07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 10, 2008

சிறுகதைகள்

நிற்கும் இடத்தில், நடைபயணத்தில், பஸ் ஸ்டாண்டில், தம்மடிக்கும் இடத்திலென எங்கும் கிடைக்கிறது ஏதாவதொரு கதைக்கான விஷயம். அதை கதையாக்கும் கலை கைவந்தால் போதும். ஒரு காட்சி ஏற்படுத்தி விடமுடியாத தாக்கத்தை, நல்ல சிறுகதை தந்துவிட முடியும். சொல்லப்படுகின்ற விஷயத்தை பொறுத்தது அது.

'ஒரு நல்ல கதை வாசகனிடம் சலனத்தை ஏற்படுத்த வேண்டும்' என்பார்கள். அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகள் மூலமாக, எழுதப்படுபவர்கள் அறியப்படும் நிலை வந்தால் அதுதான் சிறந்ததாகக் கொள்ளப்படும்.

வலைப்பதிவில் அதிகமாக கதைகளை வாசிக்கவில்லையென்றாலும் வாசித்த சில கதைகளை சொல்லிவிடுகிறேன். மரணம் ஏற்படுத்தும் அதிர்ச்சியை விட, அந்த மரணம் மற்றவர்களுக்கு தந்து போகிற அதிர்ச்சிகள் அபாயகரமானவை. மகனின் இறப்பு ஏற்படுத்திய தாக்கத்தில் பைத்தியமான அம்மாக்களின் நிஜ கதைகளை இங்கே பார்க்க நேரிடுகிறது.

அப்படி மரணம் ஏற்படுத்திய நினைவின் அசைவுகளை சொல்கிறது அருட்பெருங்கோவின் இந்தக் கதை .

தமிழ்மகனின் இந்த கதை அப்பாவின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தை பேசுகிறது. இவரின் மொழி நடையும் விவரிக்கின்ற காட்சிகளும் நமக்குள் அதிர்வை ஏற்படுத்திவிட்டு போகின்றன.

சுந்தரின் பூனைகள் பற்றி ஓர் ஆய்வு என்கிற கதை பன்முக வாசிப்பு தன்மையை கொடுக்கிறது.

லக்ஷ்மியின் இந்தக் கதை பெண்களின் பிரச்னையை பேசுகிறது. ஓடிப்போன ஒரு பெண்ணின் தங்கை, கணவ்னிடம் எதிர்கொள்ளும் பிரச்னையை சொல்லும் இந்தக் கதை, இன்னும் விரிவாக்கப் பட்டிருக்கலாமோ என்று தோன்றியது.

5 comments:

  1. உங்களுடைய சில கதைகளுக்கும் தொடுப்பு கொடுத்து இருக்கலாம், இங்கு நீங்கள் கொடுத்து இருக்கும் சுட்டிகளும் அருமை அருட்பெருங்கோவின் கதை முன்பே படித்தது மற்றது இப்பொழுதுதான் படிக்கிறேன்.

    ReplyDelete
  2. ஆடு மாடு பற்றிய அற்புதமான சில விஷயங்களை எதிர்பார்த்தேன். :(
    ( வலைச்சர ஆசிரியருக்கு, மன்னிக்கவும்)

    ReplyDelete
  3. குசும்பன் நன்றி.

    தமிழ்ப்பிரியன்
    //ஆடு மாடு பற்றிய அற்புதமான சில விஷயங்களை எதிர்பார்த்தேன்//

    வலைப்பதிவுகளில் ஆடுமாடு பற்றிய விஷயங்கள் இல்லை. என் பதிவுக்கு வாங்க...நிறைய இருக்கு.

    ReplyDelete
  4. வட்டார இலக்கியக் கதைகள் ஒன்றிரண்டையாவது அறிமுகப் படுத்துவீர்கள் என நினைத்தேன்... ஏன் வலையில் கிடைக்கவில்லையா.?

    ReplyDelete
  5. இல்லைன்னு நினைக்கிறேன். ஒரு வேளை நான் அதிகமா தேடலையோ என்னவோ.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது