!!

ரொம்ப சந்தோஷம் நேற்றைய என் வலைச்சரத்துக்கு தந்த ஆதரவுக்கு. இன்றைக்கு நச்ன்னு வர்ரேன்னு சொன்னேன். கொஞ்சம் கவுஜ படிச்சதால ஹச் ஹச்ன்னு ஆகிப்போச்சு நிலைமை. அதனால இந்த கேப்பிலே எங்க ஊர் பெருமையை கொஞ்சம் பார்த்துடலாம்ன்னு வந்திருக்கேன். சாதாரணமாகவே எல்லோருக்குமே அவங்க அவங்க ஊர் பத்தின ஒரு பாசம் பொங்கிகிட்டே இருக்கும். எங்க ஊர்ல அது நல்லா இருக்கும் இது நல்லா இருக்கும்ன்னு அலட்டிப்பாங்க. ஆனா எங்க ஊர்ல அப்படி குறிப்பிட்டு சொல்லும் படியா ஏதும் இல்லை. அதனால் தான் முத்துலெஷ்மி கூட அவங்க நட்சத்திர வாரத்திலே மேம்பாலம் பத்தி எழுதியிருந்தாங்க. நான் கூட கோவில் பத்தி எழுதியிருந்தேன். ஆனா பாருங்க இந்த மனுஷன் மாயவரத்தை எப்புடி பிரிச்சு மேஞ்சு இருக்கார்ன்னு.

பிறந்தக பெருமைன்னு ஒரு ஆறு பாகம் எழுதியிருக்கார் பாருங்க அப்படியே அள்ளிகிட்டு போகுது மனசை. அந்த எழுத்து நடை இருக்கே சரளம் சரளம், பிருந்தா மாஸ்ட்டர்? பாணியிலே சொல்ல போனா கிழி கிழி கிழி…. எதெல்லாம் மாயவரத்திலே அழகுன்னு சொல்றார் பாருங்க. ஜங்ஷன்…காலை மதுரையிலிருந்தோ சென்னையிலிருந்தோ வந்தாச்சுடா ராசா வந்தாச்சுன்னு புஸ்ஸு புஸ்ஸுன்னு பெரு மூச்சு விட்டு கிட்டு வந்து நின்னு சூடான வென்னீரை உச்சாவா போகும் கரி எஞ்சின் ரயில்ல ஆரம்பிச்சு ஸ்ட்ராங் பினாயில் முதல் குளோரோபாஃம் பவுடர் வரை ஸ்டேஷனின் அத்தனை அழகையும் சொல்லி, அஜீத் எக்கிற சோனி குதிரை வண்டி பயணம், புது தெரு ரயில்வே கிராஸ்ல ஏறி இறங்கி வீட்டுக்கு போகும் விஷயத்தை சொல்லச் சொல்ல நாமும் சீக்கிரம் ஊருக்கு போக வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகுது.

அது தவிர எங்க ஊர் கூவம் மிஸ். பழங்காவேரி(ஆறுகள் எல்லாமே பெண்பாலாமே) பத்தி என்னமா எழுதியிருப்பார் பாருங்க. அதிலே மூழ்கி ஸ்னானம் செஞ்சு ‘மடி’யா வெளியே வரும் பன்னி குட்டிகள் அப்போ அருவருப்பா இருந்துச்சு. ஆனா அவர் எழுத்து நடையிலே பார்க்கும் போது அந்த பன்னிகுட்டிகளை பிரகாஷ்ராஜ் பாணியிலே “அய் மிஸ்யூடா செல்லம்”ன்னு சொல்ல தோணுது. அதிலும் அந்த கொழுக் மொழுக் பன்னிகளை அவர் நமீதாவுக்கு இணையாக சொல்லியிருப்பதை பார்த்தா அவர் கலைஞர் தொலைக்காட்சிக்கு எதிரானவரா இருப்பாரோன்னு தோணுதுJ)

மணிகூண்டிலிருந்து மேம்பாலம் வரை போட்ட கான்கிரீட் ரோடு பத்தி அவர் சொல்லியிருக்கும் விதமும் பஸ்ட்டாண்டு அழகும் அதன் பூகோள எல்லை பிரச்சனை பத்தி எச்சரித்த விதமும் சூப்பரோ சூப்பர். அதை விட வடக்கத்தி டூரிஸ்ட் வருவதும் ரோட்டின் ஓரத்தில் தோசை சுடுவதும் (டேய் அபிஅப்பா அது சப்பாத்திடா ), பஸ்டாண்டு கல்கண்டு பாலும், அரைஞான் கயிற்றின் பட்டிமன்றமும் அழகோ அழகு.

மனுஷன் ரொம்ப ரசிப்பு தன்மை உள்ளவர் என்பதற்கு அவர் வெத்தலை போடும் ஒரு விளக்கம் போதும். வெத்தலை போட சிறந்த காஸ்ட்டியூம் வேட்டிதான்னு நான் தல தலயா அடிச்சிகிட்டேன். யாரும் கேக்கலை. அவர் சொல்றார் பாருங்க என்ன அற்புதமா. அதன் வாலை கிள்ளி நரம்பை எடுத்து சொக்குபுள்ள கடையின் பன்னீர் புகையிலையோட அய்யோ ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

அந்த மாயவரம் லோக்கல் ஸ்டேஷன் பத்தியும் அந்த தரங்கம்பாடி ரயில் பத்தியும் நானே எழுதனும்ன்னு இருந்தேன். ஆனா இவரின் அந்த பதிவுக்கு பின்ன நான் எழுதினா அவர் எழுதின பதிவுக்கு அவமானம்னு விட்டுட்டேன். இதோ கதவை திறந்து நம்ம நூலகத்துக்கு போய் பாருங்க, சத்தம் போடாம படிங்க. வழக்கம் போல இங்க வந்து கும்முங்க.

பின்ன ஒரு விஷயம், போன பதிவிலே தருமிசார் சொல்லியிருந்தார், ஒரே சுட்டின்னதுமே முழிச்சிகிட்டு இருந்திருக்கனும்ன்னு, நம்ம மாயவரம் பாசக்கார பயபுள்ளய்ங்க கிட்டத்தட்ட எல்லாருமே அப்படித்தானுங்க சாரே! இவரை பாருங்க இங்க. அருமையா எழுதுவார். கொஞ்ச நாளா பிசியாகிட்டார். ஆ.வில மாணவ நிருபரா இருந்தவர். அவர் பதிவிலே போய் பாருங்க அருமையா இருக்கும்!

நாளை இன்னும் நல்ல குட்டிகளோடு வர்ரேன்!
மேலும் வாசிக்க...

Monday, February 25, 2008

"விதி" வலியது!!!!!!!!

வணக்கம் வணக்கம் வணக்கம். வலைச்சரம் தொடுக்க வாய்ப்பை வழங்கிய முத்துலெஷ்மி அவர்களுக்கு நன்றி. ஆனாலும் அவங்களுக்கு ரொம்ப தைரியம் தான். அதற்கு பாராட்டுக்கள். சாதாரணமாகவே எனக்கு ஒரு பெரிய கெட்ட பெயர் இருக்குங்க. படிக்காமல் பின்னூட்டம் போடுகிறேன் என்று. உண்மை தான். சில சமயங்களில் அப்படி நடக்கும். என்னா ஆபீஸ்ல படிக்க நேரம் இருக்காது.(ஆனா சேட் பண்ண மட்டும் நேரம் கிடைக்குமா என கேக்கப்பிடாது கீதாம்மா)அது போல சமயங்களில் சேமித்து வைத்து கொள்வேன். பின்பு படிப்பேன். அப்போது பின்னூட்டம் போடலாம் என பார்த்தால் அதை தேடி எடுக்க சோம்பல் பட்டு கொண்டு ஓடிவிடுவேன்.

கடந்த ஒரு வாரமாக நம்ம துளசி ரீச்சர் வெண்கல கடையில் யானை புகுந்த மாதிரி துவம்சம் பண்ணிட்டு போயிட்டாங்க. அவங்க சொல்லியிருந்தாங்க “பழைய ஆசிரியர்களுக்கு கொஞ்சமும் மனசாட்சி இல்லைப்பா, அடுத்து அடுத்து வரும் ஆசிரியர்கள் தொடுக்க வலைப்பூவே வைக்க மாட்டேன்றாங்க”ன்னு சொல்லியிருந்தாங்க. அதான் ரீச்சர் நான் உங்களுக்கு சொல்வதும். நான் இப்போ என்ன தொடுக்கப்போகிறேன்னு எனக்கே தெரியலை. ஆனாலும் என்னால் முடிந்தது ஒரு பதிவுக்கு ஒரு சுட்டியோ அல்லது அதிக பட்சமாக 2 சுட்டியோ கொடுக்கிறேன்.

முதல் பதிவிலே தன்னை பற்றி சுய தம்பட்டம் பண்ணிக்கலாம் என வலைச்சர விதி சொல்லுது. அதனால தம்பி லக்கிலுக்கார் ஆசிரியராக இருந்த போது அவரின் அத்தனை பதிவுகளையும் சுட்டியிருந்தார். நான் அப்படியில்லைங்க நெம்ப ரீஜண்ட்டானவன். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இந்த ஒரு சுட்டியை மட்டும் கொடுத்துக்கறேன்.விதி வலியது:-))

சரி மேட்டருக்கு வர்ரேன். என்ன விஷயத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என யோசித்து பார்த்த போது முதலில் எனக்கு தோன்றியது மகளிர் பிரச்சனைகள் தாங்க. மகளிர்ன்னாவே பிரச்சனை தானே என அண்ணாச்சி சொல்வது காதில் கேட்கிறது. மகளிர் உடல்கூறு பிரச்சனைகள் பற்றிய முக்கியமான சுட்டிகளை இப்போது நான் சுட்ட போகிறேன். இது போன்ற கம்பியில் நடக்கும் வித்தை எல்லாம் அபிஅப்பா இது வரை செய்ததில்லை என்றாலும் இந்த வலைச்சரத்தின் மூலமாக எல்லோரையும் சென்று அடையும் இந்த முக்கியமான விஷயங்கள் என நினைத்தே இந்த சுட்டிகளை தருகிறேன்.
பொண்ணா பிறந்தது முதல் மண்ணா போகும் வரை பிரச்சனைகளை மட்டுமே அவர்கள் ஒவ்வொறு பருவத்திலும் சந்திக்கிறார்கள் என்பது இந்த சுட்டிகள் மூலம் புரிபடும் உங்களுக்கு. பூப்பெய்யும் முதலாகவே பிரச்சனைகள் ஆரம்பித்து விடுகின்றன. இது பற்றின புரிதல்கள் அவ்வளவாக பரவலாக இல்லை என்பதே என் கருத்து. என் மாணவ பருவத்தில் கூட ஏகப்பட்ட குழப்பங்கள் இந்த விஷயங்களில் இருந்ததுண்டு. டுபுக்கு அவர்கள் கூட ஒரு பதிவு அதை பற்றி எழுதியிருந்தார்.

என் வகுப்பிலே படித்த முரளி நல்ல அஸ்திவாரம் போட்டு படித்தவன். எங்களை விட சீனியர் வயசிலே. அப்பப்ப டைரக்ஷன் கத்து கொடுக்கிறேன் அது இதுன்னு ஏதாவது ஏடாகூடமா கத்து கொடுப்பான். அப்படித்தான் ஒரு நாள் நான், குரங்கு ராதா எல்லாம் அவனிடம் பாடம் படித்தோம் “சினிமா டைரக்ஷன் செய்வது எப்படி”ன்னு. அவன் அப்ப சொன்னான். “டேய் முதல்ல ஒரு பொண்ணு ஆத்துல தண்ணி எடுக்குது, பின்ன நடந்து வருது அப்போ டொப்புன்னு குடத்தை போட்டுட்டு வயத்தை பிடிச்சுகிட்டு கீழே உக்காந்து அழுவுது.குடம்தட தடன்னு உருண்டு போவுது திரும்பவும் ஆத்திலே போய் விழுகுது . ஏன்னா அது வயசுக்கு வந்துடுச்சு”ன்னு ஏதேதோ சொல்லி குடுப்பான்.

ஒரு நாலு நாள் கழிச்சு ராதா அவசர அவசரமா என் வீட்டுக்கு வந்தான். “டேய் நம்ம கிளாஸ் மாலா வயசுக்கு வந்துடுச்சுடா”ன்னு சொன்னான். “உனக்கு எப்படிடா தெரியும்”ன்னு கேட்டதுக்கு அவன் “அவங்க வீட்டு வழியா வந்தேன் இப்போ அப்போ தெரு பம்பிலில இருந்து தண்ணி எடுத்து கிட்டு வந்துச்சு. அப்போ குடத்தை கீழே போட்டுடுச்சுடா”ன்னு சொன்னான். மாலா பலமுறை எனக்கு முன்பே குடத்தை கீழே போட்டிருக்கு . ஆக அந்த பருவத்தில் அந்த விஷயத்தில் அவ்வளவு தான் புரிதல் இருந்தது.

இதை எல்லாம் மீறி இது மாதிரியான உடற்கூறு தொல்லைகளுக்கு பின்னே அவர்களின் உடல் மற்றும் முக்கியமாக மனம் படும் பாடுகள் என்ன என்பதை இந்த சுட்டிகளை பார்த்து தெரிஞ்சுக்கோங்க. இந்த சுட்டிகளில் அதற்கான தீர்வுகளும் இருப்பது இன்னும் சிறப்பு. பெரும்பாலான சுட்டிகள் 2003 /2004 ஆண்டுகளில் எழுதப்பட்டவை. அந்த விஷயம் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் எழுதியதின் தமிழாக்கமும் இருக்கின்றது. அதுபோல் எழுத்தாளினி ஏகாம்பரி எழுதின ஒரு பதிவும் மிக அருமையாக இந்த விஷயத்தை அலசி காயப்போடுது வீட்டு ஓட்டின் மேலே. நம்ம டெல்பினம்மாவும் அது சம்மந்தமா எழுதியிருக்காங்க. இப்போ ஜாக்கிரதையா என் பின்னே வாங்க. ஒரு இடத்துக்கு கூட்டிகிட்டு போறேன். வந்தாச்சா இதோ இந்த கதவை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு திறந்து உள்ளே போங்க “உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். சத்தம் போடாதே”ன்னு போர்டு போட்டிருக்கா, அதனால சத்தம் போடாம படிச்சுட்டு இங்க வந்து கும்முங்க!! நாளை “நச்”ன்னு வர்ரேன்!!

முக்கியமாக மிக்க நன்றி சந்திரவதனா அக்கா, உஷாராமச்சந்திரன், டாக்டர் டெல்பின் விடோரியா அவர்களுக்கு!!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது