07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 25, 2008

வீட்டுக்குப் போறேன்

இங்கே வந்து ஒரு வாரம் ஆகுது. அங்கே போட்டது போட்டபடி வீட்டை விட்டுட்டு வந்தேன். இனிப் போய்தான் 'எல்லாத்தையும்' ஒழுங்குபடுத்தணும்.


வலைப்பதிவுகள் என்னென்ன செய்யுதுன்னு பார்க்கணும் என்று நான் நினைச்சுக்கிட்டு இருந்த ஒரு வேலையை.........அடடா......... இப்படி வா(ழை)ழப்பழத்தை உரிச்சுக் கையிலே கொடுத்துட்டார்னு சொல்லவா? ஊஹும்.............

மாதுளம்பழத்தை எடுத்து உரிச்சு, வெறும் முத்துக்களை மட்டும் ஒரு அழகான கிண்ணத்துலே போட்டுக் கொடுத்துருக்கார் நம்ம சுப்பு ரெத்தினம்.


நம்ம வலைச்சரத்துக்கு எதிரில் இன்னொரு கடையும் போட்டுருக்கார் நண்பர்.

நம்ம மா சி. வலை மகுடம் தொடங்குனது நினைவுக்கு வருது. தன்னடக்கம் காரணமா இங்கே சுட்டி தரலை:-)))))


கொட்டிக்கிடக்கும் பூக்களில்தான் எத்தனை வகை. மணம்வீசும் நறுமலர்கள், வழக்கமா பளிச்னு தெரியும் வண்ண மலர்கள், இதுவரை பார்த்தேயிராத இனியக் காட்டுப்பூக்கள், எப்போதாவது மட்டுமே பூக்கும் சீஸன் பூக்கள்ன்னு கலந்து கட்டிக்கிடக்கு இங்கே.


இந்த வாரம், வாசக அன்பர்களுக்கு ஏற்கெனவே பரவலாகத் தெரிஞ்சிருந்த வலைப்பூக்களை விட்டுட்டுப் புதுசா இதுவரை சரியாகக் கவனிக்கப்படாத சில பூக்களை அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.
நானும் சுமாராத்தான் வனத்துக்குள்ளே ஓடித்தேடுனேனே தவிர, ஒவ்வொன்னா நின்னு நிதானமாப் பார்க்க நேரம் வேணாமா? இருப்பது இருபத்திநாலு மணி நேரம்தானே?
.
வலைச்சரத்தின் நிர்வாகிகளுக்கும், பொறுப்பாசிரியருக்கும், இந்த வாரம் முழுசும் பின்னூட்டிய & பின்னூட்ட மறந்த நண்பர்களுக்கும்( ஏம்ப்பா குறைந்தபட்சம் படிச்சீங்கன்னு நம்பிக்கவா?) மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் இந்த நல் வேளையில்...........


வலையில் பதியும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு ஒரு விசேஷ அன்பையும், வாழ்த்து(க்)களையும் தெரிவிச்சுக்கறேன். இவுங்க இல்லேன்னா, யாவாரம் எப்படி நடக்கும்? மூலப்பொருளே இந்தப் பூக்கள்தானே, இல்லீங்களா?

எழுதுங்க, எழுதுங்க, எழுதிக்கிட்டே இருங்க.

இதோ, கடைச்சாவியை இங்கே இந்தப்பூவின் மேல் வச்சுட்டுப்போறேன், அடுத்து வரப்போறவங்க இன்னும் நல்லா அனைவரையும் 'ஊக்கு' விப்பார் என்ற நம்பிக்கையில் 'பின்' வாங்காமல்.




அனைவருக்கும் நன்றியும், வணக்கமும்.

14 comments:

  1. இதுக்கும் சோதனையோடு சோதனையா ஒரு பி.க. செஞ்சுக்கவா?:-)

    ReplyDelete
  2. டீச்சர்..டீச்சர் தான்...
    அசத்திட்டிங்க டீச்சர்..;))

    ReplyDelete
  3. //டீச்சர்..டீச்சர் தான்...
    அசத்திட்டிங்க டீச்சர்..//

    repeatuuuu

    ReplyDelete
  4. கலக்கீட்டீங்க டீச்சர்.

    ReplyDelete
  5. சரி கெ'ல'ம்புங்க

    டாடா பை சியூ

    ReplyDelete
  6. அருமை அருமை - வலைச்சர ஆசிரியர்களிலே சிறந்த ஆசிரியராக மகுடம் சூட்டலாமே - துளசியின் கை வண்ணத்தில் புதுமை இனிமை கருத்துச் செறிமை - அழகு ம்ம்ம்ம்ம்ம்
    - வாழ்த்துகள் - பாராட்டுகள்

    ReplyDelete
  7. ரீச்சர், தூள் கிளப்பிட்டீங்க, அடுத்து வர்ரவர் ஊக்குவிப்பாரோ ஊக்கு வைப்பாரோ தெரியலை, பார்ப்போம்:-))

    ReplyDelete
  8. ///கானா பிரபா said...

    //டீச்சர்..டீச்சர் தான்...
    அசத்திட்டிங்க டீச்சர்..//

    repeatuuuu///////
    repeattukku oru repeatuuuuuuuu

    ReplyDelete
  9. துளசி ப்ரவேசிக்கும் எந்த வேலையும் முழுமையோடுட்ய்ஹான் இருக்கும். உங்களுடைய டெடிகேஷன் தெரின்ஞ்சதுதானேமா.
    பிரமாதமா வலைச்சரம் தொடுத்து ,இப்படித்தான் செய்யவேண்டும் என்ற ஒரு பிக்சர் கொடுத்து இருக்கிறீர்கள்.

    உண்மையான அன்பு கவனம் இருந்ததால் வலைச்சரம் மணத்தது துளசி,.
    நன்றி ,வாழ்த்துகள்.வீடு வா வான்னு சொல்றது:)

    ReplyDelete
  10. பூ எத்தனை அழகு !
    இயற்கையில் ஒரு அற்புதம் கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
    ஒரு பூவில் எத்தனை இதழ்கள் !இத்தனை இதழ்களும் பார்ப்பதற்கு
    ஒன்று போல் தோற்றம் அளித்தாலும் எந்த இதழும் இன்னொரு இதழோடு
    வண்ணத்திலோ அல்லது shape and size
    லோ முற்றிலும் ஒன்றாக அதாவது congruent
    ஆக இருப்பது துர்லபம். ஒரு இதழை மற்றொன்றின் மேல் வைத்துப்பார்த்தீர்களானால்
    இது நன்றாகவே தெரியும். அண்மையில் ஆர்.எம்.கே.வி ல் 50000 வர்ணங்களில்
    ஒரு புடவை markeட் ல் அறிமுகம் செய்தார்கள் இல்லையா ! அதிலும் சுமார்
    49991 வர்ணங்கள் பார்ப்பதற்கு ஒன்று மாதிரிதான் இருந்தது. கடைக்காரர்கள் அதை
    கம்ப்யூடரில் காண்பித்து வர்ணத்தின் intensity மாற்றத்தைக் காண்பித்தார்கள். Remarkably diversified but yet owning allegiance to the parent colour.
    மனித இனம் கூட இப்படித்தான். பார்ப்பதற்குத் தான் ஒன்று போல ஒரு
    தோற்றம் இருக்கிறது. இதுதான் unity in diversity.

    அது சரி ! என்ன வீட்டில் இரண்டு அடிமைகள் என்று தடாலடி அடிக்கிறீகள் !
    Eve teasing
    போல
    adam teasing
    ம் உண்டோ ?
    சுப்புரத்தினம்.
    தஞ்சை.
    பி.கு: பெண்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஒரு வலைப்பூ மிகவும்
    மிளிர்கிறது. மணக்கிறது. இதன் விவரங்களை எனது
    http://arthamullaValaipathivugal.blogspot.com
    ல் போட்டிருக்கிறேன்.
    hard copy
    ஒன்று எடுத்து கோபால் அறையின் வாசலில் ஒட்டி வையுங்கள்.
    இது என் இல்லத்தரசி ( ராக்ஷசி !) யின் கோரிக்கை .

    ReplyDelete
  11. துள்சி!
    பூக்களை சரம் கட்டுமுன் நன்றாக பிரிச்சு மேய்ந்துவிட்டீர்கள். பின்னி பெடலெடுத்து விட்டீர்கள்.
    என்னாலெல்லாம் முடியுமா என்பதே சந்தேகம். நல்லவேளை நான் நழுவிட்டேன்.
    அதிக அக்கறையோடு தொடுத்த சரம் எங்கும் மணக்கிறது. வாழ்த்துக்கள்!!
    வீட்டில் போய் ஓய்வெடுக்கவேண்டியதுதான். கோபால் நீட்டாக எல்லாம் முடித்திருப்பார்.

    ReplyDelete
  12. வித்தியாசமான வலைச்சரம் டீச்சர். நல்லா இருந்துது

    ReplyDelete
  13. மக்கள்ஸ் மக்கல்(!)ஸ்,

    ஏகோபித்த ஆதாரவுக்கும் அன்புக்கும் நன்றி.

    அபி அப்பா,

    ஊக்கு வைக்கப்போறவர் நீங்க(தா)ன்னு தெரியாமப்போச்சே:-)))

    வல்லி, நானானி & சின்ன அம்மிணி
    நன்றிப்பா.

    சுப்பு ரத்தினம்,

    பூ இதழ்கள் மட்டுமில்லை எதுவுமே ஒன்றைப்போல் ஒன்றில்லையாம்.

    பனி விழும் காலங்களில் அந்த ஸ்நோ ஃப்ளேக்ஸ் கூட ஒவ்வொன்னும் வித்தியாசமா இருக்குன்னு படிச்சிருக்கேன். அதான் கையில் பிடிச்சுப் பார்க்கும்போது கரைஞ்சு போகுதே(-:

    பதிவில் போட்ட படம் தாமரைப்பூ, நம் வீட்டில் பூத்தது என்பது ஒருகூடுதல் தகவல்:-)

    //அது சரி ! என்ன வீட்டில் இரண்டு அடிமைகள் என்று தடாலடி அடிக்கிறீகள் !
    Eve teasing
    போல
    adam teasing
    ம் உண்டோ ?//
    நானும் கோபாலும் அந்த கோபால கிருஷ்ணனுக்கே அடிமைன்றதைத்தான் சொன்னேன். அந்தக் கரிய நிறத்தானின் மேல்விவரம்
    இங்கெ பாருங்க

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது