07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 26, 2008

'நச்' சுட்டிகளுக்கு முன்னே கொஞ்சம் பிறந்தகப் பெருமைகள்!!!

ரொம்ப சந்தோஷம் நேற்றைய என் வலைச்சரத்துக்கு தந்த ஆதரவுக்கு. இன்றைக்கு நச்ன்னு வர்ரேன்னு சொன்னேன். கொஞ்சம் கவுஜ படிச்சதால ஹச் ஹச்ன்னு ஆகிப்போச்சு நிலைமை. அதனால இந்த கேப்பிலே எங்க ஊர் பெருமையை கொஞ்சம் பார்த்துடலாம்ன்னு வந்திருக்கேன். சாதாரணமாகவே எல்லோருக்குமே அவங்க அவங்க ஊர் பத்தின ஒரு பாசம் பொங்கிகிட்டே இருக்கும். எங்க ஊர்ல அது நல்லா இருக்கும் இது நல்லா இருக்கும்ன்னு அலட்டிப்பாங்க. ஆனா எங்க ஊர்ல அப்படி குறிப்பிட்டு சொல்லும் படியா ஏதும் இல்லை. அதனால் தான் முத்துலெஷ்மி கூட அவங்க நட்சத்திர வாரத்திலே மேம்பாலம் பத்தி எழுதியிருந்தாங்க. நான் கூட கோவில் பத்தி எழுதியிருந்தேன். ஆனா பாருங்க இந்த மனுஷன் மாயவரத்தை எப்புடி பிரிச்சு மேஞ்சு இருக்கார்ன்னு.

பிறந்தக பெருமைன்னு ஒரு ஆறு பாகம் எழுதியிருக்கார் பாருங்க அப்படியே அள்ளிகிட்டு போகுது மனசை. அந்த எழுத்து நடை இருக்கே சரளம் சரளம், பிருந்தா மாஸ்ட்டர்? பாணியிலே சொல்ல போனா கிழி கிழி கிழி…. எதெல்லாம் மாயவரத்திலே அழகுன்னு சொல்றார் பாருங்க. ஜங்ஷன்…காலை மதுரையிலிருந்தோ சென்னையிலிருந்தோ வந்தாச்சுடா ராசா வந்தாச்சுன்னு புஸ்ஸு புஸ்ஸுன்னு பெரு மூச்சு விட்டு கிட்டு வந்து நின்னு சூடான வென்னீரை உச்சாவா போகும் கரி எஞ்சின் ரயில்ல ஆரம்பிச்சு ஸ்ட்ராங் பினாயில் முதல் குளோரோபாஃம் பவுடர் வரை ஸ்டேஷனின் அத்தனை அழகையும் சொல்லி, அஜீத் எக்கிற சோனி குதிரை வண்டி பயணம், புது தெரு ரயில்வே கிராஸ்ல ஏறி இறங்கி வீட்டுக்கு போகும் விஷயத்தை சொல்லச் சொல்ல நாமும் சீக்கிரம் ஊருக்கு போக வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகுது.

அது தவிர எங்க ஊர் கூவம் மிஸ். பழங்காவேரி(ஆறுகள் எல்லாமே பெண்பாலாமே) பத்தி என்னமா எழுதியிருப்பார் பாருங்க. அதிலே மூழ்கி ஸ்னானம் செஞ்சு ‘மடி’யா வெளியே வரும் பன்னி குட்டிகள் அப்போ அருவருப்பா இருந்துச்சு. ஆனா அவர் எழுத்து நடையிலே பார்க்கும் போது அந்த பன்னிகுட்டிகளை பிரகாஷ்ராஜ் பாணியிலே “அய் மிஸ்யூடா செல்லம்”ன்னு சொல்ல தோணுது. அதிலும் அந்த கொழுக் மொழுக் பன்னிகளை அவர் நமீதாவுக்கு இணையாக சொல்லியிருப்பதை பார்த்தா அவர் கலைஞர் தொலைக்காட்சிக்கு எதிரானவரா இருப்பாரோன்னு தோணுதுJ)

மணிகூண்டிலிருந்து மேம்பாலம் வரை போட்ட கான்கிரீட் ரோடு பத்தி அவர் சொல்லியிருக்கும் விதமும் பஸ்ட்டாண்டு அழகும் அதன் பூகோள எல்லை பிரச்சனை பத்தி எச்சரித்த விதமும் சூப்பரோ சூப்பர். அதை விட வடக்கத்தி டூரிஸ்ட் வருவதும் ரோட்டின் ஓரத்தில் தோசை சுடுவதும் (டேய் அபிஅப்பா அது சப்பாத்திடா ), பஸ்டாண்டு கல்கண்டு பாலும், அரைஞான் கயிற்றின் பட்டிமன்றமும் அழகோ அழகு.

மனுஷன் ரொம்ப ரசிப்பு தன்மை உள்ளவர் என்பதற்கு அவர் வெத்தலை போடும் ஒரு விளக்கம் போதும். வெத்தலை போட சிறந்த காஸ்ட்டியூம் வேட்டிதான்னு நான் தல தலயா அடிச்சிகிட்டேன். யாரும் கேக்கலை. அவர் சொல்றார் பாருங்க என்ன அற்புதமா. அதன் வாலை கிள்ளி நரம்பை எடுத்து சொக்குபுள்ள கடையின் பன்னீர் புகையிலையோட அய்யோ ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

அந்த மாயவரம் லோக்கல் ஸ்டேஷன் பத்தியும் அந்த தரங்கம்பாடி ரயில் பத்தியும் நானே எழுதனும்ன்னு இருந்தேன். ஆனா இவரின் அந்த பதிவுக்கு பின்ன நான் எழுதினா அவர் எழுதின பதிவுக்கு அவமானம்னு விட்டுட்டேன். இதோ கதவை திறந்து நம்ம நூலகத்துக்கு போய் பாருங்க, சத்தம் போடாம படிங்க. வழக்கம் போல இங்க வந்து கும்முங்க.

பின்ன ஒரு விஷயம், போன பதிவிலே தருமிசார் சொல்லியிருந்தார், ஒரே சுட்டின்னதுமே முழிச்சிகிட்டு இருந்திருக்கனும்ன்னு, நம்ம மாயவரம் பாசக்கார பயபுள்ளய்ங்க கிட்டத்தட்ட எல்லாருமே அப்படித்தானுங்க சாரே! இவரை பாருங்க இங்க. அருமையா எழுதுவார். கொஞ்ச நாளா பிசியாகிட்டார். ஆ.வில மாணவ நிருபரா இருந்தவர். அவர் பதிவிலே போய் பாருங்க அருமையா இருக்கும்!

நாளை இன்னும் நல்ல குட்டிகளோடு வர்ரேன்!

8 comments:

  1. ஜீப்பரு...இருங்க பதிவு பாத்திட்டு வரேன்

    ReplyDelete
  2. நான் தான் பர்ஸ்டு... என்ன தவிர எல்லாரும் வேல பாக்கராங்க போல இருக்கே...

    ReplyDelete
  3. மாயவரமா? எங்க அப்பா உங்க ஊர "மோசமான பயபுள்ள ஊராச்சே" சொல்றாரே அபிஅப்பா? :P

    ReplyDelete
  4. நல்லல இருந்தது. அபி அப்பா.


    மாயவரத்துக்குப் போகணும்னு

    இதைப் படிச்சா தோன்றுகிறது.புது விஷயங்களைக் கொடுக்கிறீர்கள். நன்றி.

    ReplyDelete
  5. நல்லாருக்கு............
    "பொறந்தகத்துப் பெருமையை உடன்பிறந்தானுக்குச் சொல்றது போல"

    எல்லேராம் நமக்கு வேண்டப்பட்டவர்தான்:-)))))

    ஆமா..............பிருந்தா மாஸ்டர்?

    கலா மாஸ்டரோட தங்கையைவா சொல்றீங்க?

    ஐய்யோ......... தேவுடா.......அவுங்கதானா?

    ReplyDelete
  6. புது மாதிரியா வலைசசரம் தொடுக்கிறாரே அபி அப்பா. எத்தனை நாள் ஆணியோ இதுக்கு.... :))

    ReplyDelete
  7. மேம்பாலம்னதும் மொரப்பூர் ரயில்வே மேம்பாலம் எனக்கு ஞாபகம் வந்துடிச்சி. பின்ன... கடந்த திமுக ஆட்சியின் ஆரம்பத்துல ஆரம்பிச்சி அதிமுக ஆட்சியில தொடர்ந்து இந்த திமுக ஆட்சியிலும் இன்னும் கட்டிகிட்டே இருக்காங்க. நானும் பாத்துட்டு இருக்கேன். நான் ஊருக்கு போகும் போதெல்லாம் மேம்பாலம் வேலை நடந்துட்டே தான் இருக்கு. அப்டி என்ன கர்மத்த தான் கட்டுவானுங்களோ. அபியப்பா.. ஸாரி அடேயப்பா ஒலகத்துலயே பெரிய மேம்பாலமா இருக்கும் போலனு நெனச்சி யாரும் வயித்தெரிச்சல கெளப்பாதிங்க. 10 கோடியில அம்புட்டு பெரிய மேம்பாலம் எல்லாம் கட்ட முடியாதாம்ல. அநேகமா இவனுங்க கட்டி முடிக்கும் போது அதோட ஆயிட்காலம் முடிஞ்சி அதையே புதுபிச்சாலும் ஆச்சர்யபடறதுகில்ல. :(

    ReplyDelete
  8. //அவர் பதிவிலே போய் பாருங்க அருமையா இருக்கும்!//

    போறேன் .. போறேன்.. வேற வழி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது