07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 25, 2008

"விதி" வலியது!!!!!!!!

வணக்கம் வணக்கம் வணக்கம். வலைச்சரம் தொடுக்க வாய்ப்பை வழங்கிய முத்துலெஷ்மி அவர்களுக்கு நன்றி. ஆனாலும் அவங்களுக்கு ரொம்ப தைரியம் தான். அதற்கு பாராட்டுக்கள். சாதாரணமாகவே எனக்கு ஒரு பெரிய கெட்ட பெயர் இருக்குங்க. படிக்காமல் பின்னூட்டம் போடுகிறேன் என்று. உண்மை தான். சில சமயங்களில் அப்படி நடக்கும். என்னா ஆபீஸ்ல படிக்க நேரம் இருக்காது.(ஆனா சேட் பண்ண மட்டும் நேரம் கிடைக்குமா என கேக்கப்பிடாது கீதாம்மா)அது போல சமயங்களில் சேமித்து வைத்து கொள்வேன். பின்பு படிப்பேன். அப்போது பின்னூட்டம் போடலாம் என பார்த்தால் அதை தேடி எடுக்க சோம்பல் பட்டு கொண்டு ஓடிவிடுவேன்.

கடந்த ஒரு வாரமாக நம்ம துளசி ரீச்சர் வெண்கல கடையில் யானை புகுந்த மாதிரி துவம்சம் பண்ணிட்டு போயிட்டாங்க. அவங்க சொல்லியிருந்தாங்க “பழைய ஆசிரியர்களுக்கு கொஞ்சமும் மனசாட்சி இல்லைப்பா, அடுத்து அடுத்து வரும் ஆசிரியர்கள் தொடுக்க வலைப்பூவே வைக்க மாட்டேன்றாங்க”ன்னு சொல்லியிருந்தாங்க. அதான் ரீச்சர் நான் உங்களுக்கு சொல்வதும். நான் இப்போ என்ன தொடுக்கப்போகிறேன்னு எனக்கே தெரியலை. ஆனாலும் என்னால் முடிந்தது ஒரு பதிவுக்கு ஒரு சுட்டியோ அல்லது அதிக பட்சமாக 2 சுட்டியோ கொடுக்கிறேன்.

முதல் பதிவிலே தன்னை பற்றி சுய தம்பட்டம் பண்ணிக்கலாம் என வலைச்சர விதி சொல்லுது. அதனால தம்பி லக்கிலுக்கார் ஆசிரியராக இருந்த போது அவரின் அத்தனை பதிவுகளையும் சுட்டியிருந்தார். நான் அப்படியில்லைங்க நெம்ப ரீஜண்ட்டானவன். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இந்த ஒரு சுட்டியை மட்டும் கொடுத்துக்கறேன்.விதி வலியது:-))

சரி மேட்டருக்கு வர்ரேன். என்ன விஷயத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என யோசித்து பார்த்த போது முதலில் எனக்கு தோன்றியது மகளிர் பிரச்சனைகள் தாங்க. மகளிர்ன்னாவே பிரச்சனை தானே என அண்ணாச்சி சொல்வது காதில் கேட்கிறது. மகளிர் உடல்கூறு பிரச்சனைகள் பற்றிய முக்கியமான சுட்டிகளை இப்போது நான் சுட்ட போகிறேன். இது போன்ற கம்பியில் நடக்கும் வித்தை எல்லாம் அபிஅப்பா இது வரை செய்ததில்லை என்றாலும் இந்த வலைச்சரத்தின் மூலமாக எல்லோரையும் சென்று அடையும் இந்த முக்கியமான விஷயங்கள் என நினைத்தே இந்த சுட்டிகளை தருகிறேன்.
பொண்ணா பிறந்தது முதல் மண்ணா போகும் வரை பிரச்சனைகளை மட்டுமே அவர்கள் ஒவ்வொறு பருவத்திலும் சந்திக்கிறார்கள் என்பது இந்த சுட்டிகள் மூலம் புரிபடும் உங்களுக்கு. பூப்பெய்யும் முதலாகவே பிரச்சனைகள் ஆரம்பித்து விடுகின்றன. இது பற்றின புரிதல்கள் அவ்வளவாக பரவலாக இல்லை என்பதே என் கருத்து. என் மாணவ பருவத்தில் கூட ஏகப்பட்ட குழப்பங்கள் இந்த விஷயங்களில் இருந்ததுண்டு. டுபுக்கு அவர்கள் கூட ஒரு பதிவு அதை பற்றி எழுதியிருந்தார்.

என் வகுப்பிலே படித்த முரளி நல்ல அஸ்திவாரம் போட்டு படித்தவன். எங்களை விட சீனியர் வயசிலே. அப்பப்ப டைரக்ஷன் கத்து கொடுக்கிறேன் அது இதுன்னு ஏதாவது ஏடாகூடமா கத்து கொடுப்பான். அப்படித்தான் ஒரு நாள் நான், குரங்கு ராதா எல்லாம் அவனிடம் பாடம் படித்தோம் “சினிமா டைரக்ஷன் செய்வது எப்படி”ன்னு. அவன் அப்ப சொன்னான். “டேய் முதல்ல ஒரு பொண்ணு ஆத்துல தண்ணி எடுக்குது, பின்ன நடந்து வருது அப்போ டொப்புன்னு குடத்தை போட்டுட்டு வயத்தை பிடிச்சுகிட்டு கீழே உக்காந்து அழுவுது.குடம்தட தடன்னு உருண்டு போவுது திரும்பவும் ஆத்திலே போய் விழுகுது . ஏன்னா அது வயசுக்கு வந்துடுச்சு”ன்னு ஏதேதோ சொல்லி குடுப்பான்.

ஒரு நாலு நாள் கழிச்சு ராதா அவசர அவசரமா என் வீட்டுக்கு வந்தான். “டேய் நம்ம கிளாஸ் மாலா வயசுக்கு வந்துடுச்சுடா”ன்னு சொன்னான். “உனக்கு எப்படிடா தெரியும்”ன்னு கேட்டதுக்கு அவன் “அவங்க வீட்டு வழியா வந்தேன் இப்போ அப்போ தெரு பம்பிலில இருந்து தண்ணி எடுத்து கிட்டு வந்துச்சு. அப்போ குடத்தை கீழே போட்டுடுச்சுடா”ன்னு சொன்னான். மாலா பலமுறை எனக்கு முன்பே குடத்தை கீழே போட்டிருக்கு . ஆக அந்த பருவத்தில் அந்த விஷயத்தில் அவ்வளவு தான் புரிதல் இருந்தது.

இதை எல்லாம் மீறி இது மாதிரியான உடற்கூறு தொல்லைகளுக்கு பின்னே அவர்களின் உடல் மற்றும் முக்கியமாக மனம் படும் பாடுகள் என்ன என்பதை இந்த சுட்டிகளை பார்த்து தெரிஞ்சுக்கோங்க. இந்த சுட்டிகளில் அதற்கான தீர்வுகளும் இருப்பது இன்னும் சிறப்பு. பெரும்பாலான சுட்டிகள் 2003 /2004 ஆண்டுகளில் எழுதப்பட்டவை. அந்த விஷயம் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் எழுதியதின் தமிழாக்கமும் இருக்கின்றது. அதுபோல் எழுத்தாளினி ஏகாம்பரி எழுதின ஒரு பதிவும் மிக அருமையாக இந்த விஷயத்தை அலசி காயப்போடுது வீட்டு ஓட்டின் மேலே. நம்ம டெல்பினம்மாவும் அது சம்மந்தமா எழுதியிருக்காங்க. இப்போ ஜாக்கிரதையா என் பின்னே வாங்க. ஒரு இடத்துக்கு கூட்டிகிட்டு போறேன். வந்தாச்சா இதோ இந்த கதவை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு திறந்து உள்ளே போங்க “உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். சத்தம் போடாதே”ன்னு போர்டு போட்டிருக்கா, அதனால சத்தம் போடாம படிச்சுட்டு இங்க வந்து கும்முங்க!! நாளை “நச்”ன்னு வர்ரேன்!!

முக்கியமாக மிக்க நன்றி சந்திரவதனா அக்கா, உஷாராமச்சந்திரன், டாக்டர் டெல்பின் விடோரியா அவர்களுக்கு!!

41 comments:

 1. அடுத்தது அபி அப்பாவா!!! காமெடிப்பதிவுகளுடைய சரம் உண்டா இல்லியா

  ReplyDelete
 2. இங்கே எல்லாம் ஒழுங்கா எழுதுங்க. உங்க பதிவுலே கோட்டை விட்டுடுங்க :-)

  இந்த வாரம் அபிஅப்பாவின் இன்னொரு முகத்தை காட்டும் வாரமாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி!!!

  ReplyDelete
 3. நல்லா இருந்துச்சு உங்க சுய தம்பட்ட சுட்டி! (அடப்பாவி மக்கா அல்லாத்தையும்ல அதுல லிங்க் பண்ணியிருக்கீங்க!)

  ReplyDelete
 4. ஹீரோ டயலாக் சூப்பர்

  நல்ல எழுத்துநடை.

  ReplyDelete
 5. ஒண்ணே ஒண்ணு அப்டின்னும்போதே முழிச்சிக்கிட்டு இருக்கணும்...

  ReplyDelete
 6. அமீரக சாந்த சொரூபிகளின் சார்பாக ஓட்டவாய் உலகநாதனை மிரட்டலுடன்
  வலைச்சரம் தொடுக்க விரட்டுகிறோம்

  ReplyDelete
 7. //இந்த வாரம் அபிஅப்பாவின் இன்னொரு முகத்தை காட்டும் வாரமாக இருக்கும் என நம்புகிறேன்//

  ஒரு முகத்தையே தாங்க முடில, இதுல இன்னொன்னா...

  ReplyDelete
 8. நல்ல கதை ஆனந்த விகடனுக்கு அனுப்பலாம்.

  ReplyDelete
 9. சூப்பரு... இருங்க பதிவு படிச்சிட்டு வரேன் அங்கிள்

  ReplyDelete
 10. விடோரியா = விக்டோரியா

  ReplyDelete
 11. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......... உண்மையிலேயே நல்ல தகவல் களஞ்சியம் தான்!

  ReplyDelete
 12. //.(ஆனா சேட் பண்ண மட்டும் நேரம் கிடைக்குமா என கேக்கப்பிடாது கீதாம்மா)அது போல சமயங்களில் சேமித்து //

  தெரியுமே, அதான், டாமேஜருக்குத் தெரியாமல் சாட்டறதும், அவர் வந்தால் வேகமா டைப் பண்ணறாப்பல பில்ட் அப் செய்யறதும், எல்லாம் அஜித் லெட்டர், முதல் பதிவிலேயே என் பெயரை எடுத்தாச்சா? கடவுளே, ஒழுங்காத் தமிழ் எழுதி என் பேரைக் காப்பாத்துப்பா!

  ReplyDelete
 13. ஒரே சுட்டில மொத்த தாய்குல ஓட்டையும் அள்ளிகிட்டு போய்ட்டார் அபிஅப்பா.

  அதெல்லாம் போவட்டும் அபிஅப்பா. உங்க செல்வாக்க பயண்படுத்தி இந்த வாரம் மட்டும் அனானி அதர் ஆப்சன திறந்து விடச்சொல்லுங்க.கும்மி அடிச்சே ஆவனும்

  ReplyDelete
 14. நான் இந்த பதிவை படிக்கவில்லை என்றாநினைச்சீங்க:)))

  //
  1.மகளிர் திரிசங்கு நிலை - மார்பகப் புற்றுநோய்

  2.ஆரோக்கியமான கர்ப்ப காலம்

  3. வலியில்லாத பிரசவம்

  4.நிஜ பிரசவ வலியை தெரிந்து கொள்வது எப்படி?

  5.நோய் தீர்க்கும் ஒரு விசேட குளியல்

  6. மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா!

  7.உடல் பற்றிய தவறான எண்ணங்கள்

  8. கர்ப்பத்தின் போது இரத்த போக்கு எதனால்?

  9.குழந்தையில்லா குறை- ஆண்களே அதிக பட்ச காரணம்

  10.பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா?

  11.கருவில் இருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடு!

  12.தாய்மையை தள்ளி போடாதீர்கள்

  13.கருச்சிதைவு அபாயத்தை தடுக்க!

  14.பிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்

  15.மாதவிலக்கு - தயங்காம பேசுவோம்

  16.வெள்ளை படுதல்

  17.கருவிலே குறை இருந்தால் திருத்தி கொள்ளலாம்

  18.40 வயதில் குழந்தை பெற்று கொள்ளலாமா

  19.40 வயதை கடக்கும் பெண்களுக்கு!!

  20.பெண்களை பாதிக்கும் அதீத மன நோய் - விடுபட என்ன வழி!

  21.மார்பு வலியை எவ்வாறு தவிர்க்கலாம்

  22.குழந்தை பிறந்ததும் பெண்கள் பெல்ட் போடுவது தவறு

  23.கர்ப்ப காலத்தில் ஏற்ப்படும் உடல் மன மாற்றங்கள்

  24.தாய்ப்பாலை சேமித்து வைப்பது எப்படி!

  25.பாலூட்டும் தாய்மார்கள் என்ன உணவுகளை உண்ணலாம்

  26. எதனால் எல்லாம் கருத்தரிக்காமல் போகலாம்

  27. கர்ப்பப்பை பலமாக சில உணவுகள்

  28. ஆஸ்துமாவும் பெண்களும்

  29.கருத்தரிப்பதில் சிக்கலா?

  30.செயற்க்கை கருப்பை - ஒரு வரம்!

  31.சினை முட்டைப்பை மாற்று சிகிச்சை!

  32.மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

  33.பெண்களின் மோனோபாஸ் நாட்கள்!

  34.மாதவிடாய் டென்ஷன் - தீர்வுதான் என்ன?

  35.மூன்று- ஜூவி, கல்வெட்டு, அம்பை& உஷா - ராமசந்திரன் உஷா பதிவு

  36.அபார்ஷன்கள் - டாக்டர் டெல்பின் விக்டோரியா பதிவு//

  ReplyDelete
 15. நல்லா தொடுக்க ஆரம்பிச்சுட்டீங்க.

  சிரிக்க வாய்ப்பும் சிந்திக்க வாய்ய்ப்பும் கொடுக்கப் போறீங்க நன்றி.

  வாரத்துக்கும் சரத்துக்கும் வாழ்த்துகள் அபி அப்பா.

  ReplyDelete
 16. அபி அப்பா - தூள் கிளப்புறீங்க - ஒரு சுட்டி கொடுங்க சொன்னா ஒரு வலைப்பூவிற்கே சுட்டி கொடுக்குறீங்க - இவ்வளவு புத்தகங்களா - அப்பப்பா = ம்ம்ம்ம்ம் - ஒண்ணொண்ணா படிக்கணும்

  ReplyDelete
 17. வாங்க சின்ன அம்மிணி! எங்க பெரிய அம்மணி மங்கையை காணும் இதுவரை? காமடி சரம் இல்லாமலா! உண்டு உண்டு! இதை முதல்ல படிங்க!

  ReplyDelete
 18. வாங்க லக்கி தம்பி! பத்திங்களா சுய தப்பட்டத்தில் ஒரே சுட்டி தான் குடுத்தேன்! எப்புடீஈஈஈஈஈ:-)) ஆமா நான் என் பதிவிலே இப்ப சரியா எழுதுவதில்லையா, எப்போ சரியா எழுதினேன்:-))

  ReplyDelete
 19. வாப்பா ஆயில்யா!! அந்த சுட்டி மட்டும் பார்க்காம பிரயோசனமான சுட்டியையும் பாருப்பா! பின்னாடி உதவும்:-))

  ReplyDelete
 20. குசும்பா! உன் குசும்பிலே ஒரு நல்லது செஞ்சேப்பா! என்னன்ன சுட்டி இருக்குன்னு சுட்டி காமிச்சியே சூப்பர், நன்றிப்பா!

  ReplyDelete
 21. தருமிசார்! வாங்க நீங்க மட்டும் உங்க மறுபக்கத்தை காமிக்காம நேரா வந்தீங்கன்னா அட்லீஸ்ட் கிச்சு கிச்சு பண்ணியாவது சிரிக்க வச்சிடுவேன்! ஒரு முரை முகத்தை காட்ட கூடாதா சாரே:-))

  ReplyDelete
 22. வைரநெஞ்சம் படைத்த "தம்பிசார்", உங்களுக்கு எம் மேல ஏதோ கோவம்ன்னு கீதாம்மா, டெல்பினம்மா,காயத்ரி,MLA எல்லாம் சொன்னாங்க ஆனா அது மாதிரி தெரியலையே! ரொம்ப கேஷுவலா இருக்கும் மாதிரி நடிக்கிறீங்களே, என்னா விஷயம்....:-))

  ReplyDelete
 23. மங்களூர் சிவா தம்பி! கண்டிப்பா ஆவிக்கு அனுப்பலாம். ஆனா ஆவி அம்மணி இப்ப பதிவு போடுவ்வதே இல்லையப்பா,:-))

  ReplyDelete
 24. வாங்க டாக்டர், வாழ்த்துக்கள் தானே, வாத்துக்கள் இல்லியே :-))

  ReplyDelete
 25. பவன்! இந்த குட்டீஸ் பிரச்சனை தாங்க முடியலப்பா, வாங்க 2 சிட்டிங்கோ 3 சிட்டிங்கோ உக்காந்து பேசுவோம், பின்ன ஒரு அக்ரிமெண்ட் போட்டுப்போம் சரியா:-))

  ReplyDelete
 26. ரீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நீங்களுமா?????????????? பதிவை படிங்கன்னா ஒரே ஒரு தப்பு வந்துச்சு அதை பிடிச்சுகிட்டு....அவ்வ்வ்வ் நீங்களாவது பதிவை படிச்சிட்டு பதில் சொல்ல கூடாதாஆஆஆஆஆஆஆஆ???:-)))))

  ReplyDelete
 27. ரீச்சர் இப்படித்தானா ஒரு மக்கு ஸ்டூடண்டை ஊக்கு வைப்பது:-))))

  ReplyDelete
 28. வாங்க தமிழ்ப்பிரியன், உங்க வருகைக்கும் ஊக்குவித்தலுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 29. டாக்டர்! அமரிக்காவில இருந்து வரும் போது குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வர்ரதா தம்பி தலையிலே அடிச்சு சொன்னீங்களே ஆனா அப்படி செய்யலையே அதான் கோவம்:-))

  ReplyDelete
 30. கீதாம்மா! நான் ஒழுங்கா தமிழ் எழுதினா விருத்தாம்பாள் ரீச்சர் பெயர் தான் காப்பாத்தப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து "கொல்"கிறேன்:-))

  ReplyDelete
 31. நிலா குட்டி! இது ரத்த பூமி! நாங்க அடல்ட்ஸ் பேசிக்கும் பூமி! உனக்காக வார கடேசில மாமா ரசிச்ச காமடி பதிவுசரம் உண்டு அப்ப கும்மிக்கலாம் சரியா:-))

  ReplyDelete
 32. வாய்யா குசும்பா! உனக்கு முன்னமே பதில்சொன்னதால இப்ப வாயை மூடிக்கறேன்:-))

  ReplyDelete
 33. வாங்க வல்லிம்மா! கண்டிப்பா இது இந்த வலைச்சரம் சிந்திக்க வைக்கவும் செய்யும் என சொல்லிக்கறேன்! ஆசீர்வாதம் வேணும்!

  ReplyDelete
 34. பதிவு சூப்பருங்கோ..இருங்க படிச்சிட்டு வரேன் :))))

  ReplyDelete
 35. வாங்க சீனா சார்! தமிழ்ப்பிரியனுக்கு அடுத்தபடி நீங்களாவது பதிவின் உள்ளே போய் பார்த்தீங்களே, சந்தோஷம்!கொஞ்சம் கொஞ்சமா படிங்க!!!

  ReplyDelete
 36. வாப்பாபொடியா சஞ்சை! நீ இந்த பதிவை கொஞ்ச நாள் பின்ன படிச்சா போதும். ஏன்னா இது அடல்ட்ஸ் ஒன்லி!:-))

  ReplyDelete
 37. இல்லை.. நான் பார்க்கலை.. அந்த முதல் ஒரே லின்கை நான் அமுக்கலை.. அமுக்கவே இல்லை.. இல்லை.. நான் பாக்கலை.. அந்த முதல் ஒரே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(( ஒரே லின்குனு நல்ல புள்ளையாட்டம் சொல்லும் போதே உஷாராயிருக்கோனும்.. முடியலை.. முடியலை.. ;((((

  ReplyDelete
 38. //அபி அப்பா said...

  வாப்பாபொடியா சஞ்சை! நீ இந்த பதிவை கொஞ்ச நாள் பின்ன படிச்சா போதும். ஏன்னா இது அடல்ட்ஸ் ஒன்லி!:-))//

  எதுவும் சொல்லாம இருந்தா வழக்கம் போல வராம கம்முனு இருந்திருப்பேன். இதை வேற சொல்லிட்டிங்களா? பின்னூட்டம் போடாம ஒளிஞ்சிருந்து பாத்துட்டு போகனுமா? :) நல்லா இருங்க :(

  ReplyDelete
 39. பின்னூட்டம் 41!

  அப்பாடா இந்தப் பதிவு இன்னுமே முகப்பில் வராது!!

  இது அபிஅப்பா பதிவு என்பதால்தான் இப்படி மற்றபடி மகளிருக்கு உபயோகமான 135 சுட்டிகள் கொண்ட பதிவை வெளிச்சத்திற்கு கொண்டு வராமல் இருக்க வேண்டும் என்ற ஈய பித்தளை மனப்பான்மை இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  அபி அப்பா, இப்படி எல்லாம் பதிவு போட்டு கட்சி மாறலாமுன்னு ஐடியா பண்ணினாலும் அங்க சேர்த்துக்க மாட்டாங்க! :))

  பிகு: இந்த பதிவை எழுதினவங்க கிட்டயே இனிமேல் எழுதி வாங்கிக்குங்க. ரொம்ப ஒண்ணும் எழுத்துப் பிழை கண்ணில் படலை!!

  ReplyDelete
 40. ""விதி" வலியது!!!!!!!!"

  சத்தியமாக விதி வலியது தான்...இந்த பதிவை பார்த்ததும் அப்படி தான் இருந்துச்சி ;))

  ReplyDelete
 41. நட்டப்பா, அது ஆரூ உஷா ராமசந்திரன் ?
  இப்படிக்கு,
  ராமசந்திரன் உஷா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது