07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 18, 2008

தா(யா)னைத்தலைவி வருக!வருக! -50 வ்து வாரம்

தெக்கிக்காட்டான் தன் மேய்ச்சல்நிலங்கள் என்ற பொது தலைப்பில் வரிசையாக இட்ட அத்தனைப்பதிவுகளுமே நாம் தவறவிட்ட நல்ல நல்ல பதிவுகளை அடையாளம் காட்டுபவையாக அமைந்திருந்தது. மேலும் புதிய பதிவர்களுக்கு இப்போது எழுதுவதைக்குறைத்துவிட்ட பதிவர்களின் பதிவுகளின் அறிமுகம் கிடைக்கப்பெற்று இருப்பார்கள் என நினைக்கிறேன்..

வவ்வாலின் ஆழ் நீர் நெல் சாகுபடியும், சுயப்பிரசவம்,பித்தானந்தாவின் போதனை... சாமி காட்டிய ,படகு புகட்டிய பாடமும் ... என்று அவருடைய சிறந்த வாசிப்பு அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டு சிறப்பித்தமைக்கு அவருக்கு எங்கள் நன்றி.

------------------------------------------------------------

வலைப்பதிவுகளின் ஆரம்பக்காலத்தில் மதி கந்தசாமி வலைப்பூ இதழ் ஆரம்பித்தார். அதில் வாரம் ஒரு வலைப்பதிவர் வலைப்பதிவுகளை விமர்சனத்தோடு அறிமுகம் செய்துவைத்தார். முக்கியமான பதிவுகள் அதில் சுட்டிக் காட்டப் பட்டும் விமர்சிக்கப் பட்டும் தவறவிடப் படாமல் வாசிக்க உதவின.வ்லைப்பூ ஆசிரியர் என்பது பின்னர் தமிழ்மண நட்சத்திரமாக மாறியது. பின்பு தமிழ்மணப்பூங்கா வ்லைப்பதிவர்களின் பதிவுகளை தொடுத்துவந்தது.

கில்லி, பாஸ்டன் பாலாவின் ஸ்னாப்ஜட்ஜ், கதம்பமாலை, மாற்று என்று பல நல்லப் பதிவுகளை திரட்டும் இடங்கள் இருந்தாலும் அந்த வலைப்பூ அமைப்பைப் போலவே வாரம் ஒரு ஆசிரியரின் விமர்சனமும் ஆவணப் படுத்துதலும் என்கிற முறையில் புதிதாக இந்த வலைச்சரம் அமைப்பு தொடங்கப்பட்டது.

யானைத்தலைவி பொன்ஸ் தன் பொற்கரத்தால் ஆரம்பித்துவைத்த வலைச்சரம் இந்த வாரம் சிறப்புமிக்க ஐம்பதாவது வாரமாக தா(யா)னைத் தலைவி துளசி கையில் வந்திருக்கிறது. (முதன் முதலாக பழைய வலைப்பூவிலும் ஆசிரியராக இருந்த அனுபவம் உள்ளவர் வலைச்சரம் தொடுக்கிறார் என்ற சிறப்பும் சேர்கிறது)

பொதுவாகவே பல சம்பிரதாய விசேச நிகழ்ச்சிகள் என்றால் யானைவந்து மாலையிட்டு வரவேற்று சிறப்பித்துவைப்பது என்பது நமது மரபுதானே. துளசிஅவர்கள், அக்கா என்றும் டீச்சர் என்றும் அழைக்கப்பட்டு அத்தனை பதிவரும் அறிந்த பதிவராக இருக்கிறார். புதிதாக வரும் பதிவர்களையும் சென்று வாசித்து ஊக்கப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரேதான்.. பின்னூட்ட நாயகி என்ற பெயரும் கூட அவருக்கு இருப்பதை நினைவுறுத்துகிறேன்..

நாட்டின் வரலாறாகட்டும் மனிதர்களின் குணாதியங்களாகட்டும் தொடராக எழுதி தள்ளிவிடுவார். அவர் வாசிக்காத பதிவுகள் விரல் விட்டு எண்ணக்கூடிய பதிவுகளாகத்தான் இருக்கவேண்டும். எனவே சிறப்பான வலைச்சரம் தருமாறு அவரை வேண்டிக்கொள்கிறேன்.

8 comments:

  1. துளசி அம்மாவிற்கு வாழ்த்து(க்)கள் !
    :)

    ReplyDelete
  2. இந்த வாரம் நீங்களா துளஸி அக்கா,

    வாங்க வந்து கலக்குங்க.

    ReplyDelete
  3. வெல்கம் டீச்சர்.

    ReplyDelete
  4. எங்கள் பாசக்கார டீச்சருக்கு வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  5. ஆகா ஆகா - ஐம்பதாவது சிறப்பு வாரத்திற்கு ஆசிரியர் - வலைப்பூ - இணையம் இவற்றில் உள்ள மூத்தவர்களில் ஒருவர். அதிகப் பதிவுகள் இட்டத்வர்களில் ஒருவர். அதிகப் பின்னூட்டங்கள் இடுவதில் விருப்பமுள்ளவர்களில் ஒருவர். யானை, பூனை, என்று கலக்குபவர். ஜேக்கே, ஜேக்கேஜ்ஜூ, என வீட்டில் செல்லம் கொண்டாடுபவர் - எனது மனதிற்குப் பிடித்த பதிவர் - புத்தாண்டு உறுதி மொழியாக, இவரது பதிவுகள் அனைத்தையும் இந்த ஆண்டு படித்து விடுகிறேன் என நான் என் வலைப்பூவில் இடுகையாக இட்டிருக்கிறேன். பல சிறப்புகள் படைத்தவர். வரலாறு படித்த, தமிழ் கற்பிக்கும் ஆசிரியை. அருமைத் துளசி
    நல்வாழ்த்துகள் நன்றியுடன்.

    ReplyDelete
  6. மக்கள்ஸ்,மக்கள்ஸ்,மக்கள்ஸ்,

    ஆரவாரமான வரவேற்புக்கு நன்றி.

    ஆனா எதுக்கும் தயாரா இருங்க.

    சொதப்பலாவோ வெத்துவேட்டாவோப் போகச் சான்ஸ் இருக்கு!!!!

    ஆமாம்.... சொல்லிப்புட்டேன்:-)))))

    ReplyDelete
  7. சொதப்பல் என்ற வார்த்தைக்கே இங்கே இடம் இல்லை துளசி.


    மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்களுக்கும் 50 வயது. வலைச்சரத்துக்கும் ஐம்பதா:)))

    சீனா சாருக்கு ஒரு ஜே போடுகிறேன்.
    இவ்வளவு அழகா சொல்லி இருக்கிறாரே!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது