07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 27, 2008

நான் என்னாத்த சொல்ல! இதுக்கு தலைப்பே வைக்க தெரியலைங்க எனக்கு!!!

எனக்கு ஏன் தான் இப்படி புத்தி போச்சுன்னே தெரியலைங்க. மனசு ஆசைப்பட்டுடுச்சு. அதனால புத்தி கெட்டு போச்சு. கதிர் தம்பிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி உதவி கேட்கலாமான்னு நெனச்சேன். தப்பா நெனச்சுகிட்டா என்னா பண்றதுன்னு மனசுல குழப்பம் வேற. சரி என்ன தான் ஆகுதுன்னு பார்ப்போம்ன்னு போன் பண்ணி மெதுவா தயங்கி தயங்கி விஷயத்தை சொன்னேன்


உடனே தம்பி”என்ன ஆச்சு உங்களுக்கு எதுக்கும் ரெஸ்ட் எடுங்க மனசும் உடம்பும் லேசாகும், நாங்க தான் இப்படின்னா நீங்க கூட எதுக்கு சின்ன பசங்க எங்க கூட கூத்தடிக்கப் பார்க்கறீங்க, பேசாம இருங்க நேரா வீட்டுக்கு போன் போட்டுடுவேன்”ன்னு சொன்ன பிறகு எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாத்தான் போச்சு. அதிலும் வீட்டுக்கு போன் அது இதுன்னதும் கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன். நான் உடனே “சரி தம்பி, விஷயம் நமக்குள்ளவே இருக்கட்டும், வெளியே தெரிய வேண்டாம்”ன்னு சொன்னேன். அதுக்கு தம்பி “2 நாள் முன்ன என் ரகசியத்தை உலகம் முழுக்க சொன்னதுக்கு பழி வாங்க எனக்கு இது நல்ல சந்தர்ப்பம் தான் ஆனா இது வரை நீங்க சேர்த்து வச்சிருக்கும் இமேஜ்க்காக பார்க்கிறேன்”ன்னு சொல்லி போனை வச்சுட்டார்.

வீட்டுக்கு வந்து புரண்டு புரண்டு படுத்தாலும் மனசு குரங்கு துள்ளி துள்ளி குதிச்சுகிட்டு இருக்கு. வேற வழியில்லாம கோபிக்கு போன் பண்ணினேன். விஷயத்தை பக்குவமா எடுத்து சொல்லியும் அவன் கோவத்தை என்னால் அடக்க முடியலை. “உங்க வயசு என்னா ஏன் இப்படி புத்தி போகுது உங்களுக்கு”ன்னு ஏகப்பட்ட திட்டு. அதோட போய் பச்ச தண்ணிய தலையிலே ஊத்திகிட்டு வந்து படுத்துட்டேன்.

காலை எழுந்து ஆபீஸ் போன உடனே சேட்டிலே குசும்பன் தென்பட்டதும் எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு. மெதுவா சேட்ல பிட்ட போட்டேன்.அவன் கொஞ்சம் விவரமானவன். அதிகம் கோவம் வராது. தம்பி, கோபி மாதிரி இல்லை. அதனால என் அவஸ்தையை மெதுவா புரிய வச்சேன். அதுக்கு அவன் சேட்டில இருந்து போனுக்கு தாவி “அபிஅப்பா உங்க அவஸ்த்தை எனக்கு புரியுது. ஆனாலும் நீங்க இதை என் கிட்ட கேட்டிருக்க கூடாது. கேட்டாலும் என்னால சரியா பதில் சொல்ல முடியாது ஏன்னா நான் கொஞ்சம் கூச்ச சுபாவம், அதனால பெட்டர் சாய்ஸ் அண்ணாச்சி தான் உங்களுக்கு. அவருக்கு இதிலே நல்ல அனுபவம் இருக்குன்னு கேள்விப்பட்டேன். நீங்க அவர் கிட்ட கேளுங்க”ன்னு சொல்லி போனை வச்சுட்டார்.

இத போய் என்னாத்த அவர் கிட்ட கேட்கிறது எதுனா தப்பா நெனச்சுட்டார்ன்னா என்ன பண்றதுன்னு பேசாம இருந்துட்டேன். பின்ன ஏதோ ஒரு குருட்டு தைரியத்துல போன் பண்ணினா மனுஷன் கேஷுவலா இத பத்தி பேசறார். எனக்கோ கொஞ்சம் கூச்சமாத்தான் இருந்துச்சு. பின்ன அவரே சொன்னார் “பாருங்க ஒரு முடிவு எடுத்திட்டீங்க ஆனா அதுக்கு முன்ன நல்ல எலுமிச்சம்பழமா வாங்கி தலையிலே கர கரன்னு தேச்சு குளிச்சுட்டு பின்னவும் நீங்க அதே முடிவிலே இருந்தா எனக்கு கூட வேண்டாம் ஜஸ்ட் அய்யனார் கிட்டே போன் பண்ணுங்க, எல்லாம் சுமூகமா முடியும்”ன்னு சொன்னார்.

எங்கே அவர் சொன்ன மாதிரி குளிச்சா மனசு மாறிடுமோன்னு உடனே அய்யனாருக்கு போன் பண்ணினேன். பாவி பய புள்ள என்னமா பேசுது மாங்கு மாங்குன்னு.”இதிலே என்ன அபிஅப்பா வயசெல்லாம் இது மனசு சம்மந்தப்பட்ட விஷயம்”ன்னு ஏதேதோ பேசிட்டு கடைசியா “சரி நீங்க ஒண்னு பண்ணுங்க சாயந்திரம் அல்கூஸ் கிராண்டு மால் பின்ன ஒரு முட்டு சந்து இருக்கு இல்லியா அங்க வாங்க என் கிட்ட இப்ப 4 இருக்கு உங்களுக்கு பிடிச்சதை எடுத்துகோங்க”ன்னு சொன்ன பிறகு தான் எனக்கு மனசு திருப்தியாச்சு.

எனக்கு வேலையும் ஓடலை ஒன்னும் ஓடலை. எப்படா ஆபீஸ் முடியும்ன்னு பார்த்துகிட்டே இருந்து அந்த முட்டு சந்தை அடைந்து அய்யனாரை பார்த்த பின்ன தான் திருப்தியாச்சு. 4ல் ஒண்ணு நான் செலக்ட் பண்ணினப்ப அய்யனார் சொன்னார் “எடுத்தவுடனே எதுக்கு ஓவர் டோஸ், மைல்டா ஆரம்பிங்க”ன்னு சொன்னது எதுவும் என் காதிலே விழலை. சரி நான் வீட்டுக்கு போகிறேன்ன்னு சொல்லிட்டு சட்டைக்குள்ளே மறைச்சு கிட்டு ஓடி வந்துட்டேன் வீட்டுக்கு.

வீட்டுக்கு வந்ததும் போன் பண்ணினார் அய்யனார் “என்ன அபிஅப்பா என்னா ஆச்சு உங்களுக்கு”ன்னு கேட்டப்பதான் சொன்னேன். “இல்ல அய்யனாரே, வலைச்சரம் எழுதறேன். வெரைட்டி குடுக்கலாம்ன்னு ஆசை, பின்னவீனத்துவம் பத்தியும் குடுக்க ஆசை, எனக்கு ஏற்கனவே கெட்ட பேர் இருக்கு படிக்காம பின்னூட்டம் போடறேன்ன்னு. அதான் அதை பத்தி தெரிஞ்சுக்க கொஞ்சம் படிக்கலாமேன்னு தான், இப்ப எடுத்துட்டு வந்த புக் பேரே நல்லா இருக்கே “ஆவியில் சதை”யா சூப்பர்ல்ல அய்ஸ்”ன்னு சொன்னேன்.

அதுக்கு அவர் “அடப்பாவி மனுஷா அதுக்கு நான் சில சுட்டி தர்ரேன் அதை படிங்க முதல்ல பின்ன இந்த புத்தகத்தை படிக்கலாம்”ன்னு சொன்னாருங்க. இதோ நான் படித்த அந்த பதிவுகளை லைப்ரரி கதைவை உடச்சிகிட்டு உள்ளே போய் “ஸ்ஸ்ஸ்ஸ் பேசாதே” போர்டை தூக்கி கடாசிட்டு சத்தம் போட்டு படிங்க. அப்பதான் கொஞ்சம் புரியிற மாதிரி இருக்கும்! கட்டுடைப்போம் அதுக்கு முன்ன லைப்ரரி கதவை உடைப்போம்!!

11 comments:

 1. படிக்க வேண்டும் - புரிய வேண்டும் - பொறுமை வேண்டும் - நேரம் வேண்டும் - பார்க்கலாம்

  ReplyDelete
 2. //கோபிநாத் said...
  கடமை...;)))//
  வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்...
  பி.ந. ஐ கட்டுடைக்க வேற வேணூமே... :)

  ReplyDelete
 3. //1. உட்குளம் - இப்படிக்கு அய்யனார்

  2.அடர்கானகப்புலி - அண்டிராயரை கிழி(லக்கியின்) -அய்யனார்

  3. பாதுகாப்புகளற்ற வெளியில் இயங்குகிறது சகலமும் - அய்யனார்

  4. பதினான்காம் நகரமும் நானும் பிற நகரங்களும் மனிதர்களும் - அய்யனார்
  //

  அபி அப்பா ஏன் இந்த கொலவெறி ...லிங் கொடுக்க சொன்னா இப்படியா..பேரை பார்த்ததும் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிவந்துட்டேன்:))

  ReplyDelete
 4. //
  குசும்பன் said...
  //1. உட்குளம் - இப்படிக்கு அய்யனார்

  2.அடர்கானகப்புலி - அண்டிராயரை கிழி(லக்கியின்) -அய்யனார்

  3. பாதுகாப்புகளற்ற வெளியில் இயங்குகிறது சகலமும் - அய்யனார்

  4. பதினான்காம் நகரமும் நானும் பிற நகரங்களும் மனிதர்களும் - அய்யனார்
  //

  அபி அப்பா ஏன் இந்த கொலவெறி ...லிங் கொடுக்க சொன்னா இப்படியா..பேரை பார்த்ததும் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிவந்துட்டேன்:))

  //

  ஓ பின் நவீனத்துவமா? சரி நான் அப்பாலிக்கா அடுத்த பதிவுக்கு வரேன்!!

  ReplyDelete
 5. நான் கூட அதுவோ அது அப்டின்னு நினச்சிட்டேன்.

  ReplyDelete
 6. //அபிஅப்பா உங்க அவஸ்த்தை எனக்கு புரியுது. ஆனாலும் நீங்க இதை என் கிட்ட கேட்டிருக்க கூடாது. கேட்டாலும் என்னால சரியா பதில் சொல்ல முடியாது ஏன்னா நான் கொஞ்சம் கூச்ச சுபாவம்,//

  //நீங்க சேர்த்து வச்சிருக்கும் இமேஜ்க்காக//

  இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 7. என்னா ஒரு பில்டப்பு... வச்சிகிறேன் இதுகெல்லாம் சேர்த்து ஏப்ரல் 15 , 16ல். :(

  ReplyDelete
 8. வைச்சிக்கலாம் ஏப்ரல் 16 17 லே தூள் கிளப்பிடலாம்

  ReplyDelete
 9. அபி அப்பா, உங்க குறும்புக்கு அளவே இல்லாம போச்சு. நானும் என்ன முடிக்கப் போறாருன்னு ஆவலா கடேசிப் பகுதிக்கு முதல்லே வந்துட்டேன்ல. :-)

  ReplyDelete
 10. ம்ம் அதொன்னும் பெரிய மேட்டரே இல்லை அய்யனாருக்கு மட்டும்தான் கை கூடுமா உங்களுக்கு கை கூடாதா?....நீங்க என்ன சொல்றீங்க...பின்னவீனமா? ச்சே நான் வீக் எண்ட் மேட்டருன்னு [தண்ணி]நெனைச்சிட்டேன்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது